January 27, 2011

முற்றிய காதலில் தள்ளாடும் மாது


பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே தேன் கொடு
நிம்மதியாய் உறங்க விடு

அவளை தொட்டுவிட
உறவுகள் துவண்டு விடும்
பாவை பற்றிக் கொள்ள
பருவம் தூது விடும்

சிரித்தால் முத்து சிதறி விடும்
வாய் திறந்தால் தேன் சிந்தி விடும்
அனைத்தால் இளமை பொங்கி விடும்
ஆனந்த இரவு தங்கி விடும்

January 26, 2011

வெள்ளி நிலவென சொல்லு தமிழே! கிள்ளினால் சிவந்துவிடும் - அவள் குங்குமச்சிமிழ் என்று சொல்லு தமிழே!நீயாடும் சோலையிலே
என் நெஞ்சமல்லாம் மஞ்சமாக
நீ முகிழ்ந்தேடுக்கும் ஓடையில்
என் மனமெல்லாம் தத்தளிக்க.........

வான் மழையெல்லாம் தீர்த்தமாக
வார்த்தையேல்லாம் அமிர்தமாக
வான் நிலவு தவழ்ந்து வர
வஞ்சி உன் முகம் மலர்ந்துவர..........

கல்லுண்ட வண்டா நீ
கடித்தாலும் இன்பச்சுவை
கவிபாடும் தமிழ் கருவண்டா?
கருவிழித் கவிதை மொழி தேனோ?

January 24, 2011

படித்ததில் பிடித்தவை - மலேசியத் தமிழர் வாழ்வியல்


மலேசியத் தமிழர் தந்த அருந்தமிழ்ச் சொற்கள் என்பவை மலேசியாவின் தோட்டப்புறத் தமிழ் மக்களின் வழக்கிலிருக்கூம் சில தமிழ்ச் சொற்கள் பற்றியதாகும்.

வரலாறு

தமிழர்கள் இந்நாட்டிற்கு இரு நூறாண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டனர். தமிழரின் உலகப் பரவலை ஆய்வு செய்தால்கண்டறியும் நோக்கில் புதிய இடத்தில் பரவல், கடற் கோளின் கொடுமையால் புதிய இடங்களை நோக்கிப் பரவல்,வணிக நிமித்தமாக சென்று பரவல்,ஆட்சி அதிகாரங்கள் நிமித்தமாகப் பரவல், பிழைப்பு நிமித்தமாக பரவல்,போர் நிமித்தமாகப் பரவல், என்று பலவகையாகப் பிரிக்கலாம்.

இம்மலைத் திருநாட்டிற்கு வந்த தமிழர்கள் பிழைப்பு நிமித்தமாக வெள்ளையரால் கொண்டுவரப் பட்டவராகவே கருதப்படுகின்றனர். இவ்வாறு கொண்டு வரப்பட்டவர்கள் முன்பின் அறியாத இடங்களில் முன்பின் அறியாத தொழிலுக்காக கூட்டம் கூட்டமாக குடியமர்த்தப் பெற்றனர்.

அன்றைய வெள்ளையர்களுக்கு இவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி இருந்ததே ஒழிய இவர்களின் குமுகாய அமைப்பு முறையைச் சிதறடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. தமது வணிக நோக்கிற்காக மட்டுமே இவர்கள் மீது அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர் எனலாம். அந்த வணிகச் சிந்தனைக்கு முரணான ஓர் இனத்தின் அடிப்படைக் கூறுகளை அவர்கள் எதிர்த்தனர். ஆனால், இன அழிப்பு நோக்கம் அவர்களுக்கிருக்கவில்லை.
எனவேதான் முதலாளிய மேலாண்மை இருந்த சூழலிலும் தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு தமிழ்மக்களால் தடையின்றி பேணப்பட்டன எனலாம்.

இத்தகு நிலையில்தான் முதலாளிய வெள்ளையருக்கு உழைத்த தமிழ் மக்கள் குமுகாய கட்டமைப்பு சிதறாமல் தோட்டப்புறங்களில் வாழ்ந்தனர்.

ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற வகையில் ஒன்றுப்பட்ட தமிழ் மக்கள் ஒரே இடத்தில் வாழுகின்ற பொழுது தாங்கள் பேணி வந்த பழக்க வழக்கங்களையும், மொழி வழக்கங்களையும் மறவாமல் பேணிக் காக்கலாயினர். அனைத்து வகையான விழா நிகழ்வுகளிலும் அவர்களின் அடிப்படையான மரபுகள் பேணப்பட்டன.

இவற்றுள் மொழிப் பேணலை முகாமையான ஒன்றாகச் சொல்லலாம். கற்றவரை விட கல்லாதவராய் மரபுவழி வாழ்ந்த தோட்டப்புற மக்கள் தமிழின் நிலைப்பாட்டுக்கு ஆற்றிய இயல்பான பங்களிப்புகள் இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது வியக்கத் தக்கவனாக உள்ளன.

இத்தோட்டப்புற மக்கள் புதிய சூழலில் தாங்கள் முன்பின் அறியாத ஒரு தொழிலை மேற்கொண்ட பொழுது, அத்தொழிலை ஒட்டிய பல்வேறு பொருள்களுக்கு பெயர் வைக்க சொல்லைத் தேடி அலையவில்லை. இவர்கள் உருவாக்கிக் கொடுத்த பன்னூற்றுக் கணக்கான சொற்களுக்கு வேர் மூலம் தமிழ் மண்ணில் தோன்றியதாக இருக்கலாம். ஆனால், அவ்வேர்ச் சொற்களையும், மூலச் சொற்களையும் அடிப்படையாகக் கொண்டு புதிய பொருளுக்கு பொருந்த பொருளுரைத்ததும் சொல்லமைத்ததும் எண்ணிப் போற்றத் தக்கதாகும். அவற்றுள் சிலவற்றை இங்குக் காண்போம்.

• ஒட்டுப் பால் அல்லது கோட்டுப் பால்
• கட்டிப்பால்

கோட்டில் வழிந்தோடும் பால் கீழிறங்கி வடிகுழாயின் வாயிலாக பால் குவளையில் வந்து நிறையும்; இவ்வாறு நிறைந்த பாலை எடுத்த பின் மீண்டும் வைக்கப்படும் குவளையில் வடிந்து காய்ந்து போகும் பாலையே கட்டிப்பால் என்றனர். பால் எடுத்த பின்பு வடிகின்ற பால் வடிபால் என்றும் அவ்வடிபால் காய்ந்து போனால் கட்டிப்பால் என்றும் அழைக்கப் பெற்றது. கட்டிப்பாலை எடுப்பதற்கு மங்கு துடைப்பார்கள். கட்டிப்பாலை எடுக்கும் வேளையில் கோட்டுப் பாலையும் உருவி, கீழே கிடக்கும் குச்சியை எடுத்துக் கட்டி தூண்டில் போடுவார்கள்.

• ஏணிக் கோடு அல்லது கழுத்துக் கோடு

உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்தவராய் காடு மேடெல்லாம் சென்று மரம் வெட்டி காண்டா கம்பு கொண்டு இரு முனைகளிலும் வாளிகளில் பால் நிரப்பி தோள்களில் சுமந்து நெடுந்தொலைவு எம் அன்னைமார்கள் நடந்து சென்று பெரிய தோம்புகளில் ஊற்றுவர். அந்தக் காண்டா கம்புகளின் இரு முனைகளிலும் கொக்கிக் கம்பிகள் இருக்கும்.
நெற்றி விளக்கை நெற்றியில் கட்டிக்கொண்டு, தீட்டுக் கல்லில் தீட்டப்பெற்ற சுணை மிகுந்த மரஞ்சீவும் கத்திகளையும் எடுத்துக் கொண்டு பேர் கொடுத்து விட்டு வேலைக்குச் செல்வர்.
அவர்கள் மரம் சீவும் பொழுது சில மரங்களில் கீழ்க்கோடு இருக்கும் சில மரங்களில் கழுத்துக் கோடு இருக்கும். கழுத்தளவு நிமிர்ந்து சீவுவது கழுத்துக்கோடு எனப்பட்டது. கழுத்துக்கும் மேலே இருக்கும் வெட்டுகளுக்கு ஏணி தேவைப்பட்டது. எனவே ஏணி வைத்து ஏறி மரஞ் சீவீனர். இதற்குப் பெயர் ஏணிக் கோடு.
• நிரை
நான் மூன்றாவது நிரையில் மரம்வெட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென்று கங்காணி வந்துவிட்டார்; நீர் - நேர் நீர் - நீரல் - நிரல் நீர் - நீரை - நிரை நிரல் = வரிசை எ.கா. நிகழ்ச்சி நிரல் நிரை = பத்தி

