February 12, 2016

அ, ரெங்கசாமி . மலேசியா தமிழ்க் கதைச் சொல்லிகள்அ. ரெங்கசாமியின் புதியதோர் உலகம் அன்றைய மலாயாவில் ஜப்பானிய ஆட்சியின் கொடுமைகளை சொல்லும் நாவல்,

மனிதன் என்பவன் கணம் தோறும் தன் வாழ்வில் நிகழும் அனுபவங்களை அதன் பாடங்களை எப்பொழுது அசைப்போட்டுக்கொண்டுதான் இருகின்றான். அந்த காலம் தொட்டு இந்த காலம் வரைக்கும் தன் உணர்ந்த விசயங்களை  சொல்லாடல்களின் வழி அடுத்த தலைமுறைகளுக்கும் கதைகளாக எடுத்து சொல்லி செல்கிறான். கால ஓட்டத்தில் இலக்கியமாக அது வளர்ந்து விடுகிறது. இலக்கியங்களின் ஊடே வாழ்வியலின் வெளிப்பாடுகளை அழகு உணர்சிகளோடு சமுதாய பண்பாடுகளையும் தனி மனித உணர்வுகளையும் வாழ்வியல் உச்சங்களை இலக்கண அழகியளோடு வெளிப்படுத்துவதும் ஒரு நாவலின் முக்கிய செயல்பாடாக இருக்கிறது.

ஒரு நாவல் என்பது ஒரு மனிதனின் உடல் கூறுகளைப் போன்றது. பல்வேறு அங்கங் அவயங்கள் ஒருங்கே சேர்ந்தே மனித உருவம். அது போல் பல்வேறு பரிமானங்களை கொண்டதே நாவலும் தன் கதை மாந்தர்களின் வழி சமுதாய எதிர்க்கொள்ளும் பிரச்சனகளை சொல்ல வருவதே நாவல். 

மலாயா நாட்டில் ஜப்பானியர் ஆட்சி காலத்தில் தமிழர்கள் பட்ட கொடுமைகளை அதன் நிதர்சனங்களை தலைச் சிறந்த நாவலாசிரியரான அ. ரெங்கசாமி அவர்கள் எழுதிய புதிய உலகம் என்ற நாவல் அன்றைய பிரச்சனைகளை அழகாக எடுத்து இயம்புகிறது “புதிய உலகம்.

கதை என்பவை வெறும் கற்பனை மட்டும்தானா? அதிலே உண்மைகள் காட்சிகள் சித்தரிக்க முடியாதா என்று கேள்விகள் எழும். கற்பனையும் உண்மையும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் போது பாத்திரப்படைப்பு கலைநயம் மிளிரும்.  பாத்திரங்கள் கதைப்பின்னலை உருவாக்குகிறது. கதைப்பின்னல் பாத்திரத்தின் விளைவாக அதனைச் சார்ந்தே வளர்கிறது. அ.ரெங்கசாமி சரித்திர நிகழ்வுகளை காட்சியமைத்து ஒரு நாவலாக படைத்துள்ளார். நம் தமிழர்கள் பட்டதுன்பங்களை கூர்ந்து நோக்கி செயல் விளைவை அறிந்து உணர்வு நிலையோடு படிப்போரை நெகிழ்விக்கும் முறையோடு கதையை வடித்துள்ளார்.

மலைநாட்டு தமிழர்கள் பட்ட  துன்பங்களில் மிகப்பெரிய  துன்பம் ஜப்பானியர்களின் ஆட்சியில்  அடைந்த இன்னல் என்றால்  அது மிகையல்ல . சொல்லென்னாத கொடுமைகளுக்கு மக்கள்  ஆளானார்கள். ஜப்பானியர்களின் ஆட்சியில்  மலாயா தமிழர்களுக்கு  ஒரு சாபக்கேடுதான்.  சரியாக  8-12-1941 ஒன்றில் பிற்பகல்  அன்றைய மலாயா தீபகற்பத்தில் கிழக்கு கடற்கரையில்  தரையிறங்கிய ஜாப்பானியரின் ராணுவத்தின் பிடியில்  சிக்கித் தவித்தனர் மக்கள்.

