October 29, 2010

கருனையின் கண்கள்


கருனையின் கண்கள் இது
கருவண்டு விழி இது
மழலைச்சொல்லும் மொழி இது
மலர்ந்த முகம் தேனமுது.
தெள்ளுத்தமிழ் இசைத்திட
தென்பாண்டி தமிழ் துள்ளிவர
முல்லைக் கொடிப் போல்
சின்ன பிள்ளாய் முகிழ்ந்து வந்து
தித்திக்கும் தமிழை தரணியெங்கும்
புகழ் பாடி இன்பத் தமிழாய் வாழ்ந்திடு
தமிழை இன்னுயிராய் ஏற்றிடு.

எனது நண்பரின் உறவு நமது உறவும்தான்
வாழ்க! வளமுடன்!

October 22, 2010

சமுதாய பிரச்சனைகளை தீர்க்க மனவளம் காட்டும் தீர்வு


சமுதாய கேடு எங்கிருந்து வருகிறது என்றால் தனி மனித ஒழுக்க கேட்டில் இருந்து தான் வருகிறது.இன்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஒழுங்கீனம், திமிர், ஆணவம் அனைத்திற்கும் ஒரு வகையான மூலக் கூறுகள் ஆன்மீகம் அற்ற சமுதாய வாழ்க்கை முறைகள் தான். அதற்காக மூடத்தனமான மதக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை.அவ்வாறான பிற்போக்கு தனமான கொள்கைகளை களைந்து அறிவான விஞ்ஞானம் கொண்ட மெய் ஞானத்தை ஆன்மீகத் சாரத்தை வாழ்க்கை நெறியாக கொண்டால் அமைதியான அன்பான பண்பான பகுத்தறிவான மனிதர்களை இந்த சமுதாயம் வழங்கும். தனி மனித அமைதி, ஒரு குடும்பத்தின் அமைதி, ஒரு குடும்பத்தின் அமைதி, ஒரு இனத்தின் அமைதி, ஒரு இனத்தின் அமைதி, ஒரு நாட்டின். அமைதிதான், இந்த உலகத்தின் அமைதியாக மாறும்.

1) இயற்கை விதி,
2) சமுதாய அமைப்பு
3) இன்ப துன்ப உணர்ச்சிகள்

ஆகிய மூன்று கோணங்களின் இணைப்பிலே இந்த வாழ்வு நடைப்பெறுகிறது. இந்த மூன்று துறைகளிலே தெளிவு உண்டானால் அறிவுச் சார்ந்த வாழ்வு புலப்படும். நமக்கு சமுதாய சிக்கலுக்கும் வழியும் தெரியும்.

துன்பம், என்பது சமுதாய துன்பம் மட்டும் அல்ல. தனி மனித துன்பமும்தான் இந்த சமுதாயத்திற்கான துன்பமாக மாறிவிடுகிறது. தனி மனித துன்பங்கள் சங்கிலி தொடர் போல சமுதாய துன்பமாக வீக்கம் பெருகிறது. தனி மனிதனுக்கு வேலை இல்லை என்றால் சமூதாய பிரச்சனைகள் உருவெடுக்க காரணமாகிவிடுகிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு இங்கிருந்து தான் உற்பதியாகிறது. தனி ஒரு மனிதன் தன்நிலையை உணர்ந்தால் சமுதாய பிரச்சனைகள் களையப்படும். ஒட்டு மொத்த சமுதாயத்தை நாம் திருத்த முடியாது, ஆனால் தனி ஒரு மனிதனின் வளமான வாழ்வு அவனின் அறிவு சார்ந்த உழைப்பு மட்டும் போதுமானதல்ல, அவனின் மன நலமும் உடல் நலமும் வாழ்க்கை நலமும் சிறப்பாக இருக்கவேண்டும்.

உண்மையில் துன்பங்ளுக்கான காரணம் தான் என்ன? மனிதன் நான்கு வித குறைப்பாடுகளால் துன்பமடைகிறான். அமைதியிழந்து அல்லலுறுகிறான்.

1).கடவுளை தேடிக்கொண்டேயிருந்தும் காண முடியாத குறை
2).வறுமை என்னும் பற்றாக்குறை
3).விளைவறியாமலோ, விளைவையறிந்தும் அலச்சியம் செய்தோ, அவமதித்தோ செயலாற்றி அதன் பயனாகத் துன்பம் அனுபவிக்கும் குறை.
4).மனிதனின் சிறப்பறியாமல், பிறர் மீது அச்சமும், பகையும் கொண்டு துன்புறுத்தியும், துன்புற்றும் அல்லலுறும் குறை.

இந்த நான்கு குறைப்பாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டன. வாழ்க்கை பலவிதமான சிக்கல்களாகி அவற்றை எளிதில் தீர்த்து விடுதலை பெறமுடியாமல் அவற்றுக்கு வழி காணாமல் மனிதன் தவிக்கிறான். வாழ்வின் நலமிழந்து தான் வருந்தியும் பிறரையும் வருத்தியும் வாழ்கிறான்.

அறிவின் நிலைகளை மனிதன் அனுபவமாக அறிந்து கொள்ள வேண்டுமானால் முறையான அக நோக்கும் பயிற்சி அவசியம். மனிதன் மன வளத்தை சரியான முறையில் இயக்க தெரிந்தால் போதும், பெரும்பாலான சமூக பிரச்சனைகள் தீர்ந்த மாதிரிதான்.
அறிவு புத்தி நிலையிலும், சித்த நிலையிலும், பேரறிவு நிலையிலும், சமாதி நிலையான பிரம்ம நிலையிலும் நின்று பயில வேண்டும். பிறகு வேண்டும் போது வேண்டிய படி அறிவை பயன்படுத்தி இனிது வாழ முடியும்.

மனிதனின் பிரச்சனையே மனப் பிரச்சனைதான். மனதை கட்டுப்படுதாமல் மனதிற்கு அடிமை ஆவது தான். மனச்சிக்களில் மாட்டிக் கொண்டு மன அமைதி இழந்து வாழ்ந்து கொண்டிருப்பது தான் இன்றைய நடைமுறையாகிப் போனது. பெருபாலான நமது முக பாவங்களை பாருங்கள், ஒரு விகாரம் தெரியும், ஒரு திமிர் தெரியும், தான் என்ற ஆணவம் தெரியும். இவை எல்லாம் எங்கிருந்து வருகிறது? எல்லாம் அகத்தின் அழகு தானே. அகத்தை சீர் செய்தால் மனதில் தெளிவு உண்டாகும், முகத்திலே அறிவின் ஒளியும் அன்பின் நிலையும் தெரியும்.

பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கின்றான். துன்பமில்லா இன்ப வாழ்வை மட்டு மனிதன் நாடுகிறான்.வாழ்வின் நோக்கதிற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால் அது துன்பம் தரும் . இயற்கையாக கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையும் அவ் வாழ்க்கையின் நோக்கத்திற்கேற்ற வாழுகின்ற முறை யாது என்று அறிந்து கொள்வதுதான் அறிவு என்னும் ஞானம்.
தவறிழைப்பது மனம் இனி தவறு செய்து விடக் கூடாது என தீர்மானிப்பது அதே மனம், தவறு செய்யாத வழியை தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனம். மனதை பழைய நிலையில் வைத்துக் கொண்டு புதிய பாதையில் செல்ல அதற்கு எப்படி முடியும்? கட்டுப்படாத மனம் காட்டு யானைக்கு ஒப்பானது.கட்டுப்ட்ட மனமோ ஆக்க வேலைகளுக்கு உதவும்.

எப்படி இந்த மனதிற்கு பயிற்சி தருவது?

நமது பதிவுகளில் பேராசை, சினம், கடும்பற்றும், முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சகம், என்னும் ஆறு குணங்கள் கூட பழிச்செயல்கள் மூலம் பதிவு பெற்றவைகளே. இவற்றை நாம் மெய் விளக்கத் தவ முறையில் அறுகுணச் சீரமைப்பு என்னும் பயிற்சி மூலம் நமக்கு இருக்கும் பதிவுகளை மாற்றமுடியும்.

உணர்ச்சி நிலையில் உணர்ந்த நிலை
1. பேராசை நிறைமனம்
2. சினம் பொருமை
3. கடும்பற்று ஈகை
4. முறையற்ற பால் கவர்ச்சி கற்பு நெறியாக
5. உயர்வு தாழ்வு சமநோக்கு
6. வஞ்சகம் மன்னிப்பு

அகநோக்கும் பயிற்சியின் மூலம் மனதை உயிரில் ஒடுக்கி உயிர் நிலையறிந்து ஆன்ம உணர்வு முதலில் பெற வேண்டும். இந்த நிலையில் இன்ப துன்ப உணர்வுகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் உண்மையை அறிந்த மனிதனுக்கு இந்த உணர்வு பெற்றபின் மனம் உடல் நிலை கடந்து உயிர் நிலையில் நிலைத்துப் பின் உயிர் நிலையும் தாண்டி, தெய்வ நிலையில் லயித்து நிற்கின்ற உயர்பேறு கிட்டுகிறது. செய்கின்ற செயல் எல்லாம் கடமை உணர்வின் கீழ் எல்லோருக்கும் பயனாகும். அறிவே தூய்மையான மெய்பொருளோடு ஒன்றி நிற்கும். இங்கு பழிச்செயல் பதிவுகள் புதிதாகத் தோன்றா. முன்பு இருந்த பதிவுகள் யாவும் அடியோடு முறிந்து போகும். இந்த உண்மையை தான்
“இருள்சேர் இருவினையும்சேரா இறைவனபொருள்சேர்
புகழ் புரிந்தார் மாட்டு”
என்றார் வள்ளுவர்

ஆன்மீகம் என்றவுடன் ஏதோ மதப் போதனை என்று நினைத்துக் கொள்வது எவ்வளவு அறியாமை! எந்த மதமும் ஆன்மீகதோடு தொடர்புடையதுதான்.ஆனால் மதம் மனித சிந்தனைகளை ஏற்று சில கட்டுப்பாடுகளையும் சில கடப்பட்டுகளையும் மனித இனத்தின் மேல் தனது ஆதிக்கத்தை திணிப்பதுதான் மனித சமுதாயத்தில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடுகிறது. தன்னை சார்ந்த மதத்தினரையும் தனக்கு எதிரான மதத்தினரையும் தனது கட்டுக்குல் கொண்டு வருவதற்கு முயர்ச்சிப்பதுதான் மதம். எந்த மதத்தில் இல்லை பஞ்சமா பாதகங்கள்? தனது மதக் கொள்கைகளுக்கு எதிரானது என்றால் கலுவேற்றுவது, அவர்களை உயிருடன் எரிப்பது , போர் புரிந்து கொல்வது மற்ற மதத்தினரின் செத்துக்களை கொள்ளை அடிப்பது, கற்பழிப்பது என்று எது முடியுமோ அதை எல்லாம் இறைவன் பெயரில் செயல் படுத்துவது மதம். மனதை பக்குவபடுத்தி மனித நேயத்தை வளர்க்க வேண்டிய மதம் மனிதருக்குள் பிளவை எற்படுத்தி எனது மதம் பெரியது உனது மதம் சிறியது என்று கோட்பாடுகளில் காலத்தை தள்ளிக்கொண்டு இருக்கிறது மதம்.

சில அற்புதமான மஹான்களில் ஆன்ம நேயத்தில் உருவான மத கோட்பாடுகள் காலவோட்டத்தில் ஆன்மீகத்தை மறந்து உலக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு பல விஷயங்கள் வெரும் சடங்காகி போனதுதான் வேதனை. மதம் தனது பல வேசங்களை களைந்தால் அற்புதமான ஆன்மீகம் கண்ணுக்கு தெரியும். அற்புதமான மனித நேயம் மிகுந்த வாழ்க்கையும் புரியும்

உயிருள்ள எந்த மனிதனுக்கும் மனம் என்ற உணர்வு இருக்கும் குரங்கு போன்று திரிந்துக் கொண்டிருத ஆன்மாவை உணர்ந்துக் கொள்வதுதான் ஆன்மீகம். ஒவ்வொரு மனிதனும் தன் உயிரும் மனமும் உணர்ந்து தெளிந்து பக்குவபடுத்துவது தான் ஆன்மீகம். ஆன்மீக தேடல் என்பது ஏதோ பிற்போக்கு சிந்தனை என்பது எல்லாம் ஒரு மாயை. மனம் அறிவின் நிலைப்பட்டால், அதுவே பெரிய சீர்திருத்தம் தான்.மனம் அன்பு நிலைப்பட்டால் மகாத்மா என்று பொருள். மனித மனம் ஒரு நிலைப்பட்டால் மகா சக்தி மிக்கது. அன்பு மயமான மனதிற்கு எப்படி வரும் வன்முறை? மனம் அமைதி கொள்பவன் எப்படி பஞ்சமா பாதகங்களில் ஈடுபடுவான்? தனி மனித சீர்திருத்தம் மனதின் அடிப்படையில் இருந்தால் இந்த சமுதாயம் சிறந்த சமுதாயமாக மிளிரும் என்றால் அது மிகையல்ல.
ஒரு நபியை, ஒரு ஏசுவை, புத்தர் பிரானை, வள்ளுவரை திருமூலரை, வள்ளாலரை ,தாயுமானவரை, வேதாத்திரியை போன்று இன்னும் எண்ணற்ற சித்தர்களையும் யோகர்களையும் தந்தது இந்த ஆன்மீக நெறிதான். அந்த ஆன்மீக நெறி ஏன் நமது வாழ்க்கை நெறியாக கூடாது?

சமுதாயத்திலே முதலில் அனைவருக்கும் மன வளத்தை போதிப்போம்; மனதை பண்படுத்துவோம். மனம் சீர்ப்பெற்றாலே மாண்புடன் வாழும் மனிதனை நாம் கண்டுக் கொள்ளலாம்.

இங்கு ஒரு கேள்வி எழும்? மனதை அடக்க தெரிந்த சில சாமியார்கள் ஏன் பெண்ணின்பம் கண்டு அவமானம் படுகிறார்கள்? அடுத்து சிந்திப்போம்.

