December 31, 2010

மனித வளர்சியில் பண்புப் கூறுகள்


நான் என்ற அகங்காரம்,தற்பெருமை,எல்லாம் தெரிந்துவிட்டது என்ற எண்ணம் செயலில் அதிக விருப்பம் மன அரிப்பு,எரிச்சல், மற்ற மனிதர்களின் தனிப்பட்ட விசயங்களில் அறிய ஆவலுறுதல். திமிர் போன்ற பல எதிர்மறை உணர்வுகள் கொண்ட மனிதர்கள் இருக்கின்றார்களே, அப்பப்பா ....

அவர்களுடைய பேச்சிலே செயலிலே தான் என்ற ஆணவம் தலைவிரித்தாடும். தான் ஒருவன் மட்டும் அறிவில் சிறந்தவன் ,மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற நினைப்பு வேறு வந்துவிடும்.

முன்பு நான் சில தன்னபிக்கை பயிலரங்களில் கலந்துக் கொண்டதுண்டு.சில பயிற்சி ஆசிரியர்கள் சொல்வார்கள். நீங்கள் மற்றவரை உங்களின் ஆளூமைக்கு கொண்டு வரவேண்டும் என்றால் மற்றவர்களை எல்லாம் முட்டாள்களாக நினைக்கவேண்டும் என்பார்கள்.மற்றவர்களை முட்டாளாக நினைப்பதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை அது ஒருவகையான தற்பெருமை. என்னும் பண்புக் கூறுகளைக் கொண்டது..தற்பெருமை கொண்டவர்களின் செய்கைகள் மனப்பார்வையை மறைத்துவிடும்.மனதிலே ஒரு வகையான மாமதையும் வந்துவிடும்.

ஆணவத்தை அழிப்பது எளிதல்ல,இது ரஜோ குணத்தை மேலோங்கச் செய்வதால், தன்னைப்பற்றித் தனக்கே ஒர் உயர்வான எண்ணத்தை வளர்த்து வைத்துக் கொண்டு, யாருக்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத விறைப்புத் தன்மையையும் உருவாக்கிடுகிறது. இதனால்.இத்தகையவர் மற்றவரின் மீது தமது ஆளுமையை செலுத்துகின்றனர்.

கடவுள் படைத்த படைப்பிலே மனிதன் உயர்ந்த படைப்பு. பல தரப்பட்ட பண்பு நலன்களை கொண்ட மனிதனுக்கு ஆணவமும் அகங்காரமும் மனிதனுக்கு தேவையான ஒன்று என்று சிலர் நினைத்திருப்பார். மனித தார்மீக பலத்திற்கும் சோர்ந்துக் கிடக்கும் மனோபலத்திற்கு உந்து சக்தியாக இருக்கும் என்றும், தேவைகளை கருதி மனித பண்பு நலன்கள் அமைந்திருக்கும்.ஜீவராசிகளுக்கும் மர செடி கொடி அனைத்துக்கும் தேவைகளின் அடிப்படையில் பரிமான வளர்ச்சி அடையும் என்பது விஞ்ஞானம் சொல்லும் தத்துவம். பரிமானங்களின் வளர்சியில் பண்புப் கூறுகளும் வளர்கின்றன, அல்லது தன் மாற்றம் அடைகின்றன.

மனித செயல்களும் அதன் பண்புகளூம் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் தகுந்த மாதிரி மாறி வந்திருக்கின்றன,வளர்ந்தும் இருக்கின்றன.உணர்ச்சி வசப்படுபவன் அவனின் உடலின் இரசாயன மாற்றத்திற்கு ஏற்ப கோபம் கொள்கிறான். அது ஒரு ஒரு பரிமான வளர்ச்சி, தேவையின் வழி மாறும் பண்புக்கூறுகள் தன் மாற்றம் பெரும் போது கோபம் என்ற உணர்சி பண்புக் கூறு, அமைதி என்ற நிலைக்கு மாற்றம் காணுகிறது.அமைதி என்ற நிலையில் இருந்து அறிவு நிலையின் தன்மாற்றம்தான் சிந்தனை செயல் என்ற மறு வடிவம் எடுக்கிறது.
ஒரு மனிதன் ஒரு செயலை செய்கிறான். அச்செயலுக்கு ஏற்றபடி உடல் உறுப்புக்கள் இயங்குகின்றன .மனதால் எழும் ஒரு எண்ணம் சில உணர்வுகளை பெருகின்றன,அந்த உணர்வுகள் பண்பு நல கூறுகளாக வெளிப்படுகின்றன.

