அகிலம் போற்றும் அன்னையர் தினம், அன்புத் தந்தையர் தினம்,.ஆசிரியர் தினம், நண்பர்கள் தினம், என்று அடுக்கிக் கொண்டு போகலாம். ஏன் முட்டாள்களுக்கு கூட ஒரு தினம் உண்டு. எதன் எதற்கோ நாள் வைத்து முதன்மைப் படுத்தும் நாம் நல்லதொரு குடும்பத்திற்கு ஒளிவிளக்காய் விளங்கும் மனைவியர்களுக்கு ஒரு தினம் வைத்து கொண்டாடியது உண்டா? மனைவிக்காக ஒரு நாள், நல்ல மனை நலத்திற்கான நன் நாள். அதுவே மாந்தர் போற்றும் திரு நாள், .ஐயா ஞான குரு வேதாத்திரி மகாரிஷியின் ஆவாவின் எழுந்த இந்த நன்நாள் மனைவி நல வேட்பு நாள்.
ஒரு தாய்க்கு நல்ல பிள்ளையாக இருக்கும் நாம்.ஒரு தந்தைக்கு நல்ல மகனாக இருக்கும் நாம், ஒரு நல்ல நண்பனுக்கு நல்ல உற்ற தோழனாக இருக்கும் நாம் நமது மனைவிக்கு மட்டும் நல்ல கணவனாக இருக்க மறுப்பது ஏன்? ஒரு பெண்னை அன்னையாக, சகோதரியாக தெய்வமாக பார்த்த நாம். மனைவியை மட்டும் அடிமையாக நினைப்பது ஏன். தன் உடல் பொருள் ஆவியை தன்னை வரிந்து அனைத்த கணவனுக்கு தன்னையே ஈந்து வாழ் நாள் முழுவது உற்ற துனையாக இருக்கும் ஒரு பெண்னினத்தை போற்றாமல் இருக்க முடியுமா?
தாய் பாலுட்டி சீராட்டி நம்மை வளர்கின்றாள். ஒரு மனைவி என்பவள் தனது அன்பால் பண்பாலும் நமது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நம்மோடு இரண்டற கலந்து இறுதி மூச்சு வரைக்கும் வரும் மனைவி என்னும் பெண்னின் பெரும்தகைகளை மறக்காமல் இருக்க நினைவுக்கூறும் நன்நாள்தான் இந்த மனைவிநல வேட்பு நாள்.
மனைவி என்பவள் மகத்துவம் மிக்கவள் என்பதை யாரும் மறுக்க மூடியாது.அந்த மகா சக்திக்கு ஒரு நாள். மனைவியுடன் கணவனையும் சிறப்பு செய்து குடும்ப அமைதிக்கு, “குடு இன்பத்தை” என்று வேண்டி அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
“மனை நலத்தை போற்றுவோம் நல்ல மனைவியை போற்றுவோம்” என்ற தாரக மந்திரத்துடன் நமது வாழ்வை நலம் பயக்கும் இது போன்ற பொன்நாளில் குடும்ப அமைதிக்கான உணர்வுகளை புரிந்துக் கொண்டு சிறப்பான சீரான வாழ்வுக்கு அடித்தளமிடுவோம்.
நண்பர்களே! மலேசிய தலைநகரில் இயங்கும் எங்களின் எளிய முறை குண்டலினி யோக மன்றம் (sky) மனவளத்தை போதிக்கும் ஒரு மன்றம். மக்களின் அறம் பொருள் இன்ப வாழ்வுக்கும் பாடுப்படும் ஒரு இயக்கம் தான். இந்த இயக்கம் பணபலமிக இயக்கம் அல்ல.எங்களால் இயன்ற அளவுக்கு பணத்தை திரட்டி பவுசாக வாழம் இயக்கமும் அல்ல. பணம் காசுக்காக நல்ல கொள்கைகளை விற்கும் கூட்டமும் அல்ல நாங்கள்.மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற ஒரே குறிக்கோள். அன்பையும் சமத்துவத்தையும் குடுப்ப நலத்தையும் அத்தோடு ஆன்மீக விஞ்ஞானத்தை போற்றி சோர்ந்துக் கிடக்கும் மக்கள் மத்தியில் மனவளத்தை பெருக்கி நன்மாந்தராய் வாழ வழிக்காட்டும் ஒரு மாபெரும் இயக்கம் தான் இந்த மனவளக் கலை மன்றம். குறிப்பாக தமிழரின் மதம் சார்ந்த மூடப்பழக்கங்களை, அறியாமைகளை களைந்து தன்மானமுள்ள நல்லொழக்கங்களை போதித்து மனிதன் தெய்வமாக வாழவிட்டாலும் மனிதன் மனிதனாக வாழ நல்வழிக் காட்டும் ஆன்மீகத் தளம் இது.
மதம் போதித்த களங்கங்களை அகற்றி மனித நேயத்தை வளர்த்து. எவர் ஒருவரின் காலிலும் விழாமல் அனைவரையும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகா ஆத்மாக்களாய் உயர்வு பெற போதனைகளை சொல்லி சாதனை செய்யும் நமது இயக்கம். பணம் இருக்கிறதோ இல்லையோ! நல்ல பண்பாளர்களை அன்பானவர்களையும் ஒழுக்கமிக்கவர்களையும் உன்னதமானவர்களையும் உருவாக்க முடியவில்லை என்றால் எப்படி இருக்கும் இந்த சமுதாயம்?
பணமும் வேண்டும் நல்ல பண்பும் அன்பும் வேண்டும்.பணம் மட்டும் வாழ்கையாகிவிடாது. பணம் மனிதனின் நாகரிக வாழ்வுக்கு தேவைப்படுகிறது பணத்தை பெருக்குவது போன்று அன்பையும் பெருக்கவேண்டும் ..அன்பும் பண்பு மனிதனை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும்.
நல்ல மனிதனாக வாழ்வதற்கு நல்ல மனம் வேண்டும். நல்ல மனம் இருந்தால் மட்டும் போதுமா, ஒரு மனிதன் உயர்வு பெருவற்கு? மன வளத்தை பெருக்கி உடல் நலத்தை காத்து ஆன்மநேயத்தை பெருக்கி ஒரு சிறந்த கர்ம யோகியாக, சீர்த்திருத்தவாதியாக சிந்தனைவாதியாக மனிதத்தை போற்றும் மகாமனிதனாக வாழவும் வளரவும் இந்த மன்றம் வழிக்காட்டும் என்பதை இந்த வேளையிலே உறுதிப்பட கூறுகின்றேன். ஆகையால் நண்பர்களே எதிர் வரும் 30.8.2010 த்தில் இரவு மணி 7.00 -லுக்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில் சிறப்பானதொரு நிகழ்வாக மனைவிநல வேட்பு நாள் கொண்டாப்பட உள்ளது. தம்பதிகளுக்கான சிறப்பான இந்த நிகழ்வுக்கு கணவன் மனைவி இருபாலரும் சிரமம் பாரமல் வருகை தருமாறு மன்றத்தின் சார்பாக வேண்டிக்கொள்கின்றேன். தம்பதிகள் இந்த நன்நாளிலே சிறப்பிக்கபடுவார்கள்.
வாழ்க வளமுடன்