நகர் உலா - "லிட்டல் இந்தியா"


தீபவாளி வந்துடுச்சு. ஒரேடியாக களை கட்டிக் கொண்டிருக்கிறது. லிட்டல் இந்தியா என்று சொல்லப்படுகின்ற பிரிக்பீல்ட்ஸ் வட்டாரம். இரவு கேளிக்கையுடன் பிரபாண்டமான அளங்ரிப்புடன் இந்த வருடம் தீபாவளி கச்சேரி தொடங்கிருக்கிறது. இவ்வாண்டு அக்டோபர் மாதம் இந்தியப் பிரதமர் பிரிக்பீல்ட்ஸுக்கு வருகை தந்து “ லிட்டல் இந்தியாவை” அதிகாரபூர்வமாகத் திறப்பு விழா கானும் என்று பிரதமரால் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இலங்கயில் தமிழர்களை கொண்றதற்கு சதி செய்த மன்மோகன் சிங் எதற்கு இங்கு வந்து தமிழர்களின் பகுதியை திறக்க வேண்டும்? , நமக்கு பிரதமர் மாண்புமிகு நஜிப் அவர்கள்தான்.அவர் நமது பகுதியை திறப்பு விழா செய்தால் அது நமக்கு சிறப்பு.

தமிழர்களை கொண்றவர்களை வைத்து திறப்பு விழா கண்பது சரியாக படவில்லை.. அதுவே தமிழர்களுக்கு நல்லதை செய்த இந்திய பிரதமர் என்றால் தவறில்லை, , தமிழர்கள் ரத்தம் சிந்தும் போது எல்லாம் சாக்கு போக்கு சொல்லி இரகசியமாக ஆயுதங்களை தந்து சிங்களவனுக்கு உதவியவர் தாம் இந்த கொடுங்கோலன் மன்மோகன் சிங், தமிழன் தான் எதையும் சீக்கிரத்தில் மறந்துவிடுபவன் நாளை கொடுங்கோலன் ராஜபக்சவை வைத்து விழா நடத்தி பணம் பார்த்தாலும் பார்பார்கள். அதை யார் அறிவார்கள்?
நகர் உலா
படம் Cyber shot SonyEricsson -கைத்தொலைப்பேசி
நேரம் இரவு 9.30 pm

October 19, 2010

சிந்தையில் பூத்த விந்தை மலர்


சிந்தையில் பூத்த விந்தை மலர்

அடைமழை விட்ட பிறகும் அடங்காத என் மனக்குரங்கு ஆசை என்னும் கள்ளைக் குடித்து வெறிப்பிடித்து ஆடுகிற நேரத்திலே வெறுமை என்னும் தேள் கொட்டி நான் படும் அல்லலுக்கு அதிமதுரத்தை தேடுகின்றேன்!. இறைவா!

கனவுகள் நிறைந்த எனது வாழ்க்கை கலைந்துவிட்டது. நினைவுகள் கூட எனக்கு நெருப்பாய் சுடுகிறது.. எண்ணங்களில் கூட வாழ்க்கை வண்ணங்கள் இல்லை. காவியத்தின் தலைவனாக என்னை நினைத்தேன் கனவில் கூட ஒரு காவியத்தை புணைந்ததில்லை. கவிதை கவிதை என்று நினைத்தேன் கவிதையில் பல மாறுதல்கள் வேறுப்பபட்ட நினைவுகள் நிறைந்திருக்கின்றன, என்பதை பிறகுதான் உணர்ந்தேன். ஒரு ஓடையில் எத்தனை வலைவுகள், நெலிவுகள், தடைகள் ஓடை ஓடும் பாதையில் எத்தனை ஏற்ற இறக்கங்கள், அதுதான் எனது வாழ்க்கையின் நாளங்களாகிவிட்டன. வேகத் தடைகள் நிறைந்த எனது வாழ்க்கை வேதனையை மிஞ்சிவிட்டது அதன் போதனைகள் ! .துறவிகள் போல் வாழ்ந்தாலும் துயர் சூழும் இவ்வுலக வாழ்வில் அப்பப்பா! இறைவனுக்குதான் வெளிச்சம்

வேதனை லயத்தில் சிக்கித் தவித்திடும் போது பலருடைய சாதனை எனது நினைவை விரலேன வருடிவிடுகின்றன. அதனால்தான் வேதனையிலும் சில சாதனை செய்து இந்த சோதனையை வெல்ல வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

“புரச்சிப்பூக்கள்” என்று என்னை வர்ணிக்க தோன்றுகிறது. ஆனால் “முயற்சி” என்னும் வித்து எனது கைகளில் சிக்கவில்லை. எங்கோ ஒரு நாள் ஏக்க பெருமூச்சு. தொலைந்து போன மவுணங்களுக்கு மத்தியில் வாழ்க்கை முகிழ்ந்து எழுந்த அதிசயம்தான் என்னவோ?
பேதை நான் ! கடலேன துன்பத்தில்லே, அலையேன துயரத்திலே சிக்கித் தவித்திடும் பொழுது நிலவேன என் நெஞ்சை தொடுகின்றன. நிலவெளியில் ஒளிக்கதிர்கள் நடைப்பாதையை தேடுகின்றன..அது கடல் அலையேன விரிந்து விரிந்து செல்கின்றன.

எனது நெஞ்சிலே சிக்கிய விடியலை நாளை வருகிறது கதிரவனின் விண்ணோளி என்று சொல்லாமல் எனது நெஞ்சை சுடுகின்றது. காலத்தின் கோலத்தால் கண்சிவந்திருக்கும் இந்த கவிஞனின் ஞாலத்தை. நாளை வரும் சூரியனின் காலைக் கதிர்கள், நாளும் உண்டு நம்பிக்கை நட்ச்சத்திரம். என்று பூபாளம் பாடி வரட்டும்.

இலச்சியத்தை ஒரு லச்சியமாய் எண்ணி, காலத்தை கதிரவனின் கால்சக்கரமாய் நினைத்து கருமத்தை கருத்தாய் முடித்திட வேண்டும்

இன்று என் நெஞ்சமென்னு கங்கையில் விட்ட கண்ணீர் துளிகள் , நாளை புன்னகை தவளும் நம்பிக்கையை பூக்களாய் கைகளில் ஏந்தி கவிதை பாடவேண்டும்.
வாழ்ந்திருக்கும் போதே மாய்ந்து போனவன் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதரில் மத்தியில் தெய்ந்து நோந்து போன மனிதர்கள் தான் அதிகம்.

வாழ்க்கை பாதை, கல்லும் முல்லும் நிறைந்த கரடும்முரடான காட்டுப் பாதை. அதை பஞ்சு மெத்தையாக்கிக் இனிமை கொள்வதற்கு கடினமான முயற்சி தேவை. எங்கோ முளைத்த விடிவெளி போல எனது வாழ்க்கை மிகவும் நீண்டு நெடிய பயணத்தை தொடங்கிவிட்டது.
பாலைவனத்திலே ஒரு சோலைவனம். கடும் குளிரிலே கதகதப்பான காற்று, புயலுக்கு பின் அமைதி என்பது போல் எனது வாழ்க்கை படகினை சிறு முயற்சி என்னும் துடுப்பினை கொண்டு துயரம் என்னும் இந்த கடலைக் கடக்க முயற்சிக்கின்றேன். இறைவா! துன்பம் நிறைந்த இவ் வாழ்க்கையை இன்பம் நிறைந்ததாக்கு! இறைவா !

கடலோரத்தில் கவிதை பாடித் திரியும் பாவலனுக்கு தென் பாண்டி முத்து கிடைத்தால் எப்படி இருக்கும். உணர்ச்சிச்புர்வமாய் உள்ளத்தை ஆராய்ந்தால் அவனுடைய துள்ளும் உள்ளம் இன்பத்தை அள்ளும். அது போலதான் துன்பத்தில் முழ்கிக் கிடந்த எனக்கு இன்பத்தை தா! எனது நெஞ்சமெனும் பறவைக்கு வானத்திலே சிறகடிக்கும் வல்லமையை தா! வந்து இன்பத்தை தா!

கற்பனையில் கரைந்து போவது வாழ்க்கையா ? இல்லை கடந்து போன மேகங்கள் ஒன்றுக் கூடுவது வாழ்க்கையா? தொடும் வானத்திலே, நெடும் கோணத்திலே வரும் வானவில்லிலே நமக்கு தெரிந்தும் தெரிந்தும் தெரியாமல் மறைந்தும் சிரிக்கின்ற பேரழகு. மாலையும் இரவும் சந்திக்கும் வேளையிலே பிறந்து மயக்கும் ஒரு மாய அழகுத் தோற்றம் இந்த வாழ்க்கை.. அது யாருக்கு தெரிகிறது?

வாழ்க்கை அத்தியாத்தில் இது சிறு மணக்கும் மலர்வணம்தான். சோதனையிலும் வேதனையிலும் தென்றல் உருவில் வந்த நந்தவணம் காதல் என்னும் காவிய முள். எந்தன் நெஞ்சம் புண்ணாகிய போது கனவில் வந்த அந்த கந்தறுவ கன்னி எனது வாழ்க்கை பாதையில் தென்றலை உலாவா விட்டாள். ஏதோ தெரியவில்லை அந்த பாவையின் பார்வை எனது நெஞ்சிலே புயலாய் உருவெடுத்து சென்றது. சாதலை எண்ணி சறுக்கிடும் போது காதலாவது கத்திரிக்காயாவது?

எனக்குள் ஒரு தாக்கம் ஏற்றம் என்னும் ஒரு ஏக்கம். அழகு என்றால் என்ன? என்ற கேள்வி கனைகள் வெகு நாட்களாக என் மனதிலே முளைத்து எள்ளி நகையாடுகிறது. காதல் அழகாக இல்லை காதலி அழகா என்று? இல்லை மனிதர்கள் மன அழகை சொல்கிறார்களா என்று? இல்லை மாண்புடன் வாழும் அக அழகை சொல்கிறார்களா என்ன? சில சமயங்களில் இந்த வாழ்க்கை கூட நமக்கு கலைநயம் மிகு அழகான தொரு மாய தொகுப்பாக தான் தெரிகிறது.
காந்தி சொன்னது எவ்வளவு உண்மை , “உடல் என்பது ஆசையின் போன்றவற்றின் விளையாட்டு மைதானமாகவும் இருக்கலாம் அல்லது தன்னைத்தானே உணர்தல் திருக் கோவிலாகவும் இருக்கலாம்”, எவ்வளவு தத்துவவர்தமான வார்த்தைகள். காமத்தை கடந்தால் கடவுளைக் காணலாம்.

இதோ ! அழகை ஆராதிக்கும் ஆதவனின் கிரணங்கள் முகிழ்ந்திருக்கும் முல்லைக் கொடியில் முத்தமிடு வேளையிலே, நந்தவனம் எங்கும் படர்ந்திருக்கும் பனித்துளிகள் போல எனது மனக்கலக்கங்கள். வாழ்க்கையை புரட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. மனவளத்தை பெற்றால் மன கலக்கம் ஏன்?

எங்கோ பிறந்த புத்தன் போன பாதையில் இந்த பித்தனும் போக வேண்டுமா என்ன? ஆனால் தத்துவ நெறிகள் என் உள்ளத்திலே தள்ளாடுகிறது. நித்தம் நித்தம் வந்து எனது சிந்தனை பூக்களை மலர் மாலையாய் சூட்டுகிறது.

மனிதன் துன்பம் தராத இன்பத்தை நாடுகின்றான். உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை என்கின்றோம் ,உடலுக்கும் உயிருக்கும் பிரிவு வந்தால் மரணம் என்கின்றோம். மரணத்தின் பிடியில் நாம்? மரணத்தை வெல்லும் திறன் நமக்கு இல்லையா? Can death be postponed?

சே.... சேச்சே.......... மனித மனம் அப்படிதான். மாண்புமிகு மனிதனாவதற்கு மகத்துவம் மிக்க மனம் தேவை. காலையில் பொழியும் பனித் துளிகள் போல அல்லாமல், காலை கதிரவனின் விழி துளிகள் போல உலகிலே விரஞ்சி நிற்க வேண்டும் நமது மனத்துளிகள். அகத்தினை ஆய்ந்து புறத்தினை தெளிந்து வாழ்க்கை உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை.

இந்த வாழ்க்கை, பூக்கள் நிறைந்த பாதை ! புதிய பயணம் ! முட்களே விலகுங்கள்!. நீங்கள் பயணப்படும் பாதையில் பாரி ஜாதங்கள் மலரட்டும்!.

October 18, 2010

மக்கள் சேவை மகேசன் சேவை

மணி 5.00 அதிகாலை
பயணம் ஸ்ரீ சுப்பிரமணி ஆலயம் சன் வே .

ஆறிரு தடந்தோள் வாழ்க!
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனி வேல் வாழ்க!
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க!
யானைதன் அணங்கு வாழ்க்!
மாறிலா வள்ளி வாழ்க!
வாழ்க சீர் அடியார் எல்லாம் - (கச்சியப்பர் - கந்தபுராணம்)

எதோ ஒரு ஏக்கம் ஒரு தாக்கம் முருகணை வழிப்பட வேண்டும் என்று, சிறு வயதில் இருந்து முருகன் என்றால் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது. முத்தமிழ் கடவுளாயிற்றே. சில தினங்களாக சன்வே சுப்பிரமனியர் ஆலயத்தில் சென்று வணங்கிவிட்டு தான் வருகின்றேன். இது இன்னும் சில தினங்கள் தொடரும் என்றே நினைக்கின்றேன்.

நான் பொதுவாகவே கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்களிலே சென்று வணங்குவதை எல்லாம் தவிர்த்துவிடுவேன். நமது புத்தி சீகாமணிகள் செய்யும் சூத்திரம் தான் காரணம். தேவை இல்லாத சாஸ்த்திர சடங்குகள் கொண்டு சமயதின் பெயரிலே கூடாத நிகழ்வுகளை எல்லாம் நிகழ்த்தி நமது பொறுமைகளை சோதிப்பார்கள். அமைதியை கடைபிடிக்கவேண்டிய இடத்தில் தான் இவர்கள் ஆர்ப்பரிப்பார்கள். கோயில்களை வெறுப்பதற்கு சொல்லவில்லை கோயில் எல்லாம் தியான கூடங்களாக இருந்தால் எவ்வளவு என்றாக இருக்கும்? கல்வி தரும் அறிவு கூடங்களாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்.? ஒற்றுமையை வளப்படுத்தும் சமுக கூடங்களாக இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?

