February 23, 2011

தமிழ்
நான்
வரைந்த ஓவியம்
கரைந்துவிட்டன
நான்
படித்த பாடம்
...மறந்து விட்டன
நான் தேடிய இன்பம்
மறைந்து விட்டன
ஆனால்
என்னுள் மலர்ந்த
தமிழ் மட்டும்
மணம் பரப்புகின்றன.
நான் மரம் அல்ல
மனிதன் என்பதை
நினைவுறுத்துகிறது

வாழ்க்கை
ஒடிந்து விடும்
கிளைதான் வாழ்க்கை -
ஆனால்
ஒய்யாரமாய்
ஆடிக்கொண்டிருக்கிறது

காற்றிலே ஆடிடும்
இலைதான் வாழ்க்கை
உதிர்ந்து சாருகானாலும்
மீண்டும் மீண்டும்
துளிர்த்துவிடும்

விழித்திருக்கும் மனதினிலே
புதைந்திருக்கும் எண்ணங்களை
வேர்ப்பிடிக்க செய்தால்
உயிர்த்திருக்கும் நம் வாழ்க்கை.

February 21, 2011

ஏனோ ஒரு வினோதம் - வாழ்க்கை


என்னை நானே
எரிக்கும் தீக்கட்டை
எனக்குள் கொழுந்து விட்டு
எரியும் எரிமலை

ஏனோ ஒரு வினோதம்
என்னை அறிந்துக் கொள்ளும் முன்
என்னை நானே எரித்துக் கொள்கிறேன்

என்னை புரிந்துக் கொள்ளும் முன்
நானே ஒரு புதிர் என்பதை மறந்து போனேன்.

மறந்து போன ஏதார்த்தம்
இறந்து போன பின் நிதர்சனமாகிவிடுகிறது.

பிறந்தபோது இறப்பதை அறியமுடியவில்லை
இறந்தபோது பிறப்பதை அறியமுடியவில்லை

என்னை
புரிந்துக் கொள்ள வேண்டியதின்
நிலையை அடையும் போது
என்னை
தெரிந்துக் கொள்ளவேண்டியதின்
ஆரம்பத்தை அடைகிறேன்

February 19, 2011

ஆன்மா


உள்ளத்தாலும் உயிராலும்
நிறைந்திருக்கும் ஆத்ம தரிசனத்தை
உடலாலும் உதிரத்தாலும்
நிறம்பார்த்து மறைப்பது ஏன்?javascript:void(0)

பெண்ணியம்


எனது
வெறுமையான உடலுக்குள்
மிருகங்கள் துளிர்விட்டிருக்கின்றன.
பிறந்த மேனியின்
அங்கங்கள் எல்லாம்
நெருப்பின் ஜுவாலையில்
ஷ்பனிக் பறவைப் போன்று
மீண்டும் மீண்டும்
உயிர்பிக்கப்பட்டுள்ளது.

இருட்டடிக்கப்பட்ட
பிம்பங்களில் பெண்ணியம்
வேதனை முனகல்கலாக
ஈன சுரங்களில்
இசைப் பாடிக்கொண்டிருக்கிறது

காலதேவதையின்
முலங்கடிக்கப்பட்ட முலைகளில்
பெண்ணியம் வேராறுந்துக் கிடக்கிறது
கால வெள்ளத்தில் வருத்தம் தேய்ந்த
முகத்துடன் மூகாரிப்பாடிக் கொண்டிருக்கிறது.

February 18, 2011

மலேசியத் தமிழர்களின் இன்னல்கள்


காடுகளை களைந்தோம், காற்றாற்று வெள்ளத்தை கடந்தோம்.காடுகளில் கழனிகளை நட்டோம். நாடு வளம் பெற காடெங்கும் வீதிகள் அமைத்தோம். தண்டவாளங்களை போட்டோம். கப்பல்களில் பண்டங்களை இறக்கும் கூலி தொழிலாளியானோம். நமது முன்னோர்கள் சிந்திய வேர்வை துளிகள் உரமாகி நாடு சிறந்தது. அது ஒரு காலம்.

நமது தாத்தா பூட்டன்கள் பட்ட அவதிகள் கொஞ்சம் நஞ்சமில்லை. புலி சிங்கம் கரடிகளுக்கு பயந்து வாழ்ந்தார்கள்.பாம்புகளுக்கும் ஆணவ துரைமார்களுக்கு அஞ்சி வாழ்ந்தார்கள். நாம் ரப்பர் மரம் நட்டோம் அதிலே நமது உதிரத்தை உரிஞ்சி விட்டார்கள். நாம் செம்பனை மரம் நட்டோம், நமது கோவனத்தையும் உறுவிவிட்டார்கள். வேலைகள் வாங்கி நம்மை தோட்டத்திலே செக்கு மாடுகள் போல் நடத்தப்பட்டோம். அது ஒரு அடிமை வாழ்வு.

காலங்கள் உருண்டோடின. காடுகள் வளம் பெற்றன. நாடும் நலம் பெற்றன. ஆனால் தமிழர்களாகிய நாம் எதைதான் பெற்றோம்?.தென்றல் நம்மை தீண்டியது இல்லை. தீயைதான் நாம் அன்றாடும் மிதித்துக் கொண்டிருக்கின்றோம் நம் வாழ்வில்.ஒரு கவிஞன் சொன்னது போல், அன்று மரக்கன்றுகளை நடுவதற்கு குனிந்த தமிழன் இன்னும் தலை நிமிர வில்லை. தலை எடுக்கவும் முடியவில்லை.குனிந்தது குனிந்ததுதான் இன்னும் நம்மை குட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சிறைகளில் நாம் இல்லைதான் ஆனால் சிந்தனை சிறைகள் நமக்கு குடைப் பிடிக்கின்றன.சிலரின் ஆணவச் சிறைகளில் நம் சிறைவைக்கப்படுகின்றோம். மூடச் சமுதாயம் என்னும் அமைப்பின் வழியிலும் நாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளோம். நூறு பேரில் ஒருவர் சிறந்த அறிவாளியாகவும் பொருள் நிறைந்தவராகவும் இருக்கலாம்.ஆனால் சமுதாயத்தில் பெரும்வாரியானவர்கள் ஏழ்மை வாழ்க்கையும் அதைச் சார்ந்த சிந்தனையும் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.நாம் சுய சிந்தனை அற்றவர்களாகவும் மெத்தன போக்கும் கொண்டவர்களாக இருப்பதால் மற்றவர்கள் நம்மை மிதித்துக் கொண்டு அவர்கள் சுகமாக வாழ்கிறார்கள். இது சமுதாயத்தின் பலவீனம்.

அறிவு நம் இனத்திற்கு இல்லையா! என்று கேட்கத் தோன்றும். அறிவு இருக்கிறது, ஆனால் அறிவுக்கு விழி தரும் ஆத்மார்த்த ஒளியை உணர்வது குறைவுதான் என்றுதான் கூறவேண்டும். வேகம் இருக்கிறது, ஆனால் வீவேகம் குறைந்திருக்கிறது. கடும் உழைப்பு இருக்கிறது, ஆனால் உழைப்பின் பயனை அனுபவிக்கும் ஆற்றல் குறைந்திருக்கிறது. பவீனங்களை களைந்து பலத்தை பெருக்கினால் நமது சமுதாயம் சீர்ப்பெரும்.
அடிமை வாழ்வு நீங்கி சுகந்திர மலேசியாவில் நாம் சுகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோமா என்றால் பதில் நமக்கு சொல்லத் தெரியவில்லை. இன்னல்கள் நீங்கி இனிமை பொங்குபடி நாம் சுகந்திர வாழ்வு வாழ்கிறோமா என்றால் அதற்கும் விடையில்லை .

துங்கு ஒரு மிகச் சிறந்த அரசியல் அறிஞர்.அவர் அனைத்து இனத்தையும் இனைத்தார்,மதிப்பும் தந்தார்.ஆனால் அவருக்கு பிறகு வந்த தலைவர்கள் சிறிது சிறிதாக மாற்றுச் சட்டங்களை இயற்றி ஒரு சமுக கொடுமைகளை புரிந்தார்கள்.அதற்கு உச்சக் கட்டமாய் வந்து சேர்ந்தவர்தான் டாக்டார் மகாதீர் முகமாட். இந்திய ரத்தம் கலந்த இவர் ஒரேடியாக மலாய் மேலான்மையை கொண்டு வந்தார். அனைத்து துறைகளின் அவர்களின் பங்கு இருக்க வேண்டும் என்பதை சட்டங்களின் மூலமாக ஒருங்கினைத்துவிட்டார். சலுகைகள் எல்லாம் அரசியல் சாசனங்களாக மாறிவிட்டன.

நாடு எங்கும் பரவி இருந்த தமிழர் குடியிருப்புக்கள் நகர மேம்பாடு என்ற பெயரில் நீர்மூலமாக்கப்பட்டன. சிறுக சிறுக தமிழர் புறப்போக்கு வாசியாகிவிட்டனர். நாட்டு வளர்சியில் வழிவிடும் வகையில் அங்கிருந்தும் துரத்தி அடிக்கப்படுகின்றனர். ஆனால் மலாய் கம்பங்கள் எடுக்கப்படுவதில்லை. அவர்களிடம் இவர்கள் நெருங்கவும் முடிவதில்லை. மலாய் கம்பங்கள் உடைக்கப்பட்டன என்ற சரித்திரம் இல்லை. உடைக்கவும் அவர்களால் முடியாது. மலாய் என்ற சொல் கடவுளின் சமமான உயரத்தில் வைக்கப்பட்டிருகிறது. தங்க மூக்கோணம் என்று சொல்லப்படுகின்ற வியபார இடத்தில் அமைந்துள்ள மலாய் கம்பம்மான கம்போங் பாருவை அவர்களால் அகற்ற முடியவில்லை ஏன்? இந்திய சீன நிலங்கள் அபகரிக்க முடிந்த அவர்களுக்கு எத்தனைக் கோடி மதிப்புள்ள மலாய் நிலங்களை மேம்பாட்டுக்கு ஏன் எடுத்துக் கொள்ள முடியவில்லை.மகாதீர் காலத்தில் உருவக்கிய வலைப்பின்னல்தான் மேம்பாட்டு பணி என்று கூறி தமிழர் இடங்களில் இருந்து அவர்களை ஒழித்து கட்டுவதுதான்.
ஒர் அரசாங்கம் ஒரே சட்டம் ஆனால் சட்ட அமுலாக்கம் மட்டும் இன ரீதியில் மாறுபடுகின்றன. மக்களை இனம் பிரித்து ஏற்ற தாழ்வுகளை மக்களின் மனதினிலே பதிக்கின்றனர்.

சமுகம், மொழி , பொருளாதார உரிமைகள் அனைவருக்கும் சரிசமமாக பகிர்ந்தளிக்க வேண்டும். அது சரிசமமாக கிடைத்தால் ஏன் கூக்குரல் எழப்போகிறது? வாழுவதற்கு வழியிருந்தால் அவர்அவர் வழியில் அவர்கள் வாழப்போகிறார்கள். எப்படி இனப்பிரச்சனைகள் எழும்?

உரிமைகளை பறிக்கும் போதுதான், மனிதன் கிளர்ந்து எழுகின்றான்.தனது உயிர் நாடியை நெறிக்கும் போதுதான் அவன் ஆவேசமாக முரண்டு பிடிக்கிறான்.

February 12, 2011

பாடல் -என்ன தவம் செய்தேனடி தாயே


என்ன தவம் செய்தேனடி தாயே- நான்
என்ன தவம் செய்தேனடி தாயே x 2

உன் மடியில் மகனாய் பிறப்பதற்கும்
உத்தமனாய் வாழ்வதற்கும் - நான்
என்ன தவம் செய்தேனடி தாயே - நான்

என்ன தவம் செய்தேனடி தாயே- நான்
என்ன தவம் செய்தேனடி தாயே

புழுவாய் பிறக்காமல்
புண்னகை மாறாமல் - மகனாய்
பிறந்தளித்தேன் உன் மடியில் - தாயே

என்ன தவம் செய்தேனடி தாயே- நான்
என்ன தவம் செய்தேனடி தாயே

கருவினை வளர்த்து
கருனை மழை பொழிந்து
உணர்வினை ஊட்டி
உள்ளொளி பெருக்கி - தாயே...........

என்ன தவம் செய்தேனடி தாயே- நான்
என்ன தவம் செய்தேனடி தாயே


இருவினை அகற்றி
இன்பமழை பொழித்து
திருவினை தந்து - என்னை
ஜெகத்தினில் பிறந்தளித்து
அகத்தினில் சிறக்க வைத்தாய்- தாயே..........

