August 24, 2011

முள்வேலிக்குள் முகச்சித்திரங்கள்


வேடிக்கை மனிதராய்
வேதனைகளை சுமந்து
வாடிக்கையாய் போனது
எம்மின வாழ்க்கை

முகம் தெரியாத
மலேசிய நாட்டில்
முழு விதைகள் இட்டது
எம்மினம்
அடந்த காட்டில்
ஆலமரமாய்
முளைத்தது எம்மின
வேர்கள்

வெளிச்சத்தை
தேடிவந்தவர்கள்
இருட்டினில்
ஓய்ந்து போனார்கள்

எங்களின்
முன்னோர்களின் வாழ்க்கை
மூடு மந்திரமாய் தோட்டத்தில்
முடங்கிபோனது.

ரப்பர் மர காடுகளின்
ரத்தம் போல
உறுச்சப்பட்டது
எங்களின் ரத்தம்

உரமிட்டு
வளர்ந்தது அல்ல
இந்த மரங்கள்
எங்களின்
வியர்வையால்
துளியால் எழுந்தது.

ஒவ்வொரு மரத்தின்
வேர்களில்
எத்தனை மங்கமாக்கள்
மறைந்திருப்பார்கள்?

ஒவ்வொரு இலைகளில்
எத்தனை குப்புச் சாமிகளின்
உதிர்ந்திருகின்றார்களோ!

தீம்பார் நிரைகளில்
எத்தனை கருப்புச் சாமிகளின்
கல்லரைகள் கரைந்திருக்கிறதோ?

இங்கு
மரங்கள் வளர்ந்த அளவுக்கு
எங்களின் வாழ்க்கை உயரவில்லை
நிலங்கள் உயர்ந்த அளவுக்கு
எங்கள் நெஞ்சங்கள் குளிரவில்லை
என்றும்
கரைகளை தொடாத
கலங்கள் போல
கலங்கரை
விளக்குகளை தேடுகிறோம்

கருப்பு தமிழர்களென்று
களங்கத்தோடு கரைக்காண
விளக்கவுரையுடன் முகவரி
எழுதும் எங்கள் நிறம்

தீயிட்டு
கொளுத்தப்பட்டது அல்ல
எம்மின தேகம்
சுட்டும் ஒளியில்
துயிலாமல்
உழைத்த வர்கத்தின்
வேதனை குறியீடுகள்

வேடிக்கை மனிதராய்
இருந்துவிட்டால்
வேதனைதான்
வேள்விப்பாதைகள்
சாதனைகளை நாடிவந்து
சாக்குழியில் விழ்ந்து
போனவர்களா நாம்?

August 18, 2011

வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க வெகுதூரமில்லை.மனித வாழ்க்கையில் பெரும்வாரியான நிகழ்வு பணத்தை தேடுதல் அல்லது அதை பாதுகாத்தல் என்ற நிகழ்ச்சி நிரலிலே முடிவடைந்துவிடுகிறது. நமது வாழ்க்கை பொருளாதார அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது, (Objectetive). பண்பு வாழ்வா? இல்லை பண வாழ்வா என்றால் பணம்தான் பிரதானம் என்பார்கள். பணத்திற்குக்கூட ஒரு கடவுளை படைத்த பண்பாளர்கள் நாம்.

இந்த உலகில் இரவும் பகலும் மாறி மாறி நிகழ்கின்றன. இரவு என்ற ஒரு தன்மை உண்டா? அல்லது பகல் என்ற ஒரு தன்மை உண்டா?
இரவு என்றால் சூரியன் மறைந்த பின் வரும். சூரியன் எழுந்த பின் வருவதை பகல் என்கிறார்கள். “சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்” என்கிறார்கள். இவ்விரண்டுக்கும் என்ன வேறுபாடு?

