August 15, 2016

மலேசியக் கதைச் சொல்லிகள்.

கதை 5    ஜிலுஜிலுவாலே..... எஸ்.பி பாமா.

எஸ்,பி பாமாவின் சிறுகதை, சினிமா சீரழிக்கிறதா இல்லை சீரமைக்கிறதா என்ற பட்டிமன்ற கதையாக இருந்தாலும் ஜிலுஜிலுவாலே கதை நகைச்சுவை கதை என்று சொன்னாலும் அதைச் சார்ந்த கதைக்களம் என்றாலும் அது சீரியசான ஒரு சமுகம் பிரச்சனைகளை  முன்வைக்கும் ஒரு கதைக் களமாகத் தெரிகிறது.

சீரியலும் சரி சினிமா படங்களும் சரி நமது வாழ்க்கையை பிரதிபதித்தாலும் அவை கத்தி போன்று நல்லவை கெட்டவையை சொல்லும் ஊடகமாகத்தான் தெரிகிறது.

ஒரு கதையை எப்படி வடிவமைக்க வேண்டும் என்பதை பழுத்த அனுபசாலிகளான எஸ்.பி பாமா போன்றவர்கள் நமக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கின்றார்கள்.

எதிர்மறை எண்ணங்களால் நம் உலகம் சூழப்பட்டிருக்கிறது.அதுவும் அதிவிரைவாக குழந்தைகளை சீக்கிரமே தாக்குகின்றன. அந்த குழந்தைகளின் கற்பனை சினிமாவால் கட்டமைக்கிறது என்று சொன்னால் அது மிகை அல்ல.

குழந்தை வளர்ப்பு என்பது சாதாரன விடயம் இல்லை. மிகவும் கவணமாகவும் அதீத உள் உணர்வோடு வளர்க்க வேண்டிய கலை, கரணம் தப்பினால் மரணம் என்பது போல் முறையோடு பிள்ளைகளை வளர்க தவறினால் பிற்காலத்தில் பெரும் அனத்தம் நம் வாழ்வில் வலம் வரலாம். அல்லாது பிள்ளைகள் முறை தவறி வாழ வழிவகுக்கலாம்,
அந்த உண்மையை வெகு நேர்த்தியாக எஸ், பி பாமா சொல்ல வருகிறார் தன் அது அவளுக்கு பிடிக்கல என்ற சிறு கதை தொகுப்பில் இருந்த ஜிலுஜிலுவாலே கதை வழி.

ஒரு கதையின் எடுப்பும் தொடுப்பு முடிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அந்த கதை போக்கும் அதன் நோக்கும் நமக்கு காட்டிவிடும்.  
சுட்டித்தனம் செய்யும் பிள்ளைகளை கண்காணிக்காமல்  ஒரு தாய் தன் கடமையில் இருந்து விடுபட பிள்ளைகளை சினிமா பார்பதற்கு அனுமதிக்கிறாள்.

கதையின் தலைப்பு மட்டும் ஜிலுஜிலுப்பாக செல்லவில்லை கதையும்தான். சிறு பிள்ளைகள் அவர்கள் பார்க்கும் படங்களால் எவ்வளவு பாதிக்கப்படுக்கின்றனர் என்பதை அவர்களின் தாய் தந்தை அறியாது இருப்பது எவ்வளவு அறியாமை என்பது பெரும் அவலம். முரன்பாடு மிக்கவன் மனிதன், தன் சுயநலத்தைதான் எப்பொழுதும் முன் வைக்கிறான்.  பிள்ளைகள் படங்களை பார்த்து காமம் கலந்த அசைவுகளை தரும் போது அவர்களின் தாய் அதிர்ச்சியில் உறைந்து நிற்பது கதையின் உச்சம்.

இன்றைய நவ நாகரீக உலகில் சிந்தனை பாதிப்புக்கள் என்பது எவ்வளவு தூரம் வெகு சுலபமாக நம்மை பாதிக்கிறது என்பதை இக்கதை நமக்கு உள்ளங்கனி நெல்லிகனி போல் தெள்ளத்த தெளிவாக காட்டுக்கிறது.
வாழ்வின் ஒழுக்கத்தை எந்த பள்ளியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும் உண்மையில் தாய்யின் வளர்ப்பும் ஆசிரியரின் கண்டிப்பும் நம் பிள்ளைகளை மேன்மையுறச் செய்யும்.

முடிவு என்பது முத்தாய்ப்பாய் அதன் உச்சத்தை காட்டுகிறது. வீட்டில் இருந்த சிடி எல்லாம் மூட்டைக்கட்டிவிடுகிறாள் அத்தோடு  தொலைக்காட்சியின் இனைப்பயையும் துண்டித்துவிடுகிறாள்.

வேதாத்திரி மகரிசி  ஒரு பிள்ளை குறையாக வளர்கிறது என்றாள் அவர்களின் பெற்றோர்கள்தான் காரணம் என்கிறார். 

பெற்றோர்கள்  வழி வரும் அந்த ஜீன் பிள்ளைகளை பாதிக்கிறது. அதனால் கணவன் மனைவி இருபாலரும் இல்லற தியானம் தவம் செய்து தனது கரும பயனை மாற்றவேண்டும் என்கிறார். அப்பொழுது பிறவி பயனாக நல்ல பிள்ளைகளை பெறுவார்கள் என்கிறார். கனிந்த அன்பான அதே வேளையில் ஒழுக்க நெறியோடு வாழும் வாழ்க்கை நெறி நமக்கு அவசியம் என்பதை தன் கதையின் வழி நமக்கு கதைப் பொருளாக தருகிறார் எஸ்.பி பாமா. அதுதான் இப்பொழுது நமது இந்திய சமுதாயத்திற்கு அத்தியவாசியமான ஒன்று அதை எஸ்.பி பாமா தன் கதையின் வழி நமக்கு சொல்ல வருகிறார்.

திவ்வியமான வாழ்க்கைப் பயணத்தை , திக்கற்ற நமது குழந்தைகளுக்கு சொல்ல வருகிறது ஜிலுஜிலுவாலே...........