May 28, 2011

நெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்


வட்டிப்பணம்

மணி 11.00 pm

இடி மின்னல் போல் துப்பாக்கியால் சுடும் ஓசை அந்த அறை முழுவது வியப்பித்துக் கொண்டிருந்தன. வெளியில் இருந்த நிசப்த்தமான அமைதியை கலைத்து அகோர சத்ததுடன்....

“டேய் ..... அவன சுடுங்கடா ...... சுடுங்கடா...... விட்டுடாதிங்கடா”
தொடரும்.........

பாகம் 2

டேய் முருக..... அவனை தப்பவிடாதடா .....அதோ ...... அதோ......ஓட்டு மேலெ ஏறிட்டான் டா.... அவனை சுடுங்கடா...... சுடுங்கடா......டேய்...... என்னடா விளையாடுறிங்க்க......இப்படியா விளையாடறது?... நானா கடுப்பாயிடுவேன் தெரியுமா......மட்டமா விளையாடுறிங்க நீங்க...... என்று கோபத்தில் பொரிந்து தள்ளினான் ஒரு 20 வயது மதிக்கத்தக்க இளைஞன். அவனுடன் சேர்ந்து விளையாடி அவன் நண்பர்களுக்கும் செம ‘தென்சன்”. ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக்கொண்டு மற்றவர்களை திட்டி திர்த்துக் கொண்டார்கள்.

டேய்..... டேய் மெதுவா விளையாடுங்கடா..... இப்படியா சத்தம் வைத்து விளையாடுவிங்க? இது ரத்திரி தெரியும்மில்ல? என்று சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்த ஜெயம் அந்த counter strike என்னும் மிகவும் பிரபலமான துப்பாக்கி சண்டை காட்சிகளுடனும் அருமையான ஒலி ஒளி அமைப்பிகளுடன் கூடிய அந்த வீடியோ விளையாட்டை விளையாண்டுக் கொண்டிருந்த அவர்களை பார்த்து சத்தத்தை குறைத்து விளையாடும் மாறு கேட்டுக் கொண்டார்.

Cyber cafe என்று சொல்லக் கூடிய இணையத்த தளத்தின் முதலாளிதான் ஜெயம். கடந்த ஐந்து வருடமாக சிறப்பகாக அங்கு தொழில் நடத்திக் கொண்டிருக்கும் ஜெயம் இன்று தன் வாழ்க்கையில் ஒரு திருப்புமுணை ஏற்பட போகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லைதான். காலம் தன் கொடிய செயலை அரங்கேற்ற காத்துக் கொண்டிருப்பதை யார் அறிவர்?

அந்த அறை, சற்று மங்கிய வெளிச்சத்தில் மிதந்துக் கொண்டிருந்தது. கம்பியுட்டர் மோனிட்டரின் வெளிச்சம் எங்கும் பரவிக் கிடந்தது. நான்கு மூலைகளிலும் நான்கு விளக்கு மிகவும் குறைந்த ஒளியை அதுவும் நீல நிறத்தை அந்த அறை முழுவது பரச் செய்தது. எதோ ஒரு ரம்மியமான சுழ்நிலை. இதமான குளிர் “ஏர்க்கொண்டிசன்” பெட்டியில் இருந்து அந்த அறையை விழுங்கிக் கொண்டிருந்தது.

ஒரு ஏழு எட்டு வாடிக்கையாளர்கள் நிறைந்திந்தனர். அவர்கள் அங்கு வரும் நிரந்திர வாடிக்கையாளர்கள். “தம்பிங்களா ! சரிய 12 மணிக்கு கடையை அடைக்கைப் போறேன்” என்று சொல்லி அங்கிருந்த தொலைப்பேசியை எடுத்து தன் நண்பருக்கு “போன்” போட்டார்.
“ராம்! என்ன வரனு சொன்னிங்க ஏன் இன்னும் வரலா? 12 00 மணிக்கு நானு கடையை கடையை அடைக்கப் போறன். கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என்றார்.

“கொஞ்சம் wait பன்னுங்க ஜெயம்..... இப்பதான் ஒருத்தன பார்த்திருக்கிறேன் ..ரொம்ப நாளா எனக்கு காசுக் குடுக்கமா ஏமத்திக்கிட்டு இருந்தான். அவன்கிட்ட பேசிட்டு வர்ரேன்..... கொஞ்சம் “வெய்ட்” பன்னுங்க வந்துறன்.” என்று சொல்லி மறு முனையில் போனை வைத்தார்.

கரு மேகங்களுக்கு மத்தியில் சிறுக சிறுக தன் உடலை மறைத்துக் கொண்டிருந்தது நிலவு. கரும் மேகங்கள் அன்று வான் எங்கும் பரவி கிடந்தன. அடுத்து நிகழப்போகும் அந்த சோக நிகழ்வுகளை பார்க்க விருப்பம் இல்லையோ என்னவோ அந்த நிலவுக்கு. வானுக்கும் மண்ணுக்கும் இடையே அன்று இருள் ஒரு உடன்படிக்கை செய்துக் கொண்டன போல. எங்கும் இருள் படர்ந்திருந்தன அந்த இரவில், அங்கும் இங்கும் பரவிக் கிடந்த நட்சத்திரங்கள் மட்டும் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.

தெரு முனையில் இருந்த ஆபேக் சீபூட் கடை இன்னும் இன்னும் களைக்கட்டிக் கொண்டிருந்தது. நீண்ட வெள்ளை பல்புக்களின் வெளிச்சம் அந்த கடையை இன்னும் பளிச் என்று காட்டிக் கொண்டிருந்தது. அங்கும் இங்கும் சிலர் சீன உணவுகளை ஆடர் கொடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு இருந்த சில இளைஞர்களின் “தண்ணி” விருந்துகள் இன்னும் சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தன. எதை எதையோ உரத்த குரலி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது........

அந்த இரவை கிழிந்துக் கொண்டி அதி நவீன புத்தம் புது bmw ரக வாகனம் வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டு அந்த தெரு முணையை கடந்து வேகமாக ஜெயம் கடையின் முன் வந்து நின்றது. அந்த வாகனத்தில் இருந்து கிழ் இறங்கிய ஒரு திடகத்திரமான ஆள். கட்டழகர் போட்டியில் முதல் பரிசு வென்றவர் போல் கட்டுமாஸ்தான தன்னுடைய உடலில் அங்கங்கே மிகவும் உறுதியாக புடைத்துக் கொண்டு நின்ற அவரின் புஜங்கள் கண்டிப்பக 10 ஆடவர்களிடம் ஒண்டி நின்று சண்டை போடும் திறன் படைத்தவராகத் தான் இருப்பார் போலும்...

வந்த அந்த மனிதர் ஜெயமின் கடையை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்.
“ஆய் ராம்” என்று சொல்வதற்கும் அவர் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

“என்னாலா இவ்வளவு லேட்ட வர என்ன பிரச்சனை? என்று கைக் கொடுத்தார் ஜெயம். ......இல்ல,..... ரொம்ப நாளா எனக்கு டிமிக்கு கொடுத்தவன இன்னகிக்கி புடிச்சுட்டேன்...... அவன்கிட்ட பேசிட்டு வர கொஞ்சம் லேட்டாயிட்டது” என்று சொல்லி அங்குள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்தார். மிகவும் நவீன ரக காரில் வந்திருந்தாலும், எனோ அவர் முகம் வேர்த்திருந்தது. ஒரு கைகுட்டையை எடுத்து தன் முகத்தில் வழிந்த வேர்வை துளிகளை துடைத்துக் கொண்டார்.

ராம் மிகவும் வெற்றிப் பெற்ற ஒரு மனிதராகவே ஜெயத்திற்கு காட்சி அளித்தார். அவரின் வட்டித் தொழில் அபரிதமாகவே போய்க் கொண்டிருந்தது. மிகவும் ஆபத்தான வட்டித் தொழிலில் பெரும் பணத்தையும் சம்பாதித்திருக்கிறார். ஒரு முன்னாள் கட்டழகரான திரு ராம் தன்னுடைய உணவிலே கட்டுப்பாடகவும் கவனமாகவும் இருந்து தன்னுடைய கட்டுடலை பேணிக் காப்பதற்கு பெரும் தொகைகளை செலவு செய்திருப்பார் போல. .


மணி 12.mt nigth


இராமும் ஜெயமும் வழக்கம் போல் பேசிக் கொண்டிற்கும் போது . அந்த cybercafe- வின் கதவை திறந்த ஒரு கருத்த உருவம் அவர்களை வெறித்துப் பார்த்து. அப்பால் நடந்து அந்த இருளிலே கலந்தது.

........தொடரும்.....................
Post a Comment