February 12, 2015

கவித்துவமான கவிஞர் கண்ணதாசன்


 

 
 

கவியரசு கண்ணதாசன் தமிழ்க்குயிலாக தனக்கென்று ஒரு தனி அடையாலத்தை பதித்துவிட்டு சென்ற கவிக்குயில் . எண்ணில் அடங்கா பாடல்களை தந்து பாடலாசிரியராகத்தான் பொதுவாக அடையாளப்படுத்தி சென்றாலும் இந்த தென் பாண்டி தந்த தென்பாங்கு கவிஞன், கவித்துவமான தன் பாடல்கள் வழியும் கவிதைகள் வழியும் ஒரு தனித்துவமான வாழ்வியல் கவிஞனாக தன்னை காட்சிப்படுத்தி சென்றுள்ளார்.

புயல் வந்த சீற்றம், அது போன பின்பு தெரியும். புரட்சி கவிஞன் பாரதிதாசன் புயல் போன்றவர். புரட்சி விதைகளை துவி புது பரணி பாடிச் சென்றுள்ளார். கவிஞர் கண்ணதாசன் தென்றல் போன்றவர் . தென்றலின் இனிமையும் அதன் குளிர்ச்சையையும் உணரும் போது இன்பம். அந்த உணர்ச்சியின் பிம்பம்தான் கவிஞர் கண்ணதாசன் அவன் மாந்தளிர் கொய்து சாறுமாந்தும் ஒரு மாங்குயில். அதனால்தான் கலவிக்குளியிலில் கூட ஒரு காப்பியம் படைக்க முற்படுகின்றார்.

தோள் கண்டார் தோளே கண்டார்;

தொடுகழல் கமலமென்ன

தாள் கண்டார் தாளே கண்டார்

தடக்கை கண்டாரும் அஃதே

(கம்பராமாயணம், பாலகாண்டம்: உலாவியற் படலம்:19)

 என்ற  கம்பனின் வரிகளை

தோள் கண்டேன் தோளே கண்டேன்                                                              தோளில் இரு கிளிகள் கண்டேன்                                                                                    வாள் கண்டேன் வாளே கண்டேன்                                                            வட்டமிடும் விழிகள் கண்டேன்”    

 எளிய தமிழில் மக்களிடம் கொண்டு செல்வது கண்ணதாசனை விட யாராக இருக்கமுடியும்?

 

                                                                                     

சொல்லழகு , அணியழகு, பண்பு நய அழகு மிக்கதொரு கவி நமக்கு கிடைத்திருக்கிறது.

“தாயும் கடன் பட்டார்

தந்தையும். உடன்பட்டார்

யானும் உயிர் பெற்றேன்

யாக்கை என்னு வடிவுற்றேன்.”

 

 கவிதையின் ஊடாக ஒரு இறவா கவியை தன் வாழ்வியலை சார்ந்து பாடமாய்  நமக்கு சொல்லிவிட்டு செல்கிறார்.

தத்துவத்திற்கு மட்டும் கவிஞன் அல்ல அவன். காதலுக்கும் அவன் கவிஞன்தான். சங்க காலம் தொட்டு  இன்றைய காலம் உள்ளவர் வரை பாடிய கவிதைகளின் திறன் உரைப்பது என்பது தேனின் சுவையை உண்டு நூகர்ந்தால் அந்த தேன் கவிச்சுவை தரும் இன்பம் கண்ணதாசனின் கவிதை வரிகள். அதன் பட்டறிவை காமதேனாக வடித்தால் அந்த கவிஞனை கம்பரசம் மிஞ்சும் கண்ணதாசன் என்றே கூறலாம்.

பாட்டுத்திறத்தாலே இவ்வைகத்தை பாலித்திட வேணும்! என்றார் பாரதி. சினிமா என்ற தளத்தில் இருந்து பாடல்களை புனைந்த பாடலாசிரியர்கள் மத்தியில் சமுக திறன் கொண்ட படைப்புக்களை கவிதையாக கொணர்ந்தவர் கண்ணதாசன். அவரின் கவிதையில் புதுமையை பார்பதைவிட பழந்தமிழ் சிந்தனைகள் அங்கங்கே புதுமையை போர்த்தி போற்றி மிளிர்ந்து நடைப் பயின்றிருக்கின்றன என்றால் அது பொய்யல்லா மெய் என்பதை உறுதியாக கூறலாம். அதனால்தான் அவரின் கவிதை நயங்களில் காலத்தால் முற்பட்ட இளங்கோவையும் கம்பனையும்  காணலாம்.

“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளம் தென்றலே வளர்

பொதிகை மலை தோன்ற மதுரை நகர் கண்டு

மொழிந்த தமிழ் மன்றமே” 

சினிமா பாடல் என்றாலும் அவன் கவிதையில் சந்தம் சிந்து பாடும் இனிமை நற்றமிழ் தேன். வார்த்தைகள் தாங்களாகவே வடிவமைத்துக் கொண்டு அவர் இருந்த திக்கு நோக்கித் படையெடுத்திருக்கின்றன.

கற்கண்டுகளென வந்து விழும் சொற்களோ அவரைக் கரங்கூப்பித் தொழுது அவர் கட்டளைக்கேற்பக் கவிதைகளாக உருப்பெற்றன

“மாடத்து நிலவொளிர

மைவார்த்த விழியோளிரக்

கூடத்தில் நடனமிடும்

குத்துவிளக் கொளிமயங்கப்”

என்கிறார்.

பாட்டின் பாட்டாக காவியத்துள் காவியமாக  விளங்கும் மற்றோரு இறவா கவிதை. உணர்ச்சி என்பது கவிதையின் உயிர் போன்றது. அதில் தோன்றும் உறவு நிலை கவிதையை உணர்ந்து அனுபவித்து இன்ப நிலையை ஏய்தும் மன ஊடாக கவிதையை வாசகனான நம் உணர்வுகளை தட்டி எழுப்பும் ஓரு சிறந்த கவிஞன் நம் புலன்களோடு ஐக்கியம் ஆகிறான். இதனால்தான் கவிதையிலுள்ள கவிஞனின் உணர்ச்சிகள் நம்மிடமும் மேலேழுகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

 
Post a Comment