September 30, 2010

காதலும் காமமும்அன்று மாலை நேரத்திலே ஷட் மசால வில் அமர்ந்து நானும் நண்பர் செல்வா மற்றும் இரவின் அவர்களூடன் மாலை நேரத்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தோம் . பேச்சு வாக்கிலே எந்த காதலும் காமத்தில் தொடங்கி காதலில் முடிகிறது என்னும் தத்துவ பாடத்தை முன் வைத்தார் நண்பர் செல்வா. அனுபவமா இல்லை இது ஒரு காதல் பாடமா?

அன்பால் எந்த காதலும் மலர்வதில்லை. முதல் பார்வை பெண்களின் அங்கங்களில் பதிந்து , காமப் பார்வைக் கொண்டு பிறகு தான் அது காதலாக மலர்கிறது. எந்த முதல் காதலும் அன்பு நோக்கோடு மலர்வதில்லை. அப்படி சொன்னால் உண்மையாக கூட இருப்பதில்லை .ஏதோ ஒரு வகை தேவைகளில் அடிப்படையில் இருந்து மலர்ந்ததாக இருக்கும் .அந்த காதல் காம கண்களில் கசிந்து உறவு தொடர்ந்தால் நாளடைவில் காமம் காதலாய் பரிமானம் பெருகிறது......கண்டதும் காதல் எந்த வகையான தோடல்? சபாஷ் நண்பா வாழ்க்கையை உணர்திருக்கின்றீகள். அது சரிங்க நண்பா.. நீங்கள் பிரமச்சாரியாச்சே.. ....உங்கள் திருமணம் எப்பொழுது?

அண்ணலும் நோக்கினால் அவளும் நோக்கினால் என்பது இன்றைய நவ நாகரீக நங்கையை பார்த்தால் போது. கம்பன் சொன்னது சீதைக்காக மட்டும் இல்லை இன்றைய நவ நாகரீக பெண்களூக்கும் போருந்தும் .முன் அறிவுப்போடு எந்த காதலும் வருவதில்லை. உடல் கவர்ச்சியால் உந்தப்பட்டு பாலியல் ரசயானங்களின் பரிமான மாற்றங்கள் சில காதலை உயர் நிலைக்கு இட்டுச் செல்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. காமத்தில் ஆரப்பித்து காதல் நாளடவில் காமத்தை கடந்து காதலாய் மகத்துவம் பெருவது காமம் மட்டும் வாழ்க்கை அல்ல, காதலின் ஊடே உடலும் கூடலும் சேர்ந்தே காதல் காமமும் களம் ஆடி வளம் சேர்க்கும் இந்த வாழ்க்கை.

வள்ளுவன் சொல்லும் காமத்துப்பால் ஓர் உயர்வான, சிறப்பான பகுதியாகும். ஆனால் காமம் என்ற சொல்லைத் தவறாகப் புரிந்து கொண்டு அதைப் படிக்காமலே இருந்தவர் பலர்; இருப்பவர் பலபேர். "கமம் நிறைந்து இயலும்" என்றார் தொல்காப்பியர். மனத்தில் நிறைந்த இன்பமாகிய கமம் என்பது காமம் என்று மாறியிருக்கலாம். அது பிறகு குறிப்பிட்ட ஒரு பொருளில் உடல் வழி உள்ளம் பெறும் இன்பம் என்ற பொருளில் காலப்போக்கில் வழக்காற்றில் வந்திருக்கக்கூடும்.இன்பம் என்பது காமம் இல்லை என்றால் காதல் மலர்வதில்லை இந்த உலகமும் உயிர் பரிமாண வளர்சி கண்டிருக்க முடியாது. காமம் ஆழ்ந்த அன்பின் அடிப்படையில் காதலாய் வளர்சிக் கொள்கிறது. பிற்காலத்தில் காமம் வர்கிர புத்தி கொண்டு இழி நிலை கருத்தாக உருக் கொண்டது. வலிந்து இன்பம் நுகர்தல் பின்பு காமமாய் பார்க்கப்பட்டது. வள்ளுவன் சொல்லும் காமத்தின் அடிப்படையில் இணையும்போது, அன்பு வலுப்படுகிறது. வாழ்வின் உறுதியான அடித்தளமாகின்றது. இன்பம் என்பது பொதுவானது. ஆனால் காமம் என்பது கணவனுக்கும், மனைவிக்கும் மட்டுமே ஏற்படும் உண்மை அன்பின் நிறைவாகும்.

காமம் உடல் சம்பந்தப்பட்டதென்றால் குறிப்பிட்ட காலம் வரை தொடரும். காதல் உள்ளம் சம்பந்தப்பட்டது என்றால் இறுதி நாள் வரை தொடரும். உண்மைக் காமம் ஆத்மா சம்பந்தப்பட்டது. காதல் வாழ்வு கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவரை உடலாலும் உள்ளத்தாலும் இணைக்கும் அருமருந்தாகும்.

ஆனால் இங்கு என் நண்பர் செல்வரத்தினம் இன்னோன்றையும் சொல்லி இருந்தார்.பெண்களை விட ஆண்கள் பலகீனமானவர்கள் பெண்கள் அழுது அழுது தனது ஆற்றமையை தீர்த்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு ஆண் சோகத்தை தனது மனதினிலே போட்டு பூட்டிவைத்துக் கொண்டு அதை அடக்கி அடக்கி கடைச்சியில் அதனுடனே அழிந்து போகிறான் ஆண். எவ்வளவு உண்னதமான வார்தைகள்.இதுக்குதான் அப்பா உங்களோடு பேசனம் என்கிறது ... தத்துவ முத்துக்கள் எப்படி அருவியாய் கொட்டுகிறது பாருங்கள்.

என்னங்க ரவின் எதுவும் சொல்லாமா இருக்கிங்க?

நீங்க எல்லாம் புத்த மரத்தினிலே சித்தனாய் அமர்ந்திருக்க வேண்டிய ஆளுங்கப்பா..........என்னமா சிந்திக்கிறிங்க...,,,,
Post a Comment