December 20, 2010

தமிழர்களின் அறியாமையும் அறிவின் நிலையும்


தமிழர்களின் இறப்பு வீட்டிலே எப்போழுது ஒரு பெரிய பிரச்சனை ஒடிக்கொண்டிருக்கும். இறந்தவர்களை புதைப்பதா இல்லை எரிப்பதா என்று. சில சமயங்களில் தமிழர்கள் இடுகாட்டிற்கு சென்ற பிறகு புதைப்பதா இல்லை எரிப்பதா என்று போராடிக்கொண்டிருப்பார்கள். எதற்கும் ஒரு ஒழுங்கு முறை என்பது தமிழர்களின் வாழ்வியலில் இல்லை என்று துணிந்து கூறலாம். வாழையடி வாழையாக வந்த தமிழர்களின் வாழ்வியலில் நீத்தார் கடன் நெறி முறைகள் என்பது ஜாதிக்கு ஜாதி வேறுபட்டு காணப்படுகின்ற கொடுமை என்பது தமிழர்களிடம் மட்டும் தான் உண்டு.

பேசுவது தமிழ் என்ற தாய் மொழி, இனம் தமிழ் இனம் ஆனால் வாழ்க்கை நடைமுறை என்பது தமிழர்களிடம் வேறுப்பட்டும் மாறுப்பட்டும் இருப்பது ஏன்? இதற்கு என்ன காரணம்? தமிழ் இனத்தை கொள்கை ரீதியாக வழி நடத்த சரியான தலைமைத்துவம் எக்காலத்திலும் இருந்தது இல்லை என்பதனலா இல்லை தமிழர்கள் எந்த தலைமைத்துவத்திலும் அடங்க மறுக்கும் ஒரு இனமா?

மகா ஒழுக்க சீலர்கள் என்று கூறிக்கொண்ட ஒரு சில தங்கள் நலம் மட்டும் மிக பிரதானம் என்ற நோக்கிலே சமுக கடமைகளை புறந்தள்ளி தன்னையும் தன்னைச் சார்ந்த குழுக்களை மட்டும் வார்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தமிழ்ச் சமுகத்தை நல் வழிக்காட்டி வழி நடத்த மறுத்ததினாலும் மற்றும் ஆண்டான் அடிமை, ஜாதிக் கொடுமை என்னும் சித்தாந்தத்தை வாழ்க்கை நெறியாக கொண்டதனால் தமிழர்கள் வாழ்வு சிதைந்த்து சீராழிக்கப்பட்டது என்றால் அது மிகையல்ல. நடமாடும் மனிதனை மட்டும் அல்ல,உயிர்விட்ட பிணத்தைக் கூட விட்டு வைக்கவில்லை. சாமி சமயம் என்று ஆளுமை செய்யும் இவர்கள் ஒரு மனிதனின் கடைச்சி வழி பயணத்தை மட்டும் புறக்கணிப்பது ஏன்?.

சமுக ஒற்றுமையையும், சகோதரத்துவத்தை வழியுறுத்தி வழி நடத்த வேண்டிய படித்த இக் குழுக்கள் தமிழ் சமுகத்தை கூறு போட்டதனால் நாம் பல பிரச்சனைகளை சந்திக்கின்றோம் .
இன்று தமிழர்களின் வாழ்வியலில் நாம் காணும் பல துன்பங்களுக்கு அடிப்படை பிரச்சனையே ஒற்றுமை இன்மையேதான்.நமக்குள் பல பிரிவுகளாக பிரிந்து நமக்குள் அடித்துக் கொள்வது அவர்களுக்கு மிகவும் வசதியாகிவிட்டது. தமிழனை தமிழன் மதிப்பதில்லை, எங்கிருந்தோ வந்த வேற்று இனத்திற்கு நாம் தலைவணங்கி அவர்களுக்கு அடிமையாகி போனதனால் நமது இனத்திற்கும் மதத்திற்கும் அவர்கள் கோலேச்சுவது மிகவும் எளிதாகி விட்டது. மாடு மேய்துக் கொண்டு வந்தவர்களுக்கு மகா தத்துவங்கள் எங்கே தெரியபோகிறது? நம்மிடம் கற்றுக் கொண்ட கலைகளை நமக்கே சொல்லி தரும் தத்துவம் அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது.

பெரும் புள்வெளிகளை தேடி, ஓடி வந்த நாடோடிக் கூட்டம் நிலையாய் ஒரிடத்தில் தங்குவதில்லை. தனது உற்றார் உறவினர்கள் அல்லது தனது கூட்டத்தினர் இறந்துவிட்டால் நிலையாய் சமாதி செய்து வழிப்படுவதற்க்கு அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது? அல்லது ஒரிடத்தில் புதைத்த தனது கூட்டத்தினரை திருப்பி வந்து வழிப்பாடு செய்வதற்கு அவர்களின் வாழ்க்கை பண்பாடு கூறுகள் இடம் தர மறுக்கும். அந்த நாடோடிக் கூட்டங்களுக்கு ஒரே சிறந்த வழி எரிப்பதுதான், எரித்து விட்டு சாம்பலை எடுத்துக் கொண்டு செல்வதுதான்.
எரிப்பது தமிழர்களின் பண்பாடுக் கூறுகள் அல்ல. அது ஆரியர்களின் வாழ்க்கை நெறிகளை கொண்டது. அதை பிடித்துக் கொண்டு எரிப்பதா இல்லை புதைப்பதா என்று அடித்துக் கொள்கின்றோம். தமிழர்கள் உயர்ந்த நாகரிகத்தின் சின்னங்கள். அவர்கள் நிலையாய் ஒரிடத்தில் அமர்ந்து நகரங்கள் ,கோட்டை கொத்தளங்களை உருவாக்கி பண்பாட்டின் உச்சத்தை தொட்டவர்கள் தமிழர்கள். இறந்த தனது வர்கத்தினரை நிலையான ஒரிடத்தில் புதைத்து சமாதி செய்து வழிப்படுவது தமிழர்களின் முறை.