o வரிசை வரிசையாக ஒழுங்குடன் அமைக்கப்பெற்ற சொற்றொடர் தொகுப்பு
o நேர் நேராக ஒழுங்குடன் நடப்பெற்ற மர வரிசை;
• வேலைக்காடு:

வேலைக்குச் செல்லும் இடத்தை வேலைக்காடு என்றனர்; வேலைக்காடு காடாக இருந்ததனாலா? காடு அடர்ந்த பகுதி அவர்கள் வேலை செய்த இடம் என்பதால் வேலை செய்யும் இடத்தை வேலைக்காடு என்றனர்.

இவ்வாறு ஆய்வு செய்கின்ற பொழுது நம் தோட்டப்புற மக்கள் வகுத்து தொகுத்துக் கொடுத்த தூய தமிழ் கலைச் சொற்கள் பன்னூற்றுக் கணக்கானவை.

• சாமக்காரன்
• ஓடும்பிள்ளை
• நடுகாட்டான்
• ஆலை
• புகைக்கூண்டு
• ஒட்டுக்கன்று
• தவரணை
• கான்
• வாய்க்கால்
• செம்பனை
• எண்ணெய்ப்பனை
• அந்தி வேலை
• பசியாறல்
• தொடுப்பு
• ஓம்பல்
• திரட்டி
• தொங்கல்
• தண்டல்
• நாட்டாண்மை
• வெட்டியான் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்று இச்சொற்களை எல்லாம் நாம் இழந்து வருகின்றோம். காலம் மாறுகின்றது; மக்கள் வாழ்க்கை முறை மாறுகின்றது; அவர்களின் சூழலும் மாறுகின்றது.
பழக்க வழக்கமே மொழி வளர்ச்சிக்கு முதன்மை காரணம் என்பாரும் அறிவின், மனத்தின் முதிர்ச்சியே மொழி வளர்ச்சி என்பாரும் முரண்பட்டு வழக்காடியதுமுண்டு. சுக்கின்னர் என்பாரும் நோம் சோம்சுகியும் இவ்வகையில் முரண்பட்டு நின்றனர். இவ்வகையில் சுகின்னரின் கருத்தும் சோம்சுகியின் கருத்தும் தமிழரைப் பொருத்தவரை பொருந்த கூடியதாகும்.

இருபது முப்பது ஆண்டுக்கு முன் இருந்த தோட்டப்புற சூழ்நிலைகள் மாறி புதிய சூழ்நிலைகளில் பணியாற்றுகின்றவராய் இன்றைய பெரும்பான்மை தமிழர்கள் வாழ்கின்றனர். ஒரு காலத்தில் புதிய சூழ்நிலைகளில் வாழ்ந்தாலும் அச்சூழ்நிலைக்குரிய தமிழ்ச்சொற்களை தமிழ் மக்கள் உருவாக்கினர்.

