September 30, 2010

பத்துமலை முருகா ! நீ பக்கத்தில் வா இறைவா !
பத்துமலை முருகா ! நீ பக்கத்தில் வா இறைவா !
பக்தர்கள் குறை தீர்க்க படி ஏறி வாரும் ஐயா !
மலைமீதினிலே துயில் கொள்ளும் முருகா! உன்
மயில் மீது ஏறி அமர்ந்து அருள்தர வாராயோ ?
மலை வாசம் செய்யும் மால்மருகா - திருமுருகா - உன்
மண கோலம் பார்க்க பத்து மலை முருகா -நான்
மலை ஏறி வரவேண்டும் - நின் திருப்புகழ் பாடி
மன மகிழ்வாக உன் சிலைமீது திருத்தமிழ் கவிப்பாடவேண்டும்.

வித்தக திருமுருகா ! வினை தீர்க்க வருவாயோ !
பக்தர்கள் பால்க்குடம் தந்தால், பலவினைகள் தீர்ப்பாயோ !
வெள்ளி பனித்தலையன் குமரா! குமர குருபா !
வள்ளியின் நாதனே. தெய்வயானையின் மணளானே !
அள்ளி தர வேண்டும் நின் அருள் முருகா! கார்திகை மைந்தா !
கந்தா கடம்பா ! கதிர்வேலவனே ! கந்தன் கருனையை
கடல் கடந்து பத்து மலையை தமிழ் முத்து மாலையாய் சூடியவனே !
மன மகிழ்வாக உன் சிலைமீது திருத்தமிழ் கவிப்பாடவேண்டும்.

யான் இருக்க பயம் ஏது என்பாய்- மால்மருகா !
வெற்றி வேலவனே! பத்து மலை முருகா ! நின்
பக்தர்களின் காவடியில் கடைத்தேர வழிக் காட்டும் குமரா!
பண்ணிரு கரத்தவனே சரவணனே! தமிழ் வித்தகனே! - நின்
திருவருளை இருக்கரம் கூம்பி வணங்குகின்றேன் முருகா !
மலை ஏறி நீ வரவேண்டும் உந்தன் மயிலோடு
நான் விளையாட நின் திருப்புகழ் பாடி
மன மகிழ்வாக உன் சிலைமீது திருத்தமிழ் கவிப்பாடவேண்டும்.

காதலும் காமமும்அன்று மாலை நேரத்திலே ஷட் மசால வில் அமர்ந்து நானும் நண்பர் செல்வா மற்றும் இரவின் அவர்களூடன் மாலை நேரத்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தோம் . பேச்சு வாக்கிலே எந்த காதலும் காமத்தில் தொடங்கி காதலில் முடிகிறது என்னும் தத்துவ பாடத்தை முன் வைத்தார் நண்பர் செல்வா. அனுபவமா இல்லை இது ஒரு காதல் பாடமா?

அன்பால் எந்த காதலும் மலர்வதில்லை. முதல் பார்வை பெண்களின் அங்கங்களில் பதிந்து , காமப் பார்வைக் கொண்டு பிறகு தான் அது காதலாக மலர்கிறது. எந்த முதல் காதலும் அன்பு நோக்கோடு மலர்வதில்லை. அப்படி சொன்னால் உண்மையாக கூட இருப்பதில்லை .ஏதோ ஒரு வகை தேவைகளில் அடிப்படையில் இருந்து மலர்ந்ததாக இருக்கும் .அந்த காதல் காம கண்களில் கசிந்து உறவு தொடர்ந்தால் நாளடைவில் காமம் காதலாய் பரிமானம் பெருகிறது......கண்டதும் காதல் எந்த வகையான தோடல்? சபாஷ் நண்பா வாழ்க்கையை உணர்திருக்கின்றீகள். அது சரிங்க நண்பா.. நீங்கள் பிரமச்சாரியாச்சே.. ....உங்கள் திருமணம் எப்பொழுது?

