August 22, 2010

சாதித்த தமிழனின் சாதனை வரலாறூ -1

நன்றி. மக்கள் ஓசை-22-08-2010

August 20, 2010

மனைவி நல வேட்பு நாள்- அழைக்கின்றோம் அன்புடன்

Wife Appreciation Day – August 30th

அகிலம் போற்றும் அன்னையர் தினம், அன்புத் தந்தையர் தினம்,.ஆசிரியர் தினம், நண்பர்கள் தினம், என்று அடுக்கிக் கொண்டு போகலாம். ஏன் முட்டாள்களுக்கு கூட ஒரு தினம் உண்டு. எதன் எதற்கோ நாள் வைத்து முதன்மைப் படுத்தும் நாம் நல்லதொரு குடும்பத்திற்கு ஒளிவிளக்காய் விளங்கும் மனைவியர்களுக்கு ஒரு தினம் வைத்து கொண்டாடியது உண்டா? மனைவிக்காக ஒரு நாள், நல்ல மனை நலத்திற்கான நன் நாள். அதுவே மாந்தர் போற்றும் திரு நாள், .ஐயா ஞான குரு வேதாத்திரி மகாரிஷியின் ஆவாவின் எழுந்த இந்த நன்நாள் மனைவி நல வேட்பு நாள்.

ஒரு தாய்க்கு நல்ல பிள்ளையாக இருக்கும் நாம்.ஒரு தந்தைக்கு நல்ல மகனாக இருக்கும் நாம், ஒரு நல்ல நண்பனுக்கு நல்ல உற்ற தோழனாக இருக்கும் நாம் நமது மனைவிக்கு மட்டும் நல்ல கணவனாக இருக்க மறுப்பது ஏன்? ஒரு பெண்னை அன்னையாக, சகோதரியாக தெய்வமாக பார்த்த நாம். மனைவியை மட்டும் அடிமையாக நினைப்பது ஏன். தன் உடல் பொருள் ஆவியை தன்னை வரிந்து அனைத்த கணவனுக்கு தன்னையே ஈந்து வாழ் நாள் முழுவது உற்ற துனையாக இருக்கும் ஒரு பெண்னினத்தை போற்றாமல் இருக்க முடியுமா?
தாய் பாலுட்டி சீராட்டி நம்மை வளர்கின்றாள். ஒரு மனைவி என்பவள் தனது அன்பால் பண்பாலும் நமது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நம்மோடு இரண்டற கலந்து இறுதி மூச்சு வரைக்கும் வரும் மனைவி என்னும் பெண்னின் பெரும்தகைகளை மறக்காமல் இருக்க நினைவுக்கூறும் நன்நாள்தான் இந்த மனைவிநல வேட்பு நாள்.

மனைவி என்பவள் மகத்துவம் மிக்கவள் என்பதை யாரும் மறுக்க மூடியாது.அந்த மகா சக்திக்கு ஒரு நாள். மனைவியுடன் கணவனையும் சிறப்பு செய்து குடும்ப அமைதிக்கு, “குடு இன்பத்தை” என்று வேண்டி அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
“மனை நலத்தை போற்றுவோம் நல்ல மனைவியை போற்றுவோம்” என்ற தாரக மந்திரத்துடன் நமது வாழ்வை நலