November 24, 2010

காலம்


காலம்

வந்த போது எது வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. போகும் போது எதை கொண்டு செல்லவேண்டும் என்றும் எவரும் சொல்லவில்லை. நிமிடங்கள் தொரும் இறக்கின்றோம் , நிமிடங்கள் தொரும் பிறக்கின்றோம். இறப்பும் பிறப்பும் காலத்தின் பிடியிலா......இல்லை கடவுளின் பிடியிலா? என்று தெரியவில்லை.

காலமும் கடவுளும் ஒன்றா? பெரும் குழப்பமான கேள்விதான்.காலம் இயற்கை என்றால்? கடவுள் ?

முள்வேளியிலே போர்த்திய சேலையைப் போன்றாத வாழ்க்கை.? முள் குத்தான் செய்யும் என்ற போதனையை மாந்தாரான நமக்கு ஒரு பரிபாஷ்சையாக தெளிவாக உணர்த்துகின்றன, முட்கள் நிறைந்த இந்த பாதை பக்குவப்படுத்தும் போதனை என்பதை நாம் உனரவேண்டும். முள் நம்மை குத்தக்கூடாது, சேலையும் கிழியக்கூடாது. பக்குவபடுத்து மனம். கடவுள் நமக்கு தரும் வாழ்க்கை பாடம். ஆனால் காலம்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துகிறது என்றால் இங்கு கடவுளின் பங்குதான் என்ன?

காலத்திற்கு ஏற்ற எண்ணங்களா இல்லை காலம் நம்மை மாற்றும் திறன் படைத்ததா? நம்மை சார்ந்த ஒர் உலகமும் நம்மை சுற்றி மாறுபட்ட உலகமும் சத இயங்கின் கொண்டிருக்கிறது..நமது எண்ணங்களுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட உலகமும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அது கணத்திற்கு கணம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. பள்ளியில் படிக்கும் போது இருந்த எண்ணங்கள் இப்பொழுது இருப்பதில்லை, இளம் வயதில் இருந்த எண்ணங்கள் இன்று இருப்பதில்லை..நாளை நாம் நினைக்கும் எண்ணங்கள் .எதுவும் நடக்கும் என்ற உறுதியும் இல்லை. இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நிலையாய் எதுவும் நிலைப்பதில்லை. நேற்று இருந்த மனிதன் நாளை இருப்பான என்பது தெரியவில்லை. இறப்பும் பிறப்பும் காலத்தை ஒட்டிதான் உறவாடுகிறது. ஒரு மனிதனின் ஆயுள் காலம் உடல் தளர்ந்த அவனின் இறுதிக் காலம் என்பதை மறுப்போர் உண்டா? காலம் என்பது நிமிடம் தோரும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. இது அல்லாமல் காலம் என எதுவும் இல்லை. காலம் என ஒன்று தனியே இல்லை. காலம் ஒரு மாயையே என்றாலும் காலம்தான் செயல் என்பது உண்மைதானே.

ரோஜா மலரிலே ஏன் இறைவன் முட்களை வைத்தான்? அழகுக்கு அழகினை தரும் அழகு ரோஜாவுக்கு முள்ளை ஏன் அரணாக வைத்தார்.? அற்புதம் தரும் அழகு மலராய் இருந்தாலும் அதற்கும் ஒரு காலத்தை வைத்துள்ளான் இறைவன். மலர்ந்து மணம் பரப்பி மடிந்து போகும் மலருக்கும் ஒரு காலத்தை வைத்த இறைவன். மனிதனும் தன்னிலை உணர இறை தந்த காலம் என்னும் முள் மனிதனுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வினை பாலர் பாடமாக தந்துக்கொண்டிருக்கிறது.. இயற்கை தரும் காலம் என்னும் பாடத்தை படியுங்கள் மதியுங்கள்.அதனை நேசியுங்கள்.

அறிவுரைகள்
இதுதான் நல்ல குடும்பம்! ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமான அறிவுரைகளை கூறு கிறார் வேதாத்திரி மகரிஷி. அந்த அறிவுரைகள் :

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய ன்றையும் கடைப்பிடித்து வரவேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்.