என்ன தவம் செய்தேனடி தாயே- நான்
என்ன தவம் செய்தேனடி தாயே


பாடல் -என்ன தவம் செய்தேனடி தாயே
Copyright sk.manokaran

February 10, 2011

மண்னில் மலர்ந்த மா நிலாவு


கண்ணில் தெரிந்த வெண்ணிலா
கருத்தினை கவர்ந்த விண்ணிலா
மண்னில் மலர்ந்த மா நிலா
மனதினில் நிறைந்திடும் பெண்ணிலா

தேகம் எல்லாம் மின்னிடும்
தேனைப்போல சுவைத்திடும்
பாலாடைக்குள் உறைந்திடும்
பருவமேனி துளிர்ந்துவிடும்

காலங்கள் தோரும் களித்திட
காதல் முகம் மலர்ந்திட
சாதல் இல்லையடி பெண்னே
சரசங்களில் விழ்ந்துவிட்டால்

வேகம் விடைக் கொடுத்துவிடும்
வேதனை மடைத்தட்டிவிடும்
வீவேகம் நிறைத்திருந்தால்
விசயங்கள் புரிந்துவிடும்

பாடமென்னும் பருவக்கிளி
பள்ளியறையில் சொல்லும் மொழி
தேக சுகத்தினில் விழ்ந்துவிட்டால்
தேய்ந்துவிடுமா என்ன தேன் நிலவு?


ஆடல் விழி என்று சொன்னாலும்
அன்பு மொழி பகர்ந்திடு பெண்ணே
ஊடல் என்றும் கூடும்மளவுக்கு
கூடலுடன் ஆடிடு கண்ணே.

இன்பங்களின் நீறுற்று இல்லறம்
இனைந்து நீர் ராடிடு நல்லறம்
பண்புகளை காத்து நீ- நல்ல
பாவையராய் மிளிர்ந்திடு

February 7, 2011

புதுக்கவிதை


பூமாரி பொழியும்
புன்னகை பூக்கள்
புதிய வானமாய்
புறப்பட்டு விட்டது
புதுக்கவிதை,,,,,,,,


இடியும் மின்னலுமாய்
கவிதை வானத்தை
புரட்டிக் கொண்டிருந்தது
மரபுக்கவிதை.......

மாற்றங்களை தேடிய
மரபுக் கவிதை.......
மலர்களுக்குள் முட்களை
பிரசவித்திருக்கிறது.

கவிதை மழையில்
நனைந்த
மகிழ்ச்சியில்........
புதுக்கவிதை
புதுவெள்ளமாய்
புறப்பட்டிருக்கிறது.


இலக்கண மடையை
உடைத்த புதுக் கவிதை
அதற்கு இலக்குகள்
தேவையில்லை.

எதுகை மோனைகைகள்
வேண்டாம்
ஏதார்த்தம் இருந்தால்
போது.........
அலங்காரம் தேவையில்லை
அடிமனதை தொட்டால்
போதும்.........

எண்ணப்பறவைகளூக்கு
சிறைகள் வேண்டாம்
சிறகுகள் முளைத்தால்
போதும்...........அதற்குள்
வண்ணக்கவிதைகள் முளைக்கும்,,,,,,,
புதுக்கவிதை எங்கும் பூக்கும்.

February 5, 2011

இறைவன்

வானை படைத்துவிட்டான் இறைவன் - நல்ல
வளர்மதியை தவழவிட்டான் இறைவன்
ஊனை தந்துவிட்டான் இறைவன் -அதிலே
உயிரனையும் கலந்துவிட்டான் இறைவன்

காடும் மலையும்தந்த இறைவன் - நல்ல
கருனை பொழியும்மழையும் தந்துவிட்டான்
நாடும் வீடும் தந்த இறைவன் - அதிலே
நல்லோரையும் வாழவிட்டான் இறைவன்

ஒடும் கதிரவனைதந்த இறைவன் - நல்ல
ஒளிரும் வாழ்க்கையை ஈந்துவிட்டான்
சீரிப்பாயும் பறவையைதந்த இறைவன் - அதிலே
சிற்றறிவை வைத்துவிட்டான் இறைவன்


உதட்டினிலே மொழியைவைத்தான் இறைவன் - நல்ல
உள்ளத்திலே ஒளியை மறைத்துவைத்தான் இறைவன்
பள்ளத்திலே ஓடும் நதியை போல இறைவன் - அதிலே
பாசம் என்னும் ஊற்றினை வைத்தான் இறைவன்

பூவினில் தோனைவைத்த இறைவன் - நல்ல
பூமியில் கொட்டும் தேனீயை வைத்தான்
பாரினில் மாந்தரை படைத்து- அதிலே
பகுத்தறிவை மறைத்து வைத்தான் இறைவன்