February 28, 2012

osai
February 21, 2012

காலமென்னும் தேவதையே


காலமென்னும் தேவதையே
காற்றோடு கலந்துவிட்டாயா?
மாயம் செய்யும் வாழ்க்கை என்று
மாயமாய் மறைந்துவிட்டாயா?

ஓலமிடும் வாழ்க்கை என்று
ஓராயிரம் முறைச் சொன்னாலும்
காலமென்னும் வெள்ளத்தில்
கரைச்சேர காதலை ஏன் தூதுவிட்டாய்?

கோலமிடும் புள்ளியாய்
கோதை மனதில் தெளித்துவிட்டாய்
பாதை புரியுமுன்னே
பயனங்களை ஏன் முடித்தாய்?

போகும் பாதை புரியாத போது
புலம்பி என்ன பயன்?
போதை தரும் வாழ்க்கை முன்னே
மோதி வீழ்ந்தால் எப்படி பெண்னே?

February 11, 2012

இப்படிக்கு அன்புள்ள உன் தாய்


உனது
பாதச் சுவடுகளை
தாங்கிக் கொள்கிறேன்
எனது இதய கமலத்தில்

ஒவ்வொரு அடியும்
இடிகளாக விழுவதில்லை
பூக்களாக மலர்கின்றன.

விதைகளுக்குள்
எவ்வளவு பெரிய விரிச்சம்
எப்படி உறங்கிக் கிடந்தன
என்பதை........
உன்னைப்பார்த்தவுடன்
புரிந்துக் கொண்டேன்.

உன் ஒவ்வொரு வளர்சியும்
பிரமிக்க செய்கிறது.
சிறு துளியில்
இருந்து பிறப்பெடுப்பது
உன்
வாழ்க்கை மட்டும் அல்ல
எனது
நினைவுகளும் கூட

இப்படிக்கு
அன்புள்ள உன் தாய்

February 8, 2012

முட்கள் கூட பூக்களாகலாம்முயன்று பார்
முடிவுகள் உணக்கு
வழிவிடும்.

தொடர்ந்து
முயற்சித்தால்
இயலாமை
உன்னைவிட்டு அகலும்

அறிவை தீட்டு
ஆச்சிரியப்படும்
இந்த உலகம்

கனவுகள்
இதயத்தின்
யாத்திரை என்று நினைக்காதே
நிஜங்களின் தொடக்கம்
என்று நினை,,,,,

விடியல் கூட
விழித்திருக்கும்
நீ
விரைந்து நடந்தால்,,,
புயலைக்கூட
புரட்டிப் போடலாம்
நீ...
முனைப்பை காட்டினால்

முட்கள் கூட
பூக்களாகலாம்
முயற்சி
என்னும் வித்திருந்தால்

இருளிலே போட்ட
விதைகள் கூட
விரிச்சமாகும்.
உன்
மனதிலே
எழும்
எண்ணங்களே
உன்னை
எடைப்போடும்.

February 6, 2012

வருங்கால வாழ்வை நோக்கி..... மலேசிய தமிழர்கள்
நாம் யார்? என்ற கேள்விக்கு விடைகளை தேடுங்கள் என்கிறார்கள் நமது சமய சான்றோர்கள்.தன்னை உணர்ந்தவர்கள் வாழ்வின் அர்த்தத்தை புரிந்துக்கொள்கிறார்கள் என்கிறார்கள். தற்கால சூழ்நிலையில் தமிழர்கள் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கு இயலாமல் காலச் சூழலில் சிக்கிக் கொண்டு தவிப்பது கண்கூடாக தெரிகிறது.