உண்மையில் சூரியன் மறைவதும் இல்லை எழுவதும் இல்லை.அது ஒரு நிலையான பிம்பம். இந்த உலகம் இரவு பகல் என்று கூறுவதை விட ஒளியற்ற தன்மை. இருள்ளற்ற தன்மை என்றே கூறவேண்டும்.அதை போன்றுதான் இந்த மனித வாழ்க்கை மாய இருளிலே ஒளி அற்ற தன்மையில் வாழும் போது பிரச்சனை விஸ்வரூபம் தாங்கி வருகிறது. அறிவு என்பது ஒளியுள்ள நிலைக்கு மாறும் போது ஞானம் என்னும் அல்லது வெற்றி மகுடம் ஒளிவெள்ளமாய் ஓடிவருகிறது. வெற்றி என்பது எங்கும் மறைந்திருக்கவில்லை. மறைப்பொருளாகவும் இல்லை. அது எங்கும் நிறைந்திருக்கும் இறைச் சக்திதான். நாம் அதை தேடி செல்வதில்லை. வெற்றியை அலைந்து திரிந்து அனைத்துக்கொள்பவர்களை சூரிய ஒளியை போல் பிரகசிக்கிறார்கள். வெற்றி என்பது ஒரு தாரக மந்திரம். சொல்லச்சொல்ல தானாகவே உருவேற்றிக்கொள்ளும். உழைப்பவர்களுக்கு மட்டும்.

அன்று நாடோடிகளாக அலைந்து திரிந்தவர்கள் இன்றைய ஐரோப்பியர்கள். சில நூற்றாண்டுக்கு முன் ஏழ்மையில் வாழ்ந்த வெள்ளையர்கள் இன்று செல்வ செழிப்பில் இருப்பதற்கு அவர்களின் அயரா உழைப்பு மட்டும்தான். செல்வத்தை தேடி திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்று வார்தையில் மட்டும் நாம் சொல்லிக்கொண்டிருக்க அவர்கள் கடல் கடந்து சென்று அடைந்த அச்செல்வத்தை கொண்டு இன்று உலகில் மகா பணக்கர்ர்களாக இருப்பதற்கு அவர்களின் செயலின் வெற்றிதான்.

அவர்களின் முன்னோர்கள் எடுத்த முடிவுகள், அவர்கள் பட்ட துயரங்கள் இன்று அவர்களின் சந்ததியினர் செல்வ செழிப்பில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

அன்று அந்த ஐரோப்பியர்களின் துணிகரமான முடிவுகள். அலையை கடந்து புதிய பாதையை கண்டுபிடிக்கவேண்டும் என்ற தன்முனைப்புதான் அவர்களை செல்வம் சேர்க்கும் நிலைக்கு உயர்த்தியது. செல்வத்தை தேடி அலைந்ததானால் சாதனையை படைக்க முடிந்தது. அன்று அவர்கள் விதைத்த விதை விரிச்சமாய் வளர்ந்திருக்கிறது. முயற்சியும் உழைப்பும் உரமாய் இட்டு எதையும் சாதிக்கவேண்டும் என்ற முணைப்போடு செயலில் இறங்கி இன்றும் வெற்றி நடைப்போடுகின்றனர்.

நம்மைப்போன்று அவர்களின் மூதாதையர்கள் தயங்கி இருந்தால். அல்லது இஸ்லாமியர்களின் ஆளுமையில் மனம் தளர்ந்திருந்தால் அவர்களும் இன்று அடிமைப்பட்ட இனமாகதான் வாழ்ந்திருப்பார்கள்.

சரித்திரம்கூட இன்று மாறியிருக்கும். அன்று அவர்கள் எடுத்த முடிவுகள் இன்று உலக வரைப்படத்தை மாற்றி இருக்கிறது. உலக பண்பாடுகளை மாற்றி இருக்கிறது. ஏன் தனிமனித நிலைப்பாடுகள் கூட மாறி இருக்கிறது. அதுதான் முடிவுகளின் வலிமை. இன்று நாம் எடுக்கும் முடிவுகள் நாளை நமது தலைமுறைகளின் முதல் அடியா? இல்லை முதல் படியா என்பதை உணர்ந்து பார்த்தால் உழைப்பின் வெற்றியை அவர்களுக்கு சொந்தமாக்கவேண்டும்.

வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க வெகுதூரமில்லை. வெற்றி என்பது எங்கும் மறைந்திருக்கவில்லை. அது திடமான நமது நெஞ்சினில்தான் இருக்கிறது.


August 5, 2011

தேவைகளும் தேடல்களும்தேவைகளும், தேடல்களும்தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை முழுமை அடையச் செய்கிறது. தேடல்கள் மட்டும் இல்லை என்றால் வாழ்க்கையில் மனிதன் நடைப்பிணமாகதான் வாழ்வான். அன்புத்தேடலில் இருந்து ஆசைத் தேடல் வரைக்கு, பகுத்தறிவு தேடலில் இருந்து பணத்தேடல் வரைக்கும் மனிதனின் தேடல் உண்டு, ஒருவகையில் இந்த பணத்தேடல்தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் முழுமை அடைய மறுக்கிறது.

