September 23, 2017




சில தினங்களுக்கு முன் நான் படித்த ஒரு நாவலின் பெயர் கடைசி மெழுகுவர்த்தி. LAST CANDLE ! A DETECTIVE NOVEL By RAVINDER . 1985 வெளிவந்த இதை துப்பறியும் மர்ம நாவல் என்று சொல்லாம், ஒரு நவ நாகரிகமான இளைஞன். பெரும் பணக்காரரிடம் விமானம் ஓட்டுனராக இணைகிறான். அரசாங்க உளவாளியான அவன், தன் முதலாளி தவறு செய்யவில்லை என்று உணர்ந்து அவரை கொல்ல நினைக்கும் விரோதிகளிடமிருந்து காப்பாற்றுகிறான்.
உலகின் மிகப்புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் பாத்திரம் ஷெர்லாக் ஹோம்ஸ் படைக்கப்பட்டது 1887. ஆர்தர் கொனன் என்பவரால் உருவாக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் முதலிலும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து துப்பறியும் கதைகள் சூடுபிடிக்க தொடங்கின. 1920 முதல் 30 களில் துப்பறியும் புனைவுகளின் பொற்காலம் எனலாம்.Image result for துப்பறியும் கதைகள்

காகிதக்கூழ் புனைவு என்பது ஒரு இலக்கிய பாணி. 1896ல் தொடங்கி 1950கள் வரை வெளிவந்த காகிதகூழ் இதழ்களில் வெளிவந்த புனைவுகளை Pulp fiction என்கின்றனர்.தமிழ் நாட்டில் 20 ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் வெளிவந்த பாக்கேட் நாவல்கள் ராஜேஸ் குமார். பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களின் படைப்புக்களை சொல்லாம்.

துப்பறியும் கதை மாந்தனின் எழுதப்படாதா விதி என்பது அவன் பல நாடுகளுக்கு செல்ல வேண்டும், பல ஆபத்துக்களை சந்திக்கவேண்டும், அந்த ஆபத்துக்களை கடந்து ரகசியங்களை உடைத்து வெற்றி கொள்வதே என்பதே. உலகப் புகழ் பெற்ற துப்பறியும் ஜேம்ஸ் பாண்ட் கதை பாத்திரம் என்றாலே அதன் தனித்தன்மையான பாத்திர படைப்பேயாகும். சாகசம் படைத்து வெற்றி கொள்வது என்பதே அதன் முக்கிய நோக்கமாகும்.
நான் சிறு வயதில் படித்த துப்பறியும் நாவல் என்பது ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகும் , அதுவும் படச் சித்திரங்களை கொண்ட கதை. நான் தவறாக சொல்வில்லை என்றால் அது பிரபல தமிழ் எழுத்தாளர் தமிழ்வாணனின் மொழிப் பெயர்ப்பு என்று நினைக்கிறேன். அதன் தலைப்புக்கூட என்னவேன்று மறந்துவிட்டது. அப்பொழுது எனக்கு வயது 12-15 வயது இருக்குமா என்று கூட தெரியவில்லை. அதுவும் ஒரு நண்பனிடமிருந்து இரவல் வாங்கிய நூல் என்றே நினைக்கிறேன். தமிழ்ப் பள்ளியில் எனக்கு அம்புலிமாவை அறிமுக படுத்தியதே அவன் தான், அவனின் அண்ணன் ஒரு பாஸ்டர்.

துப்பறியும் புனைவு Detective fiction என்பது எல்லாம் தமிழ் கதை அமைப்பில் திகிழ் மர்மம் இறுதியல் கதையின் முடிச்சி அவிழ்பு என்றே முடியும் என்பதே உண்மை. ஆனால் துப்பறியும் நாவல் என்றால் தமிழ்வாணனை யாரும் புறம்தள்ளிவிட முடியாது. அவரின் கதை என்றால் விறுவிறுப்புக்கு ஏது குறை? கல்கண்டில் வெளிவந்த சங்கரலால் போன்ற தொடர்களை மறக்க முடியாது. என் ஞாபகத்தில் இன்னும் சில துப்பறியும் நாவல்களான தோக்கியோவில் தமிழ்வாணன், கொய்ரோவில் தமிழ்வாணன் என்ற துப்பறியும் நாவல்கள் நினைவில நிற்கிறது. 1983 யில் "புயல் வீசிய இரவில்" என்ற ஒரு துப்பறியும் நாவலையும் எழுதியிருப்பார் தமிழ்வாணன்.

CID சங்கர் என்ற திரைப்படம் 70 வதில் வெளிவந்த ஒரு துப்பறியும் படம். தமிழ் திரையுலகில் ஜேம்ஸ் போண்ட் என்று அழைக்கப்பட்ட ஜெய சங்கர் பல துப்பறியும் படத்தில் நடித்துள்ளார். அதே போல் துப்பறியும் படங்களில் நடித்து புகழ் பெற்றார். CIDசகுந்தலா பெண் துப்பறியும் கதா பாத்திரத்தை ஏற்று நடித்தவர்.
1869 நடேச சாஸ்திரியால் எழுதப்பட்ட முதல் தமிழ் துப்பறியும் நூல் "தானவன் என்னும் போலிஸ் நிபுணன் கண்டுப்பிடித்த அற்புத குற்றங்கள்". தேவனின் மிகைப்படுத்தப்படாத பிம்பங்களாக காட்டியதற்கு துப்பறியும் சாம்பு ஆனந்த விகடனில் வெளிவந்ததே காரணம்.Image result for துப்பறியும் கதைகள்

இன்றைய நவீன க்ரைம் மற்று துப்பறியும் நாவல்களை படைப்பதில் பட்டுக்கோட்டை பிரபாகரன், ராஜேஸ் குமார். போன்றவர்கள் முன்னனையில் இருப்பதை காண முடிகிறது. புஸ்பா தங்கதுரை ராஜேந்திர குமார் மற்றும் சிலரின் எழுத்துக்களை பார்க்க முடிந்தது.
தமிழ் நாட்டில் ஜேம்ஸ் ஹட்லி சேஸ் எனப்பட்ட எழுத்தாளர் சுஜாதா மாயா என்ற ஒரு துப்பறியும் நூலை எழுதியிருப்பார். 2010 வெளிவந்த இப்பொழுதும் அதே சாமியார்களின் பிரச்சனைதான். ஆசிரமம் ஹைடெக் சாமியார். கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை. கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்து கதை. அவரின் மற்ற புகழ் பெற்ற புதினங்கள் கொலையுதிர் காலம், கரையெல்லாம் செண்பகப்பூ, நைலான் கயிறு. ஆகியவை.

ராஜேஷ் குமார் எழுதும் துப்பறியும் புதினங்கள் மிகுதியாக ஆங்கில சொற்களின் கலப்பு அதிகமாக இருக்கும், இவர் படைத்தவை ஓடும் வரை, ஏழாவது டெஸ்ட் டியூப், டிசம்பர் இரவுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட புதினங்களை படைத்திருக்கின்றார்.