அண்ணலும் நோக்கினால் அவளும் நோக்கினால் என்பது இன்றைய நவ நாகரீக நங்கையை பார்த்தால் போது. கம்பன் சொன்னது சீதைக்காக மட்டும் இல்லை இன்றைய நவ நாகரீக பெண்களூக்கும் போருந்தும் .முன் அறிவுப்போடு எந்த காதலும் வருவதில்லை. உடல் கவர்ச்சியால் உந்தப்பட்டு பாலியல் ரசயானங்களின் பரிமான மாற்றங்கள் சில காதலை உயர் நிலைக்கு இட்டுச் செல்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. காமத்தில் ஆரப்பித்து காதல் நாளடவில் காமத்தை கடந்து காதலாய் மகத்துவம் பெருவது காமம் மட்டும் வாழ்க்கை அல்ல, காதலின் ஊடே உடலும் கூடலும் சேர்ந்தே காதல் காமமும் களம் ஆடி வளம் சேர்க்கும் இந்த வாழ்க்கை.

வள்ளுவன் சொல்லும் காமத்துப்பால் ஓர் உயர்வான, சிறப்பான பகுதியாகும். ஆனால் காமம் என்ற சொல்லைத் தவறாகப் புரிந்து கொண்டு அதைப் படிக்காமலே இருந்தவர் பலர்; இருப்பவர் பலபேர். "கமம் நிறைந்து இயலும்" என்றார் தொல்காப்பியர். மனத்தில் நிறைந்த இன்பமாகிய கமம் என்பது காமம் என்று மாறியிருக்கலாம். அது பிறகு குறிப்பிட்ட ஒரு பொருளில் உடல் வழி உள்ளம் பெறும் இன்பம் என்ற பொருளில் காலப்போக்கில் வழக்காற்றில் வந்திருக்கக்கூடும்.இன்பம் என்பது காமம் இல்லை என்றால் காதல் மலர்வதில்லை இந்த உலகமும் உயிர் பரிமாண வளர்சி கண்டிருக்க முடியாது. காமம் ஆழ்ந்த அன்பின் அடிப்படையில் காதலாய் வளர்சிக் கொள்கிறது. பிற்காலத்தில் காமம் வர்கிர புத்தி கொண்டு இழி நிலை கருத்தாக உருக் கொண்டது. வலிந்து இன்பம் நுகர்தல் பின்பு காமமாய் பார்க்கப்பட்டது. வள்ளுவன் சொல்லும் காமத்தின் அடிப்படையில் இணையும்போது, அன்பு வலுப்படுகிறது. வாழ்வின் உறுதியான அடித்தளமாகின்றது. இன்பம் என்பது பொதுவானது. ஆனால் காமம் என்பது கணவனுக்கும், மனைவிக்கும் மட்டுமே ஏற்படும் உண்மை அன்பின் நிறைவாகும்.

காமம் உடல் சம்பந்தப்பட்டதென்றால் குறிப்பிட்ட காலம் வரை தொடரும். காதல் உள்ளம் சம்பந்தப்பட்டது என்றால் இறுதி நாள் வரை தொடரும். உண்மைக் காமம் ஆத்மா சம்பந்தப்பட்டது. காதல் வாழ்வு கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவரை உடலாலும் உள்ளத்தாலும் இணைக்கும் அருமருந்தாகும்.

ஆனால் இங்கு என் நண்பர் செல்வரத்தினம் இன்னோன்றையும் சொல்லி இருந்தார்.பெண்களை விட ஆண்கள் பலகீனமானவர்கள் பெண்கள் அழுது அழுது தனது ஆற்றமையை தீர்த்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு ஆண் சோகத்தை தனது மனதினிலே போட்டு பூட்டிவைத்துக் கொண்டு அதை அடக்கி அடக்கி கடைச்சியில் அதனுடனே அழிந்து போகிறான் ஆண். எவ்வளவு உண்னதமான வார்தைகள்.இதுக்குதான் அப்பா உங்களோடு பேசனம் என்கிறது ... தத்துவ முத்துக்கள் எப்படி அருவியாய் கொட்டுகிறது பாருங்கள்.

என்னங்க ரவின் எதுவும் சொல்லாமா இருக்கிங்க?

நீங்க எல்லாம் புத்த மரத்தினிலே சித்தனாய் அமர்ந்திருக்க வேண்டிய ஆளுங்கப்பா..........என்னமா சிந்திக்கிறிங்க...,,,,

September 29, 2010

சிந்தனைஆண்களின் இடைகளை வர்ணிக்காத கவிதை.
ஆண்களின் தொடைகளை வர்ணிக்காத கவிதை ஆண்களின் மயிர்களை வர்ணிக்காத கவிதை ஆண்களின் தொப்புள் குழிகளை வர்ணிக்காத கவிதை ஆண்களின் மார்பகங்கள் பற்றி எண்ணிப் பார்க்காத கவிதை, ஆண்களின் கன்னங்களையும் – உதடுகளையும் பற்றி மூச்சுவிடாத கவிதைகள்,
மூச்சுக்கு மூச்சு பெண்களின் ஒவ்வொரு அங்கத்தையும் பல்வேறு கோணங்களில் வர்ணிக்கிறதென்றால் முழு காம உணர்ச்சிகளும் அங்கே கொட்டிக்கிடப்பதை அறிவு உள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்.