காலை அமைதி. யாருமே இல்லாத நிசப்தம். பாவம் முருகர். அதிகாலையில் அவரை வணங்குவதற்குதான் பக்தர்கள் இருப்பதில்லை. நமது தமிழர்கள் எழுவததற்கு எப்படி 7.00 ஆகிவிடுகிறது போலும். .அதன் பிறகு இறைவனக் வணங்குவதற்குள் இறைவன் மீண்டும் துயில் கொள்ளபோய்விடுகிறார் என்னவே. நான் வீட்டிலே தியானம் செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இது எனக்குள் ஒரு அழைப்பு போல் கோவிலே தியானம் செய்வது ஒரு மாறுப்பட நிலையாய் இருக்கிறது. இப்போழுது யார் கோவிலே தியானம் செய்கிறார்கள்? கோவில் என்பதே ஒரு வியபார தலமாகிவிட்டது. அதிகாலை தியானம். அற்புதமாய் இருக்கிறதப்பா. தியானம் என்பது குறிப்பிட்ட நேரத்தில் தொடரும் மனதின் ஒருமுகப்பட்ட நிலை. மனம் கட்டாயம் ஒன்றின்மீது குவிக்கப்பட்டிருக்க வேண்டும். அது தான் தியானம்.
பொதுவாக சொல்வார்கள், அதிகாலை 4.30 - 7.00 வரை தியானம் செய்வற்கு சிறந்த நேரம் என்று. மனம் ஒரு நிலைபடுத்த உகந்த நேரம்.

சிறு பிரயத்தில் முதல் தெய்வீகம் சார்ந்த ஒரு தேடல் உண்டு. தேவார வகுப்பிலே பெரும் ஈடுபாடு உண்டு ஒரு வகையில் சிப்பாங் அப்பாட் ஊத்தான் மெலிந்தாங் ஸ்ரீ மகா மாரியமன் ஆலயத்தின் தேவார வகுப்பினரின் சமய தொண்டு போற்றுதல் குரிய அரிய தொண்டு என்றால் அது மிகை அல்ல. 30 வருடங்களுக்கு முன் சிறப்பாக இயங்கிய அந்த இயக்கம் அங்கு உள்ள மக்களின் சமய வளர்ச்சிக்கு முன்னேறத்திற்கு பாடுபட்ட ஒரு தொண்டுழிய இயக்கம். எங்களை நல்ல இதயங்களாக ஒழுக்க சீலர்களாகவும் புடம் போட்ட தங்கங்களாக மாற்றிய பெருமை அந்த நல்ல இயக்கதிற்கு உண்டு.( அது நீ சொல்லக்கூடாது. நாங்கதான் சொல்லனும் என்பது என் காதில் விழுகிறது. உண்மைகளை யார் சொன்னா என்ன?)

தேனிசை தேவார பாடல்களை எங்ளுக்கு பண் தாளம் மாறமல் சொல்லித் தந்த ஓதுவார் துக்காங் மணியம் ( சுங்கை சுமுன்) அவர்களின் வழிக்காட்டலுடன் சில ஆசிரியர் நண்பர்களான சிங்கரவேலு. (இன்று தலைமை ஆசிரியர்) செல்வ நாதன் (இன்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்) அவளுடன் நடமாடும் புகைப்பட கலைஞர் ஞான மூர்த்தி என்று அழைக்கப்படும் சிறந்த தொண்டர் திலகம் மு. இலச்சுமணன் அவர்களின் தலைமையில் பீடு நடை போட்ட அந்த இயக்கம் பிற்காலத்தில் எங்களை போன்றோர் படிப்பு தொழில் நிமிர்த்தமாக வெளியுர் வாசிகளாகிவிட்டதால், அந்த இயக்கம் மடிந்துதான் போய்விட்டது என்று கூறவேண்டும்.

இந்த வேலையிலே ஆசான் திரு சின்னயா அவர்களின் வழி இந்து தர்ம மாமன்றம் ஆற்றிய சேவையை இவ்வட்டாரம் மறந்துவிட முடியாது

சிம்பாங் அம்பாட் தேவார வகுப்பினரின் மாபெரும் சாதனை என்னவேன்றால் பாரதி தமிழ் பள்ளியில் இந்திய சன்மார்க்க சங்கத்தின் ஆதரவோடு இலவச பயிலரங்குகளை ஏற்பாடு செய்தது என்றால் அது மிகை அல்ல. சுற்று வட்டாரத்தில் உள்ள நமது இந்திய மாணவர்கள் அதிக பயன் பெற்றார்கள்.. சிலர் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு தன்னலம் பாராமல் தொண்டு செய்த என் நண்பர்களைதான் சாறும்.. சிறந்த கல்வி அனைவருக்கும் எட்டிட வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற நல்ல நோக்கம் அன்றி வேறோன்றும் இல்லை பரபரமே. மக்கள் சேவை மகேசன் சேவை என்பது எவ்வளவு உண்னத கோட்ப்பாடு. அந்த வகையிலே இந்த சிப்பாங் அம்பாட், ஊத்தான் மெலிந்தாங், தெலுக் இந்தான் தேவார வகுப்பினரை இன்றும் நினைத்து பார்க்கின்றேன். அந்த நினைவுகள் அது ஒரு எழுச்சிமிக்க நாட்கள்.

October 16, 2010

நிலவுக்குநிலவுக்கு
மீசை முளைத்தால்
எப்படி இருக்கும்?

கற்பனை கழண்டிருக்கும்

நம் காதலர்களுக்கு
காதலே வரமால் போயிருக்கும்

அந்த கிழவியை
கண்டால்
எனக்கு பிடிப்பதில்லை
கையில் பிடிக்கும்
நிலவை
எதற்கு அவ்வளவு
உயரத்திற்கு போக சொன்னாள்?

நேரம் போகவில்லை
என்றால்
நிலவு மேல் ஏறி
காலாற நடந்து வரலாம்

காதல் வந்து விட்டால்
நிலவிலே
உஞ்சல் கட்டி
ஆடிவிட்டு வரலாம்

தேன் நிலவுக்கு
ஜோடி சேர்ந்து
போய்விட்டும் வரலாம்

ஆனால்
நிஜங்களுக்கும்
நிழல்களுக்கும்
மத்தில்
நிலவு
உண்மைகளை
மறைத்துவிட்டது

நிஜங்களின்
மாறுப்பட்ட நிலவு
காதலர்களின்
கற்பனைக்கு ஊற்றாக
மாறி இருப்பது
விந்தையான
ஒரு நிகழ்வுதானே

எத்தனை
கவிஞர்கள்
கற்பனைக்கு
வித்திட்ட நிலா
எத்தனை
காதலர்களின்
ஒன்று சேர்த்த நிலா

எத்தனை பேருக்கு
அறிவுமதியாக இருந்த நிலா
எத்தனை பேருக்கு
சாட்சியாக இருந்த நிலா

அத்தனையும்
வேறும்
நிழல் பிம்பமாக
நிஜங்களின் எதிர்முகமாக
இருப்பது
வேடிக்கை

திடப்பொருளாகவும்
ஜடப்பொருளாகவும்
இருக்கும் நிலவு
மாந்தரின்
கற்பனையை வளத்தை
மெரு கூட்டியது என்றால்
எவ்வளவு விந்தை?


எட்டாத உயரத்தில்
நிலா .......
இருந்தும்
மனிதன் எட்டிப்பிடித்துவிட்டான்.

விடியும் வரை தொடர்ந்த நிலவு
விடியலுக்கு பின் தொடர மறுப்பதேன்?
பகல் மிகவும் நீண்டது பொழுது
மனிதர்கள் நடமாடும் வேளை

மனிதர்கள் ஜாக்கிரதை - அறிவுப்பு பலகை

நிலாவே நீ மறைந்து கொள்
களவானி பையனுங்க
களவாடிடுவங்க

நிலவு........

விந்தைகளின்
கனவு கலைந்துவிட்டது
முந்தைய அதிசயங்களின்
அதித கற்பனை
உடைந்து விட்டது

October 14, 2010

சிரிக்கும் சின்னகுயிலே நீ அழகு

முல்லை கொடி
முகிழும் அழகு
பிள்ளைத் தமிழ்
சொல்லும் மழலை
மொழியும் அழகு

சொல்லும் தமிழ் அழகு
சொக்கவைக்கும் நீ அழகு
தெள்ளுத்தமிழ் போல்
சிரிக்கும் சின்னகுயிலே நீ அழகு


புன்னகை சிந்தும் எனது உறவு
வாழ்க வளமுடன்

October 13, 2010

நித்தியமே நீ வாழ்க!

கூட்டம்
“வானகமே! வையகமே வளர்ந்து வரும் தாயகமே,” என்று அந்த கூட்டத்திலே முழங்கிக் கொண்டிருந்தார் சாம்பசிவம். “நணபர்களே ! இது கலைஞர் கருணாநிதி எழுதிய திரைக்கதை வசனம் அல்ல, இந்த மலேசியா நாட்டிலே பிறந்து வளர்ந்து இறுதி மூச்சை இந்த மண்ணிலே புதைத்துவிட்டு செல்லும் எம்மின மக்களுக்காக என் நெஞ்சிலே எழும் ஏக்க உணர்வுகளால் எழுந்ததை உரைத்தேன். ஏதோ வாழ்ந்தோம் செத்தோம் என்று இல்லாமல் நமக்காக நாம் போராடத்தான் வேண்டும்” என்று சொல்லி கூட்டத்தினரை பார்த்து மீண்டும் தொடர்ந்தார் சாம்பசிவம்.

“நண்பர்களே ! நெஞ்சிலே உரம் உண்டு நேர்மை திறன் உண்டு. நமக்கு இங்கு வாழ்க்கையா இல்லை? நம்மைப் பார்த்தா வந்தேரிகள் என்பது? காடு வெட்டி கழனியை கண்டவர்கள் நாம். பெரும் காடாய் இருந்த நிலத்தை நாடாக மாற்றிக்காட்டியவர்கள் நம் சந்ததியர். இருண்ட காட்டுக்குள் புகுந்து செம்மண் சாலைகளையும் தார் சாலைகளையும் போட்டு கூலிக்கு மாரடித்த கூட்டம் ஐயா நம் தமிழர்கள் கூட்டம்.”

எள்ளும் கொள்ளும் வெடித்தது அங்கு குமிழ்ந்திருந்த மக்கள் கூட்டத்தின் முகத்திலே. உணர்ச்சி பெருக்கம் சிலர் முகத்திலே கருக் கொண்டிருந்தது. சிலரின் முகம் இறுகிக்கொண்டிருந்தது. சிலரின் முகத்திலே கலக்கம் தெரிந்தது.

அப்பவே என் தாத்தா சொன்னாரு

“ ஊருக்கு போனாவது கஞ்சியாவது குடித்து வாழ்ந்துக்கலாம். இங்க தினம் தினம் என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று தெரியாமல் செத்துக் கொண்டிருக்கின்றோம்”. கூட்டத்தில் இருந்து ஒருவரின் குரல் தீர்க்கமாய் ஒலித்தது.

“கஞ்சி குடித்து வாழ்வதற்காகவா நமது முன்னோர்கள் கடல் கடந்து வந்து காட்டை அழித்து காட்டிலே கொசுக்கடிக்கும் பாம்புக்கடிக்கும்,புலி, சிங்கம், கரடிகளுக்கு முகம் கொடுத்து போராடினார்கள்? எவ்வளவு துயரங்கள் துன்பங்களிருந்து மீண்டு இருப்பார்கள்? இன்று நம் கொஞ்சமாவது நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம் என்றால் அவர்களின் தியாகமும் உழைப்பும் தான். உயிரைக்கொடுத்து உழைத்து இந்த நாட்டை செல்வ வளம் கொழிக்கும் நாடக்கிய பெருமை நமக்கும் உண்டு நண்பர்களே. இந்த சொர்க்க பூமியில் வசதியாக வாழ நமக்கும் உரிமை உண்டு. நாம் ஏன் மற்றவர்களுக்கு பயப்பட வேண்டும்? நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்காகதானே நாம் இங்கு கூடி இருக்கின்றோம். உண்மைகளை பேசுங்கள் உரிமைகளை நிலை நாட்டுங்கள் வம்பு வழக்கு எல்லாம் நமக்கு வேண்டாம். சிந்தனை திறன் கொண்டு சீரிய வாழ்வை அமைத்துக் கொள்வோம்..அன்பர்களே”. என்று கூறி முடித்தார் சாம்பசிவம்.

மக்கள் தலைவர் சாம்பசிவம் ஓர் இன்முகத்தோடு சமூக சேவையாற்றுபவர். கருத்த நிழல் அவர் முகம். கண்களிலே ஒளி. எப்பொழுது சிரித்த முகத்தோடு பவனி வந்து பலரின் பிரச்சனைகளை கேட்டு அதற்கு தக்க நடவடிக்கையை எடுத்து மக்கள் நலமே மகேசன் நலம் என்று பலருக்கு உதவும் நல்ல மனம் படைத்த ஒரு பொதுநலத் தொண்டர். ஒரு அரசியல் மன்றத்தின் தலைவரும் கூட. சிறிது காலமாக அவர் மனதில் ஒரு வர்க்க போராட்டமே எழுந்து அவரின் மனதை அலைக்களித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் நடப்பும் அவ்வளவு சரியில்லாத சூழ்நிலை. மக்கள் மனதினிலே ஒரு தெளிவை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கினிலே இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் சாம்பசிவம்.

மக்கள் கூட்டம் என்னவோ அதிகமாகத்தான் இருந்தது. படித்தவர்களும் பாமர மக்களும் திரண்டிருந்த அந்த கூட்டத்தில் உணர்ச்சி வயப்பட்ட மக்கள் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவருவது என்பது எல்லோருக்கும் சாத்திய படாதுதான். அதிலும் தமிழர்கள் கூட்டம் என்றாலே சொல்லவே வேண்டாம். எப்பொழுதும் இரண்டாம் கெட்ட நிலைதான். ஒருவர் ஆம் என்றால் மற்றொருவர் இல்லை என்பவர்தான் அதிகம். ஒற்றுமையின் சின்னமாச்சே நமது சமுதாயம் .எப்பவும் இரண்டு கோஷ்டியோடு எதிரும் புதிருமாக இருப்பார்கள்.இல்லை என்றால் அடிதடியில் இறங்கி கோதாவை நொருக்கி தள்ளிவிடுவார்கள். இவர்களை வைத்து எதைத்தான் சாதிக்க முடியும்? என்ற பயத்துடனே இந்த கூட்டத்தை ஆரம்பித்து விட்டார் நண்பர் சாம்பசிவம்.

ஏற்கனவே சூடுப்பட்ட பூனை. சில பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து அடி வாங்காத குறை. எதையும் திறந்த மனதுடன் பேசும் சாம்பசிவம் ஒளிமறைவற்ற ஒரு உன்னத மனிதர். வருங்காலத்தை சில பிணக்குகளுடன் கணக்கு பார்த்து கூட்டி கழித்து கணக்கு இப்படி தான் வரும் என்று சொல்லும் இயல்பினர்.