மனிதன் ஆடி அடங்கி சாம்பலாய் போவது போதற்கு முன் நீ சம்பலை தரித்துக் கொண்டு தவறான வழிகளில் செல்லாமல் இறைச் சிந்தனையில் இருக்கவேண்டும் என்பார்கள் ஒரு சிலர். திருநீறுக்கும் சாம்பலுக்கும் எப்படி முடிச்சி போடுகின்றனர் என்பதை நினைத்தால் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை உண்மை நிலை அதுவன்று ஒருவர் திருநீற்றை உடலிலே பூசுவதற்கு உண்மையான அறிவுப்பூர்வமான காரணம் என்னவென்றால் ஒருவர் குளித்து திருநீறை அணிவது தளர்ந்த நரபுகளை இழுத்து விடுவதுதான். எப்படி இருந்தாலும் அதற்கும் சமய மூலம் பூசி தெய்வத்தன்மையை தருவது தமிழர்கள் வாழ்வியலின் மரபு.

மனிதன் எங்கிருந்து வந்தானோ அங்கே செல்லவேண்டும் என்பது இயற்கையின் நியதி. மண்ணில் இருந்து வந்த மனிதன் மண்ணிலே சமாதி ஆவதுதான் முறை. திருவாசகம் என்ன கூறுகிறது? புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி பல்மிருகமாகி பறவையாகி பாப்பாகி மனிதராகி பேயாகி வல்லரசுவாகி முனிவராய் தேவராய் என்று தொடங்கும் திருவாசகம் மனிதனின் பரிமான வளர்ச்சியை காட்டுகிறது. துல்லிதமான இந்த கருத்து மனித குலத்தின் வளர்ச்சி விஞ்ஞான பூர்வமாய் எவ்வளவு ஒத்து போகிறது? தமிழர்களின் வாழ்க்கை நெறி என்பது விஞ்ஞானமும் மெய்ஞானமும் சேர்ந்த அமைப்பு முறை என்பது நம்மில் ஒத்துக் கொள்ள மறுக்கின்றோம்.

தமிழர் சமுகத்தில் இருந்து சமயம் வரைக்கும், இனத்தில் இருந்தும் மொழி வரைக்கும் பண்பாடு முறையில் இருந்து வாழ்வியல் வரைக்கும் என்னற்ற குழப்பங்கள் குளறுபடிகள். அறிவு நிலையில் இருந்து உணர்ச்சி நிலைகளுக்கு தமிழர்கள் மாற்றப்பட்டிருகின்றனர். அறிவை விட தமிழர்கள் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதினால் , தொட்டில்லிருந்து சுடுகாடு வரைக்கும் எங்கும் குழப்பம், எதிலும் மயக்கம். எரிப்பதா புதைப்பதா என்று இடுகாட்டு வரைக்கும் அடித்துக் கொள்வது தமிழர்களிடம் ஒரு சீரிய நெறி முறைகள் இல்லை என்பதும் மற்றவர்களின் பண்பாடுக் கூறுகளை வாழ்க்கை கூறுகளாக ஏற்றுக் கொண்டிருப்பதை காட்டுகிறது. தமிழர்களின் வாழ்வைக்கூட வழி நடத்துவதற்கு அன்னியர்களின் தலைமைதுவத்தையும் அவர்களின் வழிக்காட்டலையும் முன்னிறுத்துவது தமிழர்களுக்கு பெருத்த அவமானம் என்பதை தவிர வேற என்ன சொல்ல முடியும்?

அறிவின் தெளிந்த நிலைதான் தமிழர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தும்.. அறிவின் முழுமைதான் முக்தி. அறிவோடு வாழ்ந்த தமிழர்கள் இன்று அரிவாளோடு அலைவது எவ்வளவு முட்டாள்தனம். அன்று அறிவோடு வாழ்ந்த தமிழர்கள் உலகத்துக்கு முன்னோடியாக இருந்துள்ளனர். வேதனைகளை கடந்து சாதனையும் படைத்துள்ளனர்.
இழந்த தமிழர்களின் பெருமையை அவர்களின்,அறிவை,அனுபவத்தை மீட்டெடுப்போம், ஒற்றுப்பட்ட தமிழ் இனம், ஒரே பண்பாடு, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று மூழங்குவோம் வாரீர். “ஒற்றுப்பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல்.......” வருங்கால மலாய் இலக்கியத்தில், தமிழர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாக போற்றப்படுவோம்.
Post a Comment