August 29, 2012

வாழ்வியல் நோக்கம்

எண்ணங்களின்

வாழ்வை சுமந்து நிற்கும்

வண்ணங்களாக

இசைந்து பாடி வரும்

வண்ணத்தி பூச்சிக்களின்

சில நாள்

கனவு ஊர்வலம் போல

மனித வாழ்வை

ஒவ்வொரு துளியிலும்

ஒவ்வொரு நொடியிலும்

செதுக்கி செதுக்கி

வாழ்க்கை பாடங்களை

பூக்களை போல

உச்சி முகர்ந்து

ஒவ்வொரு மவுணத்தையும் களைந்து

ஒவ்வொரு இதழ்களையும் பிரித்து

வண்ண கலவையாக தொகுத்து

படிக்கும் பாடங்களை போல

நொடிக்கு நொடி அர்த்தங்களை

தேடிச் சிறகடித்து காலத்தை நகர்த்தும்

விந்தைமிக்க வாழ்வியல் நோக்கம்

உதிரிப் பூக்களைபோல

ஒவ்வோரு நாளும்

உதிர்ந்து உரமாகிப் போகிறது

அடுத்த தலைமுறைகளுக்கு.......

August 13, 2012

புதுக் கவிதை

Go to your blog list

 வார்த்தைகள் வனப்போடும்
வாக்கியங்கள் மிடுக்கோடும்
வர்ணஜாலங்களின் அழகோடும்
வார்தெடுக்கும் வைரங்கள்தாம்
புது கவிதை...........

இலக்கண விளிம்புக்குள்
இயங்கியதும்மில்லை
இலக்கிய வெளியில்
நாங்கள் துயில் கொள்வதும்மில்லை

மங்களத்தை காட்டி
அமங்கலத்தை ஊட்டி
தமிழை வளர்ப்பதல்ல
புது கவிதை.....
மனுட வர்கத்தின்
மனித புலம்பலை கூட
மகத்துவமான
மனித யாத்திரையாக
படம் பிடிப்பதுதான்
புதுக் கவிதை........

இது
வாசகங்கள் குடியிருக்கும்
வாயு மண்டலங்கள்
வார்த்தைகளின் பட்டறையில்
வார்த்தெடுக்கும் தீப்பிழம்புகள்

கலங்கரை வெளிச்சத்தில்
இலக்கண இடிபாடுக்குள்
இலக்கியங்களை தேடுவதல்ல
புதுக் கவிதை......
மன வெளியில்
பூத்திருக்கும்
நறுமணப்பூக்களை
வாரி அனைப்பதுதான்
புதுக் கவிதை........

June 26, 2012

தடைகளை உடைத்து தகமைமிக்க மனிதர்களாக நாம் மாறுவது எப்பொழுது?

வாழ்வியலில் எற்படும் மாற்றங்கள் சிலருக்கு மிகுந்த வேதனையை தரும். சிலருக்கு உத்வேகத்தை தந்து நிரந்திரமான ஒரு இன்பத்தை தரும். இரண்டும் நேரிய கண்ணோட்டதுடன் பார்த்தால் சாதாரனமான வாழ்வியல் மாற்றங்கள்தான் ஆனால் இருவேறு பண்புக்கூறுகளை கொண்ட ஒரு மாற்றம்.அந்த மாற்றம் இன்பமாகவும், துன்பமாகவும் பகுப்பதற்கு யார் காரணம்? மனிதனா? மனமா? செயலா? சிந்தனையா? எண்ணமா? மனிதனின் இன்ப துன்பங்களுக்கு என்ன காரணம் என்று கண்ணோட்டமிட்டால் மனிதனின் செயல்தான் முழுமுதற்காரணமாக அமைகிறது என்றால் அது மிகையல்ல.

அற்புதமான மனித உடல் வடிவமைப்பை சாராத ஒரு இயக்க பொருள் மனம் எண்ணம். “மனச தொட்டு சொல்லு” என்பார்கள். கை செஞ்சை தான் காட்டும். ஆனால் அந்த மனம் எங்கிருக்கிறது என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. மனம் ஒரு நிலைப்பட்ட பொருள் அல்ல. அது உடல் முழுவது வியப்பித்திருக்கின்ற எண்ண அலைகளாகவும் அது பிரபஞ்ச முழுவது விரிகின்ற ஒரு காந்த அலைகளாகவும் பார்க்கமுடிகின்றது. எண்ணத்தின் வேகம் அப்படி.

எண்ணத்தில் கவனமாக இருங்கள் என்று சொன்ன வேதத்திரி மகரிசியின் உன்னத வார்த்தை எவ்வளவு பொருள் பொதிந்தது என்பதை சிலரின் செயலில் இருந்து அறியலாம்.

எண்ணம்தான் வாழ்க்கை.எண்ணத்தின் செயல் வடிவம்தான் நமது எதிர்கால வாழ்க்கையின் நோக்கமாக அமைகிறது. எண்ணத்தின் வலிமையும் அதன் அடர்த்தியும் அதன் ஆழத்திலும்தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் தடம் பதிவாகிறது என்றால் அது மிகையல்ல.

நமது வாழ்வியலில் எற்படும் இன்ப துன்பங்கள் என்பது நமது எண்ணத்தில் விளைந்த செயல் வடிவங்களின் மறுக்கூறுகள்தான்.உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள் ஒரே இலக்கை நோக்கமாகவும் அதன் மையம் கொண்டே செயல்படுவார்கள். “கருமமே கண்ணாய்” இருப்பார்கள். வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்தது எல்லாம் தெளிந்த சிந்தனை, செயல் வடிவமான உழைப்பு. சிதறாத எண்ண பிரதிபலிப்பு.

மனித மனதில் தோன்றும் சபலம் தயக்கம், தோல்வி பயம், எண்ண சிதறல்கள், தன் முனைப்பு அற்ற செயல் திறத்தால் அவரின் எண்னம் பலவினப்பட்டு கிடக்கிறது என்றுதான் அர்த்தம்.

என் உற்ற நண்பர் சொல்லும் ஒரு வார்த்தையும் இங்கு கவணிக்கதக்கது. “எது வேண்டும்? எண்ணத்தில் போடுங்கள்” எண்ணத்தில் விதைத்த எதுவும் விளைச்சல் இல்லாமல் போகாது. அது மரமாகி காயாகி கனித்தரும் வரை காத்திருங்கள் என்பார்”. எண்ணதில் போடப்படும் எதுவும் அழ்மனதில் பதிவு செய்யப்படும். அழ்கடலின் அமைதி போல எண்ணத்தில் மையம் கொள்ளும் எந்த பதிவுகளும் ஒரு நாள் பெரும் கடல் அலையாய் வானம் வரை உயர்ந்து நிற்கும்.

வானமே எல்லை என்பார்கள். அந்த வானத்திற்கு கூட எல்லைகளை சமைத்து அதற்கு மேல் பிரபஞ்சம் என்று சொல்லும் மனுடம் மன எண்ணங்களுக்கு அதன் அலைகளுக்கும் எல்லை வகுக்க முடிந்ததா? எண்ணங்கள் பரந்து விரிந்து பிரபஞ்சமும் முழுவது வியப்பித்திருக்கிறது. நமது சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் யார் தடைப்போடமுடியும்?

தடைகள் இல்லா மனித எண்ணங்களுக்கு தடைக்கற்கலே அவனின் செயல்பாடுகள் தான்.ஒரு கட்டிடம் எழுவதற்கு எப்படி செங்கற்கள் சரியாக அடுக்கப்படுகிறதோ அப்படிதான் நமது இலச்சியங்களும் அதன் சீரான சிந்தனைக் கொண்ட எண்ணங்களை வரைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

உறுதிக்கொண்ட எண்ணங்களின் செயல்பாடுகள்தான் ஒரு மனிதனின் வெற்றிக்கு பெரும் பங்கற்றுகின்றன. அவனின் இலச்சியத்தை அடைவதற்கும் அதுவே வழிக்காட்டுகின்றன. எண்ணத்தின் வலிமை தான் ஒவ்வொரு மனிதனின் வெற்றி தோல்விகளை காரணமாகிறது.

“மனதில் நாம் அடைய வேண்டிய இலக்கை சரியாக அடையாளம் காட்டிவிட்டால் போது. மனம் என்ற மகா சக்தி அதன் வழியை தானே கண்டுபிடித்து நமது ஆசையை நிறைவேற்ற உதவும்” என்கிறார்கள் நமது அறிஞர்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டுதானே?

“மனம் தன்னைத்தானே உந்திதள்ளி தவறான பாதையில் இடிப்பட்டு திரும்பி சரியான பாதைக்கு மீண்டும் மீண்டும் ஓடும் ஒரு யாந்திரம்” என்கிறார் மேக்ஸ்வேல் மால்டஸ்.

மனத்தின் நம்பிக்கை என்ற பசை, எண்ணத்துக்கு ஈரம் கொடுத்து உயிர் கொடுக்கிறது.

எண்ணம் என்பது நம்மை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. நம்மைப்பற்றி நாம் எண்ண நினைக்கின்றோமோ அதுவாகவே நாம் ஆகிவிடுகின்றோம். அதன் எண்ணங்களை ஒட்டிதான் உடலும் உள்ளமும் இயங்குகின்றன. பிற புறச்சூழலும் வெற்றியை நோக்கி எழுகின்றன.

நம்மால் முடியும் என்ற எண்ணம் மனதில் தோன்றும் போது அதை செய்து முடிக்கும் தார்மீக வலிமை உடலிலே பிறக்கிறது. திரும்பச் திரும்ப எண்ணும் ஒரு எண்ணம், நம்மிக்கையாகிறது. நம்மிக்கை நம்மை செயல் பட தூண்டுகிறது.

எண்ணம் நம்பிக்கையால், நம்மிக்கை செயலால், செயல் பழக்கமாய், பழக்கம் விதியாய் அமைகிறது. எண்ணம் என்பது சிந்தனை மட்டும் அல்ல, உங்கள் வாழ்க்கை. உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் சிற்பி நீங்களும் உங்கள் எண்ணங்களும்தான்.

இதையே வேதாத்திரி மகரிஷி அருமையாய் சொல்கிறார்.....

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன. ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”March 27, 2012

பொருளாதார விடியலை நோக்கி.......வேதமும் விவாதமும்

நீண்ட நெடு நேர காலைப்பொழுது, என் நினைவுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. விடிந்த பிறகு ஒரு விடியலை நோக்கி எனது மனமும் விரைந்துக்கொண்டிருந்தது. அதிகாலை 5.00 மணிக்கு எழுந்து காலைக்கடனை முடித்து எளிய முறை உடல் பயிற்சி செய்து, தியானம் தவம் என்று அமர்வது அன்றாட வாழ்க்கை கடமையாகிவிட்டது. என் வாழ்வில் இயங்கும் அன்றைய நிகழ்ச்சி நிரலில் காலை கதிரவன் எழுந்து நின்று வாழ்வுக்கு வழி காட்ட தொடங்கிவிட்டான் என்றுதான் சொல்லவேண்டும்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஷ்காரமா? என்ற பழமொழி உண்டு. கண்கள் கெட்டு பார்க்க முடியாத போது சூரியனை வணங்கி பயனில்லை என்ற கூற்றுக்கு மறு அர்த்தத்தை கூறுவது யாது என்றால் கண்கள் கெடுவதற்கு முன் அதை பாதுக்காக்கும் பொறுப்பு நமக்கு இருக்க வேண்டு என்பதே. அது கண்கள் சார்ந்ததோ ,உடல் உயிர் சார்ந்ததோ அல்லது நமது அருள் பொருள் சார்ந்தாயினும் அதை பெருக்குவதற்கும் வளப்படுத்துவதற்கும், பாதுக்காப்பதற்கும் நாம் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக பொருளாதார அடிப்படையை உறுதிப்படுத்துவதற்கும், அதை மேன்படுத்துவற்கும் நமது மலேசிய இந்திய சமுகம் முயற்சிக்கவேண்டும். அதை செய்ய தவறினால் நாமும் கண்களை இழந்த குருடர்களாகதான் வலம் வருவோம்.

சில வாரங்களாக, தொடர்சியாக தினசரிகளில் வெளி வந்த விளப்பரங்களில், மலேசிய இந்தியர்களின் பொருளாதார கருத்தரங்களில் பங்குகொள்ள வாரீர் என்று அழைப்பினை கண்டு, சென்று வருவோம் என்று முடிவெடுத்தேன். சில சமயங்களில் இப்படிப்பட்ட கருத்தரங்கங்கள் வெறுமனே கண் துடைப்பாகவும் அல்லது கண் காட்டி வித்தையாகத்தான் இருக்கும். எப்படிப்பட்ட தீர்மானமும் அதிகார பலமுள்ள அரசியல் சாசனத்தில் இடம் பெறாவிட்டால் உப்பு சப்பில்லா பண்டமாகத்தான் இருக்கும். அது மாற்றங்களை எற்படுத்தாத மாற்று நிகழ்வாகத்தான் இருக்கும். கூடி களித்து கூப்பாடு போடும் மனிதர்கள் மத்தியில் இந்தியர்களின் பொருளாதர கனவு வெறும் கானல் நீராகத்தான் தெரியும்.

சில குறிக்கோளோடு இந்தியர்களின் பொருளாதார பலத்தை பெருக்கும் அதிவேக திட்டங்களை வகுக்கும் ஒரு பொருளாதார மாநாடக இருக்குமா என்ற கேள்வி கணைகளோடு கிள்ளான் சீன ஹோக்கியன் மண்டபத்தில் காலடி எடுத்து வைத்தேன்.

மலேசிய பிரதமர் துறையின் திட்டமிடல் பிரிவின் ஆதரவோடும் மற்றும் “மய்க்கி” என்னும் மலேசிய இந்திய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் “தைரியமான ஒரு மாற்றங்களை நோக்கி” என்ற கருப்பொருளோடு அந்த மாநாடு களைக்கட்டிக் கொண்டிருந்தது.

மனதில் ஒரு சிறிய பாரம் அவசரமாக கிளம்பிய ஒரு நிகழ்வு என்பதால் என் அலைப்பேசியின் மின்கலத்தை மறு மின்பச்சலுக்கு விட மறந்துவிட்டேன். ஒரு அலைப்பேசி அழைப்பயை செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் கடைச்சி வரைக்கும் அது முடியாமல் போய்விட்டது. என் உற்ற நண்பர் ஒருவரிடம் இந்த நிகழ்வுக்கு பற்றி சொல்லி நீங்களும் வருகை தருகிறீர்களா என்று கேட்பற்கு முடியாமல் போய்விட்டது.இறுதி நேரத்தில் என் அலைப்பேசி இயங்க மறுத்துவிட்டதுதான் அதற்கு காரணம்.

எப்படிப்பட்ட பொருளாதார மாநாடாக இருந்தாலும் நம் இந்தியர்கள் கேட்கும் முதல் கேள்வி. பண உதவி செய்வார்களா? என்பதாகத்தான் இருக்கும்.கறுப்பு பட்டியல் இடப்பட்ட எனது பெயருக்கு மலேசிய நிதியகங்களில் இருந்து எந்த பண உதவி கிடைக்கவில்லை. அரசாங்க உடவி கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தால் அது கிடைக்க மாற்றேன் என்கிறது.பிறகு நான் யாரிடம் உதவி கேட்பது என்ற கேள்விகணைகள்தான் அதிகம். சில சமயங்களில் அந்த பாரங்களை பூர்த்திசெய்யுங்கள் இந்த பாரங்களை பூர்த்தி செய்யுங்களை என்று அலைகழித்துவிட்டு பிறகு கடனுக்கு மனு செய்ய முடியாது என்கின்றனர். அதே சமயம் மலாய் இனத்திற்கு சலுகைகளை வாரி வழங்குகின்றனர். நாம் கேட்டால் இனப்பாடுபாகுகளை காட்டுகின்றனர் என்பதன் போன்ற குற்றச்சாட்டுகள். அதில் உண்மைகள் நிறைந்திருகின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது.

மலேசிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையில் ஏற்ற தாழ்வுகள் நிச்சயம் உண்டு. புதிய பொருளாதார கொள்கை புறம்தள்ளிகிடந்த மலாய் இனத்தை மேன்படுத்துவது ஒன்றேதான் அதன் இலக்கு என்பதை இங்கு உள்ளவர்களுக்கு தெரியும். அதிகார பலத்தோடு அதை சாதித்த வரலாறு இந்த மலேசிய அரசங்கத்திற்கு உண்டு என்பதையும் யாரும் மறுக்க முடியாது. எவ்வளவு அருமையான ஒரு பொருளாதார திட்டத்துடன் அதை சாதித்தார்கள் என்பதை கண்னோட்டமிட்டால் அவர்கள் செய்த அற்புதம் நமக்கு விளங்கும். அதே போன்ற ஒரு திட்டமிடல்தான் தேவை இன்றைய மலேசிய இந்திய சமுகத்தினருக்கு. ஒரு முழுமையான பொருளாதார வீயுக அமைப்புடன் கூடிய புதிய பொருளாதார கொள்கை எற்படுத்தபட வேண்டிய அவசியம் உண்டு.

சில சமயங்களில் இனபாகுபாடு முறையில் வணிக கடப்பாடுகளை கட்டுப்பாடுகளை வரைந்து மற்றவர்களின் முன்றேற்றத்தை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அனால் அமானா சாஹம். அமானா நேசனல், காசன நேசனல் என்று பண மூதலீட்டு திட்டத்திலும் பெல்டா, பெல்கர என்ற விவசாய பண்ணையுடன் எண்ணை வளம் கொண்ட பெட்ரொனாஸ் வரைக்கும், பெருடுவா, புரத்தோன் வாகன திட்டத்துடன் பெரும் பெரும் திட்டங்களை தீட்டி மலாய் இனத்தை பெரும் பணகார இனமாக மாற்றி இருக்கின்றனர். பெரும் பணத்தை வாரி இரைத்து மலாய்க்கார மாணர்வர்களை அமெரிக்க ஐரோப்பிய அஸ்திரலியா ஜாப்பான் வரைக்கும் அனுப்பி தொழி கல்வி கற்க வழிவகைகளை செய்திருகின்றனர். பெரும்பான்மை மலாய் இனத்தை கல்வி கற்ற இனமாக மாற்றியும் இருகின்றனர்.

அதே போன்று அடிமட்ட தொழிளாலர்களிருந்து உயர்மட்ட ஆளுமை திறன் கொண்டவர் வரைக்கு ஒரு இன சார்பானவர்களை வேலைக்கு அமர்ந்துவது வரைக்கும். எந்த தொழில் தொடங்கினாலும் நாட்டின் பெறும்பான்மை இனத்தை சார்ந்தவர்களுக்கு பங்கு தரவேண்டி கட்டாயப்படுத்துதல். மலாய்கார்களுக்கு இலகுவான முறையில் உரிமம் என்ற சில கொள்கைகளை வரையறுத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்த அரசாங்க அதிகாரிகளினால் மாற்று இன மக்களிடம் பெரும் அதிப்தி நிலவியதை மறுக்கமுடியாது. அதே சமயம் மலாய் மற்றும் பூமிபுத்தர என்ற கொள்கை ரீதியில் அவர்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் அதே வேளை மற்றவர்களை மாற்றம் தாய் பிள்ளையாக கருதி செயல் படும் அரசாங்கதின் உணர்வுகளை மாற்றவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது என்ற காரணத்தால் இது போன்ற மாநாடுகளில் நாமும் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்ற நோக்கோடு கலந்துக் கொண்டேன்.

“என்ன செய்யலாம் ஏது செய்யலாம்” என்ற எண்ணத்தோடு பெரும் எண்னிக்கையோடு வந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் சிறு துளியாக அதே சமயம் பார்வையாளனாகவும் கலந்துக் கொண்டேன். கலந்துரையாடல் பிரச்சனைகள் மற்று அதன் தீர்வு என்ற நோக்கோடு பல பிரச்சனைகளை அங்கு குமிந்திருந்த மக்கள் அலசி ஆராய்ந்திருந்துக் கொண்டிருந்தனர். இங்கு பேசப்படும் பிரச்சனைகளை கண்டிப்பாக மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீரி நஜிப்பிடம் கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டது. அதற்கான ஆலோசனையும் திட்டங்களும் பிரதமரிடம் கலந்து ஆலோசித்த பிறகு வழிமுறைகளுக்கு கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டது.

இறுதியாக பேசிய மதிப்பிற்குரிய “பெமண்டு” அமைப்பின் இயக்குனர்களின் ஒருவர் திரு ரவிந்திரன் அவர்களின் பேச்சும் கேள்விகளுக்கு தந்த விளக்கங்களும் சிறப்பாக இருந்தன. அற்புதமான தலைமைத்துவ ஆற்றலுடன் அவர் நல்கிய ஆலோசனைகள் பிரமிக்க வைத்தன. படித்த மனிதர்கள் ஒன்று திரண்டு வாருங்கள் இந்த சமுதாயத்தின் பொருளாதார பலத்தை மாற்றுவோம் என்று இளைஞர்களுக்கு அறைக்கூவல் விடுத்தார்.

எனக்கு தெரிந்த வகையில் இந்த இந்திய சமுதாயத்தின் எழுச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் குழு முறையில் இயங்கும் அதே வேளையில் தனி மனித வளர்ச்சிக்கும் அவர்களின் வியபார முனைப்புக்கு பண உதவி மட்டும் போதாது மாறாக ஒருவர் எவ்வகையான வியபாரத்தை தேர்ந்தெடுப்பது.நவீன வியபாரம் என்ன? அதை எவ்வாறு கையாலுவது? நவீன வியபார யுத்திகளை எவ்வாறு புகுத்துவது? நிர்வாக திறனை பயற்சி அளித்தல். உலக மய கொள்கைக்கு எவ்வாறு கொண்டு செல்வது? என்று பயற்சி அளித்தால் நமது இந்திய சமுக பொருளாத உயர்வு பெரும். காரணம் பண சிக்களை தவிர்த்து பணத்தை எவ்வாறு செலவு செய்ய தெரியமால் தவிப்பவர்களும் அதிகம் என்பேன். அரசாங்க தடங்கள், அனுபவ குறைவு, நிர்வாக சிக்கல் மற்றும் எவ்வாறான வகையில் முதலீடுகளை செயல்படுத்துவது என்று தெரியாமல் தயங்கும் நண்பர்கள் அதிகம். அது போன்றவர்களுக்கு உதவும் வகையில் தொழில் நூட்ப வல்லுனர்கள் குழுக்கள் இருந்தால் நமது இளைஞர்களும் தயக்கம் இல்லாமல் புதிய தொழில் துறைகளில் நாட்டம் செலுத்துவார்கள்.

என் நண்பர் ஒருவர் சொல்வது போல் மலேசிய இந்திய மாணவர்கள் அணைவருக்கும் சட்டத்தின் வழி “மாரா” போன்று இலவச உயர்க்கல்வியை தந்தாலே எற்ற தாழ்வுகளும் ஏழ்மையும் மறையும். சமுக சிக்கல்கள் தீரும்.

வானை உயர்ந்து பார்க்கலாம். வட்ட நிலவை அளைந்தும் பார்க்கலாம். கோடி நட்சத்திரங்களை உற்றும் பார்க்கலாம். ஆனால் தன்னை உணர்ந்து பார்க்காதவனை, தனது பலத்தையும் பலவினத்தையும் உணராதவனை இந்த உலகம் ஒரு போது நிமிர்ந்து பார்க்கவே பார்க்காது. அது இந்த சமுதாயத்துக்கும் பொருந்தும். பணபலமும் மன பலமும் இல்லாத எந்த இனமும் அடிமை இனமாகத்தான் பார்க்கப்படும். ஒரு இனத்தையே பணக்கார சமுதாயமாக மாற்றம் கான விளையும் அன்பு செஞ்சங்களுக்கு அதே வேளையில் தன்னை தானே மாற்றதுத்துக்கு வித்திட அங்கு குமிந்திருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களை நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வோம். வாழ்க வளமுடன்.

