November 26, 2011

ஜிப்ரானின் காதல் கடிதங்கள் - கவிதையா? காவியமா?

தமிழ் இலக்கியங்களில் சங்கம்.. சங்கம்... சங்கப்பாடல்கள் என்று ஆயிரம் நூற்றாண்டை தான் நாம் முன் உதாரணப்படுத்துகின்றோம். அகப் பாடல்களில் வெளிப்படும் மன உணர்வுகளுடன் கூடிய வாழ்க்கை கூறுகளை அற்புதமாக கவிதை புனையும் அறிவும் கலை மாண்புகளை வெளிப்படுத்தும் ஆற்றலும் இன்றைய நூற்றாண்டு தமிழர்களிடம் இல்லையா? நமது சமுதாய கூறுகளை நளினமான இலக்கிய ஆற்றளோடு வெளிக்கொணர வேண்டிய சூழல் இன்னும் எழவில்லையா?

பல நூற்றாண்டுகளாக நம்மிடம் மகா கவிகள் தோன்றவில்லையா? தோன்றியிருக்கின்றார்கள் !. உலகப்புகழ்ப் பெற்ற சித்தாந்த வாதிகள் நம்மிடயே வாழவில்லையா? வாழ்ந்திருக்கின்றார்கள் !. நமது கவிதைகள் சித்தாந்தங்கள், சிந்தனை கருந்துக்களை உலகம் ஏற்றுக்கொண்டு போற்றிப் பாடுகிறதா? அற்புதமான நடைமுறை தமிழர்களின் வாழ்வியல் கருத்துக்கள் உலக சமுதாயத்திற்கு நாம் கொண்டு செல்ல தவறிவிட்டோமா? அல்லது உலக தரத்திற்கு ஏற்ற கவித்திறனோ, எழுச்சிக்கொண்ட சொல்லாடல்களை படைக்கும் தத்துவ முதிர்ச்சிக்கொண்ட இலக்கிய வாதிகள் நம்மிடம் இல்லையா என்ன? உண்டு! ஆனால் தமிழ் மொழி சார்ந்த மொழி பெயர்ப்பு இலக்கியங்களை உலக மொழியில் நாம் இயற்றவில்லை என்றே தோன்றுகிறது.

சங்கம் மறுவிய காலம் தொட்டு தமிழர்களின் இயல்பு வாழ்க்கையையும் அவர்களின் சிந்தனை சாரத்தையும் வாழ்க்கை நெறிகளையும் சிறப்பாக வடிக்க தவறிவிட்டோம் என்றுதான் நினைக்கின்றேன். ஆனாலும் வேற்று மொழி சிந்தனைகள், சித்தாந்தங்கள், கவிதைகள், கருப்பொருள்கள். அவர்களின் உள்ளக்கிடங்குகளை அற்புதமாக வெளிக்கொணர்ந்திருக்கின்றன. என்னற்ற கவிதைகள் கட்டுரைகள், மொழிப்பெயற்புக்களாக தமிழ்க்கூறும் நல்லுலகில் வலம் வந்துக்கொண்டிருகின்றன. நமது சிந்தனைகளை விட அவர்களின் சிந்தனை திறன் மேல் என்பதைவிட அவர்கள் இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் செயலிழந்து விட்டோம் என்பதே உண்மை.

நேரடியான மொழிச்சார்ந்த படைப்புக்கள் போன்று உயிரோட்டமான கற்பனைகளையும் சிந்தனைகளையும் சுமந்து நிற்கும். கவிஞனின் கவிதை மனதுக்கும் அதை படிக்கும் வாசகனின் பார்வைக்கும் ஒரு உயிர்ப்பிக்கும் பாலமாகவும் அதே சமயம் ஆத்மாபூர்வமான உணர்வுகளில் பிணைந்திருக்கும் அற்புத களமாக அந்த கவிஞனின் உள்ள கிடங்கு தெரியும்.

