December 31, 2010

மனித வளர்சியில் பண்புப் கூறுகள்


நான் என்ற அகங்காரம்,தற்பெருமை,எல்லாம் தெரிந்துவிட்டது என்ற எண்ணம் செயலில் அதிக விருப்பம் மன அரிப்பு,எரிச்சல், மற்ற மனிதர்களின் தனிப்பட்ட விசயங்களில் அறிய ஆவலுறுதல். திமிர் போன்ற பல எதிர்மறை உணர்வுகள் கொண்ட மனிதர்கள் இருக்கின்றார்களே, அப்பப்பா ....

அவர்களுடைய பேச்சிலே செயலிலே தான் என்ற ஆணவம் தலைவிரித்தாடும். தான் ஒருவன் மட்டும் அறிவில் சிறந்தவன் ,மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற நினைப்பு வேறு வந்துவிடும்.

முன்பு நான் சில தன்னபிக்கை பயிலரங்களில் கலந்துக் கொண்டதுண்டு.சில பயிற்சி ஆசிரியர்கள் சொல்வார்கள். நீங்கள் மற்றவரை உங்களின் ஆளூமைக்கு கொண்டு வரவேண்டும் என்றால் மற்றவர்களை எல்லாம் முட்டாள்களாக நினைக்கவேண்டும் என்பார்கள்.மற்றவர்களை முட்டாளாக நினைப்பதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை அது ஒருவகையான தற்பெருமை. என்னும் பண்புக் கூறுகளைக் கொண்டது..தற்பெருமை கொண்டவர்களின் செய்கைகள் மனப்பார்வையை மறைத்துவிடும்.மனதிலே ஒரு வகையான மாமதையும் வந்துவிடும்.

ஆணவத்தை அழிப்பது எளிதல்ல,இது ரஜோ குணத்தை மேலோங்கச் செய்வதால், தன்னைப்பற்றித் தனக்கே ஒர் உயர்வான எண்ணத்தை வளர்த்து வைத்துக் கொண்டு, யாருக்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத விறைப்புத் தன்மையையும் உருவாக்கிடுகிறது. இதனால்.இத்தகையவர் மற்றவரின் மீது தமது ஆளுமையை செலுத்துகின்றனர்.

கடவுள் படைத்த படைப்பிலே மனிதன் உயர்ந்த படைப்பு. பல தரப்பட்ட பண்பு நலன்களை கொண்ட மனிதனுக்கு ஆணவமும் அகங்காரமும் மனிதனுக்கு தேவையான ஒன்று என்று சிலர் நினைத்திருப்பார். மனித தார்மீக பலத்திற்கும் சோர்ந்துக் கிடக்கும் மனோபலத்திற்கு உந்து சக்தியாக இருக்கும் என்றும், தேவைகளை கருதி மனித பண்பு நலன்கள் அமைந்திருக்கும்.ஜீவராசிகளுக்கும் மர செடி கொடி அனைத்துக்கும் தேவைகளின் அடிப்படையில் பரிமான வளர்ச்சி அடையும் என்பது விஞ்ஞானம் சொல்லும் தத்துவம். பரிமானங்களின் வளர்சியில் பண்புப் கூறுகளும் வளர்கின்றன, அல்லது தன் மாற்றம் அடைகின்றன.

மனித செயல்களும் அதன் பண்புகளூம் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் தகுந்த மாதிரி மாறி வந்திருக்கின்றன,வளர்ந்தும் இருக்கின்றன.உணர்ச்சி வசப்படுபவன் அவனின் உடலின் இரசாயன மாற்றத்திற்கு ஏற்ப கோபம் கொள்கிறான். அது ஒரு ஒரு பரிமான வளர்ச்சி, தேவையின் வழி மாறும் பண்புக்கூறுகள் தன் மாற்றம் பெரும் போது கோபம் என்ற உணர்சி பண்புக் கூறு, அமைதி என்ற நிலைக்கு மாற்றம் காணுகிறது.அமைதி என்ற நிலையில் இருந்து அறிவு நிலையின் தன்மாற்றம்தான் சிந்தனை செயல் என்ற மறு வடிவம் எடுக்கிறது.
ஒரு மனிதன் ஒரு செயலை செய்கிறான். அச்செயலுக்கு ஏற்றபடி உடல் உறுப்புக்கள் இயங்குகின்றன .மனதால் எழும் ஒரு எண்ணம் சில உணர்வுகளை பெருகின்றன,அந்த உணர்வுகள் பண்பு நல கூறுகளாக வெளிப்படுகின்றன.

மனிதனுக்கு உள்ள அனைத்தும் பண்புக் கூறுகள், மனித உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் வெளிப்படுகின்றன, சில பண்புக் கூறுகள் உணர்ச்சி மிகுதியால் தவறான உணர்வுகளாக சித்தரிக்கப்டுகின்றன.மனிதனின் இன்பத் துன்பங்களின் வெளிப்பாடும் பண்பு நலன்களாகத்தான் தன் மாற்றம் பெருகிறது. உதாரணத்திற்கு ஒருவன் ஆசைப்படுகிறான்.அது இயல்பான ஒரு பண்பு கூறுகளாகும் அதுவே பேராசை என்னும் போது தானும் துன்புற்று மற்றவர்களையும் துன்புறும் ஒரு பண்புக்கூறுகளாக மாற்றம் காணுகிறது. ஆசை ஒரு மனமலர்சி.ஆசையை ஒழித்துவிடமுடியாது துன்பம் எழாத அளவில் இன்பமாக வாழ ஆசை அளவு முறை போதும் என்ற மனப்பான்மை காப்போடு வாழ வேண்டும்.

ஆசை மட்டும் அல்ல அனைத்து பண்பு நலன்களும் அளவு முறையில் இருந்தால் அது நன்று, நல்லது இன்பம் தரும் உயரிய பண்புக் கூறுகள்தான்.மாறாக எதிர்மறை பண்புக்கூறுகளை உடன்பாட்டு பண்புக்களாக மாற்றம் காணும் பொழுது அனைத்து பண்புகளும் இன்பம் தரும் பண்புகளாக மாறும், அனைவரும் துன்புறமால் வாழும் வழியும் புரியும். அனைத்து பண்பு நலகூறுகள் மனிதனுக்கு நன்மை தரும் பண்புகளாக பரிமான வளர்சி பெறவேண்டும். அதுவே மனித குலத்திற்கு தேவையான ஒன்றாக இருக்கிறது.
Post a Comment