வானை உயர்ந்து பார்க்கலாம். வட்ட நிலவை அளைந்தும் பார்க்கலாம். கோடி நட்சத்திரங்களை உற்றும் பார்க்கலாம். ஆனால் தன்னை உணர்ந்து பார்க்காதவனை, தனது பலத்தையும் பலவினத்தையும் உணராதவனை இந்த உலகம் ஒரு போது நிமிர்ந்து பார்க்கவே பார்க்காது. அது இந்த சமுதாயத்துக்கும் பொருந்தும். பணபலமும் மன பலமும் இல்லாத எந்த இனமும் அடிமை இனமாகத்தான் பார்க்கப்படும். ஒரு இனத்தையே பணக்கார சமுதாயமாக மாற்றம் கான விளையும் அன்பு செஞ்சங்களுக்கு அதே வேளையில் தன்னை தானே மாற்றதுத்துக்கு வித்திட அங்கு குமிந்திருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களை நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வோம். வாழ்க வளமுடன்.February 21, 2012

காலமென்னும் தேவதையே

காலமென்னும் தேவதையே
காற்றோடு கலந்துவிட்டாயா?
மாயம் செய்யும் வாழ்க்கை என்று
மாயமாய் மறைந்துவிட்டாயா?

ஓலமிடும் வாழ்க்கை என்று
ஓராயிரம் முறைச் சொன்னாலும்
காலமென்னும் வெள்ளத்தில்
கரைச்சேர காதலை ஏன் தூதுவிட்டாய்?

கோலமிடும் புள்ளியாய்
கோதை மனதில் தெளித்துவிட்டாய்
பாதை புரியுமுன்னே
பயனங்களை ஏன் முடித்தாய்?

போகும் பாதை புரியாத போது
புலம்பி என்ன பயன்?
போதை தரும் வாழ்க்கை முன்னே
மோதி வீழ்ந்தால் எப்படி பெண்னே?

February 11, 2012

இப்படிக்கு அன்புள்ள உன் தாய்

உனது
பாதச் சுவடுகளை
தாங்கிக் கொள்கிறேன்
எனது இதய கமலத்தில்

ஒவ்வொரு அடியும்
இடிகளாக விழுவதில்லை
பூக்களாக மலர்கின்றன.

விதைகளுக்குள்
எவ்வளவு பெரிய விரிச்சம்
எப்படி உறங்கிக் கிடந்தன
என்பதை........
உன்னைப்பார்த்தவுடன்
புரிந்துக் கொண்டேன்.

உன் ஒவ்வொரு வளர்சியும்
பிரமிக்க செய்கிறது.
சிறு துளியில்
இருந்து பிறப்பெடுப்பது
உன்
வாழ்க்கை மட்டும் அல்ல
எனது
நினைவுகளும் கூட

இப்படிக்கு
அன்புள்ள உன் தாய்

February 8, 2012

முட்கள் கூட பூக்களாகலாம்முயன்று பார்
முடிவுகள் உணக்கு
வழிவிடும்.

தொடர்ந்து
முயற்சித்தால்
இயலாமை
உன்னைவிட்டு அகலும்

அறிவை தீட்டு
ஆச்சிரியப்படும்
இந்த உலகம்

கனவுகள்
இதயத்தின்
யாத்திரை என்று நினைக்காதே
நிஜங்களின் தொடக்கம்
என்று நினை,,,,,

விடியல் கூட
விழித்திருக்கும்
நீ
விரைந்து நடந்தால்,,,
புயலைக்கூட
புரட்டிப் போடலாம்
நீ...
முனைப்பை காட்டினால்

முட்கள் கூட
பூக்களாகலாம்
முயற்சி
என்னும் வித்திருந்தால்

இருளிலே போட்ட
விதைகள் கூட
விரிச்சமாகும்.
உன்
மனதிலே
எழும்
எண்ணங்களே
உன்னை
எடைப்போடும்.

February 6, 2012

வருங்கால வாழ்வை நோக்கி..... மலேசிய தமிழர்கள்
நாம் யார்? என்ற கேள்விக்கு விடைகளை தேடுங்கள் என்கிறார்கள் நமது சமய சான்றோர்கள்.தன்னை உணர்ந்தவர்கள் வாழ்வின் அர்த்தத்தை புரிந்துக்கொள்கிறார்கள் என்கிறார்கள். தற்கால சூழ்நிலையில் தமிழர்கள் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கு இயலாமல் காலச் சூழலில் சிக்கிக் கொண்டு தவிப்பது கண்கூடாக தெரிகிறது.

இந்தியன் என்பவன் யார்? தமிழன் என்பவன் யார்? என்ற கேள்விக்கணைகள் விடாமல் நம்மை துரத்துகின்றன. இந்த மலேசிய நாட்டிலே இந்தியர் குறிப்பாக தமிழர்கள் ஒரு வகையான அன்னிய அடையாளச் சிக்களில் மாட்டிக்கொண்டு இந்த நாட்டிற்கே அன்னியர்களாகவே பார்க்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காரணம் இந்த நாட்டிலே பிறந்து, இந்த நாட்டிலே வளர்ந்து, வாழ்ந்து வரும் இன்றைய தலைமுறை மக்களை ஒரு அன்னிய நாட்டு கலைச்சாரத்தில் இருந்து வந்த வந்தேறிகளாக சித்தரிக்கபடுவது ஒருவகையான ‘அழித்தல்’ நடவடிக்கையாகவே தென்படுகிறது. இந்த நாட்டில் வாழ்ந்து வரும் மூவினமும் எதோ ஒரு வகையில் அன்னிய நாட்டின் மூலத்தை கொண்டவர்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இனம் மொழி கலைக்கலைச்சாரத் சூழலில் தமிழர்கள் தன் இருப்பை எங்கே தொலைத்து விடுவார்களோ என்ற ஒருவகையான அஞ்சம் நமக்குள் எற்படுகிறது. கால வெள்ளத்தில் தன்னை கரையாமல் இது வரைக்கும் தாக்குபிடித்த ஒரு பழமையான இனம் என்ற வகையில் நமக்கு பெருமைதான். ஆனால் எத்தனையோ காற்றாற்று வெள்ளத்தை கடந்து வருவதற்கு நாம் கொடுத்த விலை கொஞ்சம் அதிகம்தான்.

