March 21, 2013

கலங்காத மனம்தான் துவளாமல் நம் உயிரை துடிக்கச் செய்கிறது.....



வாழ்க்கை
பட்டாம் பூச்சியல்ல
படபடப்பதற்கு.......
அது
கரித்துண்டு போல்

வெள்ளை வானத்தில்
மேக கோலத்தில்
தொளித்து விடப்பட்ட
கருப்பு வெள்ளைப் திரை

சில சமயங்களில்.....
காற்று புயலாக மாறும்
காலம் அனலாக கொதிக்கும்

தேடல்கள் நம்மை சிதைக்கும்
தேவைகள் நம்மை வதைக்கும்

பாதைகள் புலப்படாமல் போகும்
பயணங்கள் அகப்படாமல் போகும்

சோதனை நம்மை சோதிக்கும்
வேதனை நம்மை வேராறுக்கும்

கால தேவன் நம்மை கரைத்துவிடாமல்
கர்மதேவன் நம்மை தொலைத்துவிடாமல்

கலங்காத மனம்தான்
மீண்டும் மீண்டும் நம்மை
கருத்தரிக்க செய்கிறது........
துவளாமல் நம் உயிரை
துடிக்கச் செய்கிறது.....

அடிப்படாத வாழ்வும்
அழுத்தமில்லா கரித்துண்டும்
எப்போழுதும் வைரமாகாது.........
Post a Comment