February 20, 2013

 
கடல் கடந்து சென்ற வணிகர்கள்
 
 
   சில மலாய் நண்பர்களிடம் அலவாவிக்கொண்டிருந்த போது அப்பொழுது என் மலாய் நண்பர் இன்னொறு மலாய் நண்பரை பார்த்து மாமாக் “Mamak” அல்லது mamat என்று அழைப்பதைக் கண்டு அந்த மலாய் நண்பரிடம் “awak mamak ke “ நீங்கள் என்ன மாமாவா என்று வினவினேன். அதாவது நீங்கள் என்ன இந்து முஸ்லிமா என்று அவரிடம் கேள்விக் கணையைத் தொடுத்தேன்? முக அமைப்பு, உடல் சரீரம், சுருண்ட தலை முடி அவர் மலாய் இனமாக தெரிந்தாலும்,  நிறத்தில்  தமிழர்களைப் போல் கருமை படர்ந்திருந்தது. மலாய்க்காரர்களின் நிறம் என்பது சற்று வெளிர் மஞ்சல் நிறம் கொண்டவர்கள் என்பதால் சுடும் சூரிய ஒளியில் வேலைச் செய்து கருப்பாக தெரியும் கருப்புத் தமிழர் அவர்களுக்கு நகைப்புக்கு உரியவர்களாக தோன்றுவர்கள்.

Saya melayu lah ...orang kelete என்று சொல்லி என்னிடம் awak ingat saya india ke? நீங்கள் மலாய்க்காரர் என்று எனக்கு தெரியும்.. ஆனால் உங்கள் முன்னோர்கள் ஒரு சிலர் தமிழர்களாக இருந்திருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? என்றவுடன் அவர் முகம் இன்னும் கருமை படர்ந்தது. உண்மையில் மலாய் இனம் என்பது பல்வேறு இனங்களின் இரத்த கலப்பு என்றால் அது மிகை அல்ல,வெகு காலமாக தொடரும் அவர்களின் சரித்திர பண்பு அது.

 அங்கு இருந்த ஒரு சில மலாய் நண்பர்கள் நீங்கள் சொல்லும் கருத்துக்கு என்ன ஆதாரம் என்று வாதிட ஆரம்பித்தனர்..நான் அங்கிருந்த. வெள்ளை பலகையில் தென் தாய்லாந்து & வட மலேசியா வரைப்படத்தை வரைந்து பண்டைய அரசாங்கத்தை வட்டமிட்டேன்.. பத்தானி, லங்காசுகா, தர்மலிங்க பழைய கெடா போன்ற அரசாங்க மையங்களைக் கோடிட்டு, பழைய கடற்கரைப்பட்டணங்களின் ஊடே தமிழ் நாட்டு சோழ பாண்டிய, பல்லவ  வியாபாரிகள் செகெந்திங் கிரா என்ற கணவாய் வழியாக குறுகலான காடுகளையும் ஆற்றையும் கடந்து தான் அவர்கள் புனான், கம்பூச்சியா மற்றும் சீனாவுக்கு  கடந்து செல்லும் போது மண உறவுகள் ஏற்பட்டிருக்கும். அப்படி ஏற்பட்ட உங்களின் முன்னோர்கள் கலப்பிற்கு நீங்கள் தான் உதாரணம் என்றேன்.

சில சமயங்களில் கடல் சார்ந்த வியாபாரம் என்பது பொருளாதாரம் மட்டும் அல்ல, அவை ஒரு சமூகம் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இன கலப்பு என்பது வியாபார நிமிர்த்தமாக கடல் கடந்து சென்று வணிகர்கள் சில காலம் ஒரு சில இடங்களில் பருவ காற்றுக்காக பல மாதங்கள் காத்திருக்கும் போது அங்கு உள்ள மக்களோடு உறவாடி இன கலப்பு செய்வது இயல்புதான். அங்கு கலாச்சார மாற்றம் மட்டும் அல்ல அங்கு சமூக பண்பாட்டு மாற்றத்தையும் ஏற்படுத்தும். அப்படிப்பட்ட வரலாற்று பின்னனியை கொண்டது.

தமிழ் நாட்டிலும் அப்படிதான். ஒரு சில தமிழர்களின் முக அமைப்புகள் பல இன நிறங்களைச் சார்ந்திருக்கும்..அவர்கள் வியாபார நிமிர்த்தமாக சென்ற வணிகர்களின் வாரிசுகளாக இருந்திருப்பார்கள். வெகு காலம் மற்றவர்கள் நாட்டில் வாழ்ந்தவர்களாக இருந்திருப்பார்கள்.அல்லது கடலில் சென்ற கலம் மூழ்கி காப்பாற்றபட்டவர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் மக்களோடு மக்களாக இரண்டற கலந்த பிறகு அவர்களின் பூர்வீகம் மறந்தே போயிருக்கும். இன்றைய மலாக்கா செட்டிகள் மற்றும் பாபா ஞோஞா மலாக்கா போர்த்திகீசியர்கள் (செரானி) போன்றவர்கள். இன கலப்புக்கு உட்படவர்கள் தான்.

பல வருடங்களுக்கு முன் மலேசிய தகவல் இலாக்காவின் உதயம் மாத இதழில் டான் ஸ்ரீ உபைதுல்லா அவர்கள் எழுதிய வரலாற்று கட்டுரையில் இந்த கருத்தை கோடிட்டுள்ளார். அதே போன்று டாக்டர் ஜெயபாரதி தன்னுடைய அகஸ்தியத்தில் கிளந்தானின் உட்புற பகுதி ஒரு காலத்தில் பெரும் வணிகப் பாதையாக இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

பருவ காற்று பொய்த்து விட்ட பிறகு வெகு நாட்கள் காத்திருப்பதை விடுத்து சேர நாட்டில் புகுந்து தென் இந்தியாவின் கிழக்கு மலைத்தொடரை  ஊடறுத்து பூம்புகார், நாகப்பட்டிணம், மாமல்லத்திலிருந்து கடல்  வழியாக பூஜாங்   வந்து செகெந்திங் கிரா என்னும் கணவாய் வழியாக காட்டையும் ஆற்றையும் கடந்து கிழக்கு கடற்கரையை அடைந்து சியாம் வளைக்குடாவைக்  கடந்து சம்பா கம்பூசியத்திற்கும், பூனான் மற்றும் சீனாவுக்கும் சென்று வியாபாரம் புரிந்திருக்கிறனர்.

 அக்கால வியபாரிகள் மேற்கு உலகில் இருந்து கிழக்கு நாடுகளுக்கு கொண்டு வரும் பொருட்களை  அந்த இரண்டு பிரபலமான தென் இந்திய தீபகற்பத்தையும் மலாயா தீபகற்பத்தியும் ஊடறுத்து போகும் பழைய வியாபார பாதை தான்  உபயோகப்படுத்தியுள்ளனர்.

. கி.பி 15-ஆம் நூற்றாண்டு மலாக்கா நீரணையை ஒட்டிய கடல் சார்ந்த அரசாங்கங்கள் உருவாவதற்கு முன் கி.பி 2-ஆம் நூற்றாண்டு முதல் 5- ஆம் நூற்றாண்டு வரை மலேசிய வட புலத்தை ஒட்டி பெரும் அரசாங்கங்கள் உருவாகி இருந்தன.அப்பொழுது மலாயாவின் தென் பிரந்தியங்கள் பிரபலம் ஆகாத காலக்கட்டம். தமிழர்கள் உலகில் தலைச் சிறந்த கடற் மாலுமியாக இருந்திருக்கின்றனர். பருவ காற்றோற்றத்தையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு அறிந்திருந்தனர். வான் நட்சத்திர கோள்களின் நகர்வுகளையும் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர். அவர்கள் துணிந்து  பாய்மர கலத்தை செலுத்தி பல நாடுகளைக் கடந்து சென்றனர். தமிழர்கள் இன்றைய புதிய நாடான ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலன்ந்து வரைக்கும் சென்றதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது.

15-ஆம் நூற்றாண்டு பிறகும் தென் கிழக்கு ஆசியாவின் வியாபார மொழியாக பார்சி மற்றும் சீன மொழியோடு தமிழும் சிறப்படைந்துள்ளது, சீனாவின் பிரசித்தி பெற்ற கடற்படை தளபதி செங் ஹோ இலங்கையில் பொறித்து வைத்த கருங்கல்லில் அந்த இரண்டு மொழியோடு தமிழையும் செதிக்கியுள்ளார். ஒரு காலத்தில் தமிழ் வியாபார மொழியாக இருந்ததை இது பறைச்சாற்றுகிறது.
 
 

 அக்காலத்தில் சீனர்கள் கூட சிறந்த மாலுமிகளாக வலம் வரவில்லை. தமிழர்கள் தான் சீனா வரைக்கும் கலத்தை செலுத்தி இருக்கின்றனர். தமிழர்களின் கடல் ஆதிக்கம் குறைந்த பிறகுதான் சீனர்கள் புதிய பாதைகளைத் தேடி கடற்பயணங்களைத் தொடங்கி இருக்கின்றனர். அதன் பிறகு தான் மலாய்க்காரர்களும் சிறந்த மாலுமிகளாக உருவெடுத்திருந்தனர். அவர்களின் கடல் பிரவேசம்  தென் ஆப்பிரிக்கா வரைக்கும் பரவி இருந்ததை வரலாறு காட்டுகிறது.

சீனாவின் உட்புற பகுதியில் கலகக்காரர்கள் ஏற்படுத்திய  புதிய வெய் அரசாங்கம் பட்டு பாதையை ஆக்கிரமத்த  பிறகு  சீனாவின் ஹான் அரசாங்கத்தில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மாற்றங்கள் அவர்களை தென் சீனக் கடலில் புதிய  பாதைகளைத் தேர்ந்தெடுக்க வைத்தது. அதன் பிறகு தரைவழி பாதை கொஞ்சம் கொஞ்சமாக தன் அரசியல் பொருளாதார பொழிவை இழந்தது. அதன் இறுதி வியாபார தளம் தான் பூஜாங் பள்ளத்தாக்கு.