January 6, 2011

இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன?சாதியை, கூவிக்கூவி விற்றதில் கூவம் நதியானார்கள் தமிழர்கள்

தமிழர்களின் தன்மானம் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன.மலாய் இலக்கியத்தில் பாடப்புத்தகமாக இண்டர்லோக் நாவல் தமிழர்களின் தன்மான உணர்ச்சியை கிளறிவிட்டிருக்கின்றன என்றுதான் கூறவேண்டும். தமிழர்கள் வாய் கிழிய கத்தினாலும் காத்துக் கத்து கத்தினாலும் எதற்கும் புரியோஜனம் இல்லை காரணம் தமிழர்களின் அரசியல் பலமும் பொருளாதார பலமும் அப்படி.

தமிழர்களை அடித்தாலும் மிதித்தாலும் கேட்பதற்கு ஒரு நாதியும் இல்லை என்பதால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரணாய் மாறியிருக்கின்றனர்.இந்திய சமுதாயத்தை அதுவும் குறிப்பாக தமிழ் இனத்தை மட்டம் தட்டி பேசுவதே இவர்களுக்கு வேலையாகி போய்விட்டது.

பெர்காசாவின் தலைவன் ஹிட்லர் இப்ராகிம் அலி கூட வரிந்துக் கட்டிக் கொண்டு அதில் என்ன இருக்கிறது ? ஏன் இவர்கள் இப்படி கூச்சல் போடுகிறார்கள் என்று கேட்டிருக்கின்றான்.நாம் சொல்லும் நியாயங்கள் இவர்களுக்கு கூச்சலாகிவிடுகிறது. பேனா என்ற மலாய் இலக்கிய மன்றம் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் தாங்களும் ஆர்ப்பாட்டம் செய்ய முடியும் என்று ஆணவமாக பேசியிருக்கின்றனர்.

உண்மையில் சில நிகழ்வுகளை பார்க்கும் போது திறைமறைவில் சில நிகழ்ச்சி நிரல் பின்னப்பட்டு இருக்கும் என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.கடந்த வருடத்தில் இருந்து இந்தியர்களை தரம்குறைவாக பேசுவது அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. இது யாரால் பின்னப்பட்ட வலை என்று ஊகிக்க முடிகிறது. பெரும்பாலும் இன்றைய ஆளும் அரசாங்கத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உயர்ப் பதவியல் இருப்பவர்களின் ஆணவமான இன உணர்வு பேச்சுகளின் ஏற்கனவே நெந்து போயிறுக்கும் தமிழர்களுக்கு மறுபடியிம் ஒரு பெரிய இடி விழுந்து இருக்கிறது இண்டர்லோக் என்னும் மலாய் இலக்கிய நூலில் இருந்து.

இலக்கியம் என்பது என்ன? வாழ்க்கை நெறிகளை போதிக்கும் ஒரு வழிதடம் தான். அந்த வழித்தடத்தில் ஏற்படும் சமுக சுழல்கள்,வாழும் நெறிகள்,மன உணர்வுகள்,அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அதன் தீர்வுகள் என காலக் கண்ணாடியில் காட்டும் ஒரு சமுக பிம்மம்தான் இந்த இலக்கியம். ஆவர் அவர் மனக்குப்பைகளை ,இன விரோதங்களை கொட்டி தீர்க்கும் இடம் அல்ல இலக்கியம். இப்படி குப்பை இலக்கியத்தை படைக்கும் இது போன்ற கபோதிகளுக்கு டத்தோ பட்டம் வேறு. என்ன கொடுமை சார்? இது ஒரு நன்கு திட்டமிட்ட இன துவேசம் என்பது வெள்ளிடை மலையாக தெரிகிறது.அரசங்கதின் ஆதரவு இல்லாமல் இவர்கள் எல்லாம் இவ்வளவு துணிவு எங்கிருந்து வரும்?