இரண்டாம் உலகப் போரில் வறுமையின் கோரப்பிடியில் அன்றைய  தமிழர்கள் எவ்வளவு இன்னல்களை அனுபவித்து இருப்பார்கள் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை.  வெள்ளையர்களின்  தோட்டக்கூலிகளாக இருந்த போது பட்ட கஷ்டங்கள் வேதனைகள் இந்த ஜாப்பனிய கட்டையன்களிடம் படவேண்டியிருக்கிறது என்று நினைக்கும் பொழுது ஏழைகள் எங்கு இருந்தாலும் அடிமைகளாகத்தான் வாழவேண்டிய நிர்பந்தம் எற்படுகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. அதற்கு மலையத் தமிழர்களும் விதிவிலக்கு அல்ல.

சஞ்சிக்கூலியாக இருந்தாலும் சாப்பிட அரிசி கிடைத்தது. வேலைச் செய்த பின் அதற்கு கூலியும் கிடைத்தது. மாலை நேரத்தில் கள் குடித்து ஆட்டமும் பாட்டுமாய் கூத்தடிப்பதற்கு நேரம் இருந்தது.ஆனால் ஜப்பானியர்களின் கொடுகோல் ஆட்சியில் மக்கள் அஞ்சி அஞ்சி கிலிப்பிடித்தே செத்து மடிந்தார்கள்.  ஏன் என்ற கேள்வி கேட்க முடியாமல் அந்த தலைவெட்டு பயல்களின் கொடுர அடக்குமுறைகளுக்கு பயந்து வாழவேண்டியிருந்தது.

என் அம்மா சொல்வாள்   தோட்டங்களில் புகும் ஜாப்பனியர்கள் அங்கு கண்ணில் படும் தமிழர்களை அழைந்து  அங்கு திரியும் கோழிகளை பிடிக்க சொல்வார்களாம்.  சற்று தாமதமானல் கத்தியை வீசி அந்த ஆளை கொண்டுவிடுவார்களாம்.  தென்னம் மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க சொல்வார்களாம். பறிக்க தாமதமானால் மரத்தை வெட்டி சாய்த்துவிடுவார்களாம். எப்படிப்பட்ட மூடர்கள் முரடர்கள். கொடுமை நிறைந்த ஜப்பானியர்களின் ஆட்சியில் எங்கும் அவலம் எப்பொது துயரம். கிடைத்ததைக் கொண்டு உயிர் வாழ்ந்த தமிழர் விடயங்களை சார்ந்த வரலாற்றுக் குறிப்புக்கள் இரண்டாம் உலகப்போரைப்பற்றி எழுதி வைத்தவர் யாரும் இலர் எனலாம்.

உடுத்துவதற்கு உடையின்றி  கோணிக் சாக்குகளை தன் உடலை மூடுவதற்கு பயன் படுத்திக்கொண்டார்கள் என்றால் எவ்வளவு கொடுமைகள் நிறைந்த காலம் ஜப்பானியர்களின் ஆட்சிக்காலம். காட்டில் விளைந்த கிழங்குகள் அவர்களின் பசியயை போக்கும் உணவுகளாக  மாறிவிட்டிருந்தக்காலம். அவர்கள் கொல்லையில் போட்ட  எள்ளும் கொள்ளும்  அவர்களை வாழ வைத்தன.

சயாம்  மரண ரயில் பாதை போடுவதற்கு பிடித்து கொண்டு சென்ற  தமிழர்களில்  எவ்வளவு பேர் மீண்டு வந்தனர் என்ற குறிப்புகள் கூட இல்லை. எத்தனை உயிர்கள்  அந்த சயாம் மரண ரயில் தண்ட வாளத்தில் சரிந்து போனார்கள்?

காலராவிலும் கொடும் நோயாலும்  விஷப் பூச்சிக்களாலும் கொடும் தண்டனைகளாலும்  மடிந்து போன தமிழர்கள் எத்தனை எத்தனை பேர்? நாடட்ற ஒரு இனத்தின் இருந்து நமது முன்னோர்கள்  நாதியற்ற மனிதர்களாக இவ்வளவு கொடுமைகளும் ஈடு கொடுத்திருகின்றார்கள் என்றால் அதை என்னவென்பது?
போர் முடிந்த போதும் அமெரிக்க பிரிட்டிஷ் அஸ்ரேலிய போர்கைதிகளுக்கு கிடைத்த நஷ்ட ஈடுகூட தமிழ் மக்களுக்கு கிடைக்க வில்லை என்பதை மனித நேயத்தை பேசும் உலக மக்களுக்கு தெரியவில்லை.