September 28, 2010

என்னை செதுக்குவதற்கு


என்னை
சிருஷ்டித்த தேவதையே!

என்னை செதுக்குவதற்கு
பத்து மாதம் எதற்கு?
ஏதாவது விதைகளில்
என் சீவனை
வைந்திருந்தால்
விரிச்சமாக விரிந்திருப்பேன்
உனக்காவது
உயிர் பாரம் குறைந்திருக்கும் !

எனது ஜீவன்
ஏகாந்த
பூக்களில் பூத்திருந்தாலும்
உலகுக்காவது
மணம் பரப்பிருக்கும்
உனக்காவது
மன பாரம் குறைந்திருக்கும் !

வான் மழையாய்
நான் முகிழ்திருந்தாலும்
மண்ணிலே
குளிர்த்தரும் ஓடையாய்
ஓயாமல் ஒழியாமல்
ஓடிக் கொண்டிருப்பேன்
உனக்காவது
உடம்பு பாரம் குறைந்திருக்கும் !

நரமானிடம்
நாமம் தரித்து
வாழ்க்கை முழுவது
நாற்றாற்றிலே விட்டுவிடு
நாயாய் பேயாய்
நானிலத்தில் அவதரித்து விட்டேன்

தாகம் என்னும் தேகத்தை தந்துவிட்டாய்
சோகம்மென்னு துன்பத்தில் துவண்டு விட்டேன்
மோகத்தில் விழ்ந்து மேதினியிலே
சாகா என்னும் சாயூட்சியத்தை தேடுகின்றேன்?
என் வினை யார் அறிவார்?

என்
வாழ்க்கை புதைக்குளியில்
வெரும் சாம்பலை மட்டும்
அள்ளி வீசாதீர்
மலர்களின் நருமணத்தையும்
அங்கே புதைத்து வையுங்கள்
மலர்ந்து மணம் பரப்பவேண்டும்

மரமாய் நான் மாய்ந்து போனாலும்
மனிதமாய் நிமிர்ந்து நிற்கவேண்டும்
ஆரவாரமற்று உதிர்ந்திருந்தாலும்
ஆன்மாநேயம் ஒளியுர வேண்டும்

September 25, 2010

பொன்மகள் பெற்றேடுத்த - தமிழ் பூவாய் வாழியவே !வாழியவே !

பார்த்து பார்த்தபின்
பாவை விழிப் பூத்தது
நெஞ்சில் ஏற்றி வைத்த - காதல்
நெருப்பு மெழுகாய் கரைய்ந்தது

வண்ண உடல் கருத்தது
வஞ்சி அவள் மேனி தளர்ந்தது
எண்ணி எண்ணி - அவள்
ஏக்கம் கனலாய் கொதித்தது

கண்ணன் அருகினிலே
கட்டேரும்பாய் கடித்தனவோ
கண்ணியவள் - எண்ணமேல்லாம்
கருப்பாய் இனித்தனவோ

நட்பு நலம் விரிய
நற்றவன் கட்டி(ல்) அணைத்தனோ
பொன்மகள் பெற்றேடுத்த - தமிழ்
பூவாய் வாழியவே !வாழியவே !