மனிதனின் சொல்லென்னாத துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் பணத்தின் பங்கு அலதியானது. பணம் பணம் பணம் இந்த பணத்தேடலில் பெரும்பான்மையான நமது வாழ்க்கை முடிந்துவிடுகிறது. வாழ்க்கைக்காக மனிதன் வாழ்கிறன.இல்லை இந்த பணத்திற்காக மனிதன் வாழ்க்கிறன என்றால் பணம்தான் மனிதனின் அடைப்படை தேவையாகிவிட்டது.இதற்காத்தனே மனிதன் உழைக்கிறான்.உண்கிறான்?

பணத்தேவைகள் மனிதனை சில தேடல்களுக்கு இரையாக்கிவிடுகிறது. ஓடி ஓடி மாடாய் உழைத்து மனிதன் தன்னுடைய முதுகெலும்பை தேய்த்துவிடுகிறான். பொதுவாக நாம் உடல் உழைப்பயை நம்பி இயங்கும் ஒரு வர்க்கம்தான்.அறிவுக்கு நாம் எங்கே வேலைக் கொடுக்கிறோம்.நமது மூதையர்களில் உழைப்பதற்கென்றே கடல் கடந்து வந்து இங்கு கடுமையாக உழைத்தார்கள்.ஆனாலும் அவர்களால் ஒரு பணக்கார சமுகத்தை உருவாக்கமுடிந்ததா? உழைப்பு மட்டும் ஒரு மனிதன் உயர்ந்தும் என்றால் ஏன் நமது சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை? உழைப்புக்கேற்ற அறிவும் நம்மிடம் இல்லை என்றுதான் கூறவேண்டும். காலத்திற்கேற்ற மாற்றத்தை நாம் நமது சமுதாயத்தில் கொண்டுவர முடியவில்லை என்றால் நாம் என்றும் அடிமை சமுதாயமாகத் திகழமுடியும்.
தேவைகள் தேடல்கள் அடிப்படையில் ஒரு மன மாற்றத்தை இனப்பண்புகளையும் உருவாக்கவேண்டும். எந்த சமுதாயம் பிறந்தவுடன் சிறந்த பண்புநலன்களை கொண்டுவிடாது. அவர்களின் சமுக கடப்பாடுகளும் மத கேட்ப்பாடுகளும் தனி மனித சிந்தனையை உரம் போட்டு வளர்த்துவிடுகின்றன.

கைக்கட்டி வாழ்வதே வாழ்க்கை. டைக்கட்டி நான் வாழமாட்டேன் என்று சொல்லும் நண்பர்களும் நிறைய உண்டு. கூலிவேலைதான் அவர்களுக்கு உகந்தது. கோழி மேய்த்தாலும் கும்பனியில் மேய்க்கவேண்டும் என்று சொல்லும் நண்பர்களும் நம்மிடையே நிறைய உண்டு. பணம் என்பது சுலபமான வழியில் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

பணம் சம்பாதிப்பது என்பது அவ்வளவு இலகுவான வழி அல்ல. அது ஒரு கரடுமுரடான பாதை. சம்பாதித்த பணத்தை பாதுக்காப்பது என்பது அதைவிட கொடுமையானது. சிலர் பேர் பணத்தை Dirty money என்கிறார்கள். ஏன் பணம் பத்தும் செய்யும். நாம் எப்படிசொல்ல முடியும் பணக்கார்கள் எல்லாம் தவறான முறையில்தான் சம்பாதித்திருப்பார்கள் என்று? எவ்வளவோ பேர் நேர்மையான மனிதர்களாகவும் அன்பும் பண்பும் கருணையும் கொண்ட மனிதர்களாக இருகின்றனர்.

நம்மை போல் வந்தவர்கள்தான் சீனர்கள்.ஆனால் அவர்கள் நம்மைவிட பணபலத்தில் எங்கோ உயர்ந்து நிற்கிறார்கள். சரியான திட்டமிடல் இருந்தால் நாமும் பணபலத்தில் நிமிர்ந்து நிற்கலாம். பணத்தை பெருக்குவதற்கென்று பல வழிமுறைகள் உண்டு. பணத்தை சார்ந்த சிந்தனை உருவாக்கங்கள் தமிழர்களிடம் மிகவும் குறைந்துதான் காணப்படுகிறது.