பொதுவாகவே மொழிப்பெயர்ப்பு கவிதைகள் என்றாலே அதிலே ஆழமான அர்த்தங்களும் ஈர்ப்பு தன்மையும் குறைந்துதான் காணப்படும். அதையும் மீறி சில மொழி பெயர்ப்புக்கவிதைகள் மன உணர்வுகளை அப்படியே கிளர்ச்சிக்கொள்ளும் வகையில் அற்புதமாக காட்டப்பட்டிருக்கின்றன. அது மொழிப்பெயர்ப்பா இல்லை தமிழ் மொழியில் படைக்கப்பட்ட நேரடி ஆக்கங்களா என்னுமளவுக்கு மிகச் சிறந்த வெளியிடாக காணப்படுகிறது.
உண்மையில் சொல்லப்போனால் அப்படி ஒரு சிறந்த படைப்புக்களுக்கு சொந்தக்காரர்தான் லெபனானில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த ஜிப்ரான். அவருடைய இரண்டு படைப்புக்களைதான் என்னால் படிக்க முடிந்தது. என் கண்களில் பட்ட அந்த அற்புத படைப்பிலக்கியங்களில் ஒவ்வொரு வார்த்தைகளும் கவிதைகளாகவும் ஒவ்வொரு கவிதையும் காவியங்களாகவும், மானுடத்தை உயிர்ப்பிக்கும் மன உணர்வுகளை கலை வடிவில் வெளிப்படுத்துகின்றன.

வானத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தை வார்த்தை கோவைகளாக வார்த்தெடுத்திருக்கின்றார் என்றால் அது மிகை அல்ல. ஒவ்வொரு வார்த்தையும் அற்புத துளிகளாக மன பூமியெங்கும் படர்ந்திருகின்றன.

நான் சில சமயங்களில் வியந்து படித்திருக்கின்றேன். அவருக்கு மட்டும் தத்துவங்கள் எல்லாம் எப்படி கவிதையாய் பூக்கிறது அவர் மனதில்யென்று?

ஜிப்ரானின் காதல் கடிதங்களின் தொகுப்பு.காதக் கடிதத்தை எப்படி கவிதை நடையில் உருமாற்றி உண்னத படைப்பாக நமக்கு தந்திருப்பதே போற்றுதல்குறிய ஒன்றாகவெ தெரிகிறது. இது கவிதையா இல்லை கடிதமா ?

இதோ சில தேன்துளிகள்.........

“அது ஒரு தெய்வீக நிலை.
தூரத்தில் இருப்பதை அருகே கொண்டு வருவது
மறைந்திருப்பதை வெளிப்படுதுவது
அனைத்தையும் ஜொலிக்கச் செய்வது”............

கடிதத்தில் கவிதை அன்றோ! கவிதையில் கடிதமா என்று தெரியவில்லை.

“சொர்க்கதின் அந்த நீலச்வாலை நிலை
மாற்றமில்லாதது. மாற்றும் வல்லமையுடையது.
மாறக்கூடியதல்ல, உத்தரவுகளை இடுவது
உத்தரவுகளுக்குப்பணிவதல்ல.”

..................தொடர்ந்து படியுங்கள்.

இரண்டு ஆத்மாக்களின் தமது ஸ்தூல வடிவில் கலந்து உறவாடியதன் சொல் வடிவமே ஜிப்ரானின் காதல் கடிதங்கள்.

“வலியின் விதைகள் தூவிய வடிவில்,
தனிமை நாற்று நட்டிருக்கும் வயலில்
பசியும் தாகமும் அறுவடை,
செய்யும் வயலின் கேலிப் பேச்சு
வளர்ந்து பயிராக முடியுமென்கிறாயா?”

எப்படிப்பட்ட கேலிப்பேச்சுக்கள் கூட சித்தாந்தங்களை சுமந்து நின்று கவிதையாய் வளம் பெருகிறது என்பதை நினைக்கும் போது மொழிப்பெயர்புக்கவிதைகளில் நமக்கும் பெரும் நாட்டம் ஏற்படுகிறது.

இன்றைய நூற்றாண்டு இலக்கியவாதிகளான பாரதி பாரதிதாசன் கண்ணதாசன் வைரமுத்து என்று வாலையடி வாலையாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் கவிப்பரப்பரைகள் இன்றளவு உயிர்ப்போடு கவிதைகளை படைத்திருந்தாலும் அவர்களின் கருத்துக்கள் உலக சமுதாயத்தை எட்டாமல் போனதற்கு மொழி பெயர்ப்பு இலக்கியம் நம்மிடம் வளராமல் போனதே அதற்கு காரணமாகும்

November 10, 2011

கடமை கன்னியம் கட்டுப்பாடுகடமை கன்னியம் கட்டுப்பாடு

மறைந்த மக்கள் திலகம் எம்ஜியாரின் தாரக மந்திரங்களில் ஒன்று. அவருடைய படங்களில் சமுக சீர்திருத்தங்களுக்கு நல்ல பண்புகூறுகளுக்கு முக்கியதுவம் தந்து, கதாபாத்திரங்களில் சிறந்த முன்னுதாரன மனிதனை காட்சிப்படுத்துவது அவரின் சித்தாந்தங்களில் ஒன்று.

ஒழுக்க சீலர்களாகவும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்ட மனிதர்களாகவும் நல்லதை செய்வதற்கு அல்லலை அறுக்க துணிந்த மனித பண்புகளை வெளிக்கொணர வேண்டும் என்பது மக்கள் திலகத்தின் தலையாய நோக்ககங்களில் ஒன்று. மது அருந்துவதும் வெண்சுருட்டு பிடிக்க கூடாது என்பதும் அவரின் கட்டுப்பாடுகளில் ஒன்று. இறுதிவரைக்கும் அந்த லச்சியங்களை உயர்த்திப்பிடித்த மனிதர் அவர். எத்தனையோ கோடி இளைஞர்களின் பகுத்தறிவு பாதைக்கு வழிகாட்டியவர். அவரைப் பார்த்து திருந்திய உள்ளங்களும் இல்லங்களும் நிறையவே இருக்கின்றன.

எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படிதான் வாழ வேண்டும் என்ற இலச்சிய நோக்கோடு மனிதன் வாழவேண்டும் என்பது நல்லோர்களின் ஆவா. தரமான நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதற்கு எவ்வளவு இலகுவாக இருக்கிறது? அதுவே கரடுமுரடான சாலைகளில் ஒடுவற்கு எவ்வளவு சிரமமான ஒன்றாக நமக்கு தெரிகிறது. வழிமுறைகளை நெறிபடுத்திய நல்ல இலக்குகள் நமது வாழ்க்கையில் இருந்தால் எவ்வளவு இன்பமயமாக இருக்கும் நமது வாழ்க்கை. ஆனால் கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளை தொலைத்த நமது இளைஞர்களின் வாழ்வு எப்படி இருக்கும்?

அன்றோறு நாள் நான் வாகனத்தில் பயணம் செய்துக்கொண்டிருந்த போது ஒரு முச்சந்தி சந்திப்பில் ஒரு வாகனத்தில் ஒருவனும் மற்றோருவன் மோட்டார் சைக்கலிலும் இருந்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். நானும் மற்ற வாகனத்திற்குதான் நிற்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சில வினாடி கடந்த பின்புதான் திமிர்பிடித்த தமிழர்கள் என்று உணர்ந்தேன். என்ன செய்வது கடமை கண்ணியம் கட்டுப்பாடு தெரியாத ஜென்மங்களிடம் பேசி என்ன பயன்? ரவுடி சிங்கங்கள் போலும்.

அதே போல் ஒரு நாள் சீனர் இணைய மையத்தில் நுளைந்து வலைத்தளத்தில் வலம் வந்த போது பக்கத்தில் அமர்ந்திருந்த நம்மின சிறுவர்களின் அர்சனை வார்த்தைகளை கேட்டக முடியாமல் அந்த இடத்தை விட்டே அகன்று விட்டேன். அப்படி ஒரு செழுமைத்தமிழ். எங்கே இருக்கிறது நம்மினத்திடம் கண்ணியம் கட்டுப்பாடு?

அடுத்த இனம் நம்மை எப்படி எடைப் போடுகிறது என்பது கூட சிலருக்கு தெரிவதில்லை. ஆணவம் திமிர் அகந்தை கொண்டு நடப்பது இப்பொழுது ஒரு பண்பாடாக தெரிகிறது. மற்ற இனம் எங்கே எப்பொழுது சந்தித்தாலும் கைகொடுத்து வணங்கி வாழ்த்திக்கொள்வது அவர்களை பண்பாட்டின் முதிர்ச்சியை காட்டுகிறது. அவர்களின் வாழ்வில் அமைதியையும் ஒரு நெகிழ்வையும் காட்டுகிறது. ஒடிவந்து உதவும் அவர்களின் பண்பை என்னவென்பது? ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? தமிழனை தமிழன் பார்த்தால் ஒரு விரோதியை பார்ப்பது போல் அல்லவா பார்கின்றோம்?

ஏன் இப்படி ஒரு அவலம்? சங்க இலக்கியங்களில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்ட தமிழர்களின் பண்பாடு எங்கே? வீரத்தின் விளை நிலம் என்று சொன்ன தமிழர்கள் இன்று போக்கிரிகளாகவும் பொரிக்கிகளாகவும் மாற யார் காரணம்?