September 24, 2010

உலக அமைதியும் குடுப்ப அமைதியும் தனி மனிதனின் அமைதியில்தான் அடங்கியிருக்கின்றது.
இன்றைய மலேசியா இந்திய சமுதாயத்தில் வன்முறை கலாச்சாரம் ஒழுக்க சீர்கேடுகளூம் தலைவிரித்து ஆடுவதாக ஒரு சிலரின் குற்றச்சாட்டாக மாறி இருக்கிறது. எங்கும் குண்டர் கும்பல். சினிமா மோகம்., ஏழ்மை நிலை தரம் தாழ்ந்த பண்புக்கூறுகளின் கூடாரமாக மலேசிய இந்தியர்களின் வாழ்வியல் மாறிவருகிறது என்பது ஒரு பொது கருத்தாக இருக்கிறது. சமுகம் அரசியல் பொருளாதாரம் ஆன்மீக அறிவு சார்ந்த எந்த நிலையிலும் மலேசிய இந்தியர்களிள் வரம்புகள் ஒரு விளிம்பு நிலை இலக்கண பிரிவுக்குள் தொக்கி நிற்கிறது. சமுதாய இன்னல்கள் பல்கி பெருகி கொடும் செயல் எங்கும் பரந்துவிரிந்து நிற்கிறது..மனிதன் பெருமையை மனிதன் உணர்ந்தூ நடந்தால், மனதின் திறத்தை மதித்து உணர்ந்தால் பெரும்பாலான மனித நேயத்து சிக்கல்கள் தீர்ந்து உள்ளத்திலே அமைதியும் உலகிலே சமாதானமும் உருவாகும். நாட்டின் வளப்பத்தையும் சுபிச்சத்தையும் அமைதியையும் நாடும் அரசாங்கம் தனிமனித அமைதிக்கு உதவவேண்டும்.

ஒரு கல்லூரி பேராசிரியர் தனது மாணவர்களிடம் உலக வரைப்படம் கொண்ட தாளைக் தந்து அதை சின்ன சின்ன துண்டுகளாக கிழித்து மறுபடியும் ஒட்டித்தருமாறு கேட்டுக் கொண்டார். முயற்சித்து கொண்டிருத்த மாணவர்கள் சிலர், முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர்,அதிலே ஒரு மாணவர் மட்டும் மறு வினாடியிலே உலக வரைப் படத்தை இனைத்து தந்து விட்டார். இது எப்படி சாத்தியமானது.ஆச்சிரிய குறி அனைவருக்கும்.! பேராசிரியர் கேட்டார் எப்படி இலகுவாக உலக வரைப்படத்தை வரைந்துவிட்டாய்?.வேறு ஒன்றும் இல்லை ஐயா. உலக வரைபடத்திற்கு பின் புறம் மனித படம் ஒன்று இருந்தது வரையப்பட்டிருந்த. மனித உருவத்தை இனைத்தேன் .உலக வரைபடம் தானாக வந்து விட்டது என்றார். இப்படிதான் உலக சாமாதானம் என்பது மனித அமைதியில்தான் குடிக்கொண்டிருக்கின்றது. தனி மனித அமைதி உலக அமைதிக்கு அடிதளமானது. தனி ஒரு மனிதனின் துயரங்களூம் துன்பங்களூம் உலக அமைதிக்கு எதிரானது மட்டும் அல்ல அன்பான அறமான துய்மையான நல் வாழ்க்கைக்கும் பங்கமானதுதான்.

ஒரு மனிதனின் மன அமைதி அவன் குடும்ப நல அமைதிக்கும் வழிகோலும் என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் இன்றைய நவ நாகரீக வாழ்க்கை கூறுகளில் மன அழுத்தம் என்பது நடைப்பிணமாக இயங்கும் மனித வாழ்க்கையில் ஒரு அங்கமாகிப் போனது பெரிடர்தான். இன்று சிறு குழந்தை முதல் பெரியவர் முதல் மன அழத்தத்தில் விழ்ந்துக் கிடப்பதுதான் வேடிக்கை. தேவை அடிப்படையில் வாழ்க்கை அமைந்து விடுவதால் பணச்சிக்கல் பல பேருக்கு மனச்சிக்களை வரவழைத்து விடுகிறது. பண்பான குடும்ப வாழ்க்கை விவாகரத்து வரைக்கும் வந்து விடுகிறது. ஏன்? தனி மனித அமைதியை மனிதன் தொலைத்து விட்டால் , தொலைந்து போவது அவன் வாழ்வும் மட்டும் இல்லை உலக சமாதனமும் அமைதியும் கூட.

