August 2, 2011

வட்டிப்பணம் - பாகம் 4மணி 1.00 am

உறங்கிக் கொண்டிருந்த இரவு விழித்துக் கொண்டது போலும், ஜெயத்தின் கடையின் முன் கூடி இருந்த கொடியவர்களால் அந்த இடம் அல்லோலப்பட்டுக் கிடந்தது. வெறிக் கொண்ட ரவுடிகளின் கூட்டம் மிகப்பெரிய உருவம் கொண்ட ராமை வெட்டி விழ்த்தி கூறுப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

தற்செயலாக அவ்விடத்தை கடந்து செல்ல நினைத்த சூரியாவின் நண்பர் எதோ ஒரு கூட்டம் ஏன் ஜெயத்தின் கடையின் முன் கூடி இருக்கிறது என்று நிதனிப்பதற்கு முன் சற்றென்று ஒரு இளைஞனின் வெட்டு கத்தி அவரின் காரை கீரிவிட்டிருந்தது. அவர்களின் ஒருவனையாவது தன் வாகனத்தால் மோதி தள்ளிவிடலாம் என்று நினைத்த சூரியாவின் நண்பர்.அது இயலாமல் போனதால்..விரு விரு வென்று வீடு சேர்ந்து தானும் ஒரு பாரங்கத்தியை எடுத்துக் கொண்டு சூரியாவிடம் நிகழ்ந்ததை சொல்லி வேகமாக சம்பவம் நிகழந்த இடத்திற்கு சென்றார்.

என்ன சொல்வது? ராம் சில மிருகங்களில் கொடுர செயலால் குற்றுயுரும் குழையுருமாக தரையில் சாய்ந்து கிடந்திருந்தார்..அதற்குள் சூரியாவும் அவர் நண்பர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்திருந்தனர்.

தன் அண்ண்ண் என்ன ஆனார்? என்று நினைத்து அவரை தேடிக் கொண்டிருந்த சூரியா “ எண்ண எங்க இருகிங்க நீங்க எங்க இருக்கிங்க” என்று அலறிக்கொண்டிருந்த சூரியாவின் கைப்பேசியில் ஒருவகையாக ஜெயத்தின் தொடர்பு கிடைத்தது.

“ நாங்கயேல்லாம் உங்க கடையின் முன்னாலேதான் இருக்கிறோம் நீங்க எங்க இருகிங்க..என்ன ஆச்சி...சரி சரி சீக்கரம் வாங்க” என்று சொல்லி ஒரு நிம்மதி பெரும் மூச்சு விட்டார்.

ஏதோ இருளில் கிடந்த அந்த நகரம் சற்று நேரம் நிலா வெளிச்சத்தில் குளிரிக்காய்ந்துக் கொண்டிருந்தது. அந்த நிலவுக்கு என்ன ஆசையோ இன்னும் என்னதான் நடக்கிறது என்று பார்க்க தோன்றி இருக்கவேண்டும். இன்னும் வெளிச்சத்தை சற்று பெரிதாக்கிக் கொண்டிருந்தது. அமைதிக் கொண்டிருந்த காற்று, அங்குள்ள வெப்பத்தை தனிப்பதற்கு குளிர்ந்த காற்றை வீசிக்கொண்டிருந்தது.

மணி1.15am

இருளில் இருந்து ஒர் உருவம் வெளிப்பட்டது. முகம் வெளிரிப்போய்யிருந்தது.கைகளில் ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. கிழே கிடந்த ராமை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்துவிட்டார் ஜெயம். “யாருடா அவனுங்க? யா இவரை வெட்டிப்போட்டனுங்க” என்று தன் தம்பியை அனைத்துக் கொண்டார். ஏன் எதற்கு என்று தெரியும் முன்னே நிகழ்ந்துவிட்ட அந்த சோக நிகழ்வுகள், அவரின் மனதை எப்படி பாதித்திருக்கும். சற்று முன் தன்னிடம் அளாவளாவிக் கொண்டிருந்த ராம் ஏன் இப்படி விழ்ந்துக்கிடக்கிறார்?

உணர்ச்சி பெருக்கால் ஜெயத்தின் மனம் விம்மிக் கொண்டிருந்தது. கண்களிருந்து விழ்ந்துக் கொண்டிருந்த கண்ணிர் துளிகளை துடைத்துக் கொண்டு ராமை பார்த்தார் ஜெயம்.
மரண வேதனையில் முணகிக் கொண்டிருந்த ராமை சூரியா இருக்கரங் கொண்டு தூக்கி தன்னுடைய வாகனத்தில் அமர்த்த நினைத்த சூரியாவில் முடியவில்லை. பெரும் உருவம் கொண்ட ராமை எப்படிதான் தூக்கி வாகனத்தில் அமர வைப்பது. நண்பர்களின் உதவிக் கொண்டு அவரை வாகனத்தில் கிடத்திய போது பெரும் மலையை அவரின் வாகனத்தில் தினித்தது போல் இருந்தது. வெட்டுப்பட்ட ஒவ்வொரு கைகளும் பெருத்த பனுனைபோல் ஊதி பெருத்திருந்தது. கொந்திக்கிடந்த கைகளிலும் அவரின் உடல் முழுவதும் எதோ அரிசியை நிரப்பிய சாக்கு மூட்டைகளை இரண்டாக வெட்டினால் எப்படி வெடித்துக் கிடக்குமோ அப்படி அவரின் உடம்பு வெட்டுக்காயங்களால் பிளந்துக்கிடந்தன.

ராமை தொட்டுத் தூக்கிய சூரியா தனது விரல்கள் ராமின் பிடறிக்குள் புகுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். அங்கு அங்கு ரத்த நாளங்கள் வெடித்திருந்தன.அதில் இருந்து வழிந்தோடிய குறுதி, அவர் பிழைப்பதற்கு சாத்தியம் இல்லை என்று பறைச்சாற்றியது.
“இறைவா! என்ன கொடுமை இது” சற்றுமுன் வரை நன்றாக இருந்த மனிதனை இப்படியா உயிருக்கு போராடவைப்பது?

வாழ்க்கை ஒரு கானல் நீர் என்பது எவ்வளவு உண்மை. திடிர் திடிர் என்று தாக்கும் வாழ்க்கை நிகழ்வுகள். மனிதனை எப்படி குழம்பச்செய்கிறது? விதவிதமான பிரச்சனைகள் புது புது பிம்பம் எடுத்து மனிதனின் காலடியில் எப்படி வந்து நிற்கிறது?
சற்று முன் வரை அசைக்கமுடியாத ஆலமரமாய் சுற்றுத்திரிந்த ராம் நம் கண்முன்ணே விழ்ந்துக் கிடக்கும் நெடுமரமாய் சாய்ந்துக் கிடக்கின்றார். அந்தொ! என்ன கொடுமை.? மனிதனின் நிலமை இதுவென்றால் வாழ்க்கையின் நீதிதான் என்ன?

மணி1.30am

ஒரு மலையை சுமந்துக் கொண்டு சூரியாவின் கார் அதிவேகமாய் பெதாலிங் ஜெயாவை கடந்துக் கொண்டிருந்தது. ராமின் ரத்த வெள்ளத்தில் சூரியாவின் கார் இப்பொழுது மிதந்துக் கொண்டிருந்தது. சில வாகனங்கள் காற்றை கிழித்துக் கொண்டு வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டு அவர்களின் வாகனத்தை பின் தொடர்ந்துக் கொண்டிருந்தன.
Post a Comment