“கூட்டிக் கழித்து பாரு எல்லாம் சாரியா இருக்கும்”

என்று சொல்லும் மகா தத்துவத்திற்கு அவ்வப்பொழுது ஆராய்ச்சி மணி அடிப்பவர்.
நேரம் போக போக மக்கள் கூட்டம் இன்னும் அதிகமாக கூடிக் கொண்டிருந்தது. மேலே ஓடிக் கொண்டிருந்த காற்றாடி இன்னும் அதிவேகமாக சுழன்றுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டார் சாம்பசிவம். மக்கள் அதிகமாக அதிகமாக புழுக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தது. நண்பர் சாம்பசிவம் கூட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்.

ஒரு வயோதியர் எழுந்து,

“ ஜப்பான்காரன் வந்து நம்ம ஜனங்களை வாரிக் கொண்டு போய் மரண ரயில்வேனு சொல்லி இரண்டு லச்சம் தமிழர்களை கொன்று விட்டான்.

நேதாஜி வந்து சுதந்திர இந்தியானு சொல்லி இங்குள்ள தமிழர்களின் உணர்சிகளை ஏற்றி எத்தனை லச்சம் தமிழ் மக்களை இழந்தோம்? உணர்ச்சி படுவது தானே தமிழனின் வேலை.
ஜப்பான்காரனுக்கு பிறகு காட்டுக்காரனுக்கிட்ட மாட்டிக்கிட்டு எவ்வளவு மக்களை இழந்திருகின்றோம்?

மலாயா விடுதலை அடைஞ்ச பிறகு எத்தனை தமிழர்களை பிரிடிஷ்காரன் கப்பல் ஏற்றி இந்தியா என் தாய் நாடுனு சொல்லி எவ்வளவு தமிழர்களை அனுப்பி வைச்சுட்டான். இப்ப இருப்பதோ கொஞ்சம் நஞ்ஞம் மக்கள் தான் இவங்களை வைத்து என்னத்த போராடுவது?” என்று அந்த கிழவர் கேள்விக் கணைகளை தொடுத்தார்.

மக்கள் கூட்டத்திலே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வியர்வைகளின் மத்தியில் சிலர் கைக்குட்டையை வைத்து முகத்தை துடைத்துக் கொண்டனர். சிலர் வழிந்துக் கொண்டிருந்த வேர்வை துளிகளை வழித்து தரையில் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆம், நாம் இருப்பதோ சிறு பான்மை இனம் அதற்காக நமது உரிமைகளை விட்டு கொடுத்து விடமுடியுமா என்ன? நமது போராட்டத்தின் அடித்தளமே மக்கள் ஒற்றுமைதான். ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு ஐயா. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா என்ன? நமது உரிமைகளை கேட்போம் சலுகைகளை பெருவோம். என்று சொல்லி முடித்தவுடன்
“சலுகைகளை பெருவதா? பேசமா அவன் காலுல விழுந்துவிட வேண்டியது.. ஐய்யா சாமி என்று அவன் காலிலே கையிலே விழுந்து நமக்கு வேண்டியதை பெற்றுக் கொள்வோம்”
கூட்டத்திலே ஒரே சலசலப்பு. ஒரு கரடுமுரடான குரல் எதிரொலித்தது. வாட்டசாட்டமான ஆள். என்ன இது கூட்டம் சூடு பிடிக்கும் போல் அல்லவா இருக்கிறது.

நமது உரிமைகளை நாம் பெறுவோம் எவன் காலிலும் விழவேண்டாம். இண்ராப் மாதிரி நாமும் துணிந்தால் எதற்கும் வழி பிறக்கும் என்றார் அந்த முரட்டு பேர்வழி.

உண்மைதான் இண்ராப் காலக்கட்டத்தில் நமது உரிமைகளை எடுத்து சொல்வதற்கு சரியான வழிமுறைகள் இல்லை. இப்பொழுது அதற்கான கதவுகள் திறந்து கிடக்கின்றன. முரட்டுத்தனம் சில சமயங்களில் நமக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது. பிரிதொரு சமயங்களில் அதுவே நமக்கு முட்டுக்கட்டையாகவும் மாறிவிடுகின்றன..அறிவு நிலையில் இருந்து எதற்கும் நீர்வு காணலாம். உணர்ச்சி வையப்பட்டு எடுக்கும் எந்த ஒரு முடிவும் சரியான முடிவாக இருக்க முடியாது. உரிமைகளையும் சலுகைகளையும் போராடித்தான் பெறவேண்டும் என்பதில்லை. பேசி தீர்த்தால் பல மத இன உணர்வுகளை நாம் கட்டுப்படுத்தலாம் என்று முதல் வரிசையில் அமர்ந்திருந்த எனது நண்பர் இரவி எழுந்து நின்று ஒரு விரிவுரையே நடத்திவிட்டார்..

“அரசாங்கம் இதுவரைக்கும் நமக்கு நல்லதுதானே செய்திருக்கு. சில விசயங்களை நாம் கேட்டு வாங்க தவறியிருக்கின்றோம். சில தலைவர்களை நம்பி ஏமாந்து விட்டோம். யார் யாரை நம்பினோமே அவர்கள் எல்லாம் நம்மை ஏமாற்றி விட்டார்கள். நாமும் உறுதியான குரலில் நமது உரிமைகளை சொல்லி இருக்க வேண்டும்.”

சமுதாயத்தில் நல்லவர் என்ற பெயர் எடுத்தவர் நண்பர் இரவி, அமைதியான குணம், அன்பான பேச்சு, சமுதாய பற்றும் கொண்டவர், ஒரு சிறந்த தொழில் அதிபரும் கூட. வாழ்க்கையில் தான்னுடைய முன்னேற்றம் மட்டும் போதாது. மற்றவர்களும் முன்னேற வேண்டும் என்று பாடுபடுபர்வர்தான் இந்த இரவி. எந்த பேச்சும் தீர்க்க தரிசனமாய் இருக்கும். யோக தரிசன மன்றத்திலே நடப்பு காரியதரிசி, செயல் திறன் கொண்டவர். சாம்பவசிவத்தின் அழைப்பை ஏற்று இந்த கூட்டத்திற்கு வந்தவர். தன்னுடைய பேச்சை தொடர்ந்தார்.

“நான் சொல்வதை கேளுங்கள்” மீண்டும் சற்று குரலை உயர்த்தி “நான் சொல்வதை சற்று காது கொடுத்து கேளுங்கள்” என்று சொல்லி நிறுத்தினார்.

இந்த விசயத்தில் நாம் உணர்ச்சி பூர்வமாக முடிவு எடுப்பதை முதலிலே நிறுத்தவும். அறிவுச் சார்ந்த விசயங்களை சற்று ஆராய்ந்து முடிவு எடுப்பது சாலச் சிறந்தாக இருக்கும். என்பது என் முடிவு. என்று சொல்லி கூட்டத்தினரை பார்த்தார்.

நாம் சிறுபான்மை சமுகம் தான், ஆனால் சாதனைகளை படைத்த சமுதாயம். நமது அறிவு திறனும் ஆன்மா பலமும் ஒன்றுப்பட்டால் இந்த உலகிலே நம்மை போல ஒரு சிறந்த இனம் இல்லை என்பார்கள். ஒன்றுபட்டு சரித்திரத்தை புரட்டி போட்ட வரலாறு நமக்கு உண்டு. கடல் கடந்து நாட்டை வென்றவர்கள் தமிழர்கள். இன்றைய மலேசியா நாட்டிலே பெரும் செல்வந்தர்களில் மலேசிய தமிழர்களும் உள்ளனர். ஆனால் என்ன அவர்கள் சிறு எண்ணிக்கை அவ்வளவுதான்.

அதற்குள் ஒரு நண்பர் எழுந்து நின்று. ம்ம்ம்ம்ம்ம்.......... நீங்கள் சொல்வது நல்லாதான் இருக்கு. தமிழன் தமிழன் என்று நாம் சொல்லலாம் ஆனா வாழ்க்கையில் உயர்ந்த தமிழர்கள் அடிமட்டத்தில் இருக்கும் தமிழனுக்கு உதவ மறுக்கும் போது எப்படி தமிழனின் ஒற்றுமையை பற்றி நாம் பேசமுடியும்? கொஞ்சம் உயர்ந்தவுடன் மற்ற தமிழர்களை ஏளன பார்வையுடன் பார்க்கும் தமிழன் தான் நமது நாட்டிலே மிகவும் அதிகம். இவர்களுக்குள்ளே நூறு சாதி. தமிழன் தடுக்கி விழுந்தாலும் சாதி சாக்கடையில் தானே விழுறான். பிறகு எப்படி ஒற்றுமையாக இருக்க முடியும்? தமிழன் என்று சொல்லுராங்க ஆனால் அந்த தமிழன் தான் நமக்கு “ஆப்பு” வைக்கரானுங்க. என்று சொல்லி கூட்டத்தை ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து அமர்ந்துக் கொண்டார்.

கூட்டத்திலே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.அங்கு சுழன்றுக்கொண்டிருந்த காற்றாடி அனைவரின் எண்ணங்களை போல மிகவும் வேகமாக சுழன்றுக் கொண்டிருந்தது.
ஒவ்வொருவரின் முகத்திலும் வியர்வை துளிகள் முத்து முத்தாக வடிந்துக் கொண்டிருந்தது. காற்றின் அழுத்தமா இல்லை அவர்களின் மன அழுத்தமா என்று புரியவில்லை. எங்கும் வெப்பக் காற்று சுழன்றுக் கொண்டிருந்தது அங்கு குழுமி இருந்த தமிழர்களின் மனம் போல்.

மக்கள் தலைவர் சாம்பசிவம் மீண்டும் ஒலிபெருக்கியை பிடித்து நண்பர்களே! நீங்கள் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம் ஆனால் தமிழனின் பெருமையை தெரியாதவர்கள் மற்றொரு தமிழனை மட்டம் தட்டுவார்கள். உண்மையை உணர்ந்தவர்கள் தமிழன் என்ற உணர்வுடன் வாழத்தான் ஆசைப்படுகின்றார்கள்.

ஆனந்த கிருஸ்ணன் தமிழர்களின் பெருமைக்கு நல்ல எடுத்துக் காட்டுதானே. இரட்டை கோபுரம் அவரின் பெருமைக்கு சான்றுதானே. தொலைத் தொடர்பு தகவல் சாதனத்தை விண்ணிலே ஏவிய பெருமை அவருக்கும் உண்டு ..அது தமிழனுக்கும் பெருமைதானே. அவ்வளவு ஏனப்பா ஏர் ஆசியா தோனி பெர்னண்டெஸ் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனத்தை இன்று உலகிலே தலைச் சிறந்த ஒரு நிறுவனமாக மாற்றிக் காட்டி பெருமை நமக்கும் இருக்கிறதுதானே.

நம்மால் முடியாதது எதுவும் இல்லை முயன்றால் எதுவும் திருவினையாகும்..நாம் யார் காலிலும் விழவேண்டிய அவசியம் இல்லை முயற்சி முயச்சி அது பயற்சியாய் ஆக்கிக் கொண்டால் எவன் உதவியும் நமக்கு தேவையில்லை. அவன் அதை கொடுப்பானா? இவன் இதைக் கொடுப்பானா? என்று ஏங்கிக் காலத்தை கழித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையும் இல்ல அவசியமும் இல்லை.

கூட்டத்தில் எழுந்த இன்னொரு முதியவர் “சரியா! உங்க பேச்சுக்கே வரேன். ஆனா போற போக்கிலப் பார்த்தா பிரச்சனைகள் உருவாகும் போல இருக்கு இதுக்கு நீங்க என்ன சொல்லுறீங்க?”

உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த ஒரு சிலரின் முகத்தில் ஒரு வகையான கலக்கம் ஐயோ இது என்ன நம்பல நிம்மதியா வாழ விடமாட்டனுங்க போல இருக்கு என்று ஒரு சில முனுமுனுத்துக் கொண்டிருந்தனர். ஏதாவது நடந்தால் நாம் எல்லாம் எங்கே போவது?

மரம் வைத்தவன் தண்ணீர் ஊத்தாமலா போவான்? கடவுள் நமக்கும் ஒரு வழிக் காட்டாமலா இருப்பாரு? மாரியாத்தா நம்ப மனசுக்கு நல்ல படியாகத்தான் படி அளப்பாள். ஒரு தாய்குலத்தின் பிரார்த்தனை.

மீண்டும் அதே குரல் அந்த கரடுமுரடான மனிதரிடமிருந்து “ மாற்றதிற்குதான் நாம் போராட வேண்டுமா? நம்மை நாமே காப்பதற்கு இந்த பூமியிலே போராடிக் கொண்டுதானே இருக்கின்றோம். தமிழனுக்கு போராட்டமே வாழ்க்கையா போச்சு..மற்றவர்கள் நம்மை காப்பதானுனு நினைச்ச அதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை. முதலிலே நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.” .

அதை நான் ஆமோதிகின்றேன் என்று சொல்லி மக்கள் தலைவர் சாம்பசிவம் ,“இந்த சமுதாயத்திற்காக ஒரு செயல் திட்டம் வரைந்தே ஆகவேண்டும். அந்த திட்டதின் வழி சமுதாய வளர்ச்சி மட்டும் அல்ல, சமுதாய பாதுக்காப்புக்காகவும் ஒரு செயல் திட்டம் வேண்டும். அதை அரசாங்கத்திடம் நாம் வலியுறுத்த வேண்டும்.” என்று சொல்லி முடிப்பதற்குள் கூட்டத்திலே சலசலப்பு..

நான்கு ஐந்து காவல்துறை அதிகாரிகள் மண்டபதிற்குள்ளே நுழைந்து மேடையை நோக்கி, பேசிக் கொண்டிருந்த மக்கள் தலைவர் சாம்பசிவத்திடம் ஏதோ கேட்டுக் கொண்டிருதார்கள். இந்த கூட்டத்திற்கு நீங்கள் வாங்கிய அனுமதியை காவல்துறை மீட்டுக் கொண்டுவிட்டது. கூட்டம் அப்படியே கலைந்து செல்ல வேண்டும் என்று உயர் காவல் அதிகாரியான ஒரு தமிழர் உறுமிக் கொண்டிருந்தார்.

