January 19, 2014

விழிப் பயிர்








விதைத்தது
உன் விழிப் பயிர்
காதல் என்னும்
கரும்பு........மணம்

காமன் கரு விழி
கதவுகள் திறக்க
காதல் மலர்ச் சூடும்
கவின் இதழ் கவ்வும்
கணிவான முத்தம்

வண்டுகள் ரீங்காரமிடும்
மவுணங்கள் சிறைப்பிடிக்கும்
நாணம் குடை பிடித்து
காமம் கரைச் சேரும்

நீளும் கைகளும்
நேருங்கும் உள்ளமும்
முடியும் இரவுக்குள்
ஊற்றெடுக்கும்
உன்னத உறவு
உயிர் தெழும்
நாலு சுவருக்குள்

சிப்பிக்குள் முத்தாய்
சிறைப்படும் சிற்பி
முத்தானை திரை நீக்கி
முத்தான இதழ் பதித்து
முழுமதியில் உறவாடும்
இளவேனிர்க் காலம்

இரவு வேளை இலை விரித்து
இன்ப மோக விருந்தில் பெண்மை
மோகனசுவை தன்னையளித்து
மடல் கணப் பொழுது

கரைச் சேரும் காதல் மணம்

January 3, 2014

நெருப்பு பிசுறுகள்















என்னை
மென்று விழுங்கும்
வெந்தனல் உடல்
வெள்ளிப் பிழம்பின்
மோதும் சிதறல்களின்
நெருப்பு பிசுறுகள்

மூச்சுக் காற்றின்
மூல பிளவுகள்
மூண்டேழும் கனலின்                      
மூடு மந்திர கலன்

அணுவின் கூடலில்
அசைந்தாடும் மின் கூட்டம்
மேகப் பந்தலில்
ஆடித் திளைக்கும்
மோகத் திரை

இது காற்றடைத்த காயம்
காலத்தில்
கரைந்து போவது என்ன மாயம்?