November 21, 2010

கனவுப் பொறிகள்-9


அர்ச்சனை
ஆராதனை
அடிபுடி
ஆட்டம் பாட்டம்
கூத்தும் கும்மாளம்
இரவு நெடுக்க நடக்கும்

இது
அன்றாட தெருக் கூத்து....

இவர்கள்
விரு(ழு)ந்துனுவர்கள்
இர(ற)ந்துன்னுபவர்களா?

இவர்களின் சந்தாதியினார்
மகிழ்ந்துன்ன தான் முடியுமா?

மவுனத்தின் வார்த்தைகள்
மதில் மீது அமந்திருக்கும்

அப்பனின் ஆட்டமும்
அம்மாவின் அர்ச்சனையும்
வெடிந்தவுடன் புஸ்வாணமாககிவிடும்

போதிமர புத்தனின் தெளிவு
புன்னைகை பூக்கும்...
பகலில் மட்டும்
இவர்களுக்கு

இரவில் ஆட்டம்
பகலிலே ஒட்டம்
இவர்களின் நிழமை
இவர்களுக்கே புரியாத தேரோட்டம்

சாபங்கள் பெற்ற மனிதர்கள்
சோகங்களோடு சொந்தங்களோடும்
வேதனையேடு வேடிக்க்கையான
வாழ்க்கையை தொடர்வார்கள்

November 16, 2010

அறிமுகம் ஒரு நட்பு
ஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!
மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்
பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்…
வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை
சந்தோஷிக்கிறது!

ஒரு சந்தோஷத்தின்
வேதனையை
ஒரு வேதனையின்
சந்தோஷத்தை
இதயம் உணர்கிறது!

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!
உன்னை நானும்.
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை..
தாகமில்லை
மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்
போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்
தேவையில்லை
இதயம் போதுமே!!!

என்ற ஒரு கவிதையை படிக்க நேர்ந்தது..அற்புதமான அந்த நண்பரின் கவிதை வரிகளில் நட்பின் நிலை அதன் தாக்கம் எப்படி என்பதை நம்மால் உணரமுடிந்தது. நட்பு எப்படிப்பட்டது என்று ஆராய்ந்தால், அது மகத்தான மன உணர்வின் வெளிப்பாடுதான் நட்பு. வாழ்க்கையில் நட்பின் உணர்வுகள் இன்றி நாம் வாழ முடியுமா?

அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ் என்பார்கள்.அன்பு என்பது காதல், பாசம் மட்டும் அன்று. நட்பும் ஒருவகையில் அன்பின் மறு வடிவம் தான்..நல்ல நண்பர்களின் பாசம் நேசமும் கரைக்கான உறவின் தொடர்ச்சிதான். அதுவும் பால்ய நண்பர்களின் நேசம் விலைமதிக்க முடியாத மன உணர்வுகளின் வெளிப்பாடுதான். சில நட்புகள் ரயில் சினேகம் மாதிரி சேர வேண்டிய இடம் வந்தவுடன் நட்பும் முடிந்துவிடுகிறது. சில நட்புகள் ரயில் தண்டவாளங்களை போல் என்றும் இணைப்பிரியாமல் சேரவேண்டிய இடத்திற்கு சேர்ந்துவிடும். சில நட்புகள் காலங்களை கடந்து மன வேறுபாடுகளை தாண்டி என்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கும். அது அன்பின் அடையாலம்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. என்பது போல சில நண்பர்கள் பிரதி பலனை எதிர்ப்பார்க்காமல் நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக மனம் உவந்து செய்யும் செயல் நட்பின் அடையாலமே. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. என்று வள்ளுவர் சொல்லி இருக்கின்றார்.

எனது பால்ய நண்பர் திரு இலச்சுமணனை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்தே ஆகவேண்டும். அவருக்கு இன்னோரு மூகமும் உண்டு. அதுதான் ஞான மூர்த்தி என்ற புனைப்பெயர். Klang news என்ற dot.com நிறுவனத்தில் பகுதி நேர புகைப்பட கலைஞராகவும் இருந்திருக்கின்றார்.