கூட்டம் கலவரப்பட்டுக் கொண்டிருந்தது. கூட்ட நெரிச்சலில் எங்கோ ஒரு மூலையில் நண்பர் இரவி விழி பிதுங்கி மாட்டிக்கொண்டார். சாம்பசிவம் எவ்வளவோ மன்றாடியும் அந்த உயர் அதிகாரி மனம் இரங்கவில்லை. இரண்டு காவல் அதிகாரிகள் மக்கள் தலைவர் சாம்பசிவத்தை தரதரவென்று இழுத்து சென்றுக் கொண்டிருந்தனர். அவரின் மூக்கு கண்ணாடி விழுந்து நொறுங்கி கிடந்தது. அவரின் ஒருகால் கிழிந்த செருப்பு மேடையை நோக்கி அவர் இல்லாத வெறுமையை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

October 11, 2010

தெரு நாய் சித்தாந்தம்
“என்ன இது மானங்கெட்ட பொழப்ப போச்சி?” எதற்கு எடுத்தாலும் இன குரோதம் , மத விரோதம் என்ற வக்கிர பார்வை கொண்டு மற்றவர்கள் மீது ஒரு வகையான இன துவசேத்தையும் ஒருவகையான இன ஆளுமையாக திணிப்பது எத்துனை பேரிண்பம் சிலருக்கு.

ஒரே திகைப்புடன் தவழ்ந்து கொண்டிருந்த மலேசியா அரசியல் பெர்காசா என்ற நாட்டாமை வந்தவுடன் மூழு மூச்சில் இன அரசியலில் களம் இறங்கி இருப்பது ஒரு வையான அச்சத்தை தந்துக் கொண்டிருகின்றன. மூன்று இனங்களின் ஒற்றுமையை வாய்க்கிழிய பேசும் அரசியல் வாதிகள் இன துவேசங்களை கண்மூடி வேறுமன பார்த்துக் கொண்டிருப்பது இன்றைய அரசியல் வாதிகள் இரு மாறுப்பட்ட அரசியல் களம் அமைத்து பவனிவருதை குறிக்கின்றன. அவர்களின் பார்வையில் இன துவேசம் தேவையான ஒன்றாக இருக்கிறது. அதிலும் இன முரண்பட்ட கருத்து சொல்லும் இனவாதிகளை விட்டு .அக்கருத்துக்களை வெளிகொணரும் பத்திரிகையாளர்களை பதிவாளர்கள் இன்னலுக்கும் ஆளாக்கும் ஈன புத்தி உள்ள பலர் நிறைந்திருக்கின்றனர்.

1 மலேசியா என்னும் மலேசிய பிரதமரின் கோட்பாடு இன உணர்வாளர்களின் பலத்த அடிவாங்கிக் கொண்டிருப்பது மலேசியா கடக்க வேண்டிய பாதை மிகவும் அதிகம் என்பதை பறைச்சாற்றுகின்றன. மலாய் மேலான்மை என்ற சுலோகம் இன்னும் இந்த மண்ணிலே சுக பிரவசம் ஆகிக்கொண்டிருப்பது வருத்தம் அளிக்கும் விடயம்தான்.

சீனர்கள், இந்தியர்கள் வந்தேறிகள் என்பது சில மலாய் மேலான்மை கொண்ட அரசியல் வாதிகளும் சில படித்த ஆசிரியர்களும் சொல்வது எந்தவகையில் உண்மை? உண்மையில் இந் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு வகையில் வந்தேறிகள்தான். சரித்திரத்தைப் புரட்டி பார்த்தால் உண்மை தெரியும். அரசரில் இருந்து ஆண்டி வரைக்கும் எதோ ஒருவகையில் வெளி நாட்டு தொடர்பு கொண்டிருப்பது புலப்படும். அரசியல் பலம் கொண்டு விட்டதனால் மட்டும் உண்மை மறைகப்படுமா என்ன? இது அனைவருக்கும் சொந்தமான நாடும். வளமான இந்த நாட்டை ஒரு இனம் மட்டும் சொந்தம் கொள்வது ஒரு வகையான சுரண்டல் சித்தாந்தம்தான்.

சீணர்களும் இந்தியர்களும் ஆளுவதற்க வழிவகைகளை தேடுகின்றோம்? சொந்த நாட்டிலே இறையாண்மையோடு வாழ்வதற்குதானே வழிகளை தேடுகின்றோம். மற்றவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தானே நமக்கும் கேட்கின்றோம். இதில் என்ன தவறு ? உலக சரித்திரத்தஇல் எந்த இனமும் வானத்தில் இருந்து குதித்ததல்ல. சிறப்பு சலுகைகளோடு வாழ்வதற்கு. முண்னேறுவதற்கு ஏழ்மை ஒரு காரணமாக இருக்கலாம். அந்த ஏழ்மையே காரணம் காட்டி மற்ற இனங்களை அடிமை படுத்துவதற்கு சரியான நடவடிக்கையா என்றால் அது ஒரு தவறான முண்ணுதாரனமாகிவிடும் என்றுதான் பயப்படுகின்றோம். பிறகு மீட்க முடியாத ஒரு தெய்வீக தன்மையை ஒரு இனத்தின் மீது படுந்துவிடும். சலுகைகளும் சிறப்பு சலுகைகளும் ஒரு இனத்தின் வளர்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்றால் தவறு ஒன்றும் இல்லை. இந்த 50 வருங்கள் மேல் கிடைத்த சட்டப்படியான சலுகைகளை இன்னும் காலம் பூராவும் இவர்கள் தக்க வைத்துக் கொள்வதில் எந்தவகையான தார்மீக பண்புகள் இருக்கிறது? மற்றவர்கள் இவர்களூக்கு காலம் பூராவும் அடிமையாக வேண்டுமா என்ன? நாம் கேட்பது எங்களுக்கும் வாழ்வதற்கு வழிவகைகளை செய்யுங்கள் என்பதே. அடிமைத்தனத்தை யூத இனம் செய்தால் வாய் கிழிய கத்தும் இவர்கள்.மலாய் மேலாண்மை மற்றவர்கள் மீது தினிப்பது எந்த வகையில் நியாயம்?.

உரிமைகளை அணைவருக்கும் தாருங்கள். ஏழ்மையை துடைத்தொழியுங்கள். தேவையில்ல சலுகைகளை மீட்டுக்கொள்ளுங்கள். வேலைப்பாகுபாடு எதற்கு தகுதிபடைத்தவர்களுக்கு தகுதியான பதவி என்றால் ஏன் இவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்குகின்றார்கள் . தங்களின் சுக போக வாழ்வுக்கு பங்கம் வருமோ ,அல்லது மற்றவர்களின் உழைப்பில் குளிர்க்காய முடியாது என்பதாலோ?

உண்மையில் சீனர்கள் இந்தியர்கள் வரிபணத்தில் தான் இவர்கள் ராஜ போக வாழ்கை வாழ்கின்றார்கள். 50 வருடங்களுக்கு முன் மலாய்காரர்கள் எழ்மை நிலையில் இருந்து இன்று நாட்டிலே பெரும் பணக்காரர்களாக மாறியிருப்பதற்கு அரசாங்கதின் வரி பணம் எவ்வளவு தேவை பட்டிருக்கும்? இன்றும் கூட அவர்களின் வரி வருமான 30 சத்விதம் என்றால் 70 சவிதம் சீனர்கள் இந்தியர்களின் வருமான என்றால். இவ்வளவு காலம் இவர்களின் உயர்வுக்கு நமது பங்கு இருக்கிறது அல்லவா. வளர்ந்த பிறகும் மற்றவர்களை வளரவிட்டாமல் செய்யுன் நோக்கம் தான் என்ன? சீனர் இந்தியர் உழைப்பில்லாமல் மலேசியா உயந்திருக்க முடியாது .இந்த நாட்டின் ஒவ்வொரு வளர்சியும் சீன இந்தியர்களின் ஆக்கத்தில் எழுந்தவைதான்.

எந்த இனத்தின் உரிமையும் பறிபோக கூடாது. என்பது மலேசியா நட்டின் சட்டம். இந்த மலேசியா சட்டத்தின் படி எல்லோருக்கும் இங்கு உரிமை உண்டு. ஆனால் சட்டத்தின் வழி சலுகைகளை உரிமைகளாக அதுவும் மலாய் மேலாண்மையாக மாற்றுவது நீதிக்கு உகந்தது அல்லவே. உரிமைக்காக நீங்கள் போராடலாம் ஆனால் மற்றவர்கள் உரிமைகளை பறிப்பதற்கு உங்களுக்கு ஏது உரிமை?

இன்னும் சொல்ல போனால் மலேசியர்களின் சிந்தனை மாற்றம் ஆக்ககரமான அறிவு நிலையில் இல்லை என்பதே எனது வாதம். குழு அல்லது இன முறையில் இயங்கும் எந்த ஒரு அரசியல் சித்தாந்தம் பாதகமான பின் விளைவுகளைதான் தரும் என்பது இயற்கை தத்துவம். அமெரிக்காவில் இன பேதங்களை களையும் முற்போக்கு சிந்தனை அந்த நாட்டிலே அரசியல் சாசனத்தை வரைந்த அரசியல் வாதிகளுக்கு இருந்தது. அதே சிந்தனை நமது முன்னாள் முதல் பிரதமர் துங்கு அவர்களுக்கும் இருந்தது. அதன் பிறகு வந்த அனைத்து அரசியல் தலைவர்கள் இன ரிதியான அனுகு முறைகள் இன்று நாட்டை ஒரு இக்கட்டான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளன, நாடு மற்ற இனத்தின் பொறுமையில் முன்ணேறி இருக்கலாம் ஆனால் ஒரு இனத்தை அசுர பலம் கொண்டு நிர்மாணிப்பது என்பது புலி வாலை கையில் பிடிப்பது போன்றுதான். சாதக பாதமான பின் விளைவுகளுக்கு இவர்களும் முகம் கொடுக்க வேண்டி வரலாம். தடை என்னும் சுவரை உடைக்கலாம். .தடை என்னும் சுவரை அவர்களுக்குள் எழுப்பிக் கொண்டால் எப்படி?

மலேசியா பொது ஜன அரசியலில் இவர்கள் கடைப்பிடிக்கும் நெரு நாய் சித்தாந்தம் அது இவர்களையும் கடிக்கலாம் அல்லது மற்றவர்களையும் கடித்து குதறலாம் .காலம். பதில் சொல்லும். இன்னல் அற்ற மலேசியாவை எதிர்பார்த்து காத்திருப்போம்.

October 9, 2010

விடியலை தேடுவது எங்கே.

ஈனத்த தமிழன நீ
இன்பத் தமிழை மறந்துவிட்டாய்
ஊனத் தமிழன நீ - தமிழ்
உள்ளோளியை மறந்துவிட்டாய்

மறத்த தமிழன - நீ
மாவீரத்தை மறந்துவிட்டாய்
மறதித் தமிழன நீ - -தமிழ்
மாண்புகளை மறந்துவிட்டாய்

அடிமை தமிழன - நீ
ஆண்டதை மறந்துவிட்டாய்
ஆணவத் தமிழன நீ - தமிழ்
அறுங்குணத்தை மறந்துவிட்டாய்

அன்புத் தமிழன - நீ
ஆன்மீகத்தை மறந்துவிட்டாய்
உண்மைத்தமிழன நீ - தமிழ்
உணர்வுகளை மறந்துவிட்டாய்

இயற் தமிழன நீ
இனமானத்தை மறந்துவிட்டாய்
சிறைத் தமிழன நீ - தமிழ்ச்
சிந்தனையை மறந்துவிட்டாய்


கயமைத் தமிழன நீ
கனிவை மறந்துவிட்டாய்
கல்லா தமிழன நீ - தமிழ்
கல்வியை மறந்துவிட்டாய்

குடிகாரத் தமிழன நீ
குணத்தை மறந்துவிட்டாய்
குருதித் தமிழன நீ - தமிழ்
குலத்தை மறந்துவிட்டாய்

இடித்தாங்கி தமிழனை
இடித்துரைப்பது எங்கனம்
நடைப்பிணமாய் வாழும்
நாய்களை திட்டுவது எங்கனம்?

October 8, 2010

காலமகள் கோலத்தில்


காலமகள் கோலத்தில்
காத்திருந்தாள் கன்னிமகள்
காதல் என்னும் ஓடத்திலே
கரைச்சேர்ந்து விட்டாள்

தேனை சுவைத்திட்ட
தேன்சீட்டு போல - தேக
சுகத்தில் லைத்துவிட்டாள்
சோகத்தையே மறந்துவிட்டாள்

ஆழ்கடல் மீனினை ஒத்த
ஆழ்ந்த சுகத்தினில் தன்னை மறந்தாள்
ஆற்றாமை வெள்ளத்திலே
ஆடி களைத்து விட்டாள்

அன்பினில் முகிழ்ந்து நின்றால்
அழகினில் திரண்டு வந்தாள்
ஆசையில் கட்டுண்டு - அவனை
ஆரத்தழுவினால் நெஞ்ஞோடு

இரண்டாற கலந்த இன்பநாதம்
இல்லற ஜோதியில் ஒளிர்ந்தது
ஈன்றுவிட்டால் பிள்ளையமுதை - ஏற்றுவிட்டால்
ஈடுடாற்ற அன்னை என்னும் இன்னமுதை.

October 7, 2010

ரஜினி எந்திரனாக இருக்கலாம்
இன்றைய தகவல் பெரும் ஊடகங்கள் வழி ஒருவருக்கு ஒருவர் தவல்களை அனுப்புவது
என்பது எவ்வளவு எளிதாகி விட்டது பாருங்கள்.சீரியசான தகவலுக்கு மத்தியில் சில வித்தியாசமான நூணுக்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
அது சரிங்க......எப்படி எல்லாம் கடலையை போடராங்க பாருங்க..... என் நண்பனிடமிருந்து வந்த குறுந்தகவல்..வார்த்தை ஜாலங்களை குறுந்தகவல் வழி பதியவிட்டு மனதை நெகிழ விடு நண்பர் திலகங்கள் நிறைய பேர் இருக்காங்க. இந்த மாதிரி வாசகங்கள் படிப்பதற்கு இதமாக இருக்கிறது..உங்களுக்கும் இப்படி வந்த குறுந்தகவல் நிச்சயமாக இருக்கும்.

இதோ எனது நண்பர் அனுப்பிய குறுந்தகவல்

ரஜினி எந்திரனாக இருக்கலாம்
காமல் இந்தியனாக இருக்கலாம்
விஜி தமிழனாக இருக்கலாம்
அஜிட் சிட்டிஸனாக இருக்கலாம்
அர்ஜுன் முதல்வானாக இருக்கலாம்
சிம்பு மன்மதனாக இருக்கலாம்
தனுஸ் பொல்லாதவனாக கூட இருக்கலாம்- ஆனால்
எல்லோரும் உன்னை மாதிரி நல்லவன இருக்கமுடியாது
ஏன்னா?.... நீ என் நண்பன்டா........
நீ என் நண்பன்டா........
நீ என் நண்பன்டா........

