July 30, 2011

தமிழால் தாழ்ந்தோர் எவருமில்லை


எம்மொழி தமிழ் மொழி
ஏற்றம்தரும் தாய்மொழி
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்று முழங்குவோம் !

நம் மொழி தமிழ் மொழி
நாளும் வளரும் செம்மொழி
தரணியெங்கும் செழித்தோங்கும்
தமிழ் என்று முழங்குவோம்

ஓங்குக தமிழ்! ஒளிர்க தமிழ்!
ஒருகுடையின்கிழ் தழைத்தோங்குக!
தமிழ் உணர்வுக்கொண்டு தடைகளை
தகர்த்தெறி ! தன்மானத்தமிழ் என்று முழங்குக!

விஞ்ஞானத்தில் வீருக்கொள்க! தமிழ்மெஞ்
ஞான வாழ்வில் வெற்றிக்கண்டு -அஞ்
ஞானத்தை களைந்து - தமிழில்எஞ்
ஞானத்தையும் சொல்லும் உயர்வேதம் என்று முழங்கு


ஏழை மொழி என்று ஏளனம் செய்யாதே
ஏவள் மொழி என்று பிதற்றதே! – தமிழ்
ஆற்றல் நிறைந்த அருந்தவமொழி - நாளை
அகிலத்தை ஆளும் உயர்மொழி என்று முழங்கு

தமிழால் தாழ்ந்தோர் எவருமில்லை – உயிர்த்
தமிழால் உயந்தோர் கோடி - இவ்வுலகில்
தமிழால் இறந்தோர் யாருமில்லை –
தமிழால் சாகவரம் கொண்டோர் கோடி என்று முழங்கு

உன்னை உயர்த்து தமிழா! தமிழ்
தன்னை உயர்த்தும் – இந்த மண்ணில்
நீ உயர்ந்தால்! தமிழ் அன்னை மகிழ்வாள் - தனித்
தமிழ் கொடி உலகெங்கும் பறக்கும்.

July 28, 2011

வெறுமைகள் படர்ந்திருந்த எனது முகத்திரைகள்


பூட்டிக் கிடந்த
எனது மனக் கதவை
யாரோ துசி தட்டி கொண்டிருதார்கள்

புரட்டிப் போட்டு கிடந்த
மனப் புத்தகங்களை
யாரோ புது கவிதையாய்
வரிசைப் படுத்திக் கொண்டிருந்தனர்.

வெற்று தாளாய் இருந்த
எனது
வாழ்க்கை முகவரிகளை
யாரோ தேடிக் கொண்டிருந்தனர்.

வெறுமைகள்
படர்ந்திருந்த
எனது முகத்திரைகளில்
தேவைகளில்
தேடல்களை வைத்தது
யாரோ

என்
மனமெங்கும்
கிறுக்கல்களாய்
வாழ்க்கை எங்கும் பரவிக் கிடக்கிறது

வெள்ளை காகிதமாய்
பிறப்பெடுத்திருந்த
நான்
கறுமை மையால்
வாழ்க்கையை நிரப்பிக் கொண்டிருக்கின்றேன்

இன்று.........
காகித பூக்கள் போல
கசங்கியிருந்தது
என் வாழ்க்கை

July 27, 2011

விலை


உயிர் மூச்சு காற்று
இலவசம் நமக்கு -
உலவும் தென்றல்
காற்றும் இலவசம்

காடு தந்த காய்க் கணிகள்
இலவசம்
கடல் தந்த
மீன்களும் இலவசம்

ஒளிரும் சூரிய வெளிச்சமும்
இலவசம் நமக்கு - வெண்
நிலவு தரும்
குளிச்சியும் இலவசம்

வான் மழை நீர்
இலவசம் நமக்கு
மண்ணில் பாய்ந்தோடும்
ஆற்று நீரும் இலவசம்- நல்ல
குடி நீரும் இலவசம்

பூமியில்
விளைந்த
அனைத்தும் இலவசம்

யார் இதற்கு
ஒரு விலையை சொல்லி
வினைகளை தேடியது?எதற்கும்
விலைக் கொடுக்கவில்லை
இறைவன்!

விளைந்த அனைத்திற்கும்
விலைகளை வைத்து
வினைகளை அறுத்தான்
மனிதன்.

July 11, 2011

மனோவியம்: வட்டிப்பணம் - பாகம் 3

மனோவியம்: வட்டிப்பணம் - பாகம் 3

வட்டிப்பணம் - பாகம் 3
மணி 12.00 mitnigth

காலனைப் போன்று இருந்த அந்த உருவத்தின் கடும் பார்வை சாதரணமாக நினைத்து விட்டார்கள் போலும் அவர்களின் உரையாடல்கள் தொடர்ந்தன.

ஜெயத்தின் வாடிக்கையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறிக் கொண்டிருந்தனர்.


வானம் மின்னவில்லை, மழையும் பெய்யவில்லை, இருள் கவ்விய அந்த நேரத்தில் அந்த இடம் மிகவும் அமைதிக் கொண்டிருந்தது. ஊழிக் காற்றின் முன்பு வரும் அமைதியா , ஊரேல்லாம் அடங்கிய பின் எற்படும் மயான அமைதியா என்று தெரியவில்லை .இல்லை இல்லை காலன் காத்திருப்பதால் காற்றுக் கூட அசைய மறுக்கின்றனவோ......என்னவோ .......யார் அறிவர் ?

இருந்தாலும் தெரு முணைகளில் இருந்து ஒன்றுகூடி கும்மாளம் அடிக்கும் தெரு நாய்கள் குரைக்கும் ஓலங்கள் மட்டும் அந்த அமைதியை அவ்வப்போது கெடுத்துக் கொண்டிருந்தது. என்றும் இல்லாமல் நிஷப்தமான அந்த நெடிய இரவுகள் நீண்டுக் கொண்டிருந்தன.

மணி 12.30 am

வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேறி பின் . “சரிங்க ராம் கடையை சாத்தலாம்” என்று சொல்லி கொண்டு main server ரில் இருந்து ஒவ்வொரு கணினி இயக்கத்தை செயல் இழக்க செய்துக் கொண்டிருந்தார் ஜெயம். ஒரு வழியாக அனைத்தையும் அடைத்துவிட்டு கடையை விட்டு வெளியே வந்து வெளிக் கதவை சாத்த தொடங்கினர் கடை முதலாளி ஜெயம்.

எங்கிருந்தோ வந்த ஒரு உருலைக்கட்டை அவர்களை உரசிக்கொண்டு அந்த கடையின் கதவை தொட்டு பெருத்த சத்தத்துடன் விழ்தது. முன்பு கடையை அடைக்கும் முன் பார்த்து சென்ற அந்த கருத்த உருவம் மீண்டு கட்டையை எடுத்து ஜெயத்தை ஓங்கி அடித்தான். என்ன ஏது என்று தெரியாமல் தடுமாறி ஜெயமும் அவரின் நண்பரும் சுதிகரித்துக் கொண்டு அவனை திருப்பி தாக்க தொடங்கினர். இவர்களின். இவர்களின் அடியை தாங்காமல் அந்த கருந்த உருவம் உரத்த குரலில்“டேய் வாங்கடா வாங்கடா”

என்று அந்த இருளிளே மறைந்த்திருந்த தன் நண்பர்களை அழைக்க தொடங்கினான். பத்து பதினைந்து இந்திய இளைஞர்கள் வெட்டுக் கத்திகளை தூக்கிக் கொண்டு அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். இது என்ன விபரித விளையாட்டு என்று நினைத்த ஜெயம் இதற்கு மேல் இங்கு நின்றால் விபரிதமாகலாம் என்று எண்ணிய அவர் “ப்ரோ ஒடுங்க ப்ரோ ஓடுங்க ” என்று ராம்யை பார்த்து சொல்லிக் கொண்டு ஓட துவங்கினார். ஆனால் பதற்றத்தில் எதிர் திசையில் ஓடாமல் அங்கு வந்துக் கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி ஓடியதை அவர் கவணிக்கவில்லை. தன்னை நோக்கி வரும் இளைஞர்களை பார்த்தவுடன் “அட கடவுளே இன்றோடு என் கதை முடிந்தது” என்று நினைத்த ஜெயம் அப்படியே ஒரு கணம் அப்படியே ஸ்தாபித்து நின்று விட்டார்.

தன் மனைவி மக்கள் கதி என்ன ஆகுமோ ...... தன் குடுப்பம் என்ன ஆகுமோ இப்பொழுதுதான் இளம் தளிர்களாக இருக்கும் தன் பிள்ளைகளின் எதிர்க்காலம் என்ன ஆகுமோ என்று நினைத்த போது இந்த உலகமே ஒரு கணம் சுழல்வதை நிறுத்திக் கொண்டதை போல உணர்ந்தார் ஜெயம்.

ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?. நான் யாருக்கும் எந்த பாவம் செய்யவில்லையே. யாருடைய குடியையும் கெடுக்கவில்லை...... எனக்கு ஏன் இந்த சோதனை என்று மனதுக்குள் கதறிய ஜெயம்.........இவர்களிடமிருந்து தப்பிப்பது முடியாத காரியம் ........ தன் கதி அதே கதிதான்..... என்று நினைத்து எல்லாம் விதி விட்ட செயல்

“முருக என்னை காப்பாத்து”

என்று வாய்விட்டு சொல்லி நடப்பது நடக்கட்டும் எல்லாம் அவன் செயல் என்று நினைத்து கொண்டு தன் இரு கண்களை இறுக்க மூடிக் கொண்டார்.

டாக் ..... டாக் டாக் டாக்.....டாக் என்று மரகட்டையை வெட்டினால் எப்படி சத்தம் கேட்குமோ அப்படி ஒரு சத்தம் ஜெயத்தின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

பாரங் கத்தியோடு தன் எதிரில் ஓடிக் வந்துக் கொண்டிருந்த இளைஞர்கள் தன்னை சட்டை செய்யாமல் ராமயை நோக்கி ஓடி அவரை சுற்றிவலைத்து பாரங் கத்தியால் வெட்ட தொடங்கினார்கள். காரின் கதவை திறந்து தப்பித்து ஒடுவதற்கு எத்தனித்த ராமின் கைகளை அவர்களின் வெட்டு அருவா பதம் பார்த்தன.

பார்வைக்கு படித்த இளைஞர்கள் போல் தென்ப்பட்ட சிலரின் கொடுரமனம் அப்போதுதான் வெளிப்பட்டது.

ஒன்றுமே செய்ய முடியாமல் விழ்ந்து போன ராமை வெளியில் இழுத்து போட்டு கண்டம் துண்டமாக வெறிக் கொண்டு வெட்ட தொடங்கிய அவர்களின் வெறியாட்டம் இன்னும் அடங்கியபாடில்லை.

இந்த உலகம் எவ்வளவு இரக்கமற்றது. கொடுமை புரிவோரின் கூடாரமாக என்று மாறியது? அன்பு அன்பு என்று சொன்ன அறவோரின் போதனைகள் தான் என்ன ஆனது? சுயநலம் மிகுத்தவர்கள் வாழும் இந்த உலகம் பல கொடும் செயல்களால் ஆனது. நல்லவர் கெட்டவர் அதற்கு தெரிவதில்லை. தனி மனிதன் அமைதி பெறாத வரைக்கும் இந்த சமுதாயமும், இந்த உலகமும் எப்படி அமைதியையும் அகிம்சையை நோக்கி செல்லும்?

அதோ .....இருண்டு கிடந்த வானத்தில் சில மின்மினி பூச்சிகள் போல அங்கும்மிங்கும் நட்சத்திரங்கள் தென்பட தொடங்கி இருந்தன. நிகழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதனின் சாகஸங்களை பார்ப்பதற்கு அதற்கு என்ன ஆர்வமோ? இல்லை காலை கதிரவன் வருவதற்குள் மனிதர்கள் நடத்தும் நாடகங்களை பார்த்து விட வேண்டும் என்ற பேராசையோ?

மணி 1.00 am

ஹலோ ஹலோ எங்க அண்ண இருக்கிங்க ! என்ணண ஆச்சி என்று ஜெயத்தின் தம்பி அலைப்பேசியில் அலறிக் கொண்டிருந்தார்........
தொடரும்..........