June 24, 2015

மோகத்தீ

மோகத்தீ
மனிதனின் சகலவிதமான பிரச்சனைகளுக்கும் மனம்தான் காரணம் என்பதை மாந்தன் எப்பொழுது அறிந்துக்கொள்கிறானே அன்றுதான் "தான்" என்கிற அகங்காரம். ஆணவம் அடங்கிய பின் பிறப்பின் தத்துவம் மனிதனுக்கு புரிந்துவிடும்.
நல்லவனாக இருந்து நான் என்னத்தை சாதித்தேன்? இது கெட்டவர்களின் உலகம். அவர்களின் வாழ்வு நலமாகத்தானே இருக்கிறது? இதோ பார்! என் வாழ்வு எவ்வளவு துன்பம் என்று வாழ்க்கையை நெந்துக்கொள்பவர்கள்தான் அதிகம். 

மனிதன் இயற்க்கைக்கு எதிராகத்தான் வாழ்கிறான். இயற்கையோடு இசைந்து வாழ
என்று கற்றுக்கொள்கிறானோ
அன்றுதான் மனிதன் மனிதநேயத்தோடு வாழ்கிறான் என்று புரிந்துக்கொள்ளலாம். உண்மையில் மனிதனின் ஒவ்வொரு எண்ணங்களும் இயற்கையோடும் இந்த பரவெளியில் விரிந்து எங்கோ ஒரு மூலையில் பதிந்து விடுகிறது.
மனம் என்பது மனிதனுக்கு கிடைத்த அற்புத அலாவூதின் விளக்கு. அதை தீட்டி மெருகூட்டி உள்ளன்போடு வாழ்ந்தால் தெய்வீகமான வாழ்வு நமக்கு வழிதுணையாகும். ஆனால் விதியின் வசத்தால் நன்றாக ஒழுக்க செம்மலாக வாழ்ந்த ஒர் மனிதனிடம் மோகத்தீ எப்படி வேகமாக பரவி அவரின் மதியை ஒரு மயக்க நிலைக்கு கொண்டுச்சென்றதுதான் மோகத்தீயின் கதைக் கரு.
வாழ்க்கை என்பது பட்டு மெத்தையல்லா. கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் பயணம் போவது போன்றது நம் வாழ்வு. இன்பமுன் துன்பமும் சோதனையும் சாதனையும் இரண்டற கலந்து இடிமின்னல் போன்று மாறிவரும் வானிலை அறிவிப்பாக வந்து மயக்கம் தரும் நிலையில் வாழ்ந்து தொலைக்கின்றோம்.
ஊரிலே பெயர்பெற்ற குடும்பம். மீத்து லேடத்து குடும்பம் . தான தர்மங்களை செய்து சிறுக சிறுக தன் சேமிப்பை கறைத்துக் கொண்டிருந்த ராமுண்ணி தான் மோகத்தீயின் கதை மாந்தன்.
"நல்ல மனசுக்காரன் நீ" நல்ல மனசு இருந்த போதும் ராமுண்ணி .நல்ல மனசு உள்ளவங்களோட பிராத்தனை கடவுள் கேட்காம இருப்பாரா? என்று சான்றிதல் தரும் அச்சு வாத்தியார். ராமுண்ணியின் நண்பர்.
நீலகண்டன் வேலை வெட்டி இல்லாமல் வெறுமன சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தவன். எத்தனையோ முறை ராமுண்ணியிடம்
கடனாக வாங்கும் பணத்தை திரும்ப தந்ததில்லை .இருந்தாலும் கஷ்டம் என்று வந்து விட்டால் ராமுண்ணியின் முன் தான் நிற்பான். அன்றும் அப்படித்தான் அவர் முன் பணத்திற்கு வந்து விட்டான்
ஒடிங்கி போய்யிருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் தொலைப்பதற்கு ராமுண்ணியின் மனம் சங்கடப்பட்டாலும் தன் குலபெருமையை விட்டுக் கொடுக்கவும் மனம் இடம்தரவில்லை. ராமுண்ணிக்கு நீலகண்டன் ஒரேடியாக ஆயிரம் வெள்ளி என்றவுடன் முடியாது என மறுக்கவும் ராமுண்ணின் காலில் தடலென்று விழுந்து விட்டான் 
நீலகண்டன். தன் காலில் விழுந்துகிடக்கும் நீலகண்டனை பார்த்து மனம் கேட்கவில்லை. தன் மனைவியிடம் பறித்து வந்த இடுப்புக் கொடியை
கொடுத்து பணம் தருமாறு வேண்டுகிறான் நீலகண்டன். தன்னிடம் இருந்த 500 வெள்ளியை கொடுத்து நகையை நீலகண்டனை வைத்துக்கொள்ளுமாறு சொல்கிறார் ராமுண்ணி. ஆனால் பிடிவாதமாக மறுத்து அவரிடமே தந்துவிட்டு செல்கிறான் நீலகண்டன்.