ஒன்றுப்பட்டு இண்டராப் மூலம் அரசாங்கத்தை அசைத்துகாட்டிய இந்தியர்களை அழித்தொழித்து அவமானப்படுத்தும் ஒரு முயற்சியாகவே எனக்கு படுகிறது. ஆளும் வர்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதிலும் மற்றும் இந்தியர்களை சாதி அடிப்படையில் பிரித்து வைத்து அதிகாரத்தை முன்னேடுப்பதற்கு ஒரு முயற்சியாக கூட இருக்கலாம்.

ஆங்கிலேயர்கள் தமிழர்களை எந்த வகையில் அடிமைக் கொண்ட்டார்களே அந்த வழியில் இந்த அராசங்கம் இண்டர்லோக் நாவல் வழியாக முயற்சிக்கிறது என்றே தோணுகிறது.
அப்படி இந்த நாவலை ஏற்றுக் கொண்டால், மலாய் இலக்கியம் படிக்கும் அந்த மாணவன் தனது தந்தையிடம் அல்லது தாயிடமோ சாதிகளை பற்றி விளக்கம் கேட்கும் நிலைவரலாம்.இது நாள் வரைக்கும் குறைந்து காணப்பட்ட வர்க ஏற்ற தாழ்வுகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம், அல்லது கண்ணில் படும் இந்திய மாணவர்களை அணைவரையும் ஒரு சாதி பெயர்ச் சொல்லி அழைக்கும் நிலை வரலாம். இது வர்க ஏற்ற தாழ்வுகளை மாணவர்களிடையே வேர்விட்டு ஆளமாக பதிக்கும் ஒரு முயற்சியாகும்.

இங்கு ஆச்சிரியம் என்னவேன்றால் பள்ளி பாடப்புத்தகங்கள் ஏற்பது என்பது சட்டென்று எடுக்கும் முடிவுகளாக இருக்காது.அது ஒரு வருடத்திற்கு முன் அல்லது சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவுகளாகத்தான் இருக்கும். நமது மஇகா கல்வி வாரியம் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்.? அவர்கள் கிடைக்கிறார்கள் சுண்டைக்காய், நான் ஒரு வெண்டைகாய் என்று துங்கிவிட்டார்களே என்று தெரியவில்லை. புத்தகம் பள்ளிக்கு சென்று அடையும் வரைக்குமா கும்பகரண தூக்கம்? தூங்கிவழியும் ம இ கா என்னத்தை சாதிக்கப் போகிறது?

சாதி என்ற பெயரில் நமது சகோதர தமிழர்களை நாமே இழிவுபடுத்தியதில் இன்று அதன் பலனை ஒட்டு மொத்த தமிழினமே அவமானப்படுகிறது. மற்ற இனத்திலும் அதே போன்ற பிரிவுகள் உண்டு. ஆனால் நாம் காட்டிக் கொடுத்ததை போல் அவர்கள் யாரும் தன் இனத்தை காட்டிக் கொடுக்கவில்லை. நம்மினத்தை சார்ந்த ஒரு பிரிவின் பெயர் அவமானப் பட்டது போல் உலகில் வேறு எந்த இனத்தின் கிளைப்பிரிவு அவமானப்படவில்லை, அவர்களின் பெயர் புத்தகத்தில் பொறிக்கப்படவில்லை என்று அடித்துக் கூறலாம்.

நமது முன்னோர்கள் செய்த தவற்றை நாமும் செய்தால் நமது எதிர்கால சந்ததியினர் நம்மை மண்ணிக்க மாட்டர்கள். காட்டிக் கொடுக்கும் இனமாக நாம் இருக்கக்கூடாது. உரிமைகளை வேண்டி போராடும் இனமாக தமிழ் இனம் உருவாகவேண்டும். என்ன செய்வது? மொழி மானத்தை விட ,இன மானத்தை விட தமிழனுக்கு குல மானம் பெரிதாக போய்விட்டது. இண்ராப் போன்ற சக்திகள் நம்மை இணைத்திருக்கின்றன.பிரிவினைகளை நாடி நாம் நமது பலத்தினை இழக்கக்கூடாது.

சாதியை, கூவிக்கூவி விற்றதில் கூவம் நதியானார்கள் தமிழர்கள்
சாதி சாதியென்று மதிக்கெட்டு சாக்கடையில் விழ்ந்தார்கள் தமிழர்கள்.
Post a Comment