சமுக சிந்தனையாளர். சமயத்தில் ஆன்மீக ஈடுபாடுக் கொண்டவர்.ஓடி வந்து உதவும் மனப்பான்மைக் கொண்டவர். இளம் வயதில் ஒரு கேமராவை தூக்கிக் கொண்டு நடமாடும் புகைப்பட கலைஞராய் மூலை முடுக்கெல்லாம் வலம் வந்தவர். இன்றும் கூட பகுதி நேர புகைப்பட கலைஞராய் இயங்கிக் கொண்டிருக்கின்றார். அவர் முன்னேற துடிக்கும் ஒரு தன்முனைப்பாளர். வளரும் தொழில் அதிபரும் கூட. ஆனால் காலம் சிலரை புரட்டிப் போட்டு துவைத்து தும்சம் செய்து விடும். சிலரை புடம்போட்ட பொன்னாக மாற்றி ஒளிரச் செய்யும். இந்த இரண்டுக்கும் தகுதியானவர் என் நண்பர் திரு இலச்சுமணன்.வாழ்க்கையில் எவ்வளவோ அடிப்பட்டு இன்று ஒரளவுக்கு முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் அவருக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

என் இளம் பருவத்தில் பல நண்பர்களை பார்த்திருக்கின்றேன். சிலர் காலத்தின் கோலத்தில் கரைந்து போய்விட்டனர். பல நண்பர்கள் எங்கு இருக்கின்றனர் என்பதே தெரியவில்லை. சிலர் பார்த்து பார்க்கமால் போய்விடுகின்றனர். சில நண்பர்கள் உருவங்கள் மாறி பண்பு நலன்களும் மாறி மாறுப்பட்ட கோணத்தில் திரிகின்றனர். காலத்தின் கோலத்தை என்னவெண்பது? ஆனால் நண்பர் லச்சுமணனின் நட்பு 30 வருட உறவாகும். அன்றிலிருந்து இன்று வரை ஒரே பண்பு நலத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நண்பர்தான் திரு இலச்சுமணன்.தேவார வகுப்பில் இருந்து ஆரம்பித்த எங்களின் நட்பு இன்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் ஒரு 'ஆத்மார்த்த நட்பு' தான்.

நாம் நமது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால், நட்பு என்னும் அங்கம் இல்லையெனில் வாழ்க்கையே இல்லை என்பதை உணர்வோம். தாயுடன் துவங்கும் நமது உறவு, தந்தை, உடன்பிறப்பு, மனைவி, குழந்தை, நண்பர்கள், உற்றார் உறவினர் என்று உடலில் உயிருள்ளவரை வளர்ந்து கொண்டே இருப்பதைப் பார்ப்பீர்கள். நல்ல உறவுகள் என்பது கடவுள் நமக்களித்திருக்கும் வரம்.

மூன்று விடயங்களில் நம் ஒன்றுப்படலாம். சூரியன், சந்திரன், நட்சத்திரம் இவைகளை எங்கிருந்தாலும் உலகின் எந்த மூளையில் இருந்தாலும் நம் பார்க்க முடியும். இவை மூன்றும் நமது மன உணர்வுகளோடு ஒன்றினைந்து மன சந்தோசத்தை தரும். நண்பர்களும் அப்படிதான் ஒன்றுகூடி இணைந்து அளவாளாவும் போதுதான் .நமது சிறு பிரயத்தில் ஏற்பட்ட இன்ப துன்ப நிகழ்வுகளை ஒரு கணம் நினைத்து பார்க்கமுடியும். நினைவுகள் என்பது காலம் நமக்கு தந்த வரபிரசாதம் ஆகும். சில விசயங்கள் மறக்க முடியாத நிகழ்வுகள். அந்த வகையில் நட்பும் ஒரு கலங்கமில்லா நிலவுதான்.