பேராக்கில் கூலா தோட்டம் என்றொரு தோட்டம் இருக்கிறது. இங்கு சென்பனைத் தோட்ட வாய்க்கால்களில் சேற்றை வாரும் எந்திரத்திற்கு சேற்றுக் கப்பல் என்று தோட்டப்புற மக்கள் பெயரிட்டு அழைக்கின்றனர்; செம்பனைக் கன்றுகளும் பால் மரக்கன்றுகளும் பயிரிடப்பெற்று பேணப்படும் இடத்திற்குப் பெயர் தவரணை; சாலை வளைவு ‘முடக்கு' என்று அழைக்கப்பெற்றது. நாட்டிலுள்ள எல்லா தோட்டங்களிலும் இந்நிலையே. எடுத்துக்காட்டுக்குச் சில சொற்களைக் காணலாம்.

குச்சு = குடியிருப்புப் பகுதி - யாவாக்குச்சு பச்சைக்காடு = அடர்ந்த காடு பொட்டல் = காட்டில் நடுவே தென்படும் வெளிப்பகுதி பொட்டு = பால்மார வெட்டுகளின் அளவைக் குறிக்க வைகப்படும் குறியீடு. மயிர் முளைத்தான் = இரம்புத்தான் (மயிர் முளைச்சான்) திரட்டி - திரட்டு = பூப்படைந்த பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்கு கம்பிச் சடக்கு = தண்டவாளம் வழிமறித்தான் = இரவு நேரங்களில் வழிகளில் நிற்கும் பறவை (வழிமறிச்சான்) கால்கட்டை = கட்டையால் செய்யப் பெற்று கால்களில் அணியும் காலணி ஆட்டுக்கல் = இட்டலி, தோசை செய்வதற்காக அரிசியை குழைய ஆட்டி அறைக்கும் கல் எந்திரக்கல் = வறுத்த அரிசியை மாவாக அறைக்கும் கல் மத்து = கீரைகளை கடைவதற்குப் பயன்படுத்தப்படுவது.
இப்படியாக எத்தனையோ சொற்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இங்கு சொல்லப் பெற்ற சில கருவிகளும் பெயர்களும் பழம்பொருள்களாகி விட்டன. வீடுகளில் பயன்படுத்தமையால் அறியப்படாத பொருள்களாகியும் விட்டன. சொற்களும் மறையுண்டு வருகின்றன. மலேசியாவில் தோட்டப்புற மக்கள் பாதுகாத்து வந்த அருந்தமிழ்ச் சொற்கள் பன்னூற்றுக் கணக்கானவை.

நன்றி...powered by Sevenval wikipedia

January 20, 2011

மனம் என்னும் மாயக்கண்ணாடி


எனக்குள்
ஒரு பிம்பம்
இருக்கிறது......
அது மகத்தான
ஜீவனாய் வாழத்துடிக்கிறது.
எதையும் சமாளிக்க முயல்கிறது.
வாழ்க்கையின்
இன்ப துன்பங்களை
எடைபோடுகிறது

அது
என் வாழ்க்கை
நாளங்களை
அக்குவேறாக ஆணிவேறாக
பிரித்து போட்டு
உண்மைகளை
உணரப்பார்கிறது.

எல்லா சுகத்தையும்
அனுபவிக்க ஆசைப்படுகிறது
புது புது விசயங்களை
கற்றுக் கொள்ள
ஆசைப்படுகிறது

எதையும் உருவாக்கும்
சூட்சமத்தை பெற்றிருக்கிறது
எதையும் அழிக்கும்
வல்லமையையும் பெற்றிருக்கிறது.


அசாதாரண தெய்வ சக்தி
அதற்குள் அட்க்கொண்டிருக்கிறது
அது ஒரு ஆக்கும் சக்தி

லச்சியத்தை நோக்கி
என்னை நகர்த்து
இழுவை பொறி
என் பாதையை
செப்பனிடும் யாந்திரம்

வாழ்வில்
ஒரு நிதானம்
கட்டுப்பாடு
சமநிலை
உணர்தும்
மாயக்கண்ணாடி
மனம் என்னும் பிம்மம்

January 10, 2011

சிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம்

சிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம்

நேற்று மாலை 5 மணியில் இருந்து தொடங்கி 7 மணி வரைக்கும் குண்டலினி யோக மன்றமான மனவள கலை மன்றதில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. அம்மா நாகம்மாளின் வழிக் காட்டலில் நடத்தப்பட்ட அந்த பயலரங்கத்தில் பல அரிய கருத்துக்களை அம்மா நாகம்மாள் எடுத் வழங்கினார்.. உயரிய உயிர்ப்பயற்சியான காயக் கல்பம் என்ற அந்த பயற்சியின் மகிமையும் அதன் வழிமுறைகளை சொல்லித்தந்தார்.