மனிதனுக்கு உள்ள அனைத்தும் பண்புக் கூறுகள், மனித உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் வெளிப்படுகின்றன, சில பண்புக் கூறுகள் உணர்ச்சி மிகுதியால் தவறான உணர்வுகளாக சித்தரிக்கப்டுகின்றன.மனிதனின் இன்பத் துன்பங்களின் வெளிப்பாடும் பண்பு நலன்களாகத்தான் தன் மாற்றம் பெருகிறது. உதாரணத்திற்கு ஒருவன் ஆசைப்படுகிறான்.அது இயல்பான ஒரு பண்பு கூறுகளாகும் அதுவே பேராசை என்னும் போது தானும் துன்புற்று மற்றவர்களையும் துன்புறும் ஒரு பண்புக்கூறுகளாக மாற்றம் காணுகிறது. ஆசை ஒரு மனமலர்சி.ஆசையை ஒழித்துவிடமுடியாது துன்பம் எழாத அளவில் இன்பமாக வாழ ஆசை அளவு முறை போதும் என்ற மனப்பான்மை காப்போடு வாழ வேண்டும்.

ஆசை மட்டும் அல்ல அனைத்து பண்பு நலன்களும் அளவு முறையில் இருந்தால் அது நன்று, நல்லது இன்பம் தரும் உயரிய பண்புக் கூறுகள்தான்.மாறாக எதிர்மறை பண்புக்கூறுகளை உடன்பாட்டு பண்புக்களாக மாற்றம் காணும் பொழுது அனைத்து பண்புகளும் இன்பம் தரும் பண்புகளாக மாறும், அனைவரும் துன்புறமால் வாழும் வழியும் புரியும். அனைத்து பண்பு நலகூறுகள் மனிதனுக்கு நன்மை தரும் பண்புகளாக பரிமான வளர்சி பெறவேண்டும். அதுவே மனித குலத்திற்கு தேவையான ஒன்றாக இருக்கிறது.

December 29, 2010

வாழ்க்கை கோலம்


இன்னும்
ஏழுதாத கவிதையாய்
முகிலாத எண்ணமாய்
விடியாத இரவாய்
செதுக்காத சிலையாய்
முடியாத கோலமாய்
என்
வாழ்க்கை கடந்து போனது.

December 24, 2010

மங்கும் மலேசிய தமிழ் வலைப்பதிவுலகம்

மலேசிய தமிழ் வலைப்பதிவு உலகம் வளர்ந்திருக்கிறதா இல்லையா? கடந்த வருடம் வலைப்பதிவுகளை ப்ற்றி எழுதிய ஒரு பதிவும்.மலேசிய தமிழ் வலைப்பதிவின் வளர்ச்சியை காட்டும்.வாழ்க வளமுடன்

மனோவியம்: மலேசியத் தமிழ் வலைப்பதிவாளர்களின் சந்திப்பு.

http://manilvv.blogspot.com/2009/12/blog-post_14.html

மனோவியம்: மலேசியத் தமிழ் வலைப்பதிவாளர்களின் சந்திப்பு.

மனோவியம்: மலேசியத் தமிழ் வலைப்பதிவாளர்களின் சந்திப்பு.

December 22, 2010

மலேசியத் தமிழ் வலைப்பதிவாளர்களின் சந்திப்பு.

