March 17, 2011

பயணங்கள் பலவிதம், அதிலே இதுவும் ஒருவிதம்.


அன்மையில் எனது மைத்துனர் ஒருவரின் அழைப்பின் பேரில் செப்பாங் வட்டாரத்தில் அமைத்துள்ள ஒரு கோவிலுக்கு சென்று வழிப்பட்டேன். மிகவும் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிற அந்த கோவில். மக்களின் மன குறையை தீர்க்கும் ஒரு மையமாக உருப்பெற்று மக்களுக்கு மகத்தான சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது.

எற்கனவே செப்பாங் வட்டாரத்திற்கு இரண்டு முன்று முறை சென்று வந்திருந்தாலும் நாட்டு வளர்ச்சியில் பாதைகள் மட்டும் ஏனோ புலப்படமாட்டேன் என்கிறது. அனைத்துலக விமான தளமான கேஎல் சீசியின் வளர்ச்சியில் மையம் கொண்ட செப்பாங் வட்டாரம் புதிது புதிதாக பாதை உருவாகுவதால் எந்த பாதையை தேர்ந்தேடுப்பது என்ற ஒரு கேள்வி எங்குச் சென்றாலும் எழுகிறது.

அதுவும் சிறிய மழைத்துறலில் இரவு பயனம் என்பதும்.சாலை மறுங்கிலும் அடர்ந்தா காடுகளும் தோட்டங்களும் மலைப்பகுதியாக இருப்பது..எதோ ஒரு நிதர்ன அமைதியான பிரதேசத்தில் செல்வது போன்ற ஒரு பிரமை.

முன்பு, என் மனைவியின் பணி நிமிர்த்தமாக மலேசியா கல்வி அமைச்சால் எற்பாடு செய்ப்பட்ட சில பயலறங்கில் கலந்துக் கொள்வதற்கு சாலக் திங்கி மற்றும் பாகன் லாலங் தங்கும் விடுதியிலும் நடந்த நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்று வந்த அனுபவம் இருந்தாலும்..எனோ தெரியவில்லை அன்று பாதை சற்று புதிதாகவே எனக்கு தோன்றியது.


இருட்டுப் பிரதேசத்தில் ஊடுறுவிக் கொண்டிருந்த எனது கார்.சற்று பிரகாசமான ஒளிவெள்ளத்தை கடந்த போது எதோ ஒரு மலாய்க்காரர்களின் “தொம் யாம்” கடல் உணவு வகை சாப்பாட்டு கடையை கடப்பாதாக நினைத்தேன். சற்று தொலைவில் சென்ற பிறகு செப்பாங் பழைய பட்டிணத்தை கண்டவுடன் அங்கு நின்றிந்த தமிழ் நெஞ்சங்களிடம் வணக்கம் சொல்லி ஆவுடையான் கோவில் எங்கு இருக்கிறது என்று வினாவியவுடன். முன்பு நான் கடந்து வந்த பாதையில் இருப்பாதாகவும் மறுபடியும் திருப்பி செல்லும்மாறு சொன்னர்கள். நான் முன்பு கடந்து வந்த பிரகாசமான ஒளிவெள்ளம் தான் ஆவுடையான் கோவில் என்பது புரிந்தது.

எனோ தெரியவில்லை அன்று மக்கள் கூட்டம் குறைவாக இருந்தன. 4 முட்டை ஒரு பசும்பால், வாங்கி முட்டையை அங்கு ஒரிடத்தில் வைத்துவிட்டு.பாலை எமது கைகளில் ஊற்றினார்கள்.ஏன் என்று கேட்டதற்கு கருமங்களை தொலைப்பற்கு என்று சொன்னார்கள். தொலைந்தால் சரிதான்.என்ன பிரச்சனை? தொலையட்டுமே என்று நானும் சரி என்று நின்றேன். அன்று குறிச்சொல்பவர் அங்கு இல்லை என்பதால் ஞாயிட்றுக்கிழமை வர சொன்னார்கள். என் மைத்துனரும் ஞாயிற்குக் கிழமை வரலாமா என்று கேட்டார் ?...

மறு நாள் எங்களின் பயணம் தொடர்ந்தது. அதே பாதை அதே பயணம் இது காலை நேரத்து பயணம் என்பதால் இயற்கை காட்சிகளுடன் குதுகலமாக எங்களின் பயணம் தொடர்ந்துக் கொண்டிருந்தது. எங்கு நோக்கினும் பச்சை கம்பளங்கள் போர்த்தியது போன்று பசுமை ததும்பும் இயற்கை தோட்டங்கள். நாட்டின் அளவு கடந்த வளர்சி பசுமைக் கொஞ்சும் மலேசியா திரு நாட்டை அங்கு அங்கு மலைகளை மொட்டை போட்டு நமது இயற்கை அன்னையை சிரச்சேதம் செய்வது போல் நமது வளர்சி அடங்கி இருக்கிறது என்பது வருத்தமான செய்தி. எனது அண்ணியும் வருவதாக சொன்னாதால் அவர்களையும் அழைத்துக் கொண்டு எங்களின் “செப்பாங்” பயணம் மீண்டும் ஆவுடையார் கோவிலை நோக்கிய நகர்ந்துக் கொண்டிருந்தது.