மனித இனத்திற்கு சித்தர்கள் கலையான இக்கலையை வேதாத்திரி மகரிஷி நமக்கு விட்டு சென்றுள்ளார்.
1.நிலைத்த உடல் நலம்
2.நீண்ட ஆயுள்
3.நீடித்த இளமை
4.நிகரில்லா ஆன்மீக மேம்பாடு.

இவை அனைதயும் நல்கும் அற்புதக் கலை காயகல்பம் என்ற உயிராற்றல் பயற்சி.
காயம் என்றால் உடல் என்றும் கல்பம் என்றால் அழிவின்மை என்று பொருள். தென்நாட்டுச் சித்தர்கள் கண்டறிந்த அற்புதக்கலை இந்த காயகல்பம்.

1.முதுமையை ஏற்படுவதில் இருந்து தடுத்தல்
2.இளமையை மற்றும் உடல் நலத்தை நிலை நிறுத்தல்
3 ஆன்மீக நிறைவினை எய்தும் வரை மரணத்தை தள்ளிப் போடுதல்.

காயகல்பப் பயிற்சியின் சிறப்பான பலன்கள்
1.விந்து நாதம் கெட்டிப்படு, உடலினது சக்தி ஓங்குகிறது. காம உணர்வுகள் மனதின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகின்றன.
2 மனதிற்கு ஒழுக்க உணர்வும் அறிவுக்குக் கூர்மையும் கிட்டுகின்றன.
3 நீண்டகால நோய்களும் கட்டுப்படுகின்றன. காலத்தால் நீங்கியும் விடுகின்றன.
4 ஆன்மீக உணர்வும் மேலோங்கி,இறைநிலையை நோக்கி மனம் உயர்கிறது.
5 இப்பயற்சி செய்து வருவதனால், வேண்டும் போது மகப்பேறு பெறவோ, தள்ளிப்போடவோ, வேண்டாம் என்றால் தடுத்துக் கொள்ளவோ முடியும்
6 திருமண வாழ்வினை ஏற்காது பொதுத் தொண்டில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் துறவிகள் போன்றோர்க்கு இப்பயற்சி பேருதவியாக சமையும். அவர்களது எண்ணங்கள் சலனமடையாமல், மனம் ஒருமுகப் படுத்தப்படுவதை அனுபவ ரீதியாக அவர்கள் காணலாம்.

காயகல்பம் மனித குலத்துக்கு கிடைத்துள்ள வரப்பிர்சாதம் ஆகும். உடல் நலமும், மன நலமும் காக்கும் காயகல்பமானது ஆன்மீக மூன்னேற்றதிற்கு வழிகாட்டியாகும். இது முதுமையை முறியடிக்கும் அமுதமாகும். இனம், மதம் மொழி, சாதி பால் வேறுபாடுகள் கடந்து அனைவரையும் இன்ப நல் வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் ஒளி விளக்கு இந்த காயகல்பம்.

இந்த பயற்சியில் கலந்துக் கொண்ட சில அன்பர்களின் படங்கள் இங்கு.

January 7, 2011

வாழ்க 1 மலேசியாவின் கரு(ற்)பு கொள்கைகற்புக்கரசி கண்ணகியை இன்றளவும் போற்றிக் கொண்டிருக்கின்றோம். களவு ஒழுக்கத்தை இன்றளவும் ஏற்றிப் போற்றுகின்றோம். வள்ளுவன் கற்பிற்கு இலக்கணம் வகுத்தான்.இளங்கோ காப்பியம் படைத்தான்.ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர் வாழ்க்கை நெறி தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒப்பில்லாதாது, உயர்வானது.

காடுகளில் வாழ்ந்தவர்களுக்கு கற்பின் அருமை எங்கே தெரிய போகிறது. நாடோடிக் கூட்டங்களாய் கடலிலே அலைந்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஒருவன் ஒருத்தி என்ற பண்பாடு எங்கே விளங்கப்போகிறது? கொடுரங்கள் நிறைந்த கடற் கொள்ளையர்களாய் திரிந்தவர்களுக்கு எங்கே களவொழுக்கம் தெரியப்போகிறது?

கணவன் இறந்தால் மறு நாளே மறுமணப் புரியும் இவர்களுக்கு எங்கே கற்பின் மகிமை புரியும்.? மனைவி இருக்கும்போதே பல பெண்களிடம் வரம்பு மீறும் பண்பு கெட்டவர்கள்.வார்த்தையில் மட்டும் ஒழுக்கம் ஒழுக்கம் என்று பேசி அடுப்புக்கடியில் புகுந்துக் கொள்ளும் இவர்களுக்கு நமது பெண்களின் கற்பை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.?
அன்றிலிருந்து இன்றுவரை கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கற்பின் பெருமை பாடும் நமது பெண்களின் முன் இந்த ஈனப்பிறவிகளின் கடும் சொல்தான் எடுப்படுமா என்ன? அறிவுக் கெட்டவர்கள்
!

இந்த முட்டாளின் இலக்கியத்தை படித்து இந்த இளம் மலேசிய மாணவர்கள் முழு முட்டாளாகத்தான் போகிறார்கள்.கிறுக்கு பயமவன் எழுதனதை படித்து கிறுக்கு பிடித்துதான் அலையப்போறனுங்க. அனைத்து பெருமையும் இந்த அரசாங்கத்துக்குதான் சாரும். அதை விட அறிவின் சுரங்கம் மலேசிய கல்வி அமைச்சர் அவர்களுக்கும் ஒரு 0 பேடுவோம் வாங்க. தடைசெய்யாமல் பரிசலனை செய்வோம் என்று பெருந்தன்மையுடன் கூறிய துணைப்பிரதமருக்கும் ஒரு 0 போடுவோம் வாங்க! அதித அறிவளியான அன்பும் பண்பும் நிறைந்த அந்த எழுத்தாளனுடைய டத்தோ பட்டத்தை வாங்காமல் விட்ட அனைவருக்கும் ஒர் 0 போடுவோம் வாங்க!

வாழ்க 1 மலேசியா.

January 6, 2011

இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன?சாதியை, கூவிக்கூவி விற்றதில் கூவம் நதியானார்கள் தமிழர்கள்

தமிழர்களின் தன்மானம் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன.மலாய் இலக்கியத்தில் பாடப்புத்தகமாக இண்டர்லோக் நாவல் தமிழர்களின் தன்மான உணர்ச்சியை கிளறிவிட்டிருக்கின்றன என்றுதான் கூறவேண்டும். தமிழர்கள் வாய் கிழிய கத்தினாலும் காத்துக் கத்து கத்தினாலும் எதற்கும் புரியோஜனம் இல்லை காரணம் தமிழர்களின் அரசியல் பலமும் பொருளாதார பலமும் அப்படி.

தமிழர்களை அடித்தாலும் மிதித்தாலும் கேட்பதற்கு ஒரு நாதியும் இல்லை என்பதால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரணாய் மாறியிருக்கின்றனர்.இந்திய சமுதாயத்தை அதுவும் குறிப்பாக தமிழ் இனத்தை மட்டம் தட்டி பேசுவதே இவர்களுக்கு வேலையாகி போய்விட்டது.