உலகம் என்பது ஒரு காலத்தில் மிக பெரிய கூறியீட்டின் அடையாள சின்னமாக இருந்துள்ளது. கற்றது கைமண்ணளவு கல்லாதாது உலகளவு என்ற ஒரு முது மொழி வழக்கில் உண்டு. மிக பெரியது என்ற அளவுக் கோலின் வடிவம்தான் இந்த உலகம். ஆனால் இன்று இந்த உலகம் இணையம் என்ற வலைப்பின்னலில் மிகவும் சிறுத்துவிட்டது என்றுதான் கூறவேண்டும். இன்னோரு வடிவில் கூறவேண்டும் என்றால் உலகம் கைமண்ணளவும், இணையம் உலகளவாக மாறியிருக்கின்றன.

இணைய ஊடகத்தின் வளர்ச்சி இமயம் போல் வளந்திருக்கின்றன. இந்த ஆசுர வளர்ச்சியில் ஊடகத் தொடர்பு என்பது உலகத்தின் கடைச்சி கோடியில் இருந்து மறுக் கோடியில் நொடிப் பொழுது தொடர்புக் கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது. கட்டட்ற வலைப்பின்னலின் இந்த உலகம் மிரட்சி கொள்கிறது. முன்பு எல்லாம் இரணுவ பலம் மிக பெரிதாக பேசப்பட்டது.ஆனால் இப்பொழுது இணையம் என்ற வல்லரசு ஆதிக்கம் மிகவும் பெரிதாக போற்றப்படுகிறது.

இங்கு ஒரு கேள்வி எழுகிறது? இணைய ஊடகத்தை தமிழ் கூறும் நல்லுலகம் எவ்வாறு தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது? இணையம் வழி சமுதாய சிந்தைனைகளை எவ்வாறு வடிவமைத்துக் கொள்கிறது? சமய சமுக பண்பாட்டுக்கூறுகள் நவீன சிந்தனைகளுடன் இணையம் வழி எப்படி சமுதாயத்துடன் இணைப்பது என்ற வழிமுறைகளை நமது சிந்தனையாளர்கள் காண்கிறார்களா என்ற ஒரு வினா தமிழர் நெஞ்சங்களில் எழும்.?
ஆனால் தமிழர்கள் எவ்வளவு பேர் நவீன ஊடகங்களோடு உறவாடுகின்றனர்?.இணையம் என்றவுடன் சிலர் நினைப்பது பாதாள சாக்கடை அல்லது காமக் களியாட்டங்கள் நிறைந்த வண்ண நிறை அரங்கு என்றுதான் நினைக்கின்றனர். ஆனால் அங்கு பதிக்கபட்ட அறிவுச் சுரங்களை மறந்துவிடுகின்றனர்.

விரல் நுனியிலே அறிவு பொட்டகங்களை வைத்துக் கொண்டு நாம் எங்கேங்கொ தேடிக் கொண்டிருக்கின்றோம். வரும் காலம் இணைய காலம். வேலை,படிப்பு,பெருளாதாரம்.சமுகம் பொழுதுபோக்கு என்று அனைத்து சாரத்தையும் உள்ளடகி இயங்கும் இணையம் இல்லாமல் இந்த உலகம் இயங்காது என்பதால்
தமிழர்களிடையே அதிநவீன இணைய பயன்பாட்டை இன்னும் அதிகரிப்பதற்கும்.இணைய ஊடகத்தின் பயணை பெருவதற்கும் சுருங்க கூறின் இணையத்தை தமிழர்களின் வாழ்க்கையோடு இணைப்பதற்கும் வழிமுறைகளை காண மலேசிய வலைப்பதிவாளர்கள் சந்திப்புக் கூட்டம் என்னும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 19-12.2010 பிற்பகல் 2.00 மணிக்கு பெத்தாலிங் ஜயாவில் மிகவும் சிறப்புற நடைப் பெற்றது.