புலம் பெயர்ந்த எத்தனையோ நாடுகளில் தமிழர்கள் தொலைத்த தனது அடையாளத்தை மீட்க போராடிக்கொண்டிருக்கும் போது மலேசிய தமிழர்கள் தனது இருப்பையே தக்க வைக்க போராடவேண்டியிருக்கிறது.

சிறுபான்மை இனம் என்பதைவிட, ஒடுக்கப்படுகின்ற ஓர் இனம் என்ற வகையில், அழிவை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் ஒரு இனம் என்ற வகையில் நமது சமுதாயத்தையும் சமுக கட்டமைப்பை கலைச்சார மூலக்கூறுகளை பாதுக்கக்கவும் சுயமாக சீர்த்தூக்கி பார்க்க வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் இருக்கின்றோம். மாற்று இன பெருக்கத்தில் நாம் இந்த நாட்டில் சிறு துளிகளாக மாறிக்கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

தன்னை தமிழனாகவும் நினைப்பதற்கும், தனது தாய் தமிழ் மொழியில் பேசுவதற்கும் கூட வெட்கப்படும் ஒரு சமுதாயமாக இந்த சமுதாயம் வளர்ந்துக்கொண்டிருக்கிறது. படித்த தமிழர்கள் தன் மக்களுக்கு தமிழ்ச் சார்ந்த அறிவு பொக்கிஷங்களையும், பண்பாட்டு கூறுகளை சொல்லிக்கொடுப்பதற்கு கூட வெட்கப்படுகிறார்கள். தன்னை தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ள மறுக்கும் இத் தமிழர்களின் அறியாமையை என்னவென்பது?
மாற்றங்களை நோக்கி இந்த நாடும் நாட்டு மக்களும் நகர்ந்துக்கொண்டிருக்கும் போது, சமுதாய கடப்பாடுகளும். சமுக ஒப்பந்தகளும் வேறு வகையான மாற்றங்களை நோக்கி மெல்ல நகர்ந்துக்கொண்டிருக்கின்றன. நமது உரிமைகளும் உடமைகளும் பாதுக்கக்கப்படுமா இல்லை கால வெள்ளத்தில் கரைந்து போகுமா என்பதே இன்றைய மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது?

என் நண்பர் தமிழ் வாணன் ஒரு மாற்றுக் கருத்தை சொல்வது போல் நாம் நமது இருப்பை தக்க வைக்க நாம் போட்டி போடுவது மலாய் இனத்திடமோ இல்லை சீன இனத்தோடு அல்ல. ஒரு ஆளுமைமிக்க ஒரு அரசாங்கதோடும், அவர்களின் உறுதியான சட்ட திட்டங்களோடுதான் என்பத நாம் மறக்ககூடாது.

அதிகார பகிர்வு என்று முழக்கமிடும் அரசங்கத்தில் ஒரு அங்கமாக இருக்கும் மலேசிய இந்தியர் காங்கரஸ் (MIC) இந்தியர்களின் இருப்பையும், தமிழ் மொழியையும், தமிழ்ச்சார்ந்த கலைக்கலாச்சாரங்கள் அழிவில் இருந்து மீட்டெடுக்க முடியுமா? என்ற வினாவுக்கு விடைக்கான முடியுமா? 50 வருடங்களாக வாய் பேச மடந்தைகளாக இருந்த ம இ காவினர் இப்போதவது சட்டப்பூர்வமான பாதுக்கப்புக்களை இந்த இந்திய சமுதாயத்திற்கு பெற்று தருவார்களா? இல்லை கும்பகரணனைபோல மீளா உறக்கத்தில் வீழ்ந்து கிடக்கபோகிறார்களா என்பதை அவர்களின் செயல் திறன் உறுதிப்படுத்தும். வெறும் தலைவர்களாக மட்டும் இருந்தால் போதாது, சமுதாய கடமைகளை ஆற்றும் தொண்டர்களாக அவர்கள் மாறவேண்டு. அவர்கள் கடுமையாக உழைக்கவேண்டிய காலக்கட்டம் இது உண்மையில் இன்றைய சமுதாய தலைவர்களும் சரி , தொண்டர்களும் சரி பெரும் சாவல்கள், அவர்களை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருக்கின்றன.

ஒரு இனத்தின் ஆளுமை என்பது அந்த இனத்தின் மகட்த் தொகையிலும். சிறப்பான பொருளதாரத் தன்மையில் அடங்கி இருக்கிறது. தமிழ் மக்களின் பெருக்கத்திற்கு வழிவகைகளை கண்டு அதன் வழி நாம் அரசியல் பலம் பெறமுடியும். அது மட்டும் அல்ல, மதம் மற்றும் கலைச்சார மாற்றத்தில் மூலம் நம்மை அறியாமல் மிகவும் நுண்ணிய வகையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் இன அழிப்பு முறைகளை தடுத்து நிறுத்தமுடியும்.

மொழி இனம் என்ற அடிப்படையில் சிறுத்துக் கொண்டிருக்கும் மலேசிய தமிழர்களின் வாழ்வுக்கும் அவர்களின் வளத்திற்கும் வெறும் சலுகைகளும் பெற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது. சட்டத்தின் வழியில் உறுதியான திட்டங்கள் மட்டும்மே நமது இருப்பயை உறுதிசெய்யும். நாமும் மலேசியர்கள், அன்னியர்கள் அல்ல. இந்த நாட்டின் தூண்கள் என்ற எண்ணத்தை வலுச்செய்ய இந்த நாட்டின் சரித்திர நூல்களில் நமது வரலாறு துல்லிதமாக எழுதப்படவேண்டும்

அரசாங்கத்தை குறைக்கூறுவதை விட அரச கொள்கையை வகுக்கும் போது வாய்மூடி மவுணத்த காத்த அந்த தலைவர்களையும், அதன் பிறகு வந்த தலைவர்களைதான் குறைச்சொல்லவேண்டும். ஆனால் எதையும் கேட்டால் பெறகூடிய இக் காலத்திலும் அதை கோட்டைவிட்டால் வருங்காலம் நம்மை மண்ணிக்காது. ஒரு இனம் வளர்வதற்கும் வாழ்வதற்கும் அரசாங்க உதவி என்பதை விட ஒட்டுமொத்த மலேசிய இனம் அரசாங்கதின் உதவியயை பெற்றால் அது சிறப்பான ஒரு மாற்றமாகத்தான் இருக்கும். அதுதான் மனித நேயமாக போற்றப்படும்.

