June 4, 2015

குறத்தி முடுக்கு - நூல் விமர்ச்சனம்
குறத்தி முடுக்கு

தெருமுனைகளிலும் குறுகிய சந்துகளிலும் அழகு பதுமைகளாக நின்று தன் உடலை வியபாரச் சந்தையாக்கி எந்த ஒரு கூச்சமுமின்றி கூவி அழைந்து அதற்கு கூலியாக பணத்தை பண்டமாற்றமாக பெரும் ஒரு வகை தொழிளாளிகளை கண்டால் மனம் வெம்பி பதைபதைகிறது. அவர்களின் பின்னால் சுமக்க முடியாத துன்பங்களை சுமந்து ஆயிரம் துன்பக் கதைகளை சொல்லும் கதைச் சொல்லிகளாக வலம் வரும் ஒரு சில மாந்தர்களின் வாழ்வியல் கலைநயமிக்க கதை ஆசிரியகளால் எவ்வளவு வெகுளிதனமாக வெளிப்படுத்தப்படுகிறது?
காமம் கடந்த மனித வாழ்வை இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்ல முடியுமா என்பதை இந்த குறு நாவலை படித்த பிறகுதான் உணர்கின்றேன்.. வாழ்வில் சிற்சில சமயங்களில் காமம் கடைவிரித்து மனிதனின் போலி முகங்களை எப்படி வெளிக்கொணர்கின்றது என்பதுதான் கேள்வி? சிறு சிறு வாக்கியங்களிலும் கோர்வையாக வடிவமைகப்பட்ட சொற்களாலும் ஆதிமனிதனின் வாழ்வை போன்று ஒரு சிலரின் தேடுதல் வேட்கையை காமம் சார்ந்து சொல்ல முயற்ச்சித்துள்ள ஜி. நாகராஜனின் எழுத்துப் படிவம் வரவேற்கத்தக்கது.
காமம் என்பது புலன் சார்ந்த விசயம். ஆண் பெண் இருபாலரின் ஆசை விருப்பம் அதனுள் மெல்லிய நூற்கம்பிகளாக இழையோடி நிற்பது காமம். அறம் பொருள் இன்பம் என்ற வள்ளுவர் காமத்தை இன்பம் என்கிறார்.ஆனால் அந்த இன்பம் அறவழியில் பெற்றால்தான் இன்பம் இல்லையென்றால் அது பெரும் துன்பத்திற்கு வழிகோலும் என்பதை காலம் காலமாக நமது அறம் சார்ந்த பண்பட்ட நூல்கள் நமக்கு காட்டுகின்றன.
இளமை துள்ளலில் என் கையைப் பிடித்து அப்படிப்பட்ட பரந்தையர்களின் இடங்களுக்கு அறிமுகப்படுத்த நினைந்த நண்பர்களை நான் கடந்தும் கடிந்து வந்திருக்கின்றேன். பிறகு அப்படிப்பட்ட நண்பரிகளிடமிருந்து விலகியே நின்றிருக்கின்றேன். அது போன்றுதான் இங்கும் அறிமுக படலம்.இது போன்ற அனுபவங்களை பல ஆண்கள் கடந்துதான் வந்திருப்பார்கள். இந்த பெண்கள் விபச்சரிகளாக தன் வாழ்வை விற்கிறார்கள் என்றால் சில ஆண்கள் வேசித்தனங்களோடுதான் வாழ்கிறார்கள். அது எவ்வளவு பெரிய நயவஞ்சகம்
விபச்சாரத்தை நாடிச் செல்லும் ஒரு இளவயது மனிதனின் வேட்கையை மையமாக கொண்டு கதை நகர்ந்தாலும் இன்றைய நவநாகரிக உலகில் ஒழுக்கம் கெட்ட மனிதர்களால் ஒரு சில பெண்களின் வாழ்வு எப்படி சூறையாடப்படுகின்றது என்பது இந்த குறு நாவலை படித்தால் சற்றேனும் விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் இது ஒரு காதல் கதை அல்ல. காமத்தை காட்சி படுத்தியிருகின்றார்  விரசமில்லாமல்.
குறத்தி முடுக்கு என்பதே விபச்சார தெருவாக காட்சிப்படுத்தப்படுகிறது. அங்கு மனிதர்கள் எப்படி வியபாரப்பொருளாக மாற்றப்படுகின்றனர். சில ஆண்களின் காம வேட்கையினால் சில பெண்களின் பின்னால் கொடுரம் நிறைந்த ஒரு வாழ்வு எவ்வாறு பின்னப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளாம்..
ஆணுக்கு பெண் தேவை பெண்னுக்கு ஆண்தேவை. காமம் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவை, அது காதலாக இல்லாதபட்சத்தில் விலைக்கொடுத்து வாங்கப்படும் காமமாகத்தான் விபச்சாரம் தெரிகிறது.
திருமணம்தான் காதலின் குறிகோள் நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றோம். அதுவே போதும் கல்யாணம் வேண்டாம் என்றால் அது உண்மைக் காதல் இல்லை.அது கள்ளக்காதல் கள்ளக் காதலர்கள் கல்யாணத்தை நினைப்பதே இல்லை என்று காமத்திற்கு புது அர்த்தத்தையே குடுத்திருக்கின்றார்.ஜி. நாகராஜன்.
ஒரு மனிதன் தன் காம அபிஷசைகளை தீர்த்துக்கொள்ள விபச்சாரிகளை தேடிச் செல்வது பண்பாடான செயல் அல்ல. ஒரு கொடுர மிருகம் வேட்டையாடுதலில் சிக்கும் பலி ஆடுகள் போல் வீழ்த்துபோகும் இந்த பெண்களின் மறுப்பக்கத்தையும் அவர்களின் கண்ணீர் கதைகளை சொல்லும் ஆபாசத்தில் இருந்து முற்றிலும் மாறான கலைப்படைப்பாக இது நமக்கு தெரிகிறது.குறத்தி முடுக்கு. மற்றவர்கள் பேச மறுக்கும் கதை கரு.ஆபாசம் அசிங்கம் என்று மறுத்துரைக்கம் விபச்சாரத்தை எந்த ஒரு ஆபாச வார்த்தைகளும் வர்ணனைகளும் இல்லாமல் ஒரு சில கதைமாந்தர்களுடன் அழகாக கடந்திருக்கின்றார் கதையாசிரியர்.
அனைவரும் படிக்கவேண்டிய குறுநாவல்.. பெண் விடுதலையை பற்றிக்கொண்டு பேசுபவர்களும் பெண்களின் துயரங்களை புரிந்துக்கொள்வதே இல்லை.

- ஜி.நாகராஜன் -1963 முதற்பதிப்பு.

Post a Comment