அதுவும் எனக்கும் என் நண்பர் இலச்சுமணணுக்கும் உள்ள நட்பு ஒளிரும் நிலவு போன்றது. அந்த நிலவின் வெளிச்சத்தில் தூய அன்பின் முகம் தெரிகிறது. அற்புதமான அந்த மனிதரை வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றேன்.குறிப்பு: பிறந்த நாள், கல்யாண வைபோகங்களுக்கு புகைப்படம் எடுக்கவும் வீடியோ சூட்டிங் எடுக்கவும் மற்றும் வீட்டுக்கும், கடைகளுக்கும் தேவையான சுத்தம் செய்யும் ரசாயண கலவைகளுக்கும்,வாகன செம்பூகளுக்கும் நீங்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய எண் 0163027566

November 14, 2010

கனவுப் பொறிகள்-8


சுப்பனும் கும்பனும்
எங்கள் தோட்டத்து
கதாநாயகர்கள்
எங்கள் தோட்டம் ஒரு
சினிமா கொட்டிகை
இலவச நாடக காட்சிகள்
இரவில் மட்டும் இயங்கும்
இதயத்தை பிழிக்கும்

ஆ ப்பெக் கடை தண்ணியும்
ஆற்றேர கல்லுக்கடை தண்ணியும்
போட்டவுடன் பொங்கி எழும்
சங்கித வர்தனங்களும்
அவர்களின் சேட்டைகளும்
விருந்தாகி போகும் இரவில்
தெருவெங்கும் நாடகம்
இரவெல்லாம் தெருகூத்து.

குடி போதையில் கூத்தடிப்பதும்
தள்ளாடி தெருவிலே விழுவதும்
தலைக் கால் தெரியாமல்
தெருவிலே படுப்பதும்
வாடிக்கை.........வாடிக்கை
வேடிக்கை மனிதன் அன்றோ

“இண்டிய மபுக்” என்று
ஒட்டு மொத்த
இனத்தையும் இம்சிப்பதும்

November 12, 2010

கனவுப் பொறிகள்,-7வேடம் போட்டுக்கொள்ளாத
வாழ்க்கை
வீவேகம் இல்லாத எங்கள்
கொள்கை
காடும் மலையும் எங்களுக்கு காவல்
காற்றடித்தால் சாயும் நாணலோ
எங்கள் இனம்?

இது .....
தோட்டத்து மரங்களின் விதைகள்.
தோண்டி எடுக்கப்பட்ட கதைகள்
கரிசல் காட்டிலே
கரைந்த கண்ணீர் துளிகள்

பூ பூத்தாலும் காய் காய்த்தாலும்
கருகி போன வசந்தங்களின்
சருகுகள்....

எங்களின் முன்னோர்களின்
மன சுவசத்திற்கு
மனம் திறத்த வாழ்த்துக்கள்
சுகந்தமான சுவாசத்திற்கு
ஒரு சுகமான தேடல்

கனவுப் பொறிகள்,-6சிறகுகள் முளைத்த
மேகக் கூட்டங்கள்
யார் கண் பட்டதோ
சிறக்கொடிந்தது போனது
எங்கள்
இனக் கூட்டமும்தான்
எப்பொழுதும்
உடைந்து விடகூடிய
உணர்ச்சி பெருக்கம் தான்

ஜீவ காரூண்ணியம்
பேசும் தமிழன்
ஜீவ ஆத்மாவை
போற்றுவதில்லை
மகாத்மாவை போற்றும்
தமிழன்
மனிதத்தை போற்ற மறுப்பது ஏனோ?

இமயம் தொட்டு விட்ட
மனிதன் - அவன்
இதயத்தை தொடுவதற்கு
மறுப்பதேன்?

கனவுப் பொறிகள்-5


இதோ மாலை காற்றின்
மதமதப்பு.......
மகிழ்ந்து உலாவும்
தென்றலின்
கதகதப்பு.........

இளமையை விழுங்கும்
இன்றைய வினாடி
எங்கள் இனச் சாசனத்தை
விழுங்க துடிக்கின்றன

மயான அமைதியில்
துயில் கொள்ளும்
இரவு கோட்டன்கள்
எங்கள்
வாட்டத்தை போக்குவதற்கு
வார்தைகள் இல்லை


குமரியில் பிறந்த இனம்
குமுகாயத்தில் சிறந்த இனம்
சங்கம் வளர்த்த எங்கள் இனம்
தன்மான தமிழ் இனம்

November 10, 2010

கனவுப் பொறிகள்,4


நிழல் பிம்பங்களின்
திசைமாறிய
நிறம் மாறிய
புனித பயணம்
செம்மன் சாலையாய்
புறப்பட்டன..