தூய குழந்தைகள் பிறப்பதற்கும் வளர்வதற்கும் தூய்மையான மனம் கொண்ட பெற்றோர்கள் இருக்கவேண்டும். அன்பையும் பண்பையும் பயிர்யிட்டால் அதே அன்பும் பண்பும் கொண்ட மகட்ச் செல்வங்களை நாம் அறுவடை செய்ய முடியும். நாய்களுக்கு கூட நன் நடத்தை பயற்சி தருகிறார்கள் . ஆனால் உயிர்களை உற்பத்தி செய்து இந்த உலகத்தில் பவனிவர செய்யும் மனிதர்களுக்கு யார் தருகிறார்கள் ஊன் உயிர்ப்பயற்சி?

மனித பண்புகள் இல்லாத மரத்தமிழர்களை வளர்த்து விட்டதற்கு இந்த சமுகமும் சமயம் ஒரு காரணம் என்றால் மிகை அல்ல. எவ்வளவோ பெரிய விஞ்ஞான ததுவங்களை சாதாரண வாழ்க்கை கூறுகளோடு முடிச்சுபோடுவது ஒரு அறியாமையின் அங்கமாகத்தான் இருக்கவேண்டும். சமுக முறைகளையும் சமய நெறிகளையும் இணைக்கும் ஒரு பாலமாக ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். அந்த காலத்தில் சமுகத்தில் படித்தவர்களும் இருந்திருக்கின்றனர். பாமர்களும் இருந்திருக்கின்றனர். இரண்டுப் பிரிவினர்களுக்கும் ஏற்ற வகையில் இந்த தத்துவங்களை விளக்கி இருகின்றனர். ஆனால் காலப்போகிக்கில் தத்துவங்கள் மாற்றம் பெற்ற வேளையில் கருத்துக்கள் அர்த்தம் அற்று போகின்றன. நாளடைவில் சமுக இறுக்கம் தளர்ந்தும் சமய தத்துவ ஆளுமை குறைந்து போனதும் இன்றைய சமுக குழப்பங்களுக்கு காரணம் அதுவேயாகும், சமயத்தின் பெயரில் விஞ்ஞான கருத்துக்கள் மறைக்கப்பட்டதனால் இன்றைய தமிழ் இனம் தரமும் தகுதியும் இழந்து நிற்கிறது. தமிழ் இனம் கண்டுப்பிடித்த விஞ்ஞான கருத்துகள் கூட இன்றைய உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

மெஞ்ஞானம் விஞ்ஞானம் என்ற இரு கூறுகளிலிருந்து எந்த சமுகமும் சமயமும் விழகி நிற்க முடியாது. எந்த மெஞ்ஞானமும் விஞ்ஞானமாக மாறும் என்ற உண்மையை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. ஆனால் ஒரு சிலர் பகுத்தறிவு என்றவுடன் சமயத்திற்கு மாறுப்பட்டது. மெஞ்ஞானம் அங்கே நிற்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று வினா எழுப்புகின்றனர். சமயம் என்ற பெயரில் விஞ்ஞானத்தை மழுகடித்தது போல் பகுத்தறிவு என்ற பெயரில் சமயம் தரும் நற்பண்புகளை வெட்டி சாய்த்துவிடுகின்றனர். பிறகு எப்படி நற்பண்புகளுடைய சமுக மாந்தர்கள் பிறப்பார்கள்? பகுத்தறிவு என்பது எதையும் பகுத்து உணர்வது. நல்லது கெட்டதை தன் அறிவால் ஒரு மனிதன் உணர்ந்தாலே அதுவே பகுத்தறிவு ஆகும். எதையும் சிந்தித்து சீர்தூக்கும் மனிதனுக்கு பகுத்தறிவு கண்டிப்பாக இருக்கும்.

தீமைகளை தவிர்க்கும் மனிதன் நிச்சயமாக நல்ல மனிதனாகத்தான் இருப்பான். அதே போல் தவறான சமய சிந்தனை மற்றும் சமுக நெறிகளை பகுத்தறிவுக்கொண்டு சீர்தூக்கி பார்த்து நல்லவைகளை மட்டும் ஏற்றுக் கொண்டால் சிறந்த ஆன்மீகவாதிகளையும் சிறந்த சமுகவாதிகளையும் இந்த தமிழ் இனத்தில் எதிர்ப்பார்க்கலாம். ஆன்மீகம் என்பது ஆற்றல் மிக்கது. ஒவ்வொரு தமிழர்கள் அதை உணர்ந்தாலே இந்த சமுகம் உயர்வடையும்.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு காலத்தால் அழியாத அருந்தமிழ் பண்பாடு. அதை போற்றி வாழ்ந்தாலே, உயர் உச்சியில் நிற்கும் தமிழ் இனம் இந்த உலகிலே.