இறந்துபோன மற்ற போர்க்கைதிகளை மீண்டும் தோண்டி எடுத்து மாற்று இடத்தில் வைத்த போது தமிழ் பிணங்கள் மட்டும் அங்கு அனாதைகளாக கேப்பார்றற்று கிடக்கின்றன

இந்திய தேசிய ராணுவம் என்று சுபாஷ் சந்திர போஸ் அமைத்த இந்திய ராணுவத்தில் எழுச்சிக்கொண்ட அன்றைய மலாயா தமிழ் மக்கள் நகையும் பணத்தையும் கொடுத்து  உயிர்த்தியாகம் செய்த அந்த ராணுவத்தை கலைத்தபோது எத்தனை தமிழ் மக்கள் போர் முனையில் இறந்தனர் என்ற விவரத்தை திரட்ட இயலவில்லை. பிரிட்டிஷ் படைக்கு எதிராக இயங்கிய காரணத்தால் அவர்களுக்கு நஷ்டஈடுக்கூட கிடைக்க வில்லை. அதிலே இறந்தவர்களும் மறைந்தவர்களும் எவ்வளவு பேர்?

அமைதியான தோட்டப்புற வாழ்வு அந்த வாழ்வை கெடுக்க வருகிறது ஜப்பானியர்களின் படையெடுப்பு. அதன் பிறகு மக்கள் படும் துன்பங்களை நாவல் நெடுக்க சொல்லிச் செல்கிறார் அ ரெங்கசாமி. நாவலில் வரும் கதை மாந்தர்கள் ஜப்பானியர்களின் கொடுரங்களை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகின்றனர். உண்மையில் அந்த கால மக்களிடம் பேசி உரையாடல்களை நடத்திய போது அவர்கள் சொன்ன விடயங்கள் அப்படியே அ. ரெங்கசாமியும் சொல்லும் விடயங்களும் சரியாகத்தான் இருக்கின்றன.

புதியதோர் உலகம் என்னும் நாவலில்  உலக போர் நடந்த போது நிகழ்ந்த ஜப்பானியர்களின் ஆட்சியின் நடந்த  அவலங்களையும் அதன் தொடர்ச்சியாக சமுதாயம் எதிர்க்கொண்ட பிரச்சனைகளை பேசும் சமுக வரலாற்று நாவலாக நமக்கு தெரிகிறது.

கதாப்பத்திரங்கள் உலகின் எத்தனையோ கதை மாந்தர்கள் அதன் பாத்திரங்களால் நினைவு படுத்தப்படுகிறார்கள், “புதியதோர் உலகத்தின்” முதன்மை கதாப்பாத்திரம் கருப்பையா கங்கானி . அவரின் மனைவி பாக்கியம். நல்ல மனிதர், தோட்டத்தின் கலங்கரை விளக்கு. அடைக்கலம் தேடி வருபவரை ஆதரிப்பவர். அந்த தோட்டத்தில் இருந்தவர்களுக்கு நல்ல வழிக்காட்டி. பொதுவாகவே தோட்டப்புறம் என்பது ஒருவரோடு ஒருவர் அன்பாகவும் அனுசாரனையாகவும் இருப்பார்கள். எப்பொழுதும் தூர நோக்கு சிந்தனையுடன் செயல்படும் கங்கானி எதிர்காலத்தில் பஞ்சம் பட்டினியை எதிர்க்கொள்வதற்கு காடுகளை அழித்து பயிச்செய்து பல உயிர்களை காப்பற்றியவர்.

சின்ன தம்பி ஓயிலாட்ட வாத்தியார். அவர் மனைவி மூக்காயி.மற்றவர்களை சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவர் சின்ன தம்பி. கருப்பையா கங்கானியின் மருமகன். சீர்திருத்த வாதி. சுகந்திர வீரர். நேதாஜி படையில் சேர்ந்து இந்திய விடுதலைக்கு போராட நினைத்தவர். இந்திய தேசிய படையை கலைத்த பிறகு மீண்டு வந்து புது வாழ்வை தொடக்கியவர்.

கருப்பையா கங்கானியோட நெருங்கிய உறவினர் சங்கிலி கருப்பையா கங்கானியின் தம்பி மகன். அவனின் மனைவி சரசு, காத்தான் நல்ல வீரன் எதையும் துணிந்து செய்யக்கூடியவன். அடைக்கலம் நாடி கருப்பையா கங்கானியிடம் தஞ்சம் புகுகின்றார்.வெள்ளையன் கங்கானி மகன் வேலு அவரின் மனைவி காவேரி
கோக்கி முனியன். அவர் மனைவி பொம்மி. ஜப்பான்காரன் அவர் தலையில் கல்லை தூக்கி வைத்து நிற்கவைத்திருக்கின்றான். இது ஜப்பானியர்களின் கொடுர தண்டனையை காட்டுகிறது. துரை பங்களாவின் வேலையாள்
ஓடும்பிள்ளை. கட்டை வெட்டிக் கருப்பு. நெடும்பி,கிராணி அவர் மனைவி தயா.
செம்பாயி, அவள் தாயார். அம்சா மலாய்கார படகோட்டி, கப்பலா மகன் லீ
இன்னும் சில கதைமாந்தர்களுடன்

அ.ரெங்கசாமியின் நாவல் இப்படித்தான் தொடங்குகிறது. ஒரு நாவல் அமைப்பில் எங்கிருந்து தொடங்கி எங்கு முடிவுறுகிறது என்பதற்கு நல்ல உதாரணம் . ஜாப்பனியர்கள் கிளந்தானில் தரையிறங்விட்டார்கள் என்றவுடன் வெள்ளையர்கள் தெற்கு நோக்கி ஓடிவிடுகின்றனர். சிங்கப்பூர்தான் அவர்களின் இறுதி எல்லை.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் மக்களை சியாம் மரண ரயில் பாதை போடுவதற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றனர். கருப்பையா கங்கானியும் சங்கிலியும் போகும் வழியில் தப்பித்துவிடுகின்றனர். ஜப்பானியர்களின் கண்களில் மண்னைத் தூவி தோட்டதிற்கு வந்துவிடுகின்றனர். தோட்டத்து பக்கதில் இருந்த கம்பத்து காட்டில் தங்கிவிடுகின்றனர். அங்கே காட்டை அழித்து பயிற்செய்து குடும்பத்தை காக்கின்றனர். அம் மக்கள் பட்ட துயர்களை அழகாக பதிவு செய்துல்ளார்.

இடையிலே இந்திய தேசிய ரானுவத்தை சின்ன தம்பி மூலம் சொல்கிறார் கதையாசிரியர். மலாயா மண்ணில் தமிழர்கள் எழுச்சியோடு சுபாஸ் சந்திர போஸ் படையில் எப்படி இனைந்தார்கள் என்பதை நினைவு கூர்ந்துள்ளார். தோட்டங்களிளும் எழுச்சிக்கொண்ட மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சின்ன தம்பி ஒரு உதாரணம்.

மலாயா கம்னிஸ்டுகள் ஜப்பானியர்களை எதிர்த்து போரடியதையும் அதிலே சீனர்கள் பெரும் பங்கு வகித்ததையும் சொல்லிறார்.இரண்டாம் உலக போரில் இறுதியில் பிரிட்டிஷ் இந்திய ராணுவம் போரிப் கடற்கரையில் தரையிரங்கியதை அவர்கள் தரையிரங்கும் முன் ஆற்றின் முகத்துவாரத்தில் நின்றதை ஒரு குறிப்பாக சொல்கிறார்.ஜப்பானியர்கள் சரணடைந்ததை அடுத்து பிரிட்டிஷ்சார் மீண்டும் மலாயாவிற்கு வந்ததையும் சொல்கிறார்.

பிரிட்டிஷ்சார் வருவதற்கு சில தினங்கள் நாடு கம்னிஸ்டுகளின் ஆட்சியில் இருந்ததை அவர் சொல்லாமேலே சென்றுவிட்டார், அவர் சொல்லும் காட்டுக்காரர்களின் அட்டகாசத்தை பேய்களின் ஆட்டம் என்கிறார். ஆனால் இது சயாம் மரண ரயிலை பற்றி பேசவில்லை இது ஜப்பானியர்களின் ஆட்சியில் தோட்டப்புற மக்கள் பட்ட வேதனைகளை பற்றி நிறை பேசும் நாவல்.

இப்புதினத்தின் வழி புதியதோர் உலகத்தை காண விழையும் நாவலாசிரியர் அ,ரெங்கசாமி அங்கங்கே நெகிழ்சிகளை உண்டாக்கும் ஆற்றலைக் கொண்ட உணர்வுகளை கதை நெடுக்க அள்ளித்தெளித்துதுள்ளார். அன்றைய சரித்திரத்தையும் அதன் உண்மை சம்பவங்களையும் நம் கண்முன்னே கொண்டு வருவதில்         அ, ரெங்கசாமி வெற்றிக் கண்டுள்ளார் என்றே சொல்லாம். இது கதையல்ல,காட்சி.

புதியதோர் உலகம் அ.ரெங்கசாமி. முதல் பதிப்பு 1993                       மனோகரன் கிருஷ்ணன் 12/2/2016


February 3, 2016

மலேசியாத் தமிழ் கதைச் சொல்லிகள்மலேசியாத் தமிழ் கதைச் சொல்லிகள்

பொ. சந்தியாகுவின். இனிமேல் என்ற சிறுகதை
நேற்று கிடைந்த கரு மையில் நனைந்த நூறு வெள்ளி நோட்டை தன் மனைவியிடம் மறைத்து விடுகிறார். அறிவானந்தம் தனது நேர்மையான மனைவிக்கு தெரிந்தால் அதை கோவில் உண்டியில் போட்டுவிட சொல்லிவிடுவாள் என்ற பயம்
.
மாத மாதம் துண்டு விழும் பஜெட் இந்த நூறுவெள்ளியை கொண்டு சமாளித்துவிடலாம் என்று எண்னுகிறார். வீட்டுக்கு வருகிறார். எஸ்ட்ரோ வெட்டிவிட்டதை மனைவி சொல்கிறார். தன் சட்டைப் பையை தொட்டுப்பார்க்கிறார், மனைவி கேட்கிறார் இன்னும் எஸ்ட்ரோ பில்லை கட்டவிலையா என்று? இன்று சமாளித்துக்கொள் நாளை எஸ்ட்ரோ வந்துவிடும் என்கிறார்.
எரிந்துக்கொண்டிருந்த பல்பு அனைந்துவிடுகிறது.புளுக்கத்தில் உருண்டு திரண்டு படுக்கிறார். பக்கத்தில் மனைவி படுத்திருக்கின்றார். முதுமை தட்டினாலும் மனைவியை பார்த்தவுடன் மனதினில் சபலம் தட்டுகின்றது. ஆனாலும் தன் பணக் கஷ்டம் கண்முன்ணே நின்றாலும் இரவின் மடியில் மன ஆறுதலோடு ஒன்றினைகின்றனர்,
முதலிலே தனக்கு தெரிந்த ஒரு கடைக்கு போகிறார். வாடிக்கையாளர்கள் நிறையபேர் இருப்பதால் நூறு வெள்ளியை மாற்றுவதற்கு தயங்குகிறார். கடைக்காரரோ என்ன விசயம் என்று கேட்கிறார். ஒன்று சொல்லாமல் வீட்டிற்கு வந்து விடுகிறார்.
மறு நாள் ஒரு பேராங்காடியில் மாற்றி விடலாம் என்று சீக்கிரமாகவே செல்கிறார். அதற்குள் மழை வந்து விடுகிறது. மேல் சட்டைப்பையில் வைத்த நூறு வெள்ளி நனைந்து விடுகிறது. நனைந்த நோட்டை எப்படி மாற்ற முடியும் என்று நினைத்து மீண்டும் வீட்டிற்கே வந்து விடுகின்றார்.
அங்கே மேஜை மீது தன் கட்ட வேண்டிய பில்களும் பணமும் தயாராக இருக்கின்றது. தன்னை முழுமையாக அறிந்த மனைவி சொல்கிறார், சிறுக சிறுக சேமித்த பணம் இதைக்கொண்டு பில்களை கட்டிவிடுமாறு சொல்கிறார்.
மறு நாள் முதல் வேலையாக அந்த கறைபடிந்த நூறு வெள்ளியை வினாயகர் கோவில் உண்டியில் போடுவிடுகிறார். மனம் அமைதி பெறுகிறது பஜெட்டை திட்டம் போடுவதில் தன் மனைவிக்கு உறுதுணையாக இருக்கிறார்.
தலைப்பை இனிமேல் என்பதை விட நூறு வெள்ளி என்று வைத்திருக்கலாம். கச்சிதமாக பொருந்தியிருக்கும். எளிமையான மனப்போராட்டம் . அதையே கருவாக கொண்டு சிறுகதையை வடித்துள்ளார்.

1950 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன நாட்டின் பழம்பெரும் எழுத்தாளர். டாக்டர் ரெ. கார்த்திகேசுவின் சமக்கால எழுத்தாளர். பள்ளித்தோழர்.
பொ. சந்தியாகுவின் சாமக்காரரும் வெற்றிலைக்கொடியும் என்ற சிறுகதை தொகுப்பில் இருந்து.