March 19, 2015

தூப்புக்காரி

  

  

முரண்களின் பிண்டமாக இந்த வாழ்க்கை சிலருக்கு அற்புதமாகவும் அழகாகவும் அமைந்துவிடுகின்றது. கூப்பிட்ட குரலுக்கு ஏவல் செய்ய நூறு வேலையாட்கள். கண்களில் அதிர்வுகளில் அதிகாரங்களை செலுத்தும் அவர்களின் கனவுகள் கூட சொர்கப்புரிதான். அதைதான் ராஜ வாழ்க்கை என்கின்றனர் போலும். சமுகத்தில் மதிப்பு மரியாதை.மாண்புகள் என அவர்களை வந்து சூழ்ந்து நிற்கும். இதற்கு எல்லாம் மூலக் காரணம் அவன் பணம் படைத்தவன். பணம் இல்லை என்றால் அதிகாரம் அந்தஸ்து எதுவும் அவனிடம் நிற்பதில்லை.அவனும் ஆண்டியாய் அவஸ்தைபட வேண்டியதுதான். இது தான் உலகத்தின் நடைமுறை பண்பு.

இதற்கு நேர்மாறான வாழ்வு , இல்லாதவர்களின் வாழ்வு.அது ஏழைகளின் வாழ்வு. போராட்டம்தான் வாழ்வு. ஏதிலிகளின் போராட்டம் என்பது அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமாகிறது. அங்கிருந்துதான் சாதி மத வர்க போராட்டங்கள் முன்னெடுக்கபப்படுகின்றன. ஏழையாக இருந்தால் அவன் தாழ்ந்த சாதியாக்கப்படுகின்றான். பணம் கொண்ட எவனும் தாழ்த்தப்படுவதில்லை. தாழ்ந்தவனாகவும் பார்க்கப்படுவதும் இல்லை.
ஏன் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுப்பாடு?  ஒரு பொருளாதார அடிபடையில் கட்டமைக்கப்பட்ட வாழ்வியலை நோக்கமாக கொண்ட  ஒரு சமுகம். அதை தனியொருமனிதனிடம் வலுக்கடையாமாக தினிக்கும் போதுதான் அங்கு சமுக சிக்கல்கள் முரண்படுகளும் முனைப்போடு உருவாக்கம் பெருகின்றன..                                        

எல்லா மனித செயற்பாடுகளும் ஒரு விளைவை ஏற்படுத்தும். “விளைவுகள் மனித செயற்பாடுகளின், எதிர் விளைவாக கொள்ளப்படும். தூப்புக்காரி முரண்பாடுகளின் மொத்த உருவமாக தெரிகிறாள்.. எதிர்க்க நினைக்கும் விடயங்களில் எதிர்க்காமலே மவுணத்தை சூட்டிக்கொள்கிறாள்..வாழ்வில் எதிர்ப்படும் இன்னகளை எதிர்க்கொள்ள வலுவில்லாமல் தன் உழைப்பயை சுரண்டும் மேட்டுக்குடியினரிடம் ஒரு எதிர்ப்பும் காட்டமுடியாமல் மரணத்தை தழுவும் கனகத்தினரை போன்றும் மாரியை போன்றதுதான் துப்புரவு தொழிளாளர்களின் வாழ்க்கை என்பதை அழகாக புனைந்திருக்கின்றார் மலர்வதி.

ஒரு நாவலோ,  சிறுகதையோ, ஒரு கவிதையோ நமது வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் பிரதிபலிப்புதான் இந்த சிறு துளிகள்..அவை நமக்கு ஒரு படிப்பினையை நோக்கி நகர்த்தும் இல்லையென்றால் நம்மை படிக்கல்லாய் மாற்றி மற்றவர்களுக்கு ஆறிவுரை சொல்லி நகரும். நமது சமுகத்தில் கடைநிலையில் உள்ள மக்களின் வாழ்வை உள்ளும் புறமுமாக மேய்ந்திருக்கின்றார் மலர்வதி. 

பெரிதும் பேசப்பட்ட இந்த நாவல் மலேசிய தமிழர்களிடம் அதிகம் புழக்கத்தில் இல்லாத ஒரு சொல் தூப்புக்காரி .இங்கு தூப்புக்காரி என்றவுடன் ரகசியத்தை உளவு பார்க்கும் ஒரு பெண் என்ற பார்வைதான் இங்கு உண்டு. துப்புரவு என்ற அழகிய தூயத் தமிழில் அது  தமிழ் நாட்டின் தென் கோடியில் உள்ள மக்களின் பேச்சுத்தமிழில் “தூப்புக்காரி” ஒரு இலக்கியம் படைக்க முற்பட்டுள்ளார். தமிழ் நாட்டு எழுத்தாளர் மலர்வதி