தமிழர்கள் மதிக்கப்படும் சமுதாயமாக மாறவேண்டும் என்றால் நாம் பணக்கார சமுதாயமாக மாறவேண்டு, மலேசிய சொத்து விகித்தில் ஏன் நாம் இன்னும் 1 சதவித்தில் இருக்க்கிறோம்?. நம்மிடம் பணம் இல்லை. ஒரு தனி மனிதனிடம் ஒரு ஆயிரம் வெள்ளியை புரட்டுவதற்கு கூட நம்மால் இயலவில்லை என்றால் எப்படி நாம் சொத்துடமை சமுதாயமாக மாறமுடியும்?.

நமது சித்தானந்தங்கள் பணத்திற்கு எதிர்மறையான சிந்தனைகளை கொண்டுள்ளன. வாழ்க்கையை ஒரு மாயையாக சித்தரித்து செல்வத்தேடல்களை தேவையில்ல ஒன்றாக்கிவிட்டது. ஆனால் அவ்வப்பொழுது கால மாற்றங்கள் மனிதனின் தேவைகளை அறிந்து பலற்பல கோட்ப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. பணம் பந்தியிலே குணம் குப்பையில், திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு. அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லாருக்கும் இவ்வுலகம் இல்லை என்பது எல்லாம் கால மாற்றத்தால் விளைந்த கருபொருள்கள்.

பணத் தேடல் என்பது வியபாரமோ அல்லது தொழில்துறையை சார்ந்த்து மட்டும் அல்ல. மூளைகளை கசக்கி பிழிந்து சில கணித தத்துவங்களை புரிந்துக் கொண்டால் பெரும் பணத்தை சம்பாதிப்பதற்கு வழி வகுத்துவிடும்.

இன்றைய நவீன உலகில் பல தத்துவங்களில் பல்வேறு கோட்ப்பாட்டுகளில் இயங்கி வரும் வியபார நுணுக்கங்கள் மூன்று பிரிவுகளாக பிரித்துவிடலாம். ஒன்று மரபுச்சார்ந்த தொழிதுறைகள். சங்கிலிதொடர் வியபார தளங்கள் மற்றும் நேரடி விற்பனை துறை. ஒரு சராசரி சம்பாரிக்கும் மனிதனின் செலவு செய்யும் இடமும் இவ்மூன்றாகத்தான் இருக்கும். மற்றவை பணம் கொட்டிக்கிடக்கும் துறையாக இருந்தாலும் அதிவிரைவாக பணத்தை பெருக்கும் முறையில் தலைசிறந்து விளங்குகிறது நேரடி விற்பனை துறை.

நேரடி விற்பனைத் துறையில் பெரிய பெரிய திமிங்கள நிறுவன்ங்கள் உலா வருவதற்கு காரணம் கோடிக்கணக்கில் பணம் கொட்டிக் கிடக்கிறது. அதி விரைவாக அதிலே பணத்தை சம்பாதித்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கை. பணத்தை பெருக்கும் முறையில் அதிகப்படுத்தும் ஒரே திட்டம் இந்த நேரடி விற்பனை துறைதான். சில வருடங்களில் பெரும் செல்வந்தர்களாக உருவெடுக்க முடியும் என்பது இந்த நேரடி விற்பனை துறை நிறுபித்துள்ளது.

August 4, 2011

வாழ்வை துவங்கு. ஒளிமயமான வாழ்வு வெகுதூரமில்லை.


வாழ்வை துவங்கு. ஒளிமயமான வாழ்வு வெகுதூரமில்லை.

ஒவ்வொரு மனிதனின் உள்ளோயும் மனோ சக்தி என்னும் மகா சக்தி உறங்க்கொண்டிருக்கிறது. மனிதனைக் காட்டிலும் சக்திவாய்ந்த ஜீவன் இப்பூமியில் இல்லை.அவன் ஒருவனே உலகத்தில் தெய்வமாக மதிக்கப்பெருகிறான். சுயநலக்காரன் அன்று. மனிதத்தன்மையை எவன் ஒருவன் வென்றுவிடுகிறானோ அவனே தெய்வமாக விளங்குவன். அவன் தெய்வமாக விளங்ககூடிய ஆத்ம பலத்தை பெறும்பொழுது உலகத்தை மாற்றி அமைக்க கூடிய சக்தியை பெறுகிறன். எண்ணங்கள் ஒருமைப்படும் போது அவன் சொல் செயல் சக்தி பெறுகிறது.

