November 16, 2010

அறிமுகம் ஒரு நட்பு
ஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!
மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்
பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்…
வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை
சந்தோஷிக்கிறது!

ஒரு சந்தோஷத்தின்
வேதனையை
ஒரு வேதனையின்
சந்தோஷத்தை
இதயம் உணர்கிறது!

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!
உன்னை நானும்.
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை..
தாகமில்லை
மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்
போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்
தேவையில்லை
இதயம் போதுமே!!!

என்ற ஒரு கவிதையை படிக்க நேர்ந்தது..அற்புதமான அந்த நண்பரின் கவிதை வரிகளில் நட்பின் நிலை அதன் தாக்கம் எப்படி என்பதை நம்மால் உணரமுடிந்தது. நட்பு எப்படிப்பட்டது என்று ஆராய்ந்தால், அது மகத்தான மன உணர்வின் வெளிப்பாடுதான் நட்பு. வாழ்க்கையில் நட்பின் உணர்வுகள் இன்றி நாம் வாழ முடியுமா?

அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ் என்பார்கள்.அன்பு என்பது காதல், பாசம் மட்டும் அன்று. நட்பும் ஒருவகையில் அன்பின் மறு வடிவம் தான்..நல்ல நண்பர்களின் பாசம் நேசமும் கரைக்கான உறவின் தொடர்ச்சிதான். அதுவும் பால்ய நண்பர்களின் நேசம் விலைமதிக்க முடியாத மன உணர்வுகளின் வெளிப்பாடுதான். சில நட்புகள் ரயில் சினேகம் மாதிரி சேர வேண்டிய இடம் வந்தவுடன் நட்பும் முடிந்துவிடுகிறது. சில நட்புகள் ரயில் தண்டவாளங்களை போல் என்றும் இணைப்பிரியாமல் சேரவேண்டிய இடத்திற்கு சேர்ந்துவிடும். சில நட்புகள் காலங்களை கடந்து மன வேறுபாடுகளை தாண்டி என்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கும். அது அன்பின் அடையாலம்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. என்பது போல சில நண்பர்கள் பிரதி பலனை எதிர்ப்பார்க்காமல் நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக மனம் உவந்து செய்யும் செயல் நட்பின் அடையாலமே. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. என்று வள்ளுவர் சொல்லி இருக்கின்றார்.

எனது பால்ய நண்பர் திரு இலச்சுமணனை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்தே ஆகவேண்டும். அவருக்கு இன்னோரு மூகமும் உண்டு. அதுதான் ஞான மூர்த்தி என்ற புனைப்பெயர். Klang news என்ற dot.com நிறுவனத்தில் பகுதி நேர புகைப்பட கலைஞராகவும் இருந்திருக்கின்றார்.

சமுக சிந்தனையாளர். சமயத்தில் ஆன்மீக ஈடுபாடுக் கொண்டவர்.ஓடி வந்து உதவும் மனப்பான்மைக் கொண்டவர். இளம் வயதில் ஒரு கேமராவை தூக்கிக் கொண்டு நடமாடும் புகைப்பட கலைஞராய் மூலை முடுக்கெல்லாம் வலம் வந்தவர். இன்றும் கூட பகுதி நேர புகைப்பட கலைஞராய் இயங்கிக் கொண்டிருக்கின்றார். அவர் முன்னேற துடிக்கும் ஒரு தன்முனைப்பாளர். வளரும் தொழில் அதிபரும் கூட. ஆனால் காலம் சிலரை புரட்டிப் போட்டு துவைத்து தும்சம் செய்து விடும். சிலரை புடம்போட்ட பொன்னாக மாற்றி ஒளிரச் செய்யும். இந்த இரண்டுக்கும் தகுதியானவர் என் நண்பர் திரு இலச்சுமணன்.வாழ்க்கையில் எவ்வளவோ அடிப்பட்டு இன்று ஒரளவுக்கு முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் அவருக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

என் இளம் பருவத்தில் பல நண்பர்களை பார்த்திருக்கின்றேன். சிலர் காலத்தின் கோலத்தில் கரைந்து போய்விட்டனர். பல நண்பர்கள் எங்கு இருக்கின்றனர் என்பதே தெரியவில்லை. சிலர் பார்த்து பார்க்கமால் போய்விடுகின்றனர். சில நண்பர்கள் உருவங்கள் மாறி பண்பு நலன்களும் மாறி மாறுப்பட்ட கோணத்தில் திரிகின்றனர். காலத்தின் கோலத்தை என்னவெண்பது? ஆனால் நண்பர் லச்சுமணனின் நட்பு 30 வருட உறவாகும். அன்றிலிருந்து இன்று வரை ஒரே பண்பு நலத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நண்பர்தான் திரு இலச்சுமணன்.தேவார வகுப்பில் இருந்து ஆரம்பித்த எங்களின் நட்பு இன்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் ஒரு 'ஆத்மார்த்த நட்பு' தான்.

நாம் நமது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால், நட்பு என்னும் அங்கம் இல்லையெனில் வாழ்க்கையே இல்லை என்பதை உணர்வோம். தாயுடன் துவங்கும் நமது உறவு, தந்தை, உடன்பிறப்பு, மனைவி, குழந்தை, நண்பர்கள், உற்றார் உறவினர் என்று உடலில் உயிருள்ளவரை வளர்ந்து கொண்டே இருப்பதைப் பார்ப்பீர்கள். நல்ல உறவுகள் என்பது கடவுள் நமக்களித்திருக்கும் வரம்.

மூன்று விடயங்களில் நம் ஒன்றுப்படலாம். சூரியன், சந்திரன், நட்சத்திரம் இவைகளை எங்கிருந்தாலும் உலகின் எந்த மூளையில் இருந்தாலும் நம் பார்க்க முடியும். இவை மூன்றும் நமது மன உணர்வுகளோடு ஒன்றினைந்து மன சந்தோசத்தை தரும். நண்பர்களும் அப்படிதான் ஒன்றுகூடி இணைந்து அளவாளாவும் போதுதான் .நமது சிறு பிரயத்தில் ஏற்பட்ட இன்ப துன்ப நிகழ்வுகளை ஒரு கணம் நினைத்து பார்க்கமுடியும். நினைவுகள் என்பது காலம் நமக்கு தந்த வரபிரசாதம் ஆகும். சில விசயங்கள் மறக்க முடியாத நிகழ்வுகள். அந்த வகையில் நட்பும் ஒரு கலங்கமில்லா நிலவுதான்.

அதுவும் எனக்கும் என் நண்பர் இலச்சுமணணுக்கும் உள்ள நட்பு ஒளிரும் நிலவு போன்றது. அந்த நிலவின் வெளிச்சத்தில் தூய அன்பின் முகம் தெரிகிறது. அற்புதமான அந்த மனிதரை வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றேன்.குறிப்பு: பிறந்த நாள், கல்யாண வைபோகங்களுக்கு புகைப்படம் எடுக்கவும் வீடியோ சூட்டிங் எடுக்கவும் மற்றும் வீட்டுக்கும், கடைகளுக்கும் தேவையான சுத்தம் செய்யும் ரசாயண கலவைகளுக்கும்,வாகன செம்பூகளுக்கும் நீங்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய எண் 0163027566
Post a Comment