தமிழ் இணையத்தின் புரவலர் திரு.பால பிள்ளை , உத்தமம் அமைப்பின் நிருவாக உறுப்பினரும், மலேசியாவின் முன்னணி இணைய முனைப்பாளருமாகிய சி.ம.இளந்தமிழ், திருந்தமிழ் ஐயா சுப நற்குணன். மலேசிய தமிழ் வலைப்பதிவாளர்கள்,திரு. இல. கிருஷ்ணமூர்த்தி (கவித்தமிழ்), வாசுதேவன் (விவேகம்), பவனேஸ்வரி (கணைகள்), சுரேஸ் (தமிழ் மலர்கள்): சுரேஸ் (தமிழ் மலர்கள்), மு.வேலன் (அரங்கேற்றம்), அப்பண்ணா (வாழ்க வளமுடன்), துரைசாமி (வாசகர்):பங்கேற்று கருத்துக்களையும் ஐயங்களை வழங்கினர். சிறிய எண்ணிக்கையில் மலேசிய வலைப்பதிவு அன்பர்களும் நண்பர்களும் வந்திருந்தாலும் சிறப்பான விடயங்கள் பேசப்பட்டன.அவர்களுக்கும் நன்றி.தமிழ் வலைப்பதிவின் வளர்ச்சிக்கு வெகு தொலைவில் இருந்து வந்த நண்பர்களுக்கும் இவ்வேளையில் கட்டாயம் நன்றியை தெரிவித்துக்கொள்ளவேண்டும். அடுத்த சந்திப்பில் இன்னும் பலர் கலந்துக் கொண்டு இணையத் தமிழை வளர்ப்பார்கள் என்ற நம்மிக்கையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவானது.

December 20, 2010

தமிழர்களின் அறியாமையும் அறிவின் நிலையும்


தமிழர்களின் இறப்பு வீட்டிலே எப்போழுது ஒரு பெரிய பிரச்சனை ஒடிக்கொண்டிருக்கும். இறந்தவர்களை புதைப்பதா இல்லை எரிப்பதா என்று. சில சமயங்களில் தமிழர்கள் இடுகாட்டிற்கு சென்ற பிறகு புதைப்பதா இல்லை எரிப்பதா என்று போராடிக்கொண்டிருப்பார்கள். எதற்கும் ஒரு ஒழுங்கு முறை என்பது தமிழர்களின் வாழ்வியலில் இல்லை என்று துணிந்து கூறலாம். வாழையடி வாழையாக வந்த தமிழர்களின் வாழ்வியலில் நீத்தார் கடன் நெறி முறைகள் என்பது ஜாதிக்கு ஜாதி வேறுபட்டு காணப்படுகின்ற கொடுமை என்பது தமிழர்களிடம் மட்டும் தான் உண்டு.

பேசுவது தமிழ் என்ற தாய் மொழி, இனம் தமிழ் இனம் ஆனால் வாழ்க்கை நடைமுறை என்பது தமிழர்களிடம் வேறுப்பட்டும் மாறுப்பட்டும் இருப்பது ஏன்? இதற்கு என்ன காரணம்? தமிழ் இனத்தை கொள்கை ரீதியாக வழி நடத்த சரியான தலைமைத்துவம் எக்காலத்திலும் இருந்தது இல்லை என்பதனலா இல்லை தமிழர்கள் எந்த தலைமைத்துவத்திலும் அடங்க மறுக்கும் ஒரு இனமா?

மகா ஒழுக்க சீலர்கள் என்று கூறிக்கொண்ட ஒரு சில தங்கள் நலம் மட்டும் மிக பிரதானம் என்ற நோக்கிலே சமுக கடமைகளை புறந்தள்ளி தன்னையும் தன்னைச் சார்ந்த குழுக்களை மட்டும் வார்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தமிழ்ச் சமுகத்தை நல் வழிக்காட்டி வழி நடத்த மறுத்ததினாலும் மற்றும் ஆண்டான் அடிமை, ஜாதிக் கொடுமை என்னும் சித்தாந்தத்தை வாழ்க்கை நெறியாக கொண்டதனால் தமிழர்கள் வாழ்வு சிதைந்த்து சீராழிக்கப்பட்டது என்றால் அது மிகையல்ல. நடமாடும் மனிதனை மட்டும் அல்ல,உயிர்விட்ட பிணத்தைக் கூட விட்டு வைக்கவில்லை. சாமி சமயம் என்று ஆளுமை செய்யும் இவர்கள் ஒரு மனிதனின் கடைச்சி வழி பயணத்தை மட்டும் புறக்கணிப்பது ஏன்?.

