May 24, 2011

வட்டிப்பணம்நெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்.

மணி 5.00 pm

வானம் இருண்டுக் கொண்டிருந்தது. மழை வருமா வராத என்று சொல்ல முடியாத ஒரு பருவ நிலை. காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது. புயல் காற்றின் வேகத்தில் இல்லை என்றாலும். காற்று சுழலும் வேகம் என்னமோ ஊழிக் காற்று ஓடி வந்துக் கொண்டிருப்பது போல உணர்வு ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. மர கிளைகள் அகோரமாய் அசைந்தாடும் காட்சி பெரும் பெரும் பூதங்கள் அந்த அமைதி பூமியில் பெரும் பூகம்பத்தை கிளப்பிக் கொண்டு வருவது போல் இருந்தது.

மணி 6.00 pm

பெரும் மழை எதிர்ப்பார்த்த அந்த பூமி, சிறு மழைத் தூறலில் சற்று நேரத்தில் ஒய்ந்து போனது. கரு மேகங்கள் கலைந்திருந்தன. பெரும் மழை பெய்வதற்கான அடையாலம் மறைந்து போய்விட்டன. நீண்ட கடைத் தெரு வரிசைகள் ஒவ்வொன்றாக விளக்குகள் எரியத் தொடங்கின. இருள் மறையவும் வெளிச்சம் பரவவும் அமைதி கொண்டிருந்த அந்த பூமி காக்கைகளின் கரைதலில் இருந்து விடுப்பட முடியாமல் இரவை வரவேற்றுக் கொண்டிருந்தது அந்த அந்தி நேரம். காக்கைகளின் இரைச்சல்களில் அகப்பட்டுக் கொண்டிருந்த அந்த சிறு கடை தெருக்களுக்கு இன்று காக்கைகளின் கூக்குரல் ஏனோ சற்று வித்தியாசமாகதான் இருந்தது. எதோ அங்கு காலன் வந்தது காத்திருப்பது போல் கரைந்துக் கொண்டிருந்தது.

மணி 7.00 pm

சிறு மழைத்துறலில் நனைந்திருந்த பூமியாய் அந்த கடைத் தெருக்கள் மக்களின் நடமாற்றம் இப்போழுது அதிகரித்துக் கொண்டிருந்தது. எங்கும் பேச்சுக் குரல் மக்களின் கூக்குரல் அதிகரித்துக் கொண்டிருந்தன. சிறு பட்டிணமாக இருந்ததாலும் அந்த பூமி எம்போழுதும் சுறுசுறுப்பாக இயக்கி கொண்டிருக்கும். பொருட்கள் வாங்குவதில் இருந்து. பேசி திரிவது வரைக்கும் அங்கு நடக்கும் வாடிக்கை நிகழ்வுகள் தான்.

மணி 8.00 pm

கடைகளின் எதிரிலே இருந்த புல்வெளி தரைகள் சிறு தூறலால் நனைந்திருந்தனால் , அங்கு வரும் கார்களின் வெளிச்சம் பட்டு எதோ பனித் முத்துக்கள் சிதறிக் கிடப்பது போல தெரிந்தது.அங்கு போடப்பட்ட சிமிண்டு பென்ச்சுகளில் சில அன்னிய தொழிளார்கள் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர்களின் சிரிப்பொலி தெரு முணை வரைக்கும் கேட்டது. அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. காட்சிகள் மாறும், காலன் காத்திருக்கிறான் என்று?.

பரபரப்பகாக தெரு ஒரத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஆப்பெக் சீப்பூட் சாப்பட்டுக் கடையில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. அங்கு சீனர்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ ஆனால் தமிழ் இளைஞர்கள் தண்ணி அடிப்பதற்கேன்றே கூடிவிடுவார்கள். அவர்களின் கச்சேரி வெடிய வெடிய நடக்கம். கூத்து கும்மாளம், ஆட்டம் பாட்டம் என்று அந்த இடத்தை அதிர வைத்துக் கொண்டிருந்தார்கள். அது வாடிக்கையான நிகழ்வுகள்தான் நம் இளைஞர்கள் கூடுவார்கள். குடி போதையில் அடித்துக் கொண்டு பிரிந்து ஓடுவார்கள்.

மணி 9.00 pm

“மச்சான் அவனை போடனும் மச்சான்” என்று குடி போதையில் ஒரு இளைஞர் உளறிக் கொண்டிருந்தான். அவனை சுற்றி ஐந்து ஆறு இளைஞர்கள், “என்ன நடந்ததுனு சொல்லு மாம்ஸ், ஒரு கை பார்துடுவோம்” என்று அவன் நண்பனை உசுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். பீர் போத்தல்கள் அங்கு நிறைந்திருந்தன. எப்படிக்கும் ஒரு 200 வெள்ளிக்காவது அவர்கள் குடித்திருப்பார்கள் போல. பாவம் யார் பணமோ? இன்னும் எவ்வளவு குடிப்பார்களோ? யாருக்கு தெரியும்?

மணி 10.00 pm

அந்த சீன ஆபேக் கடைத் தெரு வரிசையில் சற்று தொலைவில் இருந்த முடி திருத்தகத்தை மூடிக் கொண்டிருந்தார் பரமசிவம். “என்னணன கடையை சீக்கரமாவே சாத்திரிங்க?” என்று பக்கத்து கடையில் இருந்து குரல் வந்த திக்கை பார்த்தார் பரமசிவம். “ஆமாண்ண ஆளு இல்லைணா . அதான் கடையை சாத்தறேன்” என்று சொல்லிக் கொண்டு நாளு ஐந்து சூடத்தை எடுத்து கடை எதிரிலே ஏற்றி வைத்தார். சூடம் நன்றாக பற்றிக் கொண்டு தக தக வென எரிந்தது. “சரிண்ணா அப்ப நான் கிளம்பறேன்” என்று சொல்லி விடு விடு என்று நடக்க ஆரப்பித்தார் பரமசிவம். அவர் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார் பக்கத்து கடை முதலாளி ஜெயம்.

“பாவம் பரசிவம் ஊர்விட்டு ஊர்வந்து இங்கு வந்து பிழைப்பு நடத்திக் கொண்டுயிருக்கிறார்” என்று தனக்குள் முனுமுனுத்துக் கொண்டார். மனைவி மக்களை விட்டு கடல் கடந்து வாழ்வது என்பது சாதரணமான செயல் அல்ல. எவ்வளவு துன்பங்களையும் துயரங்களை சுமந்துக் கொண்டு நம்மிடம் சிரித்து போசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டார். பரமசிவத்தின் முதலாளி மலேசியராக இருந்தாலும் கடையின் முழு பொறுப்பு பரமசிவத்திடம் ஒப்படைத்திருந்தார். ஏன் ஊர்கார்கள் சாதரண உடல் உழைப்பு தொழிலாளியாகத்தான் வருகிறார்கள், ஏன் சிறு முதலிட்டார்களாக வருவதில்லை. இன்று சாதரணமாக வரும் இந்தோனேசியர்களும் பாகிஸ்தானியர்களும் கடைகளை திறந்து முதலாளிகளாக மாறும் போது இவர்கள் ஏன் தயங்குகிறார்களோ என்று தெரியவில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டுதானே என்று நினைத்துக் கொண்டு தன் கடையின் தெரு முனையப் பார்த்தார் ஜெயம்.

அவரின் கடை அந்த கடை வரிசையில் கடைச்சிக்கு இரண்டாவது கடை. பலர் கடைகளை மூடிவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். எங்கும் நிசப்பதம். ஆரவாரம் படிப்படியாக குறைந்துக் கொண்டிருந்தன. தெரு விளக்கு அன்று ஏனோ எரியவில்லை. அந்த இடத்தை இருள் கவிக்கொண்டிருந்தன. சில சமயங்களில் அந்த கடையை கடந்து செல்லும் ஒரு சில மோட்டார் வாகனங்கள் உமிழும் ஒளியை தவிர வேறு எந்த வெளிச்சமும் அங்கு இல்லை அவ்விடத்தில். ஏனோ தெரியவில்லை ஜெயத்திற்கு இன்று கடையை சீக்கிரமாக சாத்தவேண்டும் போல ஒரு உள் உணர்வு எழுந்துக் கொண்டிருந்தது. அப்பொழுதான் ஞாபகம் வந்தது, தன் நண்பர் வருவதாக சொன்னாரே ஏன் இன்னும் வரவில்லை என்று நினைத்துக் கொண்டவராய் சற்றென்று தன் கடையின் உள்ளே நுழைந்தார்.

மணி 11.00 pm

இடி மின்னல் போல் துப்பாக்கியால் சுடும் ஓசை அந்த அறை முழுவது வியப்பித்துக் கொண்டிருந்தன. வெளியில் இருந்த நிசப்த்தமான அமைதியை களைத்து அகோர சத்ததுடன்....

“டேய் ..... அவன சுடுங்கடா ...... சுடுங்கடா...... விட்டுடாதிங்கடா”

தொடரும்.............
Post a Comment