தாய்க்கு பின் தாரம் என்பார்கள். தவறான கருத்தாக்கங்களால் தாய் இறந்த பின் தாயின் நிலையில் மனைவி என்பவள் இருப்பாள், என்றும் தாயை போல் தன்னையும் பாரமாரிப்பாள் அல்லது இயங்குவாள் என்பது ஒரு பொது நோக்கு கருத்தாக நிலைப்பெற்று விட்டது. ஆனால் இந்த உலகிலே அற்புதமான அதிசயத்தக்க உறவு எது என்றால் தாயும் தாரமும்தான். இந்த இரு உறவுகள்தான் உணர்வுகளாளூம் உடலாலும் உதிரத்தாலும் மனிதனோடு பிணைக்கப்ட்டு வார்க்கப்பட்ட ஒரு உன்னதமான உறவாகும்.ஒரு தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு அவர்களின் அவர்களின் திருமண பந்ததோடு நின்றுவிடுகிறது. ஒரு தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவு தாய் இறந்தவுடன் அவளோடு அந்த உறவும் மண்ணோடு புதைந்துவிடுகிறது. ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பந்தம் ஆயுள் காலம் முதல் தொடர்ந்து செல்கிறது. புனிடமான அந்த உறவுகள் கூட சில சமயம் தடம் மாரி தடுக்கி விழுவது எதனால்? மன அமைதியின்மைதான் முதல் முதற்காரணமாகிவிடுகிறது.

“சினம் இறக்க கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே” என்பது போன்று

உலகத்தில் அமைதி தழைக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் அமைதி தவழ வேண்டும் என்பது பொது நியதி. கணவன் மனைவியின் அன்புக்கு பாத்திரமாக வேண்டும். அது போல் மனைவி கணவனின் அன்புக்கு கட்டுண்டு வாழவேண்டும். திருமணமாகி சில காலங்களிலே பெரும் பிரச்சனைகளை சந்திக்கும் தம்பதிகள்தான் நிறைய உண்டு இன்றைய காலக்கட்டதில். காரணம் புரிந்துணர்வு என்பது சிறிதேனும் இல்லை என்பதே. கல்யானத்திற்கு முன் அழக தோன்றும் மனைவி கல்யானத்திற்கு பிறகு இராட்ச்சச்சியாக தோற்றம் அளிக்க என்ன காரணம்? அன்பிலே குறை ஏற்படுவதுதான் காரணம். அந்த அன்பு மறைவதற்கு என்ன காரணம் மனதிலே ஏற்படும் இறுக்கம் தான் காரணமாகிவிடுகிறது.

மனைவியை நல்ல நண்பாரகவும் உற்ற தோழியாகவும் பார்க்கும் பக்குவம் நமக்கு எப்பொழுது ஏற்படப் போகிறது? அழகிய இராச்சசி,அன்பான இராச்சசியாக மாறியிருந்தால் இருந்தால் நல்லதுதானே? அவர்களும் மலரினும் மென்மையானவர்கள்தானே. மனபக்கும் பெற்றால் ஊடல் கூடல் ஆகும் கூடல் இன்பமாகும். மனம் திறந்த புத்தகமாக கணவன் மனைவி மாறும் பொழுது நமக்குள் இருக்கும் இடைவெளி அகழும் அன்பு பெருக்கும். அன்பொழுக பேசுவதனால் உறவுகள் கூடுமே தவிர குறையாது. அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? வாழ்த்துங்கள்! கணவன் மனைவியை வாழ்த்தை விட வேறு ஒரு இன்பமையமான நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.

இவளையா நான் அன்பே ஆறுயிரே என்று அழைப்பது? தெருவிலே போகும் தெரு நாய்யை அழைத்தாலும் அழைப்பேன் இவளை எப்படி அழைப்பது? என்று முறைத்துக் கொள்ளும் கணவனும் இருக்கத்தான் செய்கிறான். வீட்டிற்கு செல்வதற்கே இஷ்டம் இல்லை. அவள் முகத்தைய நன் பார்பது?என்று சொல்லி வெளியில் திரியும் கணவனும் உண்டு. கணவனின் அன்புக்கு ஏங்கி பண்புக் கெட்ட மனிதர்களிடம் வீழும் மனைவிகளும் உண்டு. வீண் மன அழுத்தத்தால் மன அமைதியை இழப்பதால் மன உறவும் கூட கசக்கத்தன் செய்கிறது.மனம் திறந்து பேசுங்கள் உங்கள் உறவுகளிடம். மதிப்பளித்து பேசுங்கள் உங்கள் மனைவிடம். ஏன் என்றால் உங்களில் பாதி அவள். தன்னில் பாதி அவள். தம்பதி. தம்பத்திய வாழ்க்கையும் தனிமனித அமைதியும் இல்லறத்தின் நல்லற திறவுக்கோள்கள்.