. துப்புரவு தொழிளார்களின் வாழ்வு என்பது சமுகத்தில் தள்ளிவைக்கப்பட்ட ஒரு சாராரின் வாழ்க்கை. ஈனமாகவும் அதே சமயம் அழுக்கானவர்களாக பார்க்கும் இந்த சமுக கட்டமைப்பின் பின்புலத்தை பார்த்தால் அங்கு சாதி என்ற தீண்டாமை கோரத்தாண்டவம் நமக்கு தெரிய வரும். கனகம் , மாரி ரோஸ்லின் போன்றவர்கள் இல்லை என்றால் தூய்மைகள் அற்று நாமும் துன்பத்தை சார்ந்து வாழும் நிலைதான் வரும்.
 வாழ்வின் சித்தாந்தங்களை பேசும் தூப்புக்காரி இங்கு ஒரு தத்துவர்தமான சில பொன் மொழிகளை உதிர்க்கவும் செய்கிறாள். “எப்போதுமே உழைப்பு வீணாகி போகும் போது உள்ளம் உடைந்து போகும்” என்கிறார்.

மலம் அள்ளி மூத்திரத்தை கழுவி துப்புரவு செய்து தூய்மைக் காக்கும் இவர்களின் வாழ்வு ஏன் இவ்வளவு மகா கேவலமாக பார்க்கப்படுகிறது? அது சமுகத்தின் பொது புத்தியாக இருக்கும்மோ? 

மன அழுக்கோடு போலி வாழ்வு வாழும் மனிதர்களை ஏற்றிப் போற்றும் இவ்வுலகம் அழுக்குகளை நீக்கும் அன்புடையவர்களை எற்பதும் இல்லை போற்றுவதும் இல்லை.

“எல்லாம் ஒரு காலத்துக்குதான் அதுக்கபுறம் வாழ்க்கை வலிதான் பெரிசா தெரியும்.” விளிம்பு நிலை மனிதர்களின் தொழில்ச் சார்ந்த அனுபவங்களையும், அதன் உணர்வுகளையும் ஒரு கதை அம்சத்தோடு நகர்த்திச் செல்லும் தூப்புக்காரி “உடம்புன்னா என்ன நெனச்ச .... கொஞ்ச, கனவுகளை சொமக்குற கூடு” என்று சொல்லி நம்மையும் அவர்களின் மொழி நடைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் வாழ்வின் எதார்த்தத்தையும் அதன் கோட்பாடுகளையும் உடைக்கும் நினைக்கும் மாரியை போன்றவர்களின் சிந்தனை திறனை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இழிவாக பார்க்கும் இது போன்ற தொழிகளை இயந்திரங்களை வைத்து செய்தால் என்ன? மானுட குலத்தின் பரிமாண வளர்ச்சி படிகளின் இழிவுத் தொழில்கள் இல்லாமல் ஒழிந்து போகும் அல்லவா?

தன் வெந்து நோகும் அதே தொழிலில் பொத்தி பொத்தி வளர்த்த மகளையும் இழுத்துச் செல்லும் காலச்சூழலில் ஒரு தாய்யின் வேதனை மனதை எந்த ஒரு தாயாலும் தாங்கிக் கொள்ளமுடியாத போது ஒரு பெண்ணின் மனப் போராட்டத்தை சொல்வதற்கு வார்த்தைகளால் சிருஷ்ட்டிருக்கின்றார் தூப்புக்காரி. மனோவின் வெறுமையான காதலில் சிதைந்து போகும் பூவரசியின் சின்னம் அவளின் குழந்தை, அதை வாழவைப்பதற்கு புதுப் பரணி பாடி கதையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் மலர்வதி.

காவியம் போன்றதொரு கதையில் புதுமையில்லை புரட்சியில்லை. சாதரணமான நடைமுறை வாழ்வை விளிம்பு நிலை மக்களைக் கொண்டு நிரப்பியுள்ளார். தன் அனுபவத்தின் சாரத்தை கதை வழி கொண்டுவந்த தூப்புக்காரி அடிமட்ட மக்களின் அவர்கள் சார்ந்த எண்ணத்தின் ஊடே அவர்களின் பேசும் மொழித் தன்மையோடு.நம்மை நெருங்கியிருகின்றார்.

 நாவலில் மனித நேயத்தையும், ஏற்ற தாழ்வுகளால் மனிதர்கள்  மனதால் உடலால் வதைப்படும் அவதியையும் அவர்களின் கருணையை எதிர்ப்பார்க்கும் அவலத்தையும சுட்டி காட்டி இந்த நாவல் கடந்து செல்கிறது.

வர்க்கம் சார்ந்த சில மனிதர்களின் நிதர்ச்சனமான உண்மைகளை நம் கண்முன்னே போட்டு உடைத்துள்ளார். சாதாரண மொழியில் சொல்வதாய் இருந்தால், ஒரு துஸ்ட்டு வைக்காமலே ஒரு ஓவியத்தை முடித்து வைத்துள்ளார்.

மலத்தின் வாசத்தை எழுத்திலே பதித்திருக்கின்றார். அவை வாழ்வின் கருமைகளை படர்ந்து உதிர்ந்து மண்ணோடு மண்ணாய் கரைந்து போகின்றன. 
Post a Comment