மனித வாழ்வின் வெற்றி எங்கிருந்து முளைக்கிறது என்று விஞ்ஞானிகள் மெய்ஞானிகளும் தேடிக்கொண்டிருந்தனர் வெற்றிப்பெற்ற.ஒவ்வொரு மனிதனின் அந்தரங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தனர். அவனின் சொல் செயல் சிந்தனை எல்லாம் ஆராய்ந்தார்கள். அவனின் வெற்றி எங்கு மறைந்திருக்கிறது என்று அவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.முடிவிலே இவ்வளவு காலம் அவர்கள் ஆராய்ந்த ஒரு விசயத்தை தேடிக்கண்டுப்பிடித்துவிட்டார்கள்.மனிதனுக்கு வெற்றியை தந்துக்கொண்டிருக்கும் ஒரு அற்புத பொக்கிஷத்தை திறந்துப் பார்த்தார்கள். என்ன ஆச்சிரியம் .அதில் இருந்தது வேறொன்றுமில்லை. அவனின் தூய எண்ணம்தான்.ஒவ்வொரு மனிதனின் வெற்றித் தோல்விக்கு அவனின் எண்ணம்தான் காரணம். மனதைப்பக்குவப்படுத்துவதிலே வாழ்க்கையின் வாழ்க்கையின் வெற்றி எல்லாம் அடங்கிக் கிடக்கிறது.

நல்ல எண்ணங்கள் நல்ல மாற்றத்தை தரும். சீர்க்கெட்ட எண்ணங்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பைதான் தரும். நமது எண்ணங்களை முதலில் ஒருமைப்படுத்த நாம் பயின்று கொள்ளவேண்டும்.

எண்ணமே, வானில் எழுப்பப்படும் அந்த மனக்கோட்டைகளை இறுதியாகப் பூமியிலே வந்து உறுதியாக அமரும். எண்ணம் போல் வாழ்வு.எதை நினைக்கிறோமோ அதை அடைகின்றோம். உங்களின் நல்ல எண்ணங்களை நீருற்றி வளருங்கள் கனி கொடுப்பதற்கு அது எப்போது தயங்குவதில்லை.

எண்ணித்து துணிக கருமம்.துணிந்தபின் எண்ணுவது இழுக்கு. நல்ல தீர்மானங்களை கொண்டிருக்கிறானே அவனே சரியாக அமைந்த மனிதன். எத்தனை முறை வேண்டுமானாலும் யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தீர்மானித்துவிட்டால் அது இறுதி முறையாக இருக்கட்டும்.

நினைத்த விஷயத்தை உடனே செயல்படுத்தி, விளைவுகளுக்கு வெகு சாமர்த்தியமாக தீர்வு காண்பது தொடர் வெற்றிக்கான மணி மந்திரம்.

வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காணவேண்டும் என்று எண்ணுபவன் அதற்குரிய மனவுறுதியையும் அடையவேண்டும். மனவுறுதியுடன் செயற்ப்படும்போது சோம்பல் தானாகவே இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். மனவுறுதியும் எண்ண ஒறுமைப்பாடும் வெற்றிக்கு மிக முக்கியம்.

எண்ணத்தை எப்படி சக்தியாக மாற்றுவது எனும் வழிதெரிந்தால்போது வெற்றிகள் தானாக வந்து சேரும்.பெரும் செயல்கள் பலத்தால் செயப்படவில்லை.விடா முயற்சியால்தான் ஆற்றப்பட்டிருக்கின்றன.முயற்சியில் வெற்றி பெற வேண்டுமாயின் துன்பங்களையும், எதிர்புகளையும், தடைகளையும், தோல்விகளையும் நாம் வெற்றி கொள்ளவேண்டும். மெய்வருத்தாமல் எதையும் நாம் சாதிக்கமுடியாது.

மனதின் வலிமை என்பது இந்த வைராக்கியத்தில்தான் இருக்கிறது.வைராக்கிய சித்தமே எதற்கும் உற்ற துணையாக, உற்ற சக்தியாக விளங்கும்.

எண்ணமே வாழ்வை உருவாக்கிறது அந்த எண்ணத்தின் தன்மைகளை அறிந்து, அதன் சக்திகளைப் பெருகுமாறு செய்து கொண்டால், மனமும் உயரும்,வாழ்க்கையும் வளமாகும்.

August 2, 2011

போதனைதான் வாழ்க்கைப்பாடம்

வேதனை தீயில்
வீழ்ந்துவிடாதே
வேடிக்கை மனிதனாய்
வாழ்ந்து விடாதே!

சோதனை எது வந்தாலும்
சோர்ந்துவிடாதே - தம்பி
சாதனை நமதென்று
சரித்திரம் படைத்திடு தம்பி!

போதனைதான் வாழ்க்கைப்பாடம்
போற்றிடவேண்டும் அதை நம்பி
தகர்த்திட வேண்டும் தடைகளை - தம்பி
தன்மானசிங்கமாய் ஜெயித்திடவேண்டும்

வட்டிப்பணம் - பாகம் 4மணி 1.00 am

உறங்கிக் கொண்டிருந்த இரவு விழித்துக் கொண்டது போலும், ஜெயத்தின் கடையின் முன் கூடி இருந்த கொடியவர்களால் அந்த இடம் அல்லோலப்பட்டுக் கிடந்தது. வெறிக் கொண்ட ரவுடிகளின் கூட்டம் மிகப்பெரிய உருவம் கொண்ட ராமை வெட்டி விழ்த்தி கூறுப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

தற்செயலாக அவ்விடத்தை கடந்து செல்ல நினைத்த சூரியாவின் நண்பர் எதோ ஒரு கூட்டம் ஏன் ஜெயத்தின் கடையின் முன் கூடி இருக்கிறது என்று நிதனிப்பதற்கு முன் சற்றென்று ஒரு இளைஞனின் வெட்டு கத்தி அவரின் காரை கீரிவிட்டிருந்தது. அவர்களின் ஒருவனையாவது தன் வாகனத்தால் மோதி தள்ளிவிடலாம் என்று நினைத்த சூரியாவின் நண்பர்.அது இயலாமல் போனதால்..விரு விரு வென்று வீடு சேர்ந்து தானும் ஒரு பாரங்கத்தியை எடுத்துக் கொண்டு சூரியாவிடம் நிகழ்ந்ததை சொல்லி வேகமாக சம்பவம் நிகழந்த இடத்திற்கு சென்றார்.

என்ன சொல்வது? ராம் சில மிருகங்களில் கொடுர செயலால் குற்றுயுரும் குழையுருமாக தரையில் சாய்ந்து கிடந்திருந்தார்..அதற்குள் சூரியாவும் அவர் நண்பர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்திருந்தனர்.

தன் அண்ண்ண் என்ன ஆனார்? என்று நினைத்து அவரை தேடிக் கொண்டிருந்த சூரியா “ எண்ண எங்க இருகிங்க நீங்க எங்க இருக்கிங்க” என்று அலறிக்கொண்டிருந்த சூரியாவின் கைப்பேசியில் ஒருவகையாக ஜெயத்தின் தொடர்பு கிடைத்தது.

“ நாங்கயேல்லாம் உங்க கடையின் முன்னாலேதான் இருக்கிறோம் நீங்க எங்க இருகிங்க..என்ன ஆச்சி...சரி சரி சீக்கரம் வாங்க” என்று சொல்லி ஒரு நிம்மதி பெரும் மூச்சு விட்டார்.

ஏதோ இருளில் கிடந்த அந்த நகரம் சற்று நேரம் நிலா வெளிச்சத்தில் குளிரிக்காய்ந்துக் கொண்டிருந்தது. அந்த நிலவுக்கு என்ன ஆசையோ இன்னும் என்னதான் நடக்கிறது என்று பார்க்க தோன்றி இருக்கவேண்டும். இன்னும் வெளிச்சத்தை சற்று பெரிதாக்கிக் கொண்டிருந்தது. அமைதிக் கொண்டிருந்த காற்று, அங்குள்ள வெப்பத்தை தனிப்பதற்கு குளிர்ந்த காற்றை வீசிக்கொண்டிருந்தது.

மணி1.15am

இருளில் இருந்து ஒர் உருவம் வெளிப்பட்டது. முகம் வெளிரிப்போய்யிருந்தது.கைகளில் ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. கிழே கிடந்த ராமை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்துவிட்டார் ஜெயம். “யாருடா அவனுங்க? யா இவரை வெட்டிப்போட்டனுங்க” என்று தன் தம்பியை அனைத்துக் கொண்டார். ஏன் எதற்கு என்று தெரியும் முன்னே நிகழ்ந்துவிட்ட அந்த சோக நிகழ்வுகள், அவரின் மனதை எப்படி பாதித்திருக்கும். சற்று முன் தன்னிடம் அளாவளாவிக் கொண்டிருந்த ராம் ஏன் இப்படி விழ்ந்துக்கிடக்கிறார்?

உணர்ச்சி பெருக்கால் ஜெயத்தின் மனம் விம்மிக் கொண்டிருந்தது. கண்களிருந்து விழ்ந்துக் கொண்டிருந்த கண்ணிர் துளிகளை துடைத்துக் கொண்டு ராமை பார்த்தார் ஜெயம்.
மரண வேதனையில் முணகிக் கொண்டிருந்த ராமை சூரியா இருக்கரங் கொண்டு தூக்கி தன்னுடைய வாகனத்தில் அமர்த்த நினைத்த சூரியாவில் முடியவில்லை. பெரும் உருவம் கொண்ட ராமை எப்படிதான் தூக்கி வாகனத்தில் அமர வைப்பது. நண்பர்களின் உதவிக் கொண்டு அவரை வாகனத்தில் கிடத்திய போது பெரும் மலையை அவரின் வாகனத்தில் தினித்தது போல் இருந்தது. வெட்டுப்பட்ட ஒவ்வொரு கைகளும் பெருத்த பனுனைபோல் ஊதி பெருத்திருந்தது. கொந்திக்கிடந்த கைகளிலும் அவரின் உடல் முழுவதும் எதோ அரிசியை நிரப்பிய சாக்கு மூட்டைகளை இரண்டாக வெட்டினால் எப்படி வெடித்துக் கிடக்குமோ அப்படி அவரின் உடம்பு வெட்டுக்காயங்களால் பிளந்துக்கிடந்தன.

ராமை தொட்டுத் தூக்கிய சூரியா தனது விரல்கள் ராமின் பிடறிக்குள் புகுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். அங்கு அங்கு ரத்த நாளங்கள் வெடித்திருந்தன.அதில் இருந்து வழிந்தோடிய குறுதி, அவர் பிழைப்பதற்கு சாத்தியம் இல்லை என்று பறைச்சாற்றியது.
“இறைவா! என்ன கொடுமை இது” சற்றுமுன் வரை நன்றாக இருந்த மனிதனை இப்படியா உயிருக்கு போராடவைப்பது?

வாழ்க்கை ஒரு கானல் நீர் என்பது எவ்வளவு உண்மை. திடிர் திடிர் என்று தாக்கும் வாழ்க்கை நிகழ்வுகள். மனிதனை எப்படி குழம்பச்செய்கிறது? விதவிதமான பிரச்சனைகள் புது புது பிம்பம் எடுத்து மனிதனின் காலடியில் எப்படி வந்து நிற்கிறது?
சற்று முன் வரை அசைக்கமுடியாத ஆலமரமாய் சுற்றுத்திரிந்த ராம் நம் கண்முன்ணே விழ்ந்துக் கிடக்கும் நெடுமரமாய் சாய்ந்துக் கிடக்கின்றார். அந்தொ! என்ன கொடுமை.? மனிதனின் நிலமை இதுவென்றால் வாழ்க்கையின் நீதிதான் என்ன?

மணி1.30am

ஒரு மலையை சுமந்துக் கொண்டு சூரியாவின் கார் அதிவேகமாய் பெதாலிங் ஜெயாவை கடந்துக் கொண்டிருந்தது. ராமின் ரத்த வெள்ளத்தில் சூரியாவின் கார் இப்பொழுது மிதந்துக் கொண்டிருந்தது. சில வாகனங்கள் காற்றை கிழித்துக் கொண்டு வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டு அவர்களின் வாகனத்தை பின் தொடர்ந்துக் கொண்டிருந்தன.