இந்தியன் என்பவன் யார்? தமிழன் என்பவன் யார்? என்ற கேள்விக்கணைகள் விடாமல் நம்மை துரத்துகின்றன. இந்த மலேசிய நாட்டிலே இந்தியர் குறிப்பாக தமிழர்கள் ஒரு வகையான அன்னிய அடையாளச் சிக்களில் மாட்டிக்கொண்டு இந்த நாட்டிற்கே அன்னியர்களாகவே பார்க்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காரணம் இந்த நாட்டிலே பிறந்து, இந்த நாட்டிலே வளர்ந்து, வாழ்ந்து வரும் இன்றைய தலைமுறை மக்களை ஒரு அன்னிய நாட்டு கலைச்சாரத்தில் இருந்து வந்த வந்தேறிகளாக சித்தரிக்கபடுவது ஒருவகையான ‘அழித்தல்’ நடவடிக்கையாகவே தென்படுகிறது. இந்த நாட்டில் வாழ்ந்து வரும் மூவினமும் எதோ ஒரு வகையில் அன்னிய நாட்டின் மூலத்தை கொண்டவர்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இனம் மொழி கலைக்கலைச்சாரத் சூழலில் தமிழர்கள் தன் இருப்பை எங்கே தொலைத்து விடுவார்களோ என்ற ஒருவகையான அஞ்சம் நமக்குள் எற்படுகிறது. கால வெள்ளத்தில் தன்னை கரையாமல் இது வரைக்கும் தாக்குபிடித்த ஒரு பழமையான இனம் என்ற வகையில் நமக்கு பெருமைதான். ஆனால் எத்தனையோ காற்றாற்று வெள்ளத்தை கடந்து வருவதற்கு நாம் கொடுத்த விலை கொஞ்சம் அதிகம்தான்.

புலம் பெயர்ந்த எத்தனையோ நாடுகளில் தமிழர்கள் தொலைத்த தனது அடையாளத்தை மீட்க போராடிக்கொண்டிருக்கும் போது மலேசிய தமிழர்கள் தனது இருப்பையே தக்க வைக்க போராடவேண்டியிருக்கிறது.

சிறுபான்மை இனம் என்பதைவிட, ஒடுக்கப்படுகின்ற ஓர் இனம் என்ற வகையில், அழிவை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் ஒரு இனம் என்ற வகையில் நமது சமுதாயத்தையும் சமுக கட்டமைப்பை கலைச்சார மூலக்கூறுகளை பாதுக்கக்கவும் சுயமாக சீர்த்தூக்கி பார்க்க வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் இருக்கின்றோம். மாற்று இன பெருக்கத்தில் நாம் இந்த நாட்டில் சிறு துளிகளாக மாறிக்கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

தன்னை தமிழனாகவும் நினைப்பதற்கும், தனது தாய் தமிழ் மொழியில் பேசுவதற்கும் கூட வெட்கப்படும் ஒரு சமுதாயமாக இந்த சமுதாயம் வளர்ந்துக்கொண்டிருக்கிறது. படித்த தமிழர்கள் தன் மக்களுக்கு தமிழ்ச் சார்ந்த அறிவு பொக்கிஷங்களையும், பண்பாட்டு கூறுகளை சொல்லிக்கொடுப்பதற்கு கூட வெட்கப்படுகிறார்கள். தன்னை தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ள மறுக்கும் இத் தமிழர்களின் அறியாமையை என்னவென்பது?
மாற்றங்களை நோக்கி இந்த நாடும் நாட்டு மக்களும் நகர்ந்துக்கொண்டிருக்கும் போது, சமுதாய கடப்பாடுகளும். சமுக ஒப்பந்தகளும் வேறு வகையான மாற்றங்களை நோக்கி மெல்ல நகர்ந்துக்கொண்டிருக்கின்றன. நமது உரிமைகளும் உடமைகளும் பாதுக்கக்கப்படுமா இல்லை கால வெள்ளத்தில் கரைந்து போகுமா என்பதே இன்றைய மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது?

என் நண்பர் தமிழ் வாணன் ஒரு மாற்றுக் கருத்தை சொல்வது போல் நாம் நமது இருப்பை தக்க வைக்க நாம் போட்டி போடுவது மலாய் இனத்திடமோ இல்லை சீன இனத்தோடு அல்ல. ஒரு ஆளுமைமிக்க ஒரு அரசாங்கதோடும், அவர்களின் உறுதியான சட்ட திட்டங்களோடுதான் என்பத நாம் மறக்ககூடாது.