காலம் காலமாக நமது சமுதாயம் ஒரு வகையான பிற்போக்கு வலைப்பிணனாலுக்குல் உட்பட்டு அடிமைதனமான சிந்ததனைகளை பூட்டி வார்த்தெடுக்கப்பட்டன. அடுப்பூதும் பெண்களூக்கு படிப்பெதற்கு என்று கேள்வி எழுந்தன? பெண்ணினம் தன்மான உணர்வுடன் வீறுக் கொண்டு எழுவற்கு பாரதியார்.பாரதிதாசன் பெரியார் வீவேகானந்தர் வள்ளலார். பரஜோதி மாஹன். தத்துவ ஞானி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி போன்ற அறிஞர் பெருமக்களின் போராட்டங்கள். சமுதாய நீரோட்டத்தை மாற்றி அமைத்தன. காலவோட்டத்தில் படிப்பறிவும் நல்ல வேலையும் பெற்ற பெண்ணினம் நானும் வேலை செய்கிறேன் நீயும் வேலை செய்கிறாய் நமக்கும் என்ன பாகுபாடு என்ற தன்முனைப்பு நிலைக்கு தள்ளப்பட்டனர். வீட்டிற்கு தேவையான இயந்திரம் வாங்க வேண்டும் நான் 500 போடுகிறேன் நீ ஒரு 500 போடு என்று வாழ்க்கை பங்குதாரர்கள். இன்று வியபார பங்குதாராகிவிட்டனர். எங்கும் கணக்கு வழக்குகள். உண்னதமான வாழ்க்கை இன்று உப்பு சப்பற்ற உதவாத பண்டமாற்று வியபாரமாகிவிட்டது. ஏன் இந்த நிலை? வாழ்க்கை வியபார நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. தனி மனித அமைதி இங்கு குடை சாய்ந்துவிட்டது. நாம் தவறுகள் செய்கிறோம், செய்த தவறுகளே துன்பங்களாக முளைக்கின்றன. வாழும் வாழ்க்கை முறை முரண்பாடாக அமையும் பொழுது வாழ்க்கையே துன்ப படலமாக மாறிவிடுகிறது. அதுவே பண்பு சார்ந்த மனவளத்தை ஆய்ந்துணர்ந்து வாழ்க்கையில் இனைத்துவிட்டால் இல்லற துன்பம் ஏது?

இல்லற கல்வி என்பது மனித நலத்தையும் அவனின் வளத்தையும் நல்ல நிலையில் நிறுவாகிக்கும் ஒரு அற நிலையம் ஆகும்.. மன வளம் என்பது அவனுள் வற்றாத ஜீவநதியாய் இயங்கும் ஜீவ காந்தமும் ஆன்மீக அன்பும் மன அமைதியும் தனி மனித வாழ்வின் சிறந்த வழிக்காட்டல் என்றால் மிகைப்படதக்க ஒன்று அல்ல. தனி மனித அமைதி குடும்ப அமைதிக்கும் உலக அமைதிக்கும் பெரும்பங்கு ஆற்றும். தனி மனிதனின் மன அமைதி சிக்கலான குடும்ப உறவுகளை பண்பு நிறைந்த பாதைக்கு வழி நடத்தும். மன வளத்தைக் கற்றால் மாண்புற வாழலாம். அன்பான பண்பான சீரிய தமிழ் நெறி வாழ்வும் அமையும். குடும்பத்தில் அமைதியும் ஓங்கும்.

குறிப்பு. 1.:மனவள கலை பேராசிரியர் சேர்மன் செல்வராஜ் அவர்களின் உலக அமைதி என்னும் தலைப்பில் பேசிய கருத்துக்களை மீள்பார்வை கொண்டு வரையப்பட்ட கருத்தாக்கம்.
2. மனவளக்கலை- தத்துவ வேதாத்திரி மகரிஷி-தொகுப்பு ஒன்றூ

September 9, 2010

காதல்

ஒரு
மாலைப் பொழுதினிலே
அந்த அரண்மணை தோட்டத்தில்
தென்றலாய் வந்து நீ

என்
சுவாசக் காற்றாய்
என் இதயத்தில்
குடிப்புகுந்து
காற்றோடு காதலை
கரைந்தோடு நாதமாய்
என்
ஜீவனை
விழுங்கியது ஏன்?

என் இதயம்
என்ன
உனது பள்ளியறையா?
நீ பாசறையாய்
தங்கிச் செல்வதற்கு?