இருந்தாலும் அற்புதமான வாசகங்களை அனுப்பிய எனது பால்ய நண்பர் சேகர் அவர்களூக்கு நன்றி.

இராஜேந்திரன் சோழன்

சிறு வயதில் நேருவின் உலக சரித்திரம் நானும் படித்ததுண்டு. அதன் பிறகு அந்த புத்தகத்தை தேடிக் கொண்டு தான் இருக்கின்றேன் என் நினைவில் அது ஒரு பெரிய புத்தம். உலக வரலாற்றை தொகுப்பாக அதை நேரு எழுதி இருப்பார். அமெரிக்கா வரலாறு. ஐரோப்பிய வரலாறு ஆசிய வரலாறு என்று உலக தொகுப்பை ஒரு நூலாக வரைந்திருப்பார். சிறு வயதில் படித்த அந்த சாரம் என் நினைவில் இன்னும் இருகிறது. அப்பொழுது அதன் அருமை நமக்கு தெரியாமல் போயிவிட்டது.

இதோ அகத்தியத்தில் எனக்கு வந்த இந்த மடல் அந்த ஜாபகத்தை மீட்டு இருக்கிறது.
நேரு ஒரு அரசில்வாதி மட்டும் அல்ல. அவர் சிறந்த வரலாற்று ஆசிரியரும் கூட. அவரின் உலக வரலாற்றை படித்தால் அதன் அருமை புரியும்.
எனக்கு வந்த அகத்தியத்தின் மின் அஞ்சல்......நீங்களும் கொஞ்சம் படியுங்களேன். பயனுள்ள தகவல்

ராஜராஜன் நேருவின் பார்வையில்


கல்கியின் "பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தைப் படிக்கும் வாசகர்கள்
அக்காலகட்டத்துக்கே செல்லும் உணர்வைப் பெறுவர்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் வாசகர்களுக்கு மிகவும் நெருக்க
மாவதோடு நிகழ்வு நடைபெறும் இடங்களுக்கே அழைத்துச் சென்றுவிடும்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனது மகள் இந்திரா
பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதங்களைப் படிக்கும்போதும் இவ்வுணர்வு ஏற்படும்.
இக்கடிதத் தொகுப்பைக் கொண்ட "உலக வரலாறு' (எப்ண்ம்ல்ள்ங்ள் ஞச் ரர்ழ்ப்க்
ஏண்ள்ற்ர்ழ்ஹ்) என்ற நூலைப் படிக்கும் வாசகர்கள் அந்தந்த இடங்களுக்கே சென்ற
உணர்வைத் தரும்படி அவர் எழுதியுள்ளார்.

பள்ளியிலோ, கல்லூரியிலோ நாம் அறிந்துகொள்ளும் வரலாறு போதுமானதல்ல.
மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால், நான் பள்ளிக்காலத்தில் ஓரளவே
கற்றுக் கொண்டுள்ளேன். சிறிதளவே இந்திய வரலாற்றையும், இங்கிலாந்து வரலாற்றையும்
கற்றேன். இன்னும் சொல்லப்போனால் நான் படித்தவை அதிகமாக நம் நாட்டைப் பற்றிய
தவறான மற்றும் திரித்துவிடப்பட்ட செய்திகளே. கல்லூரியை விட்டு
வெளியே வந்த பின்னர்தான் சில உண்மையான வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன்.
அதிர்ஷ்டவசமாக என்னுடைய சிறைவாசம் என் அறிவைப் பெருக்கிக் கொள்ள
வாய்ப்பளித்தது''.
ஒவ்வொரு கடிதத்தின் ஆரம்பத்திலோ முடிவிலோ இவ்வாறான கருத்துக்ளைத் தெரிவித்து
மகளை தன் கடிதத்துடன் நேரு பிணைக்கிறார். உலக அரங்கில் அவர் தொடாத துறையே இல்லை
என்று கூறுமளவு அனைத்துச் செய்திகளைப் பற்றிய கடிதங்களை எழுதியுள்ள நேரு, தன்
நூலில் மாமன்னன் இராஜராஜனைப் பற்றியும், இராஜேந்திரனைப் பற்றியும்
குறிப்பிடுகிறார்.

தென்னிந்தியா பல மன்னர்களையும், போராளிகளையும் ஒரு பெரும் மனிதனையும்
உருவாக்கியுள்ளது என்ற தலைப்பில் 13.5.1932 அன்று எழுதியுள்ள கடிதத்தில்
ஹர்ஷரின் மரணம் தொடங்கி பல செய்திகளைக் குறிப்பிடுகிறார். பல்லவர், பாண்டியர்
பற்றி எழுதியபின் சோழர்களைப் பற்றி எழுதுகிறார்.

""சோழராட்சி 9-ம் நூற்றாண்டின் நடுவில் தென்னகம் முழுதும் பரவ ஆரம்பித்தது.
கடலிலும், அதன் ஆதிக்கம் இருந்தது. வங்காள விரிகுடாவிலும் அரபிக்கடலிலும் பெரிய
கடற்படையைக் கொண்டிருந்தது. சோழர்களின் முக்கிய துறைமுகம்
காவிரிப்பூம்பட்டினம். சோழராட்சிக்கு அடிகோலிய விஜயாலயன் மிகப்பெரிய மன்னன்.
சோழர்கள் வடக்கே தம் எல்லையை விரிவுப்படுத்தத் தொடங்கியபோது திடீரென
ராஷ்ட்ர கூடர்களால் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால், மறுபடியும் இராஜராஜன்
காலத்தில் எல்லை விரிவடைய ஆரம்பித்ததுடன் பழம்பெருமையும் தக்கவைக்கப்பட்டது.
இது 10-ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம். அக்காலகட்டத்தில் வட இந்தியாவில்
முகலாயர் படையெடுப்பு நடைபெற்றது. வடக்கே நடந்த நிகழ்வுகளால் ராஜராஜனுக்கு
எவ்விதப் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து, படையெடுப்புகளில் அவர் ஈடுபட்டார்.
இலங்கையை வென்றார். அங்கு சோழர்கள் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவரது மகன்
இராஜேந்திரன் தந்தையைப் போலவே போர்க்குணம் மிக்கவன். தன் யானைகளை
கப்பலில் எடுத்துச் சென்று தென் பர்மாவை வென்றான். வடஇந்தியா சென்று வங்காள
மன்னனைத் தோற்கடித்தான். குப்தர்களுக்குப்பின் இக்காலகட்டத்தில் சோழராட்சி
விரிவடைய ஆரம்பித்தது. ஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை. தான் வென்ற நாடுகளைத் தக்க வைக்கும் முயற்சியில் இராஜேந்திரன் ஈடுபடவில்லை. கி.பி. 1013 முதல் 1044 வரை அவன்
அரசாட்சி செய்தான். அவனது மரணத்திற்குப்பின் சோழராட்சி சரிய ஆரம்பித்தது.
சோழர்கள் போர் வெற்றிகளில் மட்டும் சிறந்தவர்கள் அல்லர். கடல் வணிகத்திலும்
பெயர் பெற்றவர்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகப் பொருள்களின் ஏற்றுமதியும்,
இறக்குமதியும் நடைபெற்றது. கடல் வழியாக வெகுதூரம் வரை வணிகப் பொருள்கள்
அனுப்பப்பட்டன. யவனர்கள் அல்லது கிரேக்கர்களின் குடியிருப்பு அங்கு இருந்தது.
இதே கடிதத்தில் தொடர்ந்து இந்திரா பிரியதர்ஷினிக்கு ஒரு செய்தி கூறிவிட்டு
மறுபடியும் சோழர்களைப் பற்றி எழுதுகிறார். மகளுக்கு அவர் எழுதும் குறிப்பு
வாசகரையும் தெளிவுப்படுத்துகிறது.

"பல நூற்றாண்டு கால தென்னிந்திய வரலாற்றை உனக்குச் சுருக்கமாகச் சொல்ல
முயன்றுள்ளேன். என் இந்த முயற்சி உனக்குச் சிறிய குழப்பத்தைக்கூட உண்டாக்கலாம்.
அப்போது பல மன்னர்களைப் பற்றியும், வம்சங்களைப் பற்றியும் அறிய எண்ணும்போது
குழப்பத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது.

மன்னர்களையும் அவர்களுடைய வெற்றியையும்விட மிகவும் முக்கியமானது அந்நாளைய
பண்பாடு மற்றும் கலை தொடர்பான பதிவே. கலையியல் நோக்கில் எடுத்துக் கொண்டால்
அதில் வடஇந்தியாவைவிட தென்னிந்தியாவின் பங்களிப்பே அதிகம். வடஇந்தியாவில்
பெரும்பாலான மரபுச் சின்னங்களும், கவின்மிகு கட்டடங்களும், சிற்பங்களும் போரின்
காரணமாகவும், முகலாயர்களின் படையெடுப்புகளாலும் அதிக
பாதிப்புக்குள்ளாயின.

இக்காலகட்டத்தில் சோழமன்னன் இராஜராஜனால் ஓர் அழகான கோயில் தஞ்சாவூரில்
கட்டப்பட்டது. பாதமியிலும், காஞ்சிபுரத்திலும் கூட அழகான கோயில்கள் இருந்தன.
எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதி நிலை இதுவே. ராஜராஜன் காலத்தில் அழகான
செப்புத்திருமேனிகளும் காணப்பட்டன. அவற்றுள் மிக முக்கியமானது நடராஜர் சிற்பமே.
கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரன் பல நீர்ப்பாசன
வசதிகளைச் செய்தான். அவற்றுள் முக்கியமானது 16 மைல் நீளமுள்ள
நீர்த்தேக்கமாகும். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்குபின் அங்கு வந்த அரேபியப்
பயணி அல்பெரூனி அதைக் கண்டு வியக்கிறார். தம் மக்கள் அதைக் கண்டால் வியந்து
போவார்கள்'' என்றும் கூறி இதுபோன்ற கட்டுமானத்தை அவர்கள் அறிந்திருக்க
வாய்ப்பில்லை என்றும் புகழாரம் சூட்டுகிறார்.

அங்கோர்வாட் (கம்போடியா) மற்றும் ஸ்ரீவிஜயம் (இந்தோனேசியா) என்னும் தலைப்பில்
அமைந்த 17.5.1932-ம் நாளிட்ட கடிதத்தில் நேரு ஸ்ரீவிஜயத்துடன் சோழர்கள் கொண்ட
தொடர்பு பற்றியும், தென்னிந்தியாவில் சோழப்பேரரசு 11-ம் நூற்றாண்டில்
உச்சநிலையில் இருந்தபோது ஸ்ரீவிஜயமும் அத்தகு நிலையில் இருந்தது பற்றியும்,
இரு பேரரசுகளுக்கும் இடையே இருந்த நட்புறவு பற்றியும்
குறிப்பிடுகிறார்.

11-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர்களுக்கிடையே போர் மூண்டது பற்றியும்,
அக்காலகட்டத்தில் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரன் கடற்பயணம் மேற்கொண்டு
ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற முயன்றதையும் விரைவில் அந்த அதிர்ச்சியில் இருந்து
ஸ்ரீவிஜயம் மீண்டது பற்றியும் குறிப்பிடுகிறார்.

சோழர்களைப் பற்றிய ஒரு பறவைப் பார்வையை தன் கடிதங்களில் நேரு
குறிப்பிட்டுள்ளதன் மூலமாக அவர் உலக வரலாற்றில் சோழர்களுக்குத் தந்துள்ள
முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.

நன்றி: அகத்தியம் யோகியார்
2010/10/2 Pas S. Pasupathy முனைவர் பா.ஜம்புலிங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம்

பெண்ணின் பெருமை -3


பெரியார் போன்றோர் பெண் கொடுமைகளை பற்றி பேசாத நாளில்லை. பாரதியார் பாரதிதாசன் இன்னும் பல முற்போக்கு சிந்தனையாளர்கள் பெண்ணின் விடுதலைலையைப் பற்றி எழுச்சி மிக்க சிந்தனைகளை மாந்தர் நலம் சிறக்க பேசியிருக்கின்றனர். பற்பல ஆண்மீக வாதிகள் கூட பெண்னின் பெருமையை மட்டும் பேசவில்லை அதற்கும் மேலே பெண்னின் விடுதலையை பற்றி பேசியிருக்கின்றனர்.

பாரதியார் பெண்ணின் அடிமைதனத்தை இப்படி இடித்துரைகின்றார்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணிவளர்த்திடும் ஈசன
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையகம்
பேதமை யற்றிடுங் காணீர். என்று

பெண்கள் மனிதருக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய வித்தியாசமில்லை என்பதும், ஆண்கள் அடைய விரும்பும் சீர்திருத்தங்கள் போலவே பெண்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதும், ஏனெனில், அவர்களை அழுத்தி அடிமைப்படுத்திய கொடுமையான பலமானது பெண்கள் தாங்கள் மெல்லியலாளர்கள் என்றும், ஏதாவது ஒரு ஆணின் காப்பில் இருக்கவேண்டியவர்களென்றும், தங்களையே கருதிக்கொள்ளும்படி செய்துவிட்டது. ஆதலால் அது முதலில் மாறவேண்டியது அவசியமாகின்றது.

பெண்களூக்கு மனம் களங்கம் நிறையவே உண்டு முதலிலே பெண்கள் தன் மன அழுக்குகளை களைய வேண்டும்.மனதினிலே தோன்று மாசுகளை அகற்றினால் மன விடுதலை என்னும் மாபெரும் சக்தி கைக்கூடும். பெண்ணுக்கு .மனதிலே எழுச்சி உண்டானால் முகத்திலே பொழிவு உண்டாகும் . ஒரு பெண்னுக்கு அக அழகு கூடினால் அவள் மன மகிழ்சியோடு வாழ்கிறாள் என்று தானே,அர்த்தம். மனதில் ஒரு தெளிவு உண்டானால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு உண்டாகும்.