தன்னிலையை மறந்து மயக்க நிலையில் மிதக்கும் தமிழர்கள் தன்னை அறிந்து தனது இன உணர்வுகளால் மொழித் திறத்தால் தனது தாழ்வு நிலைகளில் இருந்து மீண்டு வரமுடியும். தமிழன் என்று சொன்னவுடன் தலை நிமிர்ந்து நடக்கவும் முடியும். உலகிற்கே அறிவு தந்த உண்ணத இனம், தன்னை தானே உணரவா முடியாது?

January 6, 2012

மழைக்காலத்தில் ஒரு நாள் மலைவாசம்நாடெங்கும் அடர்ந்த மழை. சில இடங்களில் மண்சரிவு.பல இடங்களில் வெள்ளம் என்ற செய்தி. இடைவிடாமல் பெய்யும் மழையை மீறி எங்களின் வெளியூர் பயணம் தொடங்கியது. அங்கங்கே வானம் கருமையை காட்டி எங்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது. என் மனைவியின் நீண்ட பள்ளி விடுமுறை முடிவதற்கு இன்னும் மூன்று வாரங்கள்தான், அதற்குள் எங்காவது சென்று வர வேண்டும் என்று என் மனைவி வற்புறுத்திக் கொண்டிருந்தாள். இருப்பதோ மூன்று வாரங்கள் மட்டும். அதிலும் பள்ளி விடுமுறை ஆரம்பிக்கும் முதல் வாரமும் பிறகு இறுதி இரண்டு வாரங்கள் கண்டிப்பாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது சில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் எழுதாத விதியாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் நானும் என் மனைவியும் மலைவாசம் நோக்கி புறப்பட்டோம்.

மழைக்காலம் என்பதால் எங்கும் குளிர்ச்சிதான். காலை மாலை இரவு என்று மழைக்கு நேரங்காலம் தெரியவில்லை போலும் என்று நொந்துக்கொண்டே புறப்பட்டோம். அப்படி இப்படி என்று வீட்டை விட்டு கிளம்புவதற்கு காலை மணி 9 ஆகிவிட்டிருந்தது. கிளம்புவதற்கு முன் என் மனைவி சமைத்திருந்த நாசி லெமாவை எடுத்துக்கொண்டோம். இது திட்டமிடாத பயணம் என்பதால் சற்று தயக்கத்தோடுதான் கிளம்பினோம். மழையோடு இது மழைக்கால பயணம் என்பதால் சற்று சிரத்தையோடு வாகனத்தை செலுத்த வேண்டிய சூழ்நிலை.

அவ்வப்போது மழை தூறல்கள் எங்கள் வாகனத்தை பின் தொடர்ந்துக் கொண்டிருந்தது. நல்ல காலம் இன்று தூறலோடு மழை எங்களோடு உறவாடிக்கொண்டிருந்தது. பெரும் மழை எங்களின் பயணத்தை தடுக்கவில்லை.

பிலாஸ் என்ற வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நீண்ட அழகான மலேசிய பெருவெளி திட்ட நெடுஞ்சாலை அது. தித்தி வங்சா என்ற மலைத்தொடரை ஒட்டி இயற்கை காட்சிகள் நிறந்த அந்த நெடுஞ்சாலையில் எங்களின் வாகனம் ஒரே சீராக சென்றுக் கொண்டிருந்தது. எங்கும் பெரும் காடுகள். அல்லது செம்பனைத் தோட்டங்கள்.எங்கும் பசுமை. மலேசிய திரு நாட்டை என்னவென்பது? காடுகளின் சொர்க்கபுரி என்றுதான் சொல்லவேண்டும்.

எங்களின் அடுத்த இலக்கு தாப்பாவில் இருக்கும் (tapah ) ஓய்வு எடுக்குமிடம்தான். நாங்கள் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை ஒரு கை பார்த்துவிட்டு எங்களின் கேமரன் மலைப்பயணத்தை தொடங்கினோம். பயணம் தொடங்கி சற்று நேரத்தில் பெரும் நீர்வீழ்ச்சி வானத்தில் இருந்து பூமியில் கொட்டுவது போன்று ஒரு அற்புத காட்சியை அந்த நெடுஞ்சாலையில் பார்க்க முடிந்தது. அதை பார்பதற்கு கண்கள் கோடி வேண்டும் என்றால் மிகையல்ல.

ஒரு வழியாக நெடுஞ்சாலை விட்டு கேமரன் மலைப்பாதையை நோக்கி எங்களின் வாகனம் நகர்ந்துக்கொண்டிருந்தது. கேமரன் மலைச்சாலை என்றாலே அபயகரமான வலைவுகளை கொண்டது. அதுவும் இந்த மழை நேரத்தில் பாதை படு பயங்கரமாகத்தான் தெரிந்து. எப்படிதான் காய்க்கறி வாகனங்களும் சிறுரக சரக்கு ஊந்துகளும் சர்வ சாதரணமாக மலைகளில் ஏறி இறங்குகின்றனவோ? ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

எங்கும் மேடு பள்ளங்கள். சில சமயங்களில் மலை முகடுகளையும் சில சமயங்களில் பெரும் பள்ளங்களையும் கடந்துக்கொண்டிருந்தது வாகனம். வழி நெடுக்க உயர்ந்த பெரிய மரங்கள். டைனோசோர் காலத்து மரங்களா என்று தெரியவில்லை. சில இடங்களில் மலையை ஒட்டிய சாலையும் அதன் பக்கத்தில் பெரும் பள்ளங்கள். சில இடங்களில் அழகிய நீர்விழ்ச்சிகள். போகும் பாதை அங்கங்கே பூர்வகுடி மக்களின் குடிசைகள். சில இடங்களில் சூரிய வெளிச்சம் கூட தரை இறங்க முடியாமல் ஓங்கி உயர்ந்த காடுகள் மட்டுப்படுத்திக்கொண்டிருந்தது.அந்த அடர்ந்த காட்டில் ஒரு மெல்லிய கோடுகளின் கிறுக்கல்கள் போன்று சென்றுக் கொண்டிருந்தது கேமரன் மலைச் சாலை.