ராமுண்ணிக்கு ஒரே கோபம். தன் குலப்பெருமைக்கு தீங்கு செய்துவிட்டு போகிறான் என்ற கோபம். தன் குடும்பம் மற்றவர்களின் நகையை வைத்து பணம் தரும் கேவலமான நிலைக்கு இன்னும் தரம் தாழவில்லை என்று நினைப்பு அந்த நகைகளை அன்று மாலையே அவனிடம் தந்து விட வேண்டும் என்று நினைத்து நீலகண்டனின் வீடு நோக்கிச் செல்கிறார் ராமுண்ணி. போகும் வழியில் அப்படி என்ன நகையைதான் அவன் கொடுத்திருக்கின்றான் என்று திறந்து பார்த்தவுடன் வெறும் இடுப்பு கொடிதான் அதில் இருந்தது.
நீலகண்டனின் வீட்டின் முன் நிற்கும் பெண்னைப் பார்க்கிறார். பெண்னின் இடுப்பும் தெரிகிறது தன் இடுப்பில் மடித்து வைத்திருப்பது அந்த பெண்னின் இடுப்புக் கொடி என்ற நினைப்பும் தோன்றுகிறது. ஒரு வார்த்தை பேசாமல் மீண்டு வீடு நோக்கி நடக்கின்றார்.
பல நாள் அதே எண்ணம் .தன் மனைவியிடம் மறைத்து வைத்து அதை நொடிக்கு ஒரு தரம் அழகு பார்த்து பெருமூச்சு விடுகின்றார்.
அவரின் மனம் அதன் செயல்பாடுகள் தடைப்படுகிறது. அச்சு வாத்தியார் சந்தேகம் கொள்கிறார் எதுவாக இருக்கும் என்று?
ராமுண்ணியின் மனைவிக்கும் தன் கணவனின் நிலைக்கண்டு எதுவும் புரியவில்லை.இடுப்பு கொடிதான் தன் கணவனை இந்த பாடு படுத்தியிருக்கிறது என்று தெரிந்துக் கொள்வதற்கு சில காலம் பிடிக்கிறது. தன் கணவன் வேறு ஒருவளிடம் மோகப் பித்து பிடித்திருக்கிறது என்று தெரிந்தவுடன் தன் கணவருடன் சண்டை போடுகிறாள் சரோஜினி.
ராமுண்ணியின் பித்துக்கு தான் காரணம் என்று அச்சு வாத்தியார் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் நீலகண்டனின் மனைவி சாவித்திரி.
ஒரு நாள் அவள் குளிக்கும் ஆற்றின் கரையில் வளர்ந்திருக்கும் புற்களின் மறைவில் இருந்து விடுப்பட்டு நடுங்கும் இரண்டு கரங்கள் அவளின் இடுப்பிலே அந்த இடுப்புக் கொடியை
கட்டி விடுகிறது. சாவித்திரி திகைத்து நிற்கிறாள்.
கடைந்து எடுக்கப்பட்ட காமமும் இல்லை. காட்சியோ .வார்த்தையோ வாக்கியமோ விரசமில்லை. ஆனால் ஒரு மனிதனின் மோகத்தீ மட்டும் கொழுந்து விட்டு எரிகிறது.
பண்பட்ட எழுத்தாளனின் எழுத்துக்கள் உணர்ச்சி பெருக்கத்தை உள்வாங்கி அழகுணர்ச்சியாக மாற்றி நம்மை கதையின் தன்மையோடு ஒன்றிட வைத்துவிடுகிறது.
கற்பனை வாதமும் அதையேற்றி தொற்றி நிற்கும் மனிதனின் பண்புக்கூறுகள் எவ்வளவு பெரிய கதைகளின் கருவாக உருக்கொள்கிறது. உணர்வுகள் மனிதனை மெருகேற்றும் அல்லது மிருகமாக்கும். கண்ணுக்கு தெரியாத தெரியாத உணர்ச்சி பிரவகம் என்பது ஒரு அணுசக்தியின் வெடிப்பின் நிலைதான்.அதன் வெப்பத்தால் உலகம் கண்டிப்பாக உருகித்தான் போகும்.
ஒருவனின் சீரிய பண்புக்கும் சீர்கெட்ட நடத்தைக்கும் மனம் தரிக்கெட்டு போகும் போது அக ஒழுக்கமுள்ள ஒரு மனிதன் மோகத்தீயால் புற ஒழுக்கத்தை மீறி செய்யும் செயல்களை ஒரு எதார்த்த நடையிலே கதை விரிந்துள்ளது.சாகித்ய அகாடமி விருந்து பெற்ற எம் முகுந்தனின் மோகத்தீ மலையாள மொழிப்பெயர்ப்பு குறு நாவல் என்று தெரியாமலே நம்மை சுட்டெரிக்கிறது.
.
Post a Comment