January 3, 2014

நெருப்பு பிசுறுகள்















என்னை
மென்று விழுங்கும்
வெந்தனல் உடல்
வெள்ளிப் பிழம்பின்
மோதும் சிதறல்களின்
நெருப்பு பிசுறுகள்

மூச்சுக் காற்றின்
மூல பிளவுகள்
மூண்டேழும் கனலின்                      
மூடு மந்திர கலன்

அணுவின் கூடலில்
அசைந்தாடும் மின் கூட்டம்
மேகப் பந்தலில்
ஆடித் திளைக்கும்
மோகத் திரை

இது காற்றடைத்த காயம்
காலத்தில்
கரைந்து போவது என்ன மாயம்?
Post a Comment