“தான ராத்தா”, “ரிங்லெட்” போன்ற சில ஊர்கள் கடந்து சென்று :”பேரின்சாங்” என்ற சிறு பட்டிணத்தை அடைந்தோம். அது கேமரன் மலை உச்சியில் உள்ள மலைவாச தளம். நாங்கள் சென்ற நேரம் சிறு சிறு தூறலில் மழை பெய்துக் கொண்டிருந்தது. சிறு பட்டிணமாக இருந்தாதும் பாதைகள் பிரிக்கப்பட்டு ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டதனால் சில இடங்களில் சாலை நெரிச்சல். “ இது என்ன தலைநகரிலே அதிக வாகன நெரிச்சல் என்று மலைவாசத்தை நோக்கி வந்தால் இங்கு அதே பிரச்சனைதான் என்று நானும் என் மணைவியும் நெந்துக்கொண்டோம். சற்று நேரத்தில் அதற்கு விடையும் கிடைத்தது. இரவுச் சந்தை சாலை ஓரத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது, மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரு வழியாக தங்கும் விடுதியை தேடி கண்டுப்பிடித்து எங்களின் அறையிலே வாகனத்தில் இருந்த சுமைகளை இறக்கிவிட்டோம். “அப்பாடா” என்று ஒரு குளியல் போட்டு விட்டு, மறுபடியும் கிழ் இறங்கி பாசார் மாலம் என்று சொல்லப்படுகின்ற இரவு சந்தைக்கு நுளைந்தோம்.

என் மனைவி அதிகம் விலைப்பட்டியலை ஆராய்ச்சி பண்ணுபவள். கோலாலம்பூரை விட இங்கு விலை அதிகம் என்றாள்.....இருக்கலாம் நமக்கு என்ன தெரியும்? சில பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு அந்த சிறு பட்டிணத்தையும் ஒரு நோக்கமிட்டோம்...அப்பப்பா என்ன வளர்ச்சி. சில வருடங்கள்தான் வரவில்லை இங்கு, அதற்குள் பெரும் மாற்றங்களை காணமுடிந்தது. பட்டிணம் வளர்ந்திருந்தது. ஆனால் மக்களின் வளம் பெருகி இருக்கின்றதா என்றால் தெரியவில்லை என்று தான் பதில் கூறமுடியும். தமிழர்கள் நிறைந்து வாழுமிடம் ஆனால் அங்கு தமிழர்களை பெரிய அளவில் பார்க்கமுடியவில்ல அன்று. ஒரு வேளை மழைக்காலம் என்பதால் குளிரிலே வீட்டில் முடங்கிக்கிடக்கலாம் யார் அறிவார்?

ஒரு காலத்தில் கேமரன் மலை என்றால் கடும் குளிர்தான் நினவுக்கு வரும். அப்பேர்பட்ட குளிர், எங்கு ஓடி ஒளிந்ததோ தெரியவில்லை. என் சிறு பிராயத்தில் என் தாய் கூறுவார் என் சகோதரர் அங்கு வேலைக்கு சென்ற போது குளிரிலே தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடி வந்துவிட்டார் என்று. காலை குளிர் படு பயங்கரமாக இருக்கும் என்று கேள்வி. ஆனால் இப்பொழுது குளிர் அவ்வளவு கடுமை இல்லை. மலைகளை கரைத்துவிட்டால் எப்படி இயற்கை நம்மோடு ஒத்துபோகும்?

மழைத்தூறல் ஒருபக்கம் மழையில் நனைந்த சாலைகள் எங்கும் பிசுபிசுத்துகிடந்தன. சுற்றிவந்த அலுப்பு ஒரு புறம், மறுபடியும் ஒரு குளியல் போட்டு படுத்தவுடன் மறு நாள் காலையில் 7.00 மணிக்கு தான் எழுந்தோம்.

காலை கதிரவன் எங்களோடு போட்டிப் போட்டு எழுந்துவிட்டான் போலும். எங்கும் பனி மூட்டம். மெல்லிய குளிர்ந்த காற்று விசிக்கொண்டிருந்தது. அப்படியே பொடி பக்கத்தில் இருக்கும் stewbery பண்ணைக்கு சென்று அங்கு நவின விவசாய முறைகளை நேரடியாகவே பார்த்தோம்.

அது ஒரு தமிழரின் அதிநவின விவசாய பண்ணை. நெதர்லாந்து நாட்டில் இருந்து தருவிக்கப் பட்ட விதைகளில் இருந்து பயிரிடப்படுகிறது. அவ்வகையான காய்க்கறிகளை நெதர்லாந்து நாட்டிற்கே விற்கப்படுகிறதாம்.

ஒரு சிறிய விளக்க உரையுடன் அங்கு வேலைச் செய்த ஒரு தமிழ் நாட்டு வாலிபர் விளவாரியாக சொல்லிக்கொண்டிருந்தார். சரி என்று சில காய்கறிகளை வாங்கிக்கொண்டு நாங்களும் எங்களின் தங்கும் விடுதியை நோக்கி நடையை கட்டினோம்.
நேரம் பிற்பகல் 12 காட்டிக்கொண்டிருந்தது. விடுதியை காலிசெய்யவேண்டிய நேரம் நெருங்குவதால் விடுதிக்குள்ளான பணத்தைக்கட்டி எங்களின் பொருட்களின் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

மலை உச்சியில் இருந்து மறுபடியும் கிள்ளான் சமவெளியை நோக்கிய எங்களின் மழைக்கால பயணம் தொடங்கியது. மனதுக்கு இதமான பயனம். நேரம் பற்றக்குறைதான். இல்லை என்றால் இன்னும் சில திங்கள் தங்கி மன நிம்மதியை நாடி இல்லை இல்லை மன நிம்மதியை வேண்டி விடைப்பெற்று கிளம்மியிருக்கலாம். குறுகிய கால பயணம் என்றாலும் கேமரன் மலைப் பயணம் ஒரு அற்புதமான நினைவுகளை சுமந்து கொண்டு எங்களின் மனம் வீடு நோக்கி பயணப்பட்டது.