சமுக ஒற்றுமையையும், சகோதரத்துவத்தை வழியுறுத்தி வழி நடத்த வேண்டிய படித்த இக் குழுக்கள் தமிழ் சமுகத்தை கூறு போட்டதனால் நாம் பல பிரச்சனைகளை சந்திக்கின்றோம் .
இன்று தமிழர்களின் வாழ்வியலில் நாம் காணும் பல துன்பங்களுக்கு அடிப்படை பிரச்சனையே ஒற்றுமை இன்மையேதான்.நமக்குள் பல பிரிவுகளாக பிரிந்து நமக்குள் அடித்துக் கொள்வது அவர்களுக்கு மிகவும் வசதியாகிவிட்டது. தமிழனை தமிழன் மதிப்பதில்லை, எங்கிருந்தோ வந்த வேற்று இனத்திற்கு நாம் தலைவணங்கி அவர்களுக்கு அடிமையாகி போனதனால் நமது இனத்திற்கும் மதத்திற்கும் அவர்கள் கோலேச்சுவது மிகவும் எளிதாகி விட்டது. மாடு மேய்துக் கொண்டு வந்தவர்களுக்கு மகா தத்துவங்கள் எங்கே தெரியபோகிறது? நம்மிடம் கற்றுக் கொண்ட கலைகளை நமக்கே சொல்லி தரும் தத்துவம் அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது.

பெரும் புள்வெளிகளை தேடி, ஓடி வந்த நாடோடிக் கூட்டம் நிலையாய் ஒரிடத்தில் தங்குவதில்லை. தனது உற்றார் உறவினர்கள் அல்லது தனது கூட்டத்தினர் இறந்துவிட்டால் நிலையாய் சமாதி செய்து வழிப்படுவதற்க்கு அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது? அல்லது ஒரிடத்தில் புதைத்த தனது கூட்டத்தினரை திருப்பி வந்து வழிப்பாடு செய்வதற்கு அவர்களின் வாழ்க்கை பண்பாடு கூறுகள் இடம் தர மறுக்கும். அந்த நாடோடிக் கூட்டங்களுக்கு ஒரே சிறந்த வழி எரிப்பதுதான், எரித்து விட்டு சாம்பலை எடுத்துக் கொண்டு செல்வதுதான்.
எரிப்பது தமிழர்களின் பண்பாடுக் கூறுகள் அல்ல. அது ஆரியர்களின் வாழ்க்கை நெறிகளை கொண்டது. அதை பிடித்துக் கொண்டு எரிப்பதா இல்லை புதைப்பதா என்று அடித்துக் கொள்கின்றோம். தமிழர்கள் உயர்ந்த நாகரிகத்தின் சின்னங்கள். அவர்கள் நிலையாய் ஒரிடத்தில் அமர்ந்து நகரங்கள் ,கோட்டை கொத்தளங்களை உருவாக்கி பண்பாட்டின் உச்சத்தை தொட்டவர்கள் தமிழர்கள். இறந்த தனது வர்கத்தினரை நிலையான ஒரிடத்தில் புதைத்து சமாதி செய்து வழிப்படுவது தமிழர்களின் முறை.