அந்த காலத்திலே வீட்டிலே சேர்க்கும் நகைகளை வைக்கும் சொர்க்க லோகம் தான் இந்த பெண்கள். நகைகளை சேர்வைக்கும் இடமாக இருந்திருக்கின்றனர் பெண்கள். இப்பொழுது மாற்றம் வந்திருகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் காரணம் இன்னும் பெரும் பாலன திருமண நிகழ்வுகளில் பெண்கள் நகை சேர்க்கும் இடம் பெண்களளின் அங்கம்தான்

இது வே நாளடைவில் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் போக பொருளாக பெண்கள் மாறிவிட்டதற்கு காரணமாகிவிட்டது. பெண் இயற்கையாகவே அழகானவள். மிருகங்களில் ஆண் அழககவும் மனிதரில் பெண் அழகவும் படைக்கப்படிருக்கின்றாள். எந்த ஒரு பெண்னும் தன்னை அலங்கரிந்த்துக் கொள்வதில் தப்பில்லை. இயற்கையின் படைப்பிலே பெண் என்பவள் அழகோடும் அறிவேடும் படைக்கப்ட்டிருகின்றாள். மனைவி தன் கணவனுக்காக அலங்கரித்து கொள்வதில் தப்பில்லை .உண்மையில் தன் கனவனின் உணச்சிகளூக்கும் உணர்வுகளுக்கும் பெண்கள் செவி சாய்க்க வேண்டும் பெண் காம பெருளாக மட்டும் இருக்க கூட்டது அவள் காதல் பொருளாகவும் இருக்க வெண்டும். ஆனால் இன்றைய சூழலில் பெண் என்பவள் வெரும் உடல் அங்கங்கள் காட்டும் வெரும் கண்காட்சி பொருளாக மாறிவிட்டாள்.

October 5, 2010

பெண்ணின் பெருமை -2


இந்த சமுதாயம் எங்கே செல்கிறது? பெண்ணியத்தை மலுங்கவிட்டு சமுதாய வளர்ச்சி என்னும் உந்தும் சக்தி வந்து விடவா போகிறது? பெண்ணை போற்றாமல் விழ்ந்து போன இனம் பாரினில் மிகவும் அதிகம். இந்த சமுதாயம் பெண்ணியத்தை "வேர்றாறுத்து” சாதிக்கப்போவதென்ன?

பெண் என்பவள் அழகு சாதனங்களின் ஒட்டு மொத்த குத்தகையாக மாறியிருக்கின்றாள்.போக பொருளாகவும், சினிமா தனமான காம போதை வாஸ்த்தகவும் மாறியிருப்பது பெண் நிலை கேவலமான ஒரு பரிமான வளர்சியில் சிக்கி சிரழிந்து கொண்டிருப்பது சமுதாயத்தின் கயமையை படம் பிடித்து காட்டுகிறது.எங்கும் எதிலும் பெண் என்பவள் கவர்ச்சி பாலியல் பொருளாய் மாற்றபப்ட்டு இருகின்றாள்.

ஆனால் திருமணம் என்ற பந்தம் பெணணின் சுதந்திரத்தைப் முழுமையாக பறித்துவிட்டு ஆணின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆயுள் முழுமைக்கும் போடப்பட்ட ஒப்பந்தப் பத்திரம். அதில் பெண் தன் ஆசை விருப்பங்களைப் புதைத்துவிட்டு இயந்திரம் போல செயல்படும் கட்டாயத்துள் திணிக்கப்படுகிறாள்.

பெண் என்பவள் தன்னை உணர்தல் என்பது இங்கு பெரும் வேள்வி நிலையில் இருப்பதாகவே எனக்கு படுகிறது. தனது பெருமையை பெண் என்பவள் முதலில் உணர வேண்டும். மனித குலத்தின் மாதவம் செய்த மாதர்க்குல தெய்வங்கள் தனது புனிதங்களையும் தனது மகத்துவத்தையும் உணர்ந்திருக்க வேண்டும். பெண்ணின் சிந்தனை சீர்திருத்தம் பெற்றும் சமுதாய மாற்றத்திற்கு பெரும் பங்காற்றவேண்டும். பெண்ணின் அக புற மாற்றம் ஒரு சமுதாயத்தின் மாற்றமாகவும் அந்த சமுதாயத்தை அடிப்படை அறிவு நிலையும் ஆன்மா வளர்ச்சிக்கும் பெண்ணின் தார்மீக கடமைகளின் ஒன்றாகும் அதே சமயம் தனது வளர்ச்சிக்கு ஏற்ற சிந்தனை திறனை வளர்த்தல் தனது பிள்ளைகளின் சுய அறிவு மேன்படுவதற்கும் பெண் இனம் தன் சார்ந்த பன்பாடு கூறுகளின் ஆழ்ந்த விழிப்பு நிலை தேவை, ஆனால் இன்றைய பெண்குழந்தையை ஆரம்பத்தில் இருந்தே பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வளர்ப்பதாக எண்ணி கோழையாக வளர்த்து விடுகிறோம். இந்த வளர்ப்புமுறையில் வித்தியாசப்படுத்துவதால்தான் இன்றைக்கு பத்திரிக்கைகளில், செய்திகளில் அதிகமாக பாலியல் வன்முறைகளைப் பற்றிய செய்திகள் அதிகரித்து வருகின்றன.

பெண்ணின் கடமை
பெண்களே நீங்கள் அதிகமாக உங்களை மறைக்காதீர்கள். இதை ஆடைக்குச் சொல்லவில்லை. உங்கள் ஆசைகள், தேவைகள், வலிமைகள், பெருமைகள, திறமைகள், இவைகளை வெளிப்படுத்துங்கள். எற்கனவே சொன்ன மாதிரி மறுக்க வேண்டிய விசயங்களை மறுத்துவிடுங்கள், கேட்க வேண்டிய விசயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தேவைக்கு மீறி ஆசைப்படாதீர்கள், தேவையை கேட்க அஞசாதீர்கள். பெண்களுக்கு என்று சொன்ன இலக்கணங்கங்கள் ஆணுக்கும் பொருந்தும். ஆணுக்குச் சொன்ன இலக்கணங்கள் பெண்ணுக்கும் பொருந்தும். உதாரணமாக நிறையச் செய்திகளை சொல்லலாம். நளனின் சமையல் பக்குவம், ஜான்சி ராணி போன்ற பெண்களின் வீரம் புரிந்து கொண்டால் நாம் நம்மை புரிந்து கொள்ளமுடியும், நம்மை புரிந்து கொண்டால் மற்றவர்களை புரிந்து நடப்போம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் உலகம் இன்பமயமாகும்.

நீண்ட காலமாக அடிமைத்தன பதிவு பெண்ணினத்தில் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றன.பெண்ணின் இயலாமையையும் அவர்களின் செயலற்றத்தனத்தையும் கன பொழுது மாற்றத்தைக் கொண்டு வருவது என்பது முடியாத ஒன்று. மனசுல அந்த மாற்றம் வரவேண்டும்- மனச பார்துக்கோ நல்லபடி என்று நமது பெரிவர்கள் சொன்னது அற்தமற்ற வார்தைகள் அல்ல மனம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். மனம் உற்சசாகமாகவும் உண்மையான மன வளத்துடன் இருந்தால் பெண்களின் வாழ்வும் வளம் பெரும்.

ஆண்களை விட பெண்களூக்கு மனோ பலம் அதிகம். . அவள் உன்னுடன் நேராக மோத முயல மாட்டாள். அவள் சண்டை மறைமுகமானது. அவள் அழுவாள். கதறுவாள். அவள் உன்னை அடிக்க மாட்டாள். தன்னைத் தானே அடித்துக் கொள்வாள். மனைவி தன்னைத் தானே அடித்துக் கொள்வதன் மூலம், அழுது கதறுவதன் மூலம், மிகப் பலமான ஆண் கூட அவளுக்கு அடிமையாவான். பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவள் அதை ஆணுக்கும் தர முடியும்.

கடந்த காலத்தில் ஆண் பெண்களை மிகவும் புனிதமானவர்கள், தேவதைகள் என்று நம்ப வைத்தான். ஆண் தூய்மையற்றவன். பெண்? அவள் தெய்வீகமானவள். ஆண் பெண்ணை உயரமான பீடத்தில் ஏற்றி வைத்தான். பெண்ணை அடக்கி வைக்க அவனது தந்திரம் அது.
ஆண் அவளை வணங்கினான். அப்படி வணங்குவதன் மூலம் அவளை அடக்கி வைத்தான்.ஆம். அப்படி இயல்பாக பீடத்தின் மேல் அமர்த்தப்பட்ட பெண் தன்னை தெய்வீகமாய் நினைத்துக் கொண்டாள்.

அந்த காலத்திலே ஆண் பெண் இருசாரரும் வேட்டை ஆடி உணவுத் தேவையை நிறைவு செய்தனர் மனிதன் ஆரம்பகாலத்தில் வேட்டையாடித் திரிந்த வேளையில் பெண்களையும் வேட்டைக்கு அழைத்துச் சென்றான். ஆணுக்கு ஆதரவாகப் பெண் இருந்தாள். பெண்ணுக்குப் பாதுகாப்பாக ஆண் இருந்தான். ஆனால், வேட்டையாடியோர் நாட்கணக்காக காடுகளில் இருக்க வேண்டிய நிலையும் வனவிலங்குகளின் தாக்குதல்களும் இடம்பெறத் தொடங்கவே பெண்களை வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வேட்டைக்குச் செல்ல நேர்ந்தது. பெண்களின் பாதுக்காப்புக்காக சில வேலையை தவிர்த்தல் வீட்டிலே தங்க வைக்கப்பட்டனர்.

இது பின்னர் நாடோடிச் சமுதாயத்திலிருந்து இனக்குழுச் சமுதாயமாக மாறியது. வீட்டில் முடங்கிய நிலைதான் ஆரம்பத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தமாகும். வீட்டினுள் சுகபோகப் பொருளாகவும், சமையல் செய்பவராகவும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உரியவராகவும், முதியோரின் பராமரிப்பாளராகவும் உடைகள் சுத்தம் செய்பவராகவும், வீடு வளவு சுத்திகரிப்பவராகவும் மருந்து கொடுக்கும் மருத்துவராகவும், மனைவியாகவும், தாயாகவும், சகோதரியாகவும் வீட்டினுள் இருந்தவாறே பல சுமைகளைச் சுமக்க வேண்டிய நிலைக்குள்ளானாள். பெண் சில சமயங்களில் மாதவிலக்கு காலங்களிலும் கர்ப காலங்களிலும் பெண்களையும் தனியாக தங்க விடுவார்கள்.எந்த வேளையும் செய்ய விடாமல் முழு ஒய்வு கொடுப்பார்கள் இதை சில சமயங்களில் மூடத்தனங்கள் என்பார்கள்.அதிலும் சில நன்மைகள் இருந்தன. பெண்களின் நலன் இருந்தது. நாளடைவில் பெண்களை அடிமை படுத்தவும் இது போன்ற தேவை உருவாகின.

தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது. பெண்ணிய பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆண் சார்ந்த ஆதிக்க செயற்பாடாக பார்க்கபடுகிறது

தாலி வந்த வரலாறூ
ஆரம்ப காலத்தில் ஆண் என்பவன் வேட்டை ஆடி தன்னால் வெற்றி கொள்ளபட்ட மிருகங்களின் பல்லை வெற்றியின் அடையாளமாக தன் மனைவிக்கு சாற்றினான். அதுவே தாலி எனப்பட்டது.அந்த காலத்தில் உடல் வலு உயர்ந்திருந்த காலத்தில் பெண்ணுக்காக போராடி சமுதாய அந்தஸ்தை பெற்றுக் கொண்டான்.

வேட்டை ஆடுதலின் மாண்பு குறைந்து விட்ட பின் பெண் வளர்த்த ஜால்லிகட்டு காளையை அடக்கினால் அந்த பெண் உரிமைக் கொள்ளப்பட்டாள்.

பிறகு வேடைக்கு இயலவில்லை ,காளையையும் அடக்குவதால் ஏற்படும் உயிச் சேதங்களை தவிர்க இளவட்ட கல் என்னும் ஒரு முறை உருவாகியது. ஊர் எல்லையில் வைக்கப்படும் இளவட்ட கல்லை ஒரு ஆண் தூக்கிவிட்டால் அந்த பெண் மணமுடித்து கொடுக்கப்பட்டாள்.

இந்தியா என்னும் நாடு பல நாடுகளின் படை எடுப்புக்கு ஆட்பட்டது. பெண்களை கற்பழித்தல் .மானபங்கம் செய்தல் கொலை செய்தல் என்ற திருவிளையாடல்களை படை எடுப்பாளர்கள் செய்தார்கள். படை எடுப்பாளர்களின் கொடுமையான கற்பழிப்புக்கள் சமுதயாத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்தன. குடுப்ப மானம் காக்க தாலியில் விஷம் வைக்கப்பட்டது.. எதிரிகளிடம் வீழும் போது கற்பு காக்கப்படவேண்டும் குடுப்ப மானமும் காக்கப்டவேண்டும். தன் தாலியில் இருக்கும் விஷத்தை அருந்தி உயிர் துறத்தல் ஒரு வகையான சமுக பாதுக்காப்பக கருதப்பட்டது. பிறகு தன் வீட்டில் பிரச்சனை வரும் போழுது பெண்கள் விஷம் அருந்து தற்கொலை செய்வது ஒரு சமுக பலவீனமாக மாறி பல பிரச்சனைகளை உருவாக்கியது. இன்று கூட பல குடுப்பங்களில் சிறு பிரச்சனைகளாளும் விஷ மருந்துகளை குடித்து உயிர் விடுவது சர்வ சாரணமாக இருக்கிறது.

இன்று ஜாதிக்கு ஒரு தாலி என்ற நிலமைக்கு தமிழர்களை திருமண முறை வந்து விட்டது. ஆதியில் தாலி வீர தீர செயல்களில் பெற்ற வெற்றியில் பெண்ணை அடைவதற்கு அவள் தனக்கு உரிமையுள்ளவள் என்னு அடையாளத்தை நிலை நிறுத்துவதற்கு தேவைப்பட்டது. அது ஒரு அடையால சின்னம். ஆனால் இன்றை தாலியின் நோக்கம் மாறிவிட்டது. அது ஒரு அடம்பர பொருளாகவும் பிறர் மதிக்கவும் தங்கத்தால் அலங்கரித்துக் கொண்டுயிருக்கிறது இன்றைய தாலி.. பெரும் பாலும் அது ஒரு சடங்காக மாறிவிட்டது.