என் உணர்வுகள்
பேச முடிந்தால்
உனக்காக
ஒரு சொட்டு கண்ணீர் சிந்தும்.

என் காதல்
கண்ணிரில் நனைந்து
வெண்ணீராய்
உதிர்ந்த பின்
நினைவுகள் மட்டும்
எனக்கு
கல்லறையாக
முளைத்திருப்பது ஏன்?

September 8, 2010

மைவிழி பார்த்த காதலா ......இல்லை மெய்விழிப் பார்த்த காதலா இது?


காதல் என்பது
கடந்து செல்லும் அம்பாக
யார் மனதை தைக்கப் போகிறது?

காதல் என்பது
கடந்து செல்லும் அலையாக
யாரை இழுத்துச் செல்லப் போகிறது?

காதல் என்பது
கடந்து செல்லும் இளவேனிற் காலமாய்
யார் மனதை பூக்கச் செய்யப் போகிறது?

காலமெல்லாம் காதலாய்
கனிந்த பின்
கார்மேகமாய் உள்ளம்
நனைந்த பின்
காதலுக்கு கண்கள்
தெரிவதில்லை
அது
காற்றடித்தாலும்
அசையாத ஆலமரமாய்
வேர் பிடித்து நிற்கும்.

காதல்
உள்ளங்கள் ஒன்றுப்பட்ட பின்
அதற்கு
உருவங்கள் தெரிவதில்லை
கண்களால் பார்ப்பது அல்ல காதல்
கனிந்த அன்பாலே மலர்வதுதான் காதல்

September 7, 2010

குடும்பத்தில் அமைதி


சீர்திருத்தவாதிகள் என்பார்கள், அல்லது சிந்தனைவாதி என்பார்கள், ஆனால் எப்படிப்பட்ட சீர்த்திருத்தவாதி என்ற கேள்வி எழுகிறது? சிந்தனையும் செயலும் சீர்த்திருத்தம் பெற்று இருக்கிறதா? தன்னையும் தன் சார்ந்த எண்ணங்களையும் சீர்த்திருத்தி சிந்தனைகளை கூர்மையாக்கி இந்த சமுதாயத்திற்கு எருவாகும் மனிதன் எங்கே? சீர்த்திருத்தமும் சிந்தனையும் தன்னை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு இயக்க நிலைக்கு மேன்பட்ட அந்த சீர்பெற்ற மனிதன் தன்னை ஒழுங்கு படுத்தவும் தன்சார்ந்த குடும்பத்தையும் ஒழுக்க நெறியில் சரியான பகுப்பு பாதையில் வழி நடத்தும் திறன் பெற்றவனா என்பதை இங்கு கூர்ந்து கவணிக்க தக்கது.

ஊருக்கு உபதேசம் செய்யும் மாந்தர் பெருமக்கள் தன் குடும்பத்தின் அமைதிக்காக என்ன செய்கின்றான்? வாழ்க்கை கலை என்பது ஒரு கருங்கல் போன்றது. கருங்கல்லிலே நமக்கு தெரியாமல் அழகிய சிலை மறைந்திருப்பது போன்று. நமது வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு சிற்பியின் திறமையினால் அழகிய சிலை வடிவம் உயிர்ப்பெறுவது போல் நமது வாழ்க்கையிலும் துன்பத்தை கழித்து இன்பம் என்னும் அழகிய வாழ்வை பெறுவது நமது கடமை அன்றோ?

குடும்ப அமைதிக்கும் குடும்ப உறவுக்கும், பெற்ற மக்கள் செல்வங்களின் மேன்மைக்கும் அவர்களின் ஒழுக்க நெறிக்கும் கணவன் மனைவியின் பங்கு எவ்வளவு முக்கியம்?
பல குடும்ப பிரச்சனைகளில் போராடிக் கொண்டிருக்கும் நமது இந்திய சமுதாயம் இன்று பிரச்சனைகளின் மையமாக உருவேடுத்திருப்பதற்கு காரணம் குடும்பத்தில் அமைதி இன்மையே. பேசித் தீர்க்க வேண்டிய பல விடயங்கள் பூதகரமான பிரச்சனைகளாக மாறிப்போனதற்கு விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாததே. நமது இளையோரிடம் ஒழுக்க நெறியும் சுய மரியாதையும் இல்லாமல் போனதற்கும் குடும்பத்தில் அமைதி இன்மையே.