பெர்காசாவின் தலைவன் ஹிட்லர் இப்ராகிம் அலி கூட வரிந்துக் கட்டிக் கொண்டு அதில் என்ன இருக்கிறது ? ஏன் இவர்கள் இப்படி கூச்சல் போடுகிறார்கள் என்று கேட்டிருக்கின்றான்.நாம் சொல்லும் நியாயங்கள் இவர்களுக்கு கூச்சலாகிவிடுகிறது. பேனா என்ற மலாய் இலக்கிய மன்றம் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் தாங்களும் ஆர்ப்பாட்டம் செய்ய முடியும் என்று ஆணவமாக பேசியிருக்கின்றனர்.

உண்மையில் சில நிகழ்வுகளை பார்க்கும் போது திறைமறைவில் சில நிகழ்ச்சி நிரல் பின்னப்பட்டு இருக்கும் என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.கடந்த வருடத்தில் இருந்து இந்தியர்களை தரம்குறைவாக பேசுவது அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. இது யாரால் பின்னப்பட்ட வலை என்று ஊகிக்க முடிகிறது. பெரும்பாலும் இன்றைய ஆளும் அரசாங்கத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உயர்ப் பதவியல் இருப்பவர்களின் ஆணவமான இன உணர்வு பேச்சுகளின் ஏற்கனவே நெந்து போயிறுக்கும் தமிழர்களுக்கு மறுபடியிம் ஒரு பெரிய இடி விழுந்து இருக்கிறது இண்டர்லோக் என்னும் மலாய் இலக்கிய நூலில் இருந்து.

இலக்கியம் என்பது என்ன? வாழ்க்கை நெறிகளை போதிக்கும் ஒரு வழிதடம் தான். அந்த வழித்தடத்தில் ஏற்படும் சமுக சுழல்கள்,வாழும் நெறிகள்,மன உணர்வுகள்,அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அதன் தீர்வுகள் என காலக் கண்ணாடியில் காட்டும் ஒரு சமுக பிம்மம்தான் இந்த இலக்கியம். ஆவர் அவர் மனக்குப்பைகளை ,இன விரோதங்களை கொட்டி தீர்க்கும் இடம் அல்ல இலக்கியம். இப்படி குப்பை இலக்கியத்தை படைக்கும் இது போன்ற கபோதிகளுக்கு டத்தோ பட்டம் வேறு. என்ன கொடுமை சார்? இது ஒரு நன்கு திட்டமிட்ட இன துவேசம் என்பது வெள்ளிடை மலையாக தெரிகிறது.அரசங்கதின் ஆதரவு இல்லாமல் இவர்கள் எல்லாம் இவ்வளவு துணிவு எங்கிருந்து வரும்?

ஒன்றுப்பட்டு இண்டராப் மூலம் அரசாங்கத்தை அசைத்துகாட்டிய இந்தியர்களை அழித்தொழித்து அவமானப்படுத்தும் ஒரு முயற்சியாகவே எனக்கு படுகிறது. ஆளும் வர்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதிலும் மற்றும் இந்தியர்களை சாதி அடிப்படையில் பிரித்து வைத்து அதிகாரத்தை முன்னேடுப்பதற்கு ஒரு முயற்சியாக கூட இருக்கலாம்.

ஆங்கிலேயர்கள் தமிழர்களை எந்த வகையில் அடிமைக் கொண்ட்டார்களே அந்த வழியில் இந்த அராசங்கம் இண்டர்லோக் நாவல் வழியாக முயற்சிக்கிறது என்றே தோணுகிறது.
அப்படி இந்த நாவலை ஏற்றுக் கொண்டால், மலாய் இலக்கியம் படிக்கும் அந்த மாணவன் தனது தந்தையிடம் அல்லது தாயிடமோ சாதிகளை பற்றி விளக்கம் கேட்கும் நிலைவரலாம்.இது நாள் வரைக்கும் குறைந்து காணப்பட்ட வர்க ஏற்ற தாழ்வுகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம், அல்லது கண்ணில் படும் இந்திய மாணவர்களை அணைவரையும் ஒரு சாதி பெயர்ச் சொல்லி அழைக்கும் நிலை வரலாம். இது வர்க ஏற்ற தாழ்வுகளை மாணவர்களிடையே வேர்விட்டு ஆளமாக பதிக்கும் ஒரு முயற்சியாகும்.

இங்கு ஆச்சிரியம் என்னவேன்றால் பள்ளி பாடப்புத்தகங்கள் ஏற்பது என்பது சட்டென்று எடுக்கும் முடிவுகளாக இருக்காது.அது ஒரு வருடத்திற்கு முன் அல்லது சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவுகளாகத்தான் இருக்கும். நமது மஇகா கல்வி வாரியம் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்.? அவர்கள் கிடைக்கிறார்கள் சுண்டைக்காய், நான் ஒரு வெண்டைகாய் என்று துங்கிவிட்டார்களே என்று தெரியவில்லை. புத்தகம் பள்ளிக்கு சென்று அடையும் வரைக்குமா கும்பகரண தூக்கம்? தூங்கிவழியும் ம இ கா என்னத்தை சாதிக்கப் போகிறது?

சாதி என்ற பெயரில் நமது சகோதர தமிழர்களை நாமே இழிவுபடுத்தியதில் இன்று அதன் பலனை ஒட்டு மொத்த தமிழினமே அவமானப்படுகிறது. மற்ற இனத்திலும் அதே போன்ற பிரிவுகள் உண்டு. ஆனால் நாம் காட்டிக் கொடுத்ததை போல் அவர்கள் யாரும் தன் இனத்தை காட்டிக் கொடுக்கவில்லை. நம்மினத்தை சார்ந்த ஒரு பிரிவின் பெயர் அவமானப் பட்டது போல் உலகில் வேறு எந்த இனத்தின் கிளைப்பிரிவு அவமானப்படவில்லை, அவர்களின் பெயர் புத்தகத்தில் பொறிக்கப்படவில்லை என்று அடித்துக் கூறலாம்.

நமது முன்னோர்கள் செய்த தவற்றை நாமும் செய்தால் நமது எதிர்கால சந்ததியினர் நம்மை மண்ணிக்க மாட்டர்கள். காட்டிக் கொடுக்கும் இனமாக நாம் இருக்கக்கூடாது. உரிமைகளை வேண்டி போராடும் இனமாக தமிழ் இனம் உருவாகவேண்டும். என்ன செய்வது? மொழி மானத்தை விட ,இன மானத்தை விட தமிழனுக்கு குல மானம் பெரிதாக போய்விட்டது. இண்ராப் போன்ற சக்திகள் நம்மை இணைத்திருக்கின்றன.பிரிவினைகளை நாடி நாம் நமது பலத்தினை இழக்கக்கூடாது.

சாதியை, கூவிக்கூவி விற்றதில் கூவம் நதியானார்கள் தமிழர்கள்
சாதி சாதியென்று மதிக்கெட்டு சாக்கடையில் விழ்ந்தார்கள் தமிழர்கள்.

January 1, 2011

புலரட்டும் புத்தாண்டு


புலரட்டும் புத்தாண்டு
புவியெங்கும் இனிக்கட்டும்
மலரட்டும் நல் வாழ்வு
மாண்புற வேண்டும் பெருவாழ்வு

மேண்மையுற வேண்டும் யாவரும்
மேதினில் சிறக்கட்டும் அனைவரும்
பண்புபோடு வாழும் வாழ்க்கை -தமிழர்
பாரினிலே ஓங்கி ஒளிரட்டும்

பகை தனய் போக்கி - மனப்
பாவ மதை நீக்கி
மாசற வாழ்ந்திடவேண்டும் - மனம்
மகேஷ்சனை நினைத்திடவேண்டும்

ஈன்று பல பெற்றிடவேண்டும்
இனிமை எங்கும் தங்கிடவேண்டும்
உள்ளொளி பெருகிடவேண்டும் -தமிழர்
உண்மையருள் உயர்தோங்கவேண்டும்

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்