கனவு பொறிகள்
தீப்பந்தமாய்
எரிகிறது.....
எங்களின்
பாதைகள்
வெளிச்சத்திற்கு அப்பால்

திசை எங்கும்
உழித் தீ
வெடித்தி சிதறும்
எரிமலை தீ போல
எங்கள் வாழ்க்கை
கலங்கள்
உமிழ்ந்து
தரைகளை தட்டின

கனவுப் பொறிகள்,-3


ரப்பர் காடுகளில்
அலைந்து திரிந்து
அல்லல் பட்டு
அடிமைத்தனம் என்ற
துயரத்தனங்களில்
நொந்து......வெந்து
வாழ்க்கை என்னும்
இடரினை கடந்து
திசைகள் தோறும்
அடிவாங்கி
பினிக்ஸ் பறவையை
போன்று
மறுபடியும்
உயிர்த் தெழுந்து
கட்டாந்தரையில்
விதைகளை
முளைவிடும்
அதிசயம்

முளைக்கும் விதைகளில்
முனி மரமாய் புதைந்த
வேர்கள்
வாழ்வை நோக்கி
துளிர்விடுமா?

கனவுப் பொறிகள்-2வான் அளவு உயந்திருந்த
மரம்
தன்னை விடுவித்துக் கொள்ளாத
இலைகள்

நிலத்தில் இருந்து
முகிழ்ந்திருக்கும் செடிகள்
நிழல்களிருந்து
தன்னை விடுப்பட மறுக்கும்
கிளைகள்

தளர்ந்து போன
வயோதிகத்தின்
வாசல் படி
வருத்தம் நேய்த முகத்துடன்
காலம் என்னும்
திசையை
நோக்கி
பெரும் பயணம் என்று
கூக்குரலிடுகிறது
ஓரு குயில்

November 9, 2010

கனவுப் பொறிகள்-1


காலை பொழுதில்
பனிக்காற்றில் பகலவனின்
பட்டு தெறிக்கும் பாரிகாசம்
பரிதியின் இனிய சுகவாசம்

நீல வானில்
மேவி விட்ட மேகக்கோடுகள்
அதிலே நீந்தி வரும்
செங்கதிர்ரோன்....
தென்றல் காற்றாய்
தவழ்ந்து வரும்
கூவும் கூயிலின் குரலோசை
பறவைகளின் கிச்சிடும் சத்தமும்

பச்சை புல்வெளியில்
பருவத்து மண் வாசம்
பாய்ந்தொடும் அருவிகளின்
பரவச கீதமும்
ஆடி அசைந்து வரும்
ஆற்றின் அழகும்

ஆடிப்பெருக்கில்
அடித்து வரும்
ஆற்றின் நீரும்
தேடி வந்து ஒரம் நின்று
தெம்மாங்கு பாடும்
எங்கள்
கனிகையரை கண்டு
வாடை காற்று வந்து உரசும்
அவள் ஜாடையை பார்த்து
மதி மயங்கும்.......

November 8, 2010

சமுதாய பிரச்சனைகளை தீர்க்க மனவளம் காட்டும் தீர்வு


காமத்தை கடந்தால் கடவுளைக் காணலாம் என்பது நமது சித்தாந்தங்களில் ஒன்று . புனிதமான கோயில்களில் ஏன் காமம் ததுப்பும் சிலைகள்? சிவலிங்கத்தை கூட ஆண் பெண் ஆலிங்கம் செய்யும் ஒரு தத்துவமாக விளக்கம் தரும் முயற்சிதான் என்ன?