உஷ்ண நாடான இந்தியா .பாலுணர்வின் தாக்கம் மிகவும் அதிகம். உலகிலே காமத்தையும் பாலுணர்வு சித்தானந்தத்தையும் விளவாரியாக அலசி ஆராய்ந்து முதல் நூலாக எழுதிய வரலாறு இந்தியர்களுக்கு உண்டு..கோயிக்களிளும் கற்கோவிலும் பால் உறவுகளை சித்தரித்து எழுந்த சிற்பங்கள் இந்தியர்களின் பால் உணர்வுகள் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டன. பால் உணர்வுகள் மகத்துவம் மிக்க இறைவழிப்பாட்டோடு இனைந்து விட்டன..இந்தியர்கள் திருமணமான முதல் இரவை கூட சிறப்பித்து ஒரு தெய்வீக சடங்காக மாற்றி இருப்பதில் இருந்து பால் உணர்வுகளின் இந்தியர்களின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டதை உணரலாம்.இன்னொன்று அது ஒரு வகையான சுக்கில யோகமாக கூட இருக்கலாம்.

ஏந்திரன் திரைக்கதை விமர்சனம் அல்ல. ஒரு சமுதாய பார்வை மட்டும்
எந்திரன் .மாய ஜாலம்காட்டி மக்களை கட்டி போட்டு ஆரவாரமான விளம்பரத்துடன் வெளிவந்து விட்டது ஏந்திரன். தமிழ் திரைப்பட வரலாற்றிலே அதிக பொருட்ச் செலவில் தாயாரிக்கப்பட பிரமாண்டமான ஒரு படம் என்கிறார்கள் .மாபெரும் விளம்பர யுக்தியுடன் மக்கள் மனதில் ஒரு எதிர்ப்பார்புடன் படத்தின் வெளியிட்டு காரியத்தை சாதித்திருக்கின்றனர்.

நான்கு முரட்டு சிங்கங்களின் ஒரு கூட்டு முயற்சில் உருவான ஏந்திரன்.மிக பெரிய எதிர்ப்பார்புடன் ரஜினியின் ரசிகர்களூக்கு மிக பெரிய விருந்து படைக்கும் என எதிர்க்பார்க்கபடுகிறது..சுப்பர் ஸ்தார் என்ற ஒரு மிண்ணும் முதிர் நட்ச்த்திரம். இன்னும் மிண்ணிக்கொண்டிருந்த அதிசயம். ஆஸ்கார் இசை விருந்து நாயகன் ஏ ஆ ரகுமானின் பின்னானி இசை ..உலக நாயகி ஸஸ்வரிராய் என்னும் அழகு பிம்பம். பிரமாணடங்களின் நாயகன் என்று சொல்லப்டடும் இயக்குனர் சங்கர். இணைந்து வழங்கும் ஏந்திரன் தமிழ்த்திரைப்படம்.

உலக தரத்தினால் ஆன ஒரு தமிழ் திரைப்படம் மாலாஜாயம் புரிந்து மக்களின் மனதில் எப்படி இடம் பிடிக்கபோகிறது என்று தெரியவில்லை. எதோ ரசிகர்களுக்கு திருவிழா என்ற ஒரு என்ற மாயக் கற்பனையில் ஏந்திரன் மிகைப்படுத்த பட்டு இருக்கிறது. எல்லாம் சரிதான். மனிதர்களுக்கு தேவை உற்ச்சாகம் மன மகிழ்ச்சி.அது சினிமா என்ற பொழுது போகும் ஊடகதின் வாயிலாக கிடைக்கும் என்றால் தப்பு ஒன்றும் இல்லை. அதற்கு பணத்தையும் நேரத்தையும் செலவளிப்பதும் கூட தவறில்லை. ஆனால் இதையே ஒரு சமய திருவிழா போன்று நடத்தி ஆட்டம் போடுவது எந்த வகையில் நியாயம்?

பெரியாரின் பாசறையில் இருந்து வந்த திமுக இயக்க பிரமுகர்களின் வழித்தோன்றகளின் பகுத்தறிவு பரப்புவதற்கு பதில் மூடப்பழக்கங்களை பரப்பிக்கொண்டு இருகின்றனர். தமிழைதான் தமிழிங்கிஸ்யாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்றால். சினிமா என்ற போர்வையில் சமுதாயத்தின் மூடத்தனத்தை ரசிகர்களை கொண்டு பரப்பிக் கொண்டியிருபது எப்படி அறிவு சார்த நிலையாகும்?.

ரஜினி படத்திற்கு பால் அபிசேகம். சினிமா கதாநாயகர்கள் என்ன காக்கும் கடவுளா ? காவடி எடுத்து, பால்குடம் எடுத்தல் மாடுகளை வைத்து பட பெட்டியை வைத்து ஊர்வலம் செல்வது, என்பது எவ்வளவு மூடத்தனமான செயல்?

சன் குழுமம் ஏந்திரன் என்ற சினிமாவை உயர்த்தரமான சமய நிகழ் வாக நடத்திருப்பது எவ்வளவு கேவலமான ஒரு செயல் என்பது ரசிகர்களின் அட்டகாசங்களை கண்டால் தெரிந்துக் கொள்ளாலாம். தமிழர்களை மூளை சலவை செய்து கொண்டு மூடத்தனங்களில் இருந்து மாற்றமுடியாது அல்லது மாற்ற கூடாது என்ற ஒரு நிகழ்ச்சி நிரலின் வழி தமிழர்களை ஆட்டு மந்தைகாளாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் சிலர் வகுத்த திட்டமாக கூட இருக்கலாம்.

சினிமா தனமான தமிழ் நாட்டு நிலமை படும் மோசமாக இருக்கும் என்றால் மலேசியா போன்று வளரும் நாட்டிலும் சினிமா தனம் படும் வேகமாக அறிவு நிலையை மாற்றிக் கொண்டிருப்பது ஒரு வருத்தமான செயல்தான். ஒரு அறிவில் சிறந்த ரசிகர் ஒருவர் மாத பிதா ரஜினி தெய்வம் என்று சொல்லி தனது அதிமேதவி தனத்தை காட்டிவிட்டார்.

சமுதாய வளர்சிக்கும் மாற்றத்திற்கும் இவ்வளவு காலமும் போராடிக் கொண்டிருந்த சமுதாய சான்றோர்களின் உழைப்பும் அறிவும் வெறும் கானல் நீரா?

சினிமா என்பது வெறும் பொழுது போக்கும் அம்சமாக அல்லாமல் சமுதாய மாற்றத்தின் பரிமாண வளர்சியின் முக்கிய பங்கு வகித்தால் சிறப்பக இருக்கும். அது ஒரு சிறந்த படைப்புகளமாக பரிமானம் பெற்றால் சமுதாம் மிகவும் கடன் பெற்று இருக்கும். படங்களை பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் சினிமாவை அசைக்க முடியாத ஒரு தெய்விக நிலைக்கு உயர்ந்துவது என்பது சமுதாய பலவீனமாக மட்டும்தெரிய தெரியவில்லை .தமிழ் சமுதாயத்தின் முட்டாள் தனமும் கூட. தெரிகிறது. யாரோ ஒருவரின் பணப்பெட்டியை நிரப்பவதற்கு சமுதாயத்தில் மூடத்தனத்தை நிரப்பி தமிழனை முட்டாள் ஆக்குவது எந்த வகையில் நியாயம்?

அல்பத்தன்மான விஷயத்திற்கு ஆடுவது என்பது தமிழனுக்கு கைவந்தகலை. பலகீனமான சமுதாயம் என்பது பலம் பலம்மற்ற குட்டிச் சுவராகத்தான் காட்சி தரும். ஒழுக்கம் கடமை கடப்பாடு ,கட்டுப்பட்டும் கொண்ட சமுதாயம் காலத்தை வென்று நிற்கும். சினிமா மோகத்தை வென்று அறிவு தாகத்தை இந்த தமிழர்களுக்கு யார் தருவார்?

October 4, 2010

பெண்ணின் பெருமை


பெண்ணின் பெருமை

பெண்கள் நாட்டின் கண்கள்!,மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!,பட்டங்கள் ஆள்வதும்,சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்! இப்படி எத்தனை கவிஞர்கள் பாடியிருக்கின்றனர். ஆனால் இயல்பான நிலையில் அதை நாம் சிறுமை கொள்ளும் அளவுக்கு பெண்களின்பால் கொடுமையும் அடிமைத்தனம் பல நூற்றாண்டு தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பெண்களுக்கு விடுதலை மிக மிகத் தேவை என்பதை யாவரும் உணர்திருக்கின்றோம்.சில இயக்கங்கள் பெண் விடுதலைக்காக போராடிக் கொண்டு இருந்தாலும், அதனோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவோ, ஐக்கியப்படுத்திக் கொள்ளவோ பெண்கள் முன் வராத சூழல்தான் இன்றைக்கும் உள்ளது. இந்நிலை மாற வேண்டும் அறிவுத்தளத்தில், சமூகவியல் போராட்டங்களில் தங்களது பங்களிப்பை அளிக்கும் போதுதான் சுதந்திரத்தின் முழுப்பயனும் அடைந்ததாகப் பொருள் கொள்ள முடியும்.

வாழ்க்கையானது ஆண் பெண் என்ற இரு பாலரும் இணைந்து நடைப்பெருகின்ற பேர்யியக்கம் இந்த வாழ்க்கை.பெண்ணில்லாமல் ஆண் இல்லை. ஆண்ணில்லாமல் பெண்ணில்லை என்பது இயற்கையின் நியதி உலகில் உள்ள எல்லோரும் இந்த இரண்டு பேர் கூட்டுறவில் வந்த இன பெருக்கம் மனிதவர்க்கம் என்பதை மறுக்க முடியாது. எனினும் உலகெங்கும் பெண்கள் ஆண்களால் சமத்துவமாக பார்க்கிறார்களா? பார்க்கப்படுவதில்லை என்ற பதில்தான் கிடைக்கிறது. அடிமைத்தனத்தின் மறுபக்கம் தான் பெண்ணியம்.

முற்காலங்களில் பெண்களும ஆண்களும் சமமானவர்கள் எனக் கருதப்படவில்லை. அதாவது, ஆணுக்குப் பெண் தாழ்ந்தவளே என்பதும், இது பெண்களின் உடல்கூறு மற்றும் படைப்பு ரீதியாகவும் கருதப்பட்டு வந்தது. பெண்கள் நுண்ணறிவில் மிகவும் தாழ்ந்தவர்கள் எனக்கருதப்பட்டது. பெண் புத்தி பின்புத்தி என்று பேசப்பட்டது. பெண், ஒரு மனிதஜென்மமாகவே கருதப்படவில்லை. ஓரு சில இந்திய அரபு இனங்கள், தங்கள் பெண்களை தான் வளர்க்கும் கால்நடைகளோடு சேர்த்தே கணக்கிட்டனர். அவர்களுடைய மொழியில் பெண்களுக்கான பெயர்ச்சொல் மாட்டு பெண் அல்லது ‘கழுதை’ எனும் சொல்லின் அர்த்தத்தையும் கொண்டிருந்தது.

திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன. 'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்கொள்ளப்படுகிறது, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் என்று அர்தப்படுதிக்கொள்ள்லாம்.

ஒரு ஆண் திருமணத்திற்கு முன் மதிக்கப்படுவதில்லை. அவன் திருமண முடிந்து தம்பதி சகிதமாக உலா வரும் போதுதான் அவனுக்கு மதிப்பும் மரியாதையும் தருகிறது இந்த சமுதாயம். பெண்னோடு இல்லறத்தில் இணையும் ஒரு மனிதன் பூரான மரியாதை பெருகின்றான். முழுமையும் அடைகின்றான்.

பெண் என்பவள் சமுதாய நோக்கு மிக்கவளாகவும் சமுதாய பற்று மிக்கவர்களாகவும் வாழ்ந்தாள் அவர் சார்ந்த இனமும் குடுப்பமும் சிறந்தோங்கும் என்பது உண்மை. பெண்ணின் பெருமையை நிலை நிறுத்து மாண்பு நமது தமிழ் பெண்களிடம் இருக்க இருக்கவேண்டும்.

ஆண் ஆதிக்கத்தில் முரட்டுதனமான உரிமை மறுப்பு. காலம் காலமாக பெண்ணின் உரிமைகள் சுரண்டப்படுவது கண்கூடாக தெரிகிறது. நீண்ட காலம் இரண்டாம் தர குடி மக்களாக பெண்கள் மதிக்கப்ட்டிருகின்றனர். நூற்றாண்டை தாண்டிய பெண் விடுதலைக்கான போராட்ட முயற்சியினால் ஆணாதிக்கத்தின் வீறு முன்பை விட குறைந்து விட்டதே என்பது தான் உண்மை. எனினும் முழுமையான பால் சமத்துவம் இன்னமும் எட்டப்படவில்லை என்பதும் மறுப்பதற்கில்லை

October 3, 2010

மவுனங்கள்மேக போர்வையில்
வேர்முளைத்து
மழை கொடிக்கள்
பூமி எங்கும்
கொடை பிடித்து
மிண்ணல் கொடியிடையாய்
துவண்டு நிற்பது
எங்கோ எனது
பூமி பந்தில்
உதைக்கப்பட்ட பிம்பமாய்
எதிரிரோலித்துக் கொண்டிருப்பது
எனக்குள்
உற்பத்தியாகும்
மனுச புத்தியாய் என்ன?

எங்கோ ஒரு
இருமார்ப்பின்
எனது ஏகாந்தம்
வெளிக் கொணரபட்டு
கிடந்தன.......

எனது நாசினின்
இரு துவரங்கள் வழி
மிருக சுவாசங்கள்
வெளிபடுத்திக் கொண்டு
குறைட்டை சத்தம்
மெதுவாக கடந்து
வான் வெளியை தொட்டு நின்றன.

மரணத்தில் துவங்கும்
வாழ்வுதனை என்னால்
குறித்து கொள்ள முடியாவில்லை
சலன மற்ற சித்திர கனவுகள்
துலபாரத்தின் எடையில் வைகப்பட்டன
தத்துவங்களான மவுனங்கள்
ஆதி வெளியில் கரைந்திருக்கின்றன.

காதல் சுவை?


காலம் போட்ட பூக்களில்
காதலும் ஒன்று
காதல் செய்த மாயையில்
கன்னியின் முகம்
கல்லாய் குத்தி
கரைத்தது நெஞ்சம்

இது
விடியலுக்கு சொந்தமில்லா
நேசம்
விடிந்தவுடன்
மறந்து போகும்
காதல் வாசம்
காற்றுக் வேலிப் போட்டு
காதலை அடைக்க முடியுமா?

கவிதை இனிக்கும்
இதழ் சுவை தந்தாதனால்
காலம் பூராவும் இனிக்கும்
காதல் சுவை?

காதலுக்கு
கம்பனைதான் தூது விட முடியுமா?
கவிதையில் இனிக்கும் காதல்
கடைச்சி வரைக்கும்
வருமா என்ன