அதிகார பகிர்வு என்று முழக்கமிடும் அரசங்கத்தில் ஒரு அங்கமாக இருக்கும் மலேசிய இந்தியர் காங்கரஸ் (MIC) இந்தியர்களின் இருப்பையும், தமிழ் மொழியையும், தமிழ்ச்சார்ந்த கலைக்கலாச்சாரங்கள் அழிவில் இருந்து மீட்டெடுக்க முடியுமா? என்ற வினாவுக்கு விடைக்கான முடியுமா? 50 வருடங்களாக வாய் பேச மடந்தைகளாக இருந்த ம இ காவினர் இப்போதவது சட்டப்பூர்வமான பாதுக்கப்புக்களை இந்த இந்திய சமுதாயத்திற்கு பெற்று தருவார்களா? இல்லை கும்பகரணனைபோல மீளா உறக்கத்தில் வீழ்ந்து கிடக்கபோகிறார்களா என்பதை அவர்களின் செயல் திறன் உறுதிப்படுத்தும். வெறும் தலைவர்களாக மட்டும் இருந்தால் போதாது, சமுதாய கடமைகளை ஆற்றும் தொண்டர்களாக அவர்கள் மாறவேண்டு. அவர்கள் கடுமையாக உழைக்கவேண்டிய காலக்கட்டம் இது உண்மையில் இன்றைய சமுதாய தலைவர்களும் சரி , தொண்டர்களும் சரி பெரும் சாவல்கள், அவர்களை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருக்கின்றன.

ஒரு இனத்தின் ஆளுமை என்பது அந்த இனத்தின் மகட்த் தொகையிலும். சிறப்பான பொருளதாரத் தன்மையில் அடங்கி இருக்கிறது. தமிழ் மக்களின் பெருக்கத்திற்கு வழிவகைகளை கண்டு அதன் வழி நாம் அரசியல் பலம் பெறமுடியும். அது மட்டும் அல்ல, மதம் மற்றும் கலைச்சார மாற்றத்தில் மூலம் நம்மை அறியாமல் மிகவும் நுண்ணிய வகையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் இன அழிப்பு முறைகளை தடுத்து நிறுத்தமுடியும்.

மொழி இனம் என்ற அடிப்படையில் சிறுத்துக் கொண்டிருக்கும் மலேசிய தமிழர்களின் வாழ்வுக்கும் அவர்களின் வளத்திற்கும் வெறும் சலுகைகளும் பெற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது. சட்டத்தின் வழியில் உறுதியான திட்டங்கள் மட்டும்மே நமது இருப்பயை உறுதிசெய்யும். நாமும் மலேசியர்கள், அன்னியர்கள் அல்ல. இந்த நாட்டின் தூண்கள் என்ற எண்ணத்தை வலுச்செய்ய இந்த நாட்டின் சரித்திர நூல்களில் நமது வரலாறு துல்லிதமாக எழுதப்படவேண்டும்

அரசாங்கத்தை குறைக்கூறுவதை விட அரச கொள்கையை வகுக்கும் போது வாய்மூடி மவுணத்த காத்த அந்த தலைவர்களையும், அதன் பிறகு வந்த தலைவர்களைதான் குறைச்சொல்லவேண்டும். ஆனால் எதையும் கேட்டால் பெறகூடிய இக் காலத்திலும் அதை கோட்டைவிட்டால் வருங்காலம் நம்மை மண்ணிக்காது. ஒரு இனம் வளர்வதற்கும் வாழ்வதற்கும் அரசாங்க உதவி என்பதை விட ஒட்டுமொத்த மலேசிய இனம் அரசாங்கதின் உதவியயை பெற்றால் அது சிறப்பான ஒரு மாற்றமாகத்தான் இருக்கும். அதுதான் மனித நேயமாக போற்றப்படும்.

தன்னிலையை மறந்து மயக்க நிலையில் மிதக்கும் தமிழர்கள் தன்னை அறிந்து தனது இன உணர்வுகளால் மொழித் திறத்தால் தனது தாழ்வு நிலைகளில் இருந்து மீண்டு வரமுடியும். தமிழன் என்று சொன்னவுடன் தலை நிமிர்ந்து நடக்கவும் முடியும். உலகிற்கே அறிவு தந்த உண்ணத இனம், தன்னை தானே உணரவா முடியாது?