மனதை கடந்து செல்லவேண்டும் எப்படி ? காமம் என்னும் உயிர்ச் சக்தியை மனம் கடந்து செல்லும் போது எதை கடந்து உள்ள சென்றால் கட+உள் = கடவுளை காணலாம்? உயிர் என்று நாம் எதை குறிப்பிடுகின்றோம்? உயிருக்கு எதாவது உருவம் இருக்கிறதா? நாத விந்து என்று நமது முன்னோர்கள் எதை சொன்னார்கள்? உயிர் நிலை தானே இந்த நாத விந்து. காமத்தை அடக்கலாமா? அது அடக்கவேண்டிய ஒன்று அல்ல. சில சமயங்களில் தவிர்க்க வேண்டிய ஒன்று. நீரிலே அடக்கும் ஒரு பந்து எப்படி மிகவும் வீறுக் கொண்டு மேல் எழுப்புகிறதோ அப்படிதான் காமமும் அடக்க அடக்க இன்னும் அதிகமாகி நம்மை அழித்துவிடும். எத்தனை சாமியார்களின் வாழ்க்கையை பாருங்கள், மண்ணாலும் பெண்ணாலும் பொண்ணாலும் விழ்ந்தவர் கோடி.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்து சங்கத்தின் தலைவர் அவர்களை பார்த்து பேசிக் கொண்டிருந்த போது சமீபத்தில் ஒரு பிரபலமான இந்திய நாட்டின் செஸ்க் சாமியாரின் சீடர்களின் நிகழ்வு ஒன்று மலேசியாவில் நடந்தது. அதில் இந்து சங்கதின் துணைத்தலைவர் கலந்து கொண்டு பேசியதற்காக பத்திரிக்கைகளில் இந்து சங்கம் என்ன இவர்களுக்கு உடந்தையா என்று கேள்வி எழுந்தாக மிகவும் வருத்தப்பட்டார். தலைவரின் வருத்தம் நியாமான ஒன்று . தவறான ஒரு தலைமையில் இயங்கி ஒரு இயக்கத்தை ஒரு தேசிய நீரோடையில் இணைக்கும் ஒரு சிறு முயற்சி தான் துணைத் தலைவர் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு பேசி விட்டு வந்திருக்கின்றார். யாருக்கு தெரியும் அந்த சாமியார் பசுத் தோல் போர்த்திய புலி மாறுவர் என்று அவர்களின் சீடர்களின் கதிதான் எப்படி? மதப் போர்வையில் சில சாமியார்களின் மன்மதலீலைகள் அரங்கேற்றம் பெருவதற்கு பாலியல் உறவு கொள்வதற்கும் அவர்களின் வக்கிரமான புத்தி மட்டும் காரணம் அல்ல, நாமும் ஒருவகையில் காரணமாகிவிடுகின்றோம். ஆன்மீகத்தை துறந்துவிட்டு மத சங்குகளில் மக்களின் வாழ்க்கை நெறிகளை புகுத்திவிட்டோம். எது உண்மை எது பொய் என்று பகுத்துணராமல் உணர்ச்சி அடைப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இவர்களை போன்றோரின் ஆளுமைக்கு அடிமைப்பட்டு தான் போவோம்.

பால் உறவும் ஆன்மீக மேம்பாடும் (sex and spiritual development) என்ற பொருள் குறித்து விளங்கிக் கொள்ளும் முன் அதனுடைய மதிப்பைப் பற்றி நாம் உணர்ந்துக் கொள்ளவேண்டும். இந்த பால் உறவு என்ற ஒன்று, அதை ஒட்டிய அறிவு, எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு சமுதாயத்தில் தெளிவு இருக்கிறதோ, அந்த அளவுக்குக்தான் சமுதாயம் நல்ல முறையில் மகிழ்சியாக, உடல் நலத்தோடும் மனவளத்தோடும் இருக்க முடியும்.
என் நண்பர் ஒரு அருமையான ஒரு விளக்கத்தை தந்தார்.

பிரமாச்சாரியத்தையும் இல்லறத்தையும் இணைக்கும் பாலம் தான் காய கல்ப பயிற்சி. நாத விந்து சக்திகளை குண்டலினியின் சக்தியாக மேல் எழுப்பி அந்த நாத விந்து சக்திகளை உடல் முழுவுதும் பரப்பி இளமையை காப்பது மட்டும் அல்லாமல், மன கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கும் ஒரு அருமையான வழி இந்த காய கல்பம் என்று . இரண்டு வேவேறான கோப்பாடுகள். அதாவது துறவறமும் இல்லறம் ஒரே செயல் முறையில் இணைக்கும் இந்த இந்திரிய யோகம். மன ஆளுமை அதே சமயம் விந்து நாதத்தை சேமித்து தேவைக்கு மிகுதியானதை உடலுக்கு உயிர்ச் சக்தியாகி உடல் நலத்தையும் மன நலத்தையும் ஒருங்கே பேணும் அற்புத கலை தான் இந்த காய கல்ப பயிற்சி. ஆனால் நமது மக்கள் இந்த மாதிரியான வாழ்க்கைக்கு தேவையான அற்புத பயிற்சியை தவிர்த்து விட்டு வேறு எதுக்கோ கவணத்தை செலுத்துகின்றனர்.

இயற்கையும், அறிவும் இணைந்துதான் வாழ்வு நடைப்பெறுகிறது. இயற்கையை உணர்ந்து, இயற்கையை மதித்து, இயற்கையின் விளைவறிந்து எண்ணம், சொல், செயல் பயன்படுத்தி நல்ல முறையில் செம்மையாக வாழ்வை நடத்துவதற்கு ஏற்ற பயிற்சி தான் யோகம்.
கண்ணை மூடிக் கொண்டால், அது தியானம் அன்று. மனம் ஒருமைப்ட்டு மனதை மற்ற எண்ணத்தில் இருந்து விடுப்பட்டு ஒரே சிந்தனையில் வைத்திருப்பதுதான் தியானம், சிலர் நினைப்பது போன்று காவி உடை அணிந்தால் மட்டும் அவன் யோகியாகிவிடுவானா? யோகம் தியானமும் ஒரு மனிதனை செம்மை படுத்திவிடுமா? அவன் மனவளமும் அகத் திறனும் முழுமை பெற்று மனக்கட்டுபாடுக் கொண்டால் அவன் ஒரு சிறந்த யோகி ஆவான். அது அகத்தை ஆய்ந்துணர்ந்தால் தான் உண்டு.

சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள். துறவிகள் என்று வெளியேறியவர்களில் பெரும்பாலோர் அறிவின் நிறைவு பெற்றுப் பின்னர் துறவு பெற்றார்களில்லை, அறியாமை, மனகுழப்பம், எழ்மை வேலையின்மை,நோய்,சோம்பேறித்தனம், பேராசை, வெறுப்பு, குடுப்பச் சண்டை இவற்றால் இல்லம் விட்டுக் கடமை பிறழ்ந்து வெளியேறினார்கள், சுழ்நிலை நிர்பந்தத்தால் தவிர்க்கமுடியாத நிலையில் வெளியேறியவர்களும் உண்டு. அவர்களில் ஏதோ ஒரு சிலர் சந்தர்ப வசதியாலும், நல்லாசிரியரோடு தொடர்பு கொண்டு ஞானப் பேறு பெற்றார்கள். மற்றவர்கள் வாழ்வு பாழாகி துன்புற்று மடிந்தார்கள்.

புத்தபிரானும் இறுதியாக ஒரு நல்ல ஒரு பெண்மணியிடம் தீட்சை வாங்கி உண்டுவிட்டே போதிமரத்தில் சித்தியை பெற்றார். உலகிற்கு புத்தத்தை தந்தார். இல்லை என்றால் பத்திலே ஒன்றாகி கரைந்து போயிருப்பார் புத்தர்.

நாம் எதை எதையோ நினைக்கின்றோம். ஆனால் நினைத்தெல்லாம் நடப்பது இல்லை. ஏனெனில் நம் எண்ணங்களுக்கு வலுவில்லை. அந்த வலிமையை “தாரனை” என்னு தியானத்தால் வலுப்பெறச்செய்யலாம். எண்ணம் வலுப்பெரும் போது, நமது சிந்தனை செயல் உறுதிபடுகிறது. நல்ல எண்ணங்களை நினைக்க தெரியாதவராக நாம் இருந்தால் துன்பமே அன்றி இன்பம் இல்லை.

தியானம் பயிலும் முன் நாம் நல்ல சிந்தனைக் கொண்டவராக இருக்க வேண்டும். ஆசை பற்று கடந்தவையாக நமது மனம் இருக்கவேண்டும். அது தான் மனக் கட்டுப்பாடு. நல்ல எண்ணங்களாளே நமது வாழ்க்கையும் வடிமைக்கப்டுகிறது.
மனக் கட்டுப்பாடின்றி நல்ல யோகியை நடிப்பவர்களின் வேசம் ஒரு நாள் உலகிற்கு தெரிய வரும். அது இயற்கையின் நீதி அனைத்து துறந்தவன் யோகியாக இருக்கலாம். ஆனால் இங்கு பலர் உடையயைதான் துறக்கின்றனர். உள்ளத்தை அல்ல. துறவிக்கு எதற்கு பல கோடி சொத்து? வீடு, நிலம், பரிபாலனம்?

உண்ணும் உணவு கூட நம் உழைப்பில் இருந்து பெற வேண்டும். பிச்சை எடுப்பவன் எப்படி யோகியாவன். நாம் வணங்குவதற்கு அவன் எப்படி யோக்கியவன் ஆவான்? இந்த சமுதாயம் பிச்சைக்காரர்களை வளர்கிறது. மதத்தின் பெயரால் யோகியின் பெயரால் சத உட்க்கார்ந்து உண்ணும் சோம்பேறி மனிதனை உருவாகிக் கொண்டிருக்கிறது. நமது சமுதாயத்தில் தான் இலவச அண்ணதானம். அதிலே வேறு உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்ற உறங்கும் சித்தாந்த போதனை. எப்படி உருப்படும் நமது சமுதாயம். ஆனால் மேலை நாடுகளில் No Free lunch .உழைப்பில்லாமல் அங்கு ஊதியம் இல்லை.

ஒரு வேளை உண்பவன் யோகி
இரு வேளை உண்பவன் போகி
மூன்று வேளை உண்பவன் ரோகி

அளவான உறக்கம், அளவான உழைப்பு. அளவான ஒய்வு, இதிலே அளவான உடல் உறவும், அளவான செல்வம் இருந்தால் சிறப்பு. அளவுக்கு மீறிய எதுவும் துன்பம் தர கூடிய ஒன்றுதான். அளவுக்கு மீறிய எந்த ஒரு செல்வமும் மற்றவர்களின் உழைப்பை அவர்களுக்கு சேர வேண்டிய பொருளை நாம் சுரண்டுவது போன்ற செயல்தான். இதுவும் ஒரு வகையான சமுதாய துன்பம் தான்.

இதிலே வேடிக்கை என்னவென்றால் எல்லாம் துறந்த சாமியார்களுக்கு பல கோடி சொத்துக்கள் , கை கால்களை அமுத்தி விட பக்தர்கள். உணர்சிகளை அடக்க முடியாத இந்த சாமியார்கள் பெண்ணின்பத்தில் உணர்சிவசப்படுகின்றனர். இவர்கள் ஆன்மாவை துறந்தவர்கள் அன்று. பேராசைக் கொண்டவர்கள். சில சித்திகளை கொண்டு பணம் பறிபவர்கள். வெட்டகம் கெட்டவர்கள். இவர்கள் எல்லாம் யோகியா? பணம் தேவை இல்லாத ஒருவருக்கு பணம் காசு கொடுக்கும் முட்டாள்கள் நாம். எவ்வளோ நல்ல இயக்கங்கள் வாழ்க்கை நெறியை சொல்லுகிறது. ஆனால் அது எல்லாம் நமது கண்ணுக்கு தெரிவதில்லை. ஆடம்பரமும் , ஆர்ப்பாட்டம்தன் இவர்கள் தெரிகிறது. பணத்தோடு வாழ்பவர்கள் எல்லாம் யோகி அல்ல, பகுத்தறிவோடு வாழ்க்கையை உணர்த்த முற்படுவோர்தான் யோகி.

ஒரு யோகி என்றால் இந்த மக்களின் மன வளத்தையும் உடல் நலத்தையும் அவன் சார்ந்த குடுப்ப நலத்தையும் பேணும் ஒரு அமைப்பாக இருந்து செயல் படவேண்டும் அந்த யோகி. இதுதான் வாழ்க்கை என்று தான் உணர்ந்து, இந்த மக்களும் உணரும் நெறிமுறைகளை தந்து, மக்களின் ஆன்ம நெறிகளை வாழ்க்கை நெறிகளோடு இணைத்து வாழ்பவன் தத்துவர்தமான இந்த வாழ்க்கையை உணரகூடியவனாக இருப்பான்.