October 22, 2013

கடந்து போகும் கடவுள்கடந்து போக முடியாத
கடவுளை
நான்
கடக்க முடியாமல்
தவி(ர்)க்கின்றேன்

ஞான சூனியமாய்
நான் ..........
ஞானத்தை தேடி அலைகின்றேன்
இருளை கவ்வும் ஒளிபோல
என் ஞானமும்
முன்னுக்கு பின்
முரண்படுகிறது
கழுதையை போல

கடவுளை
நான் அறிய முடியாத பொழுது
கடவுள் என்னை
அறிந்தும் அறியாமல்
அகன்று போகிறார்.

என்
சுவடுகள்
எனக்குள்
முடங்கிப் போகின்றன
அது என்ன மறைப் பொருள்
என்னுள் மறைந்து கிடக்கின்றன?

நானே
கடவுளாக
தரிசனம் தருகின்றேன்
எனக்குள்
இரவும் பகலும்
இன்ப துன்பம்
எதிரும் புதிரும்
கோப தாபம்
நல்லவை கெட்டவை
எல்லாம் எனக்குள்
அடங்கிக் கிடக்கிறது
அடக்கப்பட்டிருக்கிறது
அற்புதம் என்னுள்
மிளிர்ந்துகொண்டுதான் இருக்கிறது

கடவுளின்
சூன்யப்பகுதி
நான் தான்..........
கடவுளால் படைக்கப்பெற்றவனும் நான்
கடவுளை படைப்பவனும் நான்

October 8, 2013

கருவறை முகப்பு

உடைகளை களைந்து
உணர்வுகளை துறந்து
நான் சலனமற்று
மவுணமாகும் போது
மனப்பைத்தியம் என்கிறது
இந்த உலகம்

கால நித்தியம் கலந்து நிற்கும்
நிஜமான ஆத்ம ஜோதி போல்
மானுடத்தின் மறுபக்கம்
நிசப்த்தமான இரவுகளாகி
நீண்டுக்கொண்டு போகும்
பிறப்பின் ரகசியம் போல

என் தாயும்
என் தந்தையும்
செய்துக் கொண்ட
உரிமை சாசனம்
என் பிறப்பு

எத்தனை பிறவி
என் பிறப்பு என்பதை விட
நான் மற்றவனா? இல்லை
மற்றவன்தான் நானா என்பதை
அறிய இன்னும் எத்தனை பிறவிகள்?

என் வாழ்வு
எத்தனை சாகப்தம்
எத்தனை பிராப்தம்
அதை உணர முடியாமல்
எத்தனை முகமுடிகள்
என் காலச் சுவடுகளில்................

சொர்க்கதிற்கும் நரகத்திற்கும்
இடைப்பட்ட இந்த பூமி பந்தின்
நித்திய ஜீவனின் பாதச்சுவடுகளை
கருவறை முகப்பில் தடம் பதிப்பது யார்?
கார்காலத்தை கைகளில் ஏந்தியது யார்?

என்
முன்னோர்களின்
மன பிம்பங்கள்
என்
மவுணங்களாக
எப்படி
தொடர்க்கதைகளாகின்றன?

இருண்ட பிரமாக்களாக
நீண்டுக்கொண்டிருக்கும்
மரணபயங்களுக்கும்
எம்
வாழ்வில் சரிப்பாதியாகிவிடுகின்றன

எல்லையற்ற இயற்கையை போல
எண்ணிறைந்த ஆத்மாக்கள் வரவுகளுக்கு
ஏங்குகின்றன இந்த உலகம்?

உறைந்து போகும்
உணர்வுகள் அற்ற
அடுத்த கட்ட வாழ்க்கை
பயணங்களுக்கு

சலனமற்றுக்கிடக்கும் என் ஜீவனின்
மவுணத்தை யார் கடந்து செல்ல போகிறார்?

என் பிரமாண்டமான
ஆன்மா
என் முன்னோர்களின்
ஒரு துளி என்பதை
என் சலனமற்ற
எனது மவுணம்
ஒரு சித்தனை போல
சித்தம் ஒடுங்கி நிற்கிறது
மனப்பைத்தியங்களாக...........

October 3, 2013

உயிர் எழுத்து

கம்பனை போல்
உயிர்புடன் எழுதுகின்றேன்
உயிராய் எழுந்தது
என் வார்தைகள்
இனிப்புடன்
என்னவள் சொன்னால்
இன்னும் கவி தேவியை
காணவில்லை
எங்கே தொலைத்தாய்
தேடு தேடு என்று
தென்றலில்
தொலைந்து போன
என் தேவியை
புயலில் தேடுவது எங்கனம்?
வெள்ளை ரோஜாக்கள்
இங்கு கலைந்திருக்கின்றன
என் கவிதை இதழ்கள்
வார்த்தைகளுக்கு                                                     உரமாய்
உதிர்ந்திருக்கின்றனOctober 1, 2013

காமமும் காதலும் - 18 + above


என் நண்பர் , அவர் ஒரு நல்ல மனிதர். பல விஷயங்களில் தெளிந்த பார்வை இருக்கும். எதையும் அலசி ஆராயும் தன்மை அவரிடம் மிகவும் அதிகம். கவிதை நடையில் சில கருத்துக்களை அமர்களமாய் சொல்லுவார்.தமாஷான விசயங்களை பகிர்ந்துக் கொள்வார்.

சில சமயங்களில் காதலைப் பற்றியும் காமத்தை பற்றியும் சில கலந்துரையாடல் எல்லாம் நடைப்பெரும். அசிங்கமான தன்மையில் அல்லாமல்.அழகான முறையில் சில கருத்துக்கள் பகிரப்படும். நல்ல பண்பாளர்கள் சொல்லும் உடல் கூறுகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் விரசமில்லாம்ல் காமம் மிளிர்ந்து அழகுற எடுத்து சொல்லும் பாங்கு அருமையாக இருக்கும்.

அந்த நண்பர் காய கல்ப பயிற்சியை பற்றி அருமையாக பேசுவர். அவர் சொல்லுவர் காய கல்ப பயிற்சி உடல் நலமும் மன நலத்தையும் மட்டும் பாதுக்கப்பதற்காக அல்லாமல், அது தம்பத்திய வாழ்க்கையை சீராக வைத்திருக்க உதவும் என்பார். இங்கு வேடிக்கை என்னவேன்றால் அவரின் நண்பர்களிடத்தில் உடல் நலத்தைப் பற்றியும், மன வளத்தை பற்றி பேசினால் கேட்பதற்கு ஆள் இல்லை மாறக உடலையும் உள்ளத்தையும் காத்து , என்றும் இளமையாக இருக்கும் ,காய கல்ப பயற்சி பெற்றால் என்றேன்றும் ஆண்மை இழக்காமல், ஆண்மை  பலம் பெற்று வாழலாம் என்றால் உடனடியாக பயற்சி எடுக்க வருகிறார்கள் என்று கூறி வருத்தப்பட்டார்.

பல சமயங்களில் உடல் நலமும் மன நலத்திவிட உடல் உறவு காமம் பாலியல் சம்மந்தப்பட்ட விசயங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. மன அமைதியும் குடும்ப அமைதியும், பாலியல் சமந்த பட்ட விசயங்களின் முன் அடிப்பட்டு போய் விடுகின்றன.இருப்பினும் இல்லற இன்பத்திற்கு காமம் ஒரு அருமருந்துதான். அதை அழகாகவும் பண்பாகவும் வெளிப்படுத்தும் வழிமுறைதான் காய கல்ப பயற்சி.

அப்படி ஒரு நாள் காரச்சாரமாக விவாதங்களுக்கிடையே இங்கு அறிமுகமான ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது

சில கவிதை வரிகளை சொன்னார்

காதலும் காமமும் கனிந்த பின் ஊடலும் கூடலும் ஊறுக்காய் போல் உவந்திடும்- என்றார்.

உடனே மற்றோரு நண்பர்

காதலின் சுகம் காதலிப்பதில் இல்லை காதலியை கட்டியனைப்பதில் தான்  என்றார்.

அடப்பாவிகளா! இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்களா? பரவயில்லை... அது என்ன  இவர்கள் எல்லாம் நகைச்சுவை நடிகர் வடிவேலு சொல்வது போல் ரூம் போட்டு சிந்திப்பார்கள் போல் அல்லவா இருக்கிறது. ஆனால் இங்கு அவர் சொன்ன கவிதை நடையில் அது விரசமில்லாமல் இருந்தது. இதுதான் கவிதையின் வெற்றி என்று கூட சொல்லாம்..ஆனால் என் மனம் சற்று சங்கடப்பட்டது. அந்தரங்கமான அந்த விசயத்தை இப்படியா பச்சையாய் போட்டு உடைப்பார்கள் என்று

தாயும் கடன்பட்டால்
தந்தையும் உடன் பட்டான்
யானும் உயிர்பெற்றேன்
யாக்கைஎன்னும் வடிவுற்றேன்
என்று கண்ணதாசனின் கவிதை வரிகளும் அதைதான் சொல்கிறது.

இங்கு கண்ணதாசனின் கவிதை ஆளுமை திறன் தாம்பத்திய வாழ்கை விசயங்களை நசுக்காக சொல்வது பிரம்மிக்க வைக்கிறது. இங்கு கருத்துமட்டும் பிரமாதம் அல்ல. வார்த்தைகளின் ஜோடிப்பும் எப்படி அற்புதமாக இருக்கிறது.

சிலர் பச்சையாக, கொச்சை வார்த்தைகளை எந்த பண்பாடும் இல்லாமல் அருவருப்பும் இல்லாமல் பேசும் போது நமக்கு கோவம் தான் வருகிறது. சிலர் உலக மாற்றத்தில் அது ஒரு நவீனத்துவம் என்ற சிந்தனையில் இருக்கின்றார்கள். சிலர் ஊடகத்திலும் கதைகளிலும் ,கவிதைகளிலும் சில விசயங்களை பச்சையாக பேசுவது ஒரு சிந்தனை மறுமலர்ச்சி என்று நினைக்கின்றனர். எதையும் காமக் கண்கொண்டு பார்ப்பதோ பேசுவதோ எழுதுவதோ தவறில்லை. பண்பாடு மீறாமல் இனிய தமிழில் வார்த்தை ஜாலங்களில் இலக்கியம் நயம் மிகுந்தால் சிறப்பாக இருக்கும்.. உண்மையில் அணைவரின் சிந்தனையில் ஊறும் கருத்துக்கள் நிர்வானமாகத்தான் வெளிவருகிறது.அவரவர் சிந்தனையின் திறத்தில் பண்பாட்டுக் கூறுகளின் வழி ஆடைகளை அணிந்து நவினத்துவமாய் வெளிப்படுகிறது.

வார்த்தைகளை கவித்துவத்தோடு சொன்னால் அது இன்னும் காவியமாய் இனிக்கும் .கண்ணதாசன் சொல்லாத காமத் தத்துவங்களா? விரசமில்லாமல் கவிதையால் சொன்னதனால் அது காவியமாய் இனித்தது, காலத்தை கடந்து நிற்கிறது. எதுவும் ஒரு பண்பாடன முறையில் எடுத்துச் சொன்னால் சுவைமிகுந்த கனியை போல் இனிக்கும்.