நேற்றைய மதிய வேளையில் பூச்சோங் otk வட்டாரத்தில் உள்ள ஒரு வங்கிக்கு ( maybank ) ஒரு வேலையாக சென்றேன். பக்கதில் ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்ததை அதிர்ச்சியோடும் திகைப்புடன் நோக்கவேண்டி இருந்தது. ஒரு ஆண் மாணவரரும் ஒரு பெண் மாணவியும் வாடப்போடா வாடிப் போடி என்று சகஜாமாக பேசுவது எனக்குள் என்னமோ செய்தது . சமுதாயம் ஏன் இப்படி தரம் இழந்துக் கொண்டிருக்கிறது.? இதற்கு யார் பொறுப்பு?

பெரும்பாலான குடும்பத்தில் கணவன் மனைவி என்ற இருபாலரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தான்தோன்றித் தனமாக நடப்பதும், கணவனின் தியாகத்தையும் மனைவியின் தன்னலமற்ற சேவையயை போற்றாமல் இருபதே பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.அந்த பிரச்சனைகளின் மைய வடிவமாக குழந்தை வளர்ப்பு என்பது கேள்விக் குறியான ஒன்றாகிவிடுகின்றது. நல்ல கணவன் மனைவியாக வாழ மறுக்கும் தம்பதியினர் குடும்பம் என்னும் பல்கலைகழகத்தை எப்படி வழி நடத்தமுடியும்? இன்றைய பெரும்பான்மையான சமுதாய இன்னலுக்கு பெற்றோரின் கடமை தவறிய வளர்ப்பு முறை என்றால் யாராவது மறுக்கத்தான் முடியுமா? விதை ஒன்று போட்டால் சூரா ஒன்றா முளைக்கும்? தாய் தந்தை அல்லது கணவன் மனைவி வினைச்செயல் பிள்ளைகளின் உதாரணத்திற்குறிய செயலாகத்தான் இருக்கும். இன்றைய வளரும் பிள்ளைகளின் உதாரண புருசர்கள் தாய் தந்தை தான்.

கணவன் மனைவி உறவு என்பது ஒரு அற்புதமான உறவு. தம்பதிகள் இனைந்து ஒன்று சேர முடிவுகள் எடுத்து குடும்பத்தை வழி நடத்தினால் சிறந்ததோரு உதாரண குடும்பங்களை உருவாக்க முடியும். ஒரு கணவனின் தன்னில் பாதிதான் மனைவி. தன்+பாதி என்னும் தமிழ் சொல்லின் விரிவுதான் தம்பதிகளாக உருமாறியதில் வியப்பு ஒன்றும் இல்லை. சிவனின் மறு பாதி சக்தி, சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பது சமயம் சார்ந்த அறிஞர் பெருமக்களின் கருத்து. அதுபோல் குடும்பம் என்றால் கணவன் மனைவிக்கும் சரி பாதி பங்கு உண்டு. சரி சம உரிமை என்பதைவிட சரி சம கடமை என்பது சாலப்பொருந்தும். இல்லறம் என்பது படிக்கும் பாடச்சாலை மட்டும் அல்ல, அது ஒரு இனிய அனுபவம். அந்த அனுபவத்தை நல்ல படிப்பினையாகவும் நல் அறமாக ஒழுக்க சிந்தனையாகவும் மொத்தத்தில் வாழ்க்கை கல்வியாக தன் மக்கட்செல்வங்களுக்கு போதிப்பதில் என்ன தவறு நேர்ந்து விடப்போகிறது?

நமது குழந்தைகள் எதிர்க்காலத்தில் கதறி அழுவதில் இருந்து அவர்களை காப்பாற்றுங்கள். இந்த கொடுரமான உலகில் இருந்து தீமைகளை கற்றுக்கொள்வதில் இருந்து அவர்களை தடுத்து நல்ல பண்பான ஒழுக்க சீலர்களாக தடம் அமைத்துக் கொள்வதற்கு உதவுங்கள் குடும்பத்தில் அமைதி அவசியம். அது போல் உங்கள் உள்ளத்திலும் அமைதி மிக மிக அவசியம்.அப்பொழுதுதான் சமுதாயம் சிறக்கும்,செழிக்கும்.

இன்றைய சிந்தனை
உறவிலே அமைந்துள்ள உண்மையை உணர்ந்திடு, துறவிலே உள உள்ளத் தூய்மை பெற்றுய்யலாம்.- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி.