November 28, 2015

கண்ணில் பட்டது “ஒளிபுகா இடங்களின் ஒலி”
சில எழுத்தாளர்களின் எழுத்துக்களில் நாம் உள்ளே புகவே முடிவதில்லை. அவர்களின் உரைநடைகளில் வாசகனின் மன உணர்ச்சிகளை உடைத்து சட்டென உள்வாங்கும் புலன் உணர்வுகளை குறிப்புகளாக்  வெளிப்படுத்த அவர்களால் முடிவதில்லை அது சிறுகதையாகட்டும்  நாவலாட்டும் கவிதையாட்டும். ஆனால்  தயாஜியின் “ஒளிபுகா இடங்களின் ஒலிஎன்னும் நூலில் மிகவும் இயல்பான ஒரு நடையில் வார்த்தை சிக்கனத்தோடு அவர் வகுத்த கருத்துக்களை அழகாக தொகுத்தும் கொடுத்தும் விட்டார்.

அவ்வப்போது வெளிவர துடிக்கும் மிருகத்தை  அடக்கிவைக்கிறோம அல்லது யார் கண்ணிலும் படாமல் அலையவிடுகின்றோம். எப்படிப்பட்ட உள்ளார்ந்த வார்த்தைகள் தயாஜியிடமிருந்து வெளிப்படுகிறது.  இது பாடமா? இல்லை பகுத்தறிவு வேதமா என்று தெரியவில்லை.

மனிதனிடம்  நெருங்கி நிற்ககும்  ஒரு மிருகத்திடம் ஆறறிவு இருக்கிறது. மெய்யறிவை மட்டும் தொலைந்து விடுகிறது. அவன்தான் மனிதன் என்பதை எவ்வளவு பக்குவமாக ஒரு  ஞானியை போல் அல்லவா சொல்கிறார்.
நாம் சிற்சில சமயங்களில் விதையிலே உருவான விந்தை மரங்களை பார்ப்போம். மரமாகி உரமாகி போகும் மனிதர்களையும் பார்ப்போம். அது இயற்கைதான்.இயல்பான நல்ல மனிதர்களை பார்க்க மறுக்கின்றோம்.அவர் சொல் கேட்க மறுக்கின்றோம். நெஞசம் நிமிர்த்தி வஞ்சமற்ற மனிதர்களை ஏறேடுத்து பார்க்க மாறந்தோம்.. நாமும்  மனித நேயத்தோடு.வாழ தயாஜின் “ஒளிபுகா இடங்ளின் ஒலி” வழி வரும் வலியின் குரல்களை ஒரு கணம் நினைத்தாலே போதும்.   

அவரின் நெடும் பயணத்தில் வழியெங்கும் கண்ணாடி துண்டுகளாக சிதறிக் கிடக்கின்றன.அவருக்குள் இருக்கும் அனுபபங்களை அவர் பெற்ற அலப்பறைகளை அளவெடுத்து எழுதியிருக்கின்றார்.

தனி மனித மன அலசல்களை ஒரு கூரிய நோக்கில் இந்த சமுதாயத்தை முன் நிறுத்தி எழுதும் ஒரு திறந்த மனதுகாரர், மனித வாழ்வின் இன்ப நாதத்தை இசையோடு இசைந்து சொல்வதற்கும்  ஒரு பன்பட்ட மனிதன் வேண்டும்.
இந்த சமுகம் அவரை வஞ்கமாக கொட்டினாலும் திரும்ப திரும்ப திட்டினாலும் அவருக்கென்று ஒரு பார்வை இருக்கிறது. இந்த சமுதாயத்தின் ஆணிவேரை அவ்வப்போது அசைத்து பார்த்து புரையோடி போயிருக்கும் வேர்ககளை வெட்டி வீழ்த்த முற்பட்டிருக்கின்றார் அதற்கென அருமையான பத்திகளை கட்டியெழுப்பியிருக்கின்றார். அதிலே சன்னிலியோனும் ஓடுகாலியும் நம்மிடம் வந்து தொலைகிறார்கள்.

தமிழர்களின் மனதையும் அவர்களின் வாழ்வியலின் சிக்கல்களையும் ஆழமாக ஊடுருவி பார்க்கும் பார்வை அறம் சார்ந்த ஒரு தத்துவ பார்வைதான். நமக்கென்று ஒரு மனம் இருக்கிறது.. ஒரு வடிவம் இருக்கிறது  அதன் சித்தாந்தகளை சிதைத்துவிட்டு எந்த எழுத்தாளனும் எழுத முடியாது என்பதை "வெறும் செருப்பாக " வும் "சாதி மயிராக"வும் வெளிவருகிறது. தயாஜி.
அவரின் எழுத்து படிமங்கள் சாதரணமாக தொடங்கி அசாதாரணமாக முடிகிறது.. அவரின் வார்த்தைகளில் சொற் சிக்கனம் இருக்கிறது. தென்றலின் அமைதியோடு தெம்மாங்கின் நடையோடு ஒரு நதியின் சீற்றமும் அதில் தெரிகிறது என்பேன்.


நான் அவரை சில சயங்களில் சரித்திர குறிப்பு என்று சொல்வேன் எழுத்தாளர் வாழ்வும் பல சமயங்களில்.பெரும் போராட்ட களமாய் மாறி விடுகிறது அவர்களின் எழுத்தினால் என்றால் அது மிகையல்ல . ஆனால் தன் எழுத்தால் இன்னும் ஒரு பிரமாண்டத்தையும் அதன் ஊடே எரிமழையின் சீற்றத்தை அவரால் இன்னும் தரமுடியம்  தர வேண்டும் என்பதே  எனது ஆசையும் கூட. தன்னை ஆளுமை படுத்தவும், அடையாளப்படுத்தவும் அவர் இன்னும் முயன்று பார்க்கவேண்டும்.. அதன் தொடக்கம் தான் இந்த “ஒளிபுகா இடங்களின் ஒலிஎன்ற நூல்.
Post a Comment