மனிதன் ஆடி அடங்கி சாம்பலாய் போவது போதற்கு முன் நீ சம்பலை தரித்துக் கொண்டு தவறான வழிகளில் செல்லாமல் இறைச் சிந்தனையில் இருக்கவேண்டும் என்பார்கள் ஒரு சிலர். திருநீறுக்கும் சாம்பலுக்கும் எப்படி முடிச்சி போடுகின்றனர் என்பதை நினைத்தால் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை உண்மை நிலை அதுவன்று ஒருவர் திருநீற்றை உடலிலே பூசுவதற்கு உண்மையான அறிவுப்பூர்வமான காரணம் என்னவென்றால் ஒருவர் குளித்து திருநீறை அணிவது தளர்ந்த நரபுகளை இழுத்து விடுவதுதான். எப்படி இருந்தாலும் அதற்கும் சமய மூலம் பூசி தெய்வத்தன்மையை தருவது தமிழர்கள் வாழ்வியலின் மரபு.

மனிதன் எங்கிருந்து வந்தானோ அங்கே செல்லவேண்டும் என்பது இயற்கையின் நியதி. மண்ணில் இருந்து வந்த மனிதன் மண்ணிலே சமாதி ஆவதுதான் முறை. திருவாசகம் என்ன கூறுகிறது? புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி பல்மிருகமாகி பறவையாகி பாப்பாகி மனிதராகி பேயாகி வல்லரசுவாகி முனிவராய் தேவராய் என்று தொடங்கும் திருவாசகம் மனிதனின் பரிமான வளர்ச்சியை காட்டுகிறது. துல்லிதமான இந்த கருத்து மனித குலத்தின் வளர்ச்சி விஞ்ஞான பூர்வமாய் எவ்வளவு ஒத்து போகிறது? தமிழர்களின் வாழ்க்கை நெறி என்பது விஞ்ஞானமும் மெய்ஞானமும் சேர்ந்த அமைப்பு முறை என்பது நம்மில் ஒத்துக் கொள்ள மறுக்கின்றோம்.

தமிழர் சமுகத்தில் இருந்து சமயம் வரைக்கும், இனத்தில் இருந்தும் மொழி வரைக்கும் பண்பாடு முறையில் இருந்து வாழ்வியல் வரைக்கும் என்னற்ற குழப்பங்கள் குளறுபடிகள். அறிவு நிலையில் இருந்து உணர்ச்சி நிலைகளுக்கு தமிழர்கள் மாற்றப்பட்டிருகின்றனர். அறிவை விட தமிழர்கள் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதினால் , தொட்டில்லிருந்து சுடுகாடு வரைக்கும் எங்கும் குழப்பம், எதிலும் மயக்கம். எரிப்பதா புதைப்பதா என்று இடுகாட்டு வரைக்கும் அடித்துக் கொள்வது தமிழர்களிடம் ஒரு சீரிய நெறி முறைகள் இல்லை என்பதும் மற்றவர்களின் பண்பாடுக் கூறுகளை வாழ்க்கை கூறுகளாக ஏற்றுக் கொண்டிருப்பதை காட்டுகிறது. தமிழர்களின் வாழ்வைக்கூட வழி நடத்துவதற்கு அன்னியர்களின் தலைமைதுவத்தையும் அவர்களின் வழிக்காட்டலையும் முன்னிறுத்துவது தமிழர்களுக்கு பெருத்த அவமானம் என்பதை தவிர வேற என்ன சொல்ல முடியும்?

அறிவின் தெளிந்த நிலைதான் தமிழர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தும்.. அறிவின் முழுமைதான் முக்தி. அறிவோடு வாழ்ந்த தமிழர்கள் இன்று அரிவாளோடு அலைவது எவ்வளவு முட்டாள்தனம். அன்று அறிவோடு வாழ்ந்த தமிழர்கள் உலகத்துக்கு முன்னோடியாக இருந்துள்ளனர். வேதனைகளை கடந்து சாதனையும் படைத்துள்ளனர்.
இழந்த தமிழர்களின் பெருமையை அவர்களின்,அறிவை,அனுபவத்தை மீட்டெடுப்போம், ஒற்றுப்பட்ட தமிழ் இனம், ஒரே பண்பாடு, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று மூழங்குவோம் வாரீர். “ஒற்றுப்பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல்.......” வருங்கால மலாய் இலக்கியத்தில், தமிழர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாக போற்றப்படுவோம்.