அன்று ஞாயிற்குக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தனர். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வோரு பிரச்சனை. மக்கள் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் பிரச்சனை. மனிதன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கோவில் குளம் என்று அன்று தொட்டு இன்று வரை எதோ ஒரு அடைக்கலத்தை நாடி தேடி ஒடிக் கொண்டுதான் இருக்கின்றான். சிலர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதில் பிரச்சனைகளை அதிகமாக்கி கொண்டு பாழும் கினற்தில் விழுவதற்கும் தாயாராக இருப்பார்கள். அதை செய் இதை செய் என்று கூறி பணம் பறிக்கும் சாமியார் கூட்டத்திற்கு மத்தியில் 5 காசுக் கூட வங்காமல் சேவை செய்யும் ஆவுடையானை இங்கு நாம் போற்றத்தான் வேண்டும்.

பொதுவாகவே இங்கு பிள்ளை வரம் கேட்டு வரும் மக்கள் அதிகம் என்கிறார்கள். நோய் தீர்க்க வேண்டி வருபவர்களும் அதிகம். பலவிமான பிரச்சனைகளுக்கு பரிகாரம் தேடி வரும் மக்களுக்கு துணையாக நிற்கும் ஆவுடையானக்கு நன்றி சொல்லவேண்டு.

பொதுவாகவே நான் சிறு தெய்வ வழிப்பாட்டு முறைகளூக்கு ஒத்து போவதில்லை. கொள்கை பிடிப்பு என்று சொல்லவில்லை. தேவாரம் திருவாசம் பாடி பக்தி நெறியை வளர்ந்த எமக்கு பலிக் கொடுக்கும் தெய்வ வழிப்பாட்டும் முறைகள் ஒத்துவருவதில்லை. ஆனாலும் இறை என்ற உணர்வு அது எங்கிருந்தாலும் ஒரு உருக்கத்தை கொடுக்கும் என்பதாலும் ஆன்மீக சிந்தனையின் முதிர்ச்சியில் அனைத்தும் ஒரு இறை நிலைக் கோட்பாட்டில் இருப்பாதலும் எனக்குள் எந்த ஒரு பேதமும் பெரிதாக தெரிவதில்லை.மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பார்கள் போலும்.

ஒரு வகையாக கூட்டத்தோடு கூட்டமாக கோவித்த போட்டு பழக்கப்படு போன நமக்கு அங்கு மக்களோடு மக்களாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பங்காளி சிங்கு தம்பதிகளிருந்து சீன தம்பதிகள் வரை குழுமி இருந்த மக்களில் என் அண்ணியிடம் பேசிக்கொண்டிருந்த ஒருவரின் குடும்பக் கதை சோகமான கதையாக தான் எனக்கு படுகிறது. அந்த அம்மா, வயது 30- 35 இருக்கும். அவரின் கணவர் எங்கோ ஓடிவிட்டானாம்.அவரின் மகள் 15 வயது இளம் பெண் நான்கு மாதம் கர்ப்பம். அந்த பையனுக்கும் 18-19 வயதிற்குள்தான் இருப்பான் என்று நினைக்கின்றேன். அந்த பையனோடு வந்து அங்கு அருள் வாக்கு பெறவேண்டி நிற்பதாக சொன்னார்கள். வளர்ச்சி அடைந்த இந்த காலத்திலும் வாழ்க்கையை தொலைத்தவர்களை என்னவென்பது?

அடக் கடவுளே! இந்த சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? தவறான வளர்ப்பு முறையினால் நமது பிள்ளைகள் குட்டிச்சுவராகி போய்க் கொண்டிருக்கின்றார்கள். கணவன் மனைவியிடத்தில் எழும் குடும்ப பிரச்சனைகள் தவறான வழிக்காட்டாலாக இளைய சமுதாயத்தை சீர்ரழிக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை..சினிமா தனமான காதலும் நமது பிள்ளைகளின் மனவளத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நடப்பு நிகழ்வுகளை பார்த்தாலே கண்டுக் கொள்ளலாம். நாத விந்து பதிவுகளாக அடுத்த தலைமுறையை சீர்செய்யவேண்டிய கடமை நமக்கும் இருக்கிறது.

ஆவுடையானே ! கொஞ்சம் கண் திறந்து எங்கள் சமுதாயத்தையும் பாராப்பா என்று வேண்டிக் கொண்டு வீடு நோக்கிய எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். எதோ சொல்லமுடியாத ஒரு விதமான வேதனை உணர்வை சுமந்துக்கொண்டு வந்தது என் மனம் . அந்த 15 வயது கர்பவதியான அந்த பெண் இந்த சமுதாயத்தில் ஒரு கேள்விக்குறியாகவே நிற்கிறாள் என் கண்முன்னே. ஆனால் எந்த ஒரு குற்ற உணர்வும் அவர்களிடம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
Post a Comment