June 26, 2012


தடைகளை உடைத்து தகமைமிக்க மனிதர்களாக நாம் மாறுவது எப்பொழுது?


வாழ்வியலில் எற்படும் மாற்றங்கள் சிலருக்கு மிகுந்த வேதனையை தரும். சிலருக்கு உத்வேகத்தை தந்து நிரந்திரமான ஒரு இன்பத்தை தரும். இரண்டும் நேரிய கண்ணோட்டதுடன் பார்த்தால் சாதாரனமான வாழ்வியல் மாற்றங்கள்தான் ஆனால் இருவேறு பண்புக்கூறுகளை கொண்ட ஒரு மாற்றம்.அந்த மாற்றம் இன்பமாகவும், துன்பமாகவும் பகுப்பதற்கு யார் காரணம்? மனிதனா? மனமா? செயலா? சிந்தனையா? எண்ணமா? மனிதனின் இன்ப துன்பங்களுக்கு என்ன காரணம் என்று கண்ணோட்டமிட்டால் மனிதனின் செயல்தான் முழுமுதற்காரணமாக அமைகிறது என்றால் அது மிகையல்ல.

அற்புதமான மனித உடல் வடிவமைப்பை சாராத ஒரு இயக்க பொருள் மனம் எண்ணம். “மனச தொட்டு சொல்லு” என்பார்கள். கை செஞ்சை தான் காட்டும். ஆனால் அந்த மனம் எங்கிருக்கிறது என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. மனம் ஒரு நிலைப்பட்ட பொருள் அல்ல. அது உடல் முழுவது வியப்பித்திருக்கின்ற எண்ண அலைகளாகவும் அது பிரபஞ்ச முழுவது விரிகின்ற ஒரு காந்த அலைகளாகவும் பார்க்கமுடிகின்றது. எண்ணத்தின் வேகம் அப்படி.

எண்ணத்தில் கவனமாக இருங்கள் என்று சொன்ன வேதத்திரி மகரிசியின் உன்னத வார்த்தை எவ்வளவு பொருள் பொதிந்தது என்பதை சிலரின் செயலில் இருந்து அறியலாம்.

எண்ணம்தான் வாழ்க்கை.எண்ணத்தின் செயல் வடிவம்தான் நமது எதிர்கால வாழ்க்கையின் நோக்கமாக அமைகிறது. எண்ணத்தின் வலிமையும் அதன் அடர்த்தியும் அதன் ஆழத்திலும்தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் தடம் பதிவாகிறது என்றால் அது மிகையல்ல.

நமது வாழ்வியலில் எற்படும் இன்ப துன்பங்கள் என்பது நமது எண்ணத்தில் விளைந்த செயல் வடிவங்களின் மறுக்கூறுகள்தான்.உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள் ஒரே இலக்கை நோக்கமாகவும் அதன் மையம் கொண்டே செயல்படுவார்கள். “கருமமே கண்ணாய்” இருப்பார்கள். வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்தது எல்லாம் தெளிந்த சிந்தனை, செயல் வடிவமான உழைப்பு. சிதறாத எண்ண பிரதிபலிப்பு.

மனித மனதில் தோன்றும் சபலம் தயக்கம், தோல்வி பயம், எண்ண சிதறல்கள், தன் முனைப்பு அற்ற செயல் திறத்தால் அவரின் எண்னம் பலவினப்பட்டு கிடக்கிறது என்றுதான் அர்த்தம்.

என் உற்ற நண்பர் சொல்லும் ஒரு வார்த்தையும் இங்கு கவணிக்கதக்கது. “எது வேண்டும்? எண்ணத்தில் போடுங்கள்” எண்ணத்தில் விதைத்த எதுவும் விளைச்சல் இல்லாமல் போகாது. அது மரமாகி காயாகி கனித்தரும் வரை காத்திருங்கள் என்பார்”. எண்ணதில் போடப்படும் எதுவும் அழ்மனதில் பதிவு செய்யப்படும். அழ்கடலின் அமைதி போல எண்ணத்தில் மையம் கொள்ளும் எந்த பதிவுகளும் ஒரு நாள் பெரும் கடல் அலையாய் வானம் வரை உயர்ந்து நிற்கும்.

வானமே எல்லை என்பார்கள். அந்த வானத்திற்கு கூட எல்லைகளை சமைத்து அதற்கு மேல் பிரபஞ்சம் என்று சொல்லும் மனுடம் மன எண்ணங்களுக்கு அதன் அலைகளுக்கும் எல்லை வகுக்க முடிந்ததா? எண்ணங்கள் பரந்து விரிந்து பிரபஞ்சமும் முழுவது வியப்பித்திருக்கிறது. நமது சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் யார் தடைப்போடமுடியும்?

தடைகள் இல்லா மனித எண்ணங்களுக்கு தடைக்கற்கலே அவனின் செயல்பாடுகள் தான்.ஒரு கட்டிடம் எழுவதற்கு எப்படி செங்கற்கள் சரியாக அடுக்கப்படுகிறதோ அப்படிதான் நமது இலச்சியங்களும் அதன் சீரான சிந்தனைக் கொண்ட எண்ணங்களை வரைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

உறுதிக்கொண்ட எண்ணங்களின் செயல்பாடுகள்தான் ஒரு மனிதனின் வெற்றிக்கு பெரும் பங்கற்றுகின்றன. அவனின் இலச்சியத்தை அடைவதற்கும் அதுவே வழிக்காட்டுகின்றன. எண்ணத்தின் வலிமை தான் ஒவ்வொரு மனிதனின் வெற்றி தோல்விகளை காரணமாகிறது.

“மனதில் நாம் அடைய வேண்டிய இலக்கை சரியாக அடையாளம் காட்டிவிட்டால் போது. மனம் என்ற மகா சக்தி அதன் வழியை தானே கண்டுபிடித்து நமது ஆசையை நிறைவேற்ற உதவும்” என்கிறார்கள் நமது அறிஞர்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டுதானே?

“மனம் தன்னைத்தானே உந்திதள்ளி தவறான பாதையில் இடிப்பட்டு திரும்பி சரியான பாதைக்கு மீண்டும் மீண்டும் ஓடும் ஒரு யாந்திரம்” என்கிறார் மேக்ஸ்வேல் மால்டஸ்.

மனத்தின் நம்பிக்கை என்ற பசை, எண்ணத்துக்கு ஈரம் கொடுத்து உயிர் கொடுக்கிறது.

எண்ணம் என்பது நம்மை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. நம்மைப்பற்றி நாம் எண்ண நினைக்கின்றோமோ அதுவாகவே நாம் ஆகிவிடுகின்றோம். அதன் எண்ணங்களை ஒட்டிதான் உடலும் உள்ளமும் இயங்குகின்றன. பிற புறச்சூழலும் வெற்றியை நோக்கி எழுகின்றன.

நம்மால் முடியும் என்ற எண்ணம் மனதில் தோன்றும் போது அதை செய்து முடிக்கும் தார்மீக வலிமை உடலிலே பிறக்கிறது. திரும்பச் திரும்ப எண்ணும் ஒரு எண்ணம், நம்மிக்கையாகிறது. நம்மிக்கை நம்மை செயல் பட தூண்டுகிறது.

எண்ணம் நம்பிக்கையால், நம்மிக்கை செயலால், செயல் பழக்கமாய், பழக்கம் விதியாய் அமைகிறது. எண்ணம் என்பது சிந்தனை மட்டும் அல்ல, உங்கள் வாழ்க்கை. உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் சிற்பி நீங்களும் உங்கள் எண்ணங்களும்தான்.

இதையே வேதாத்திரி மகரிஷி அருமையாய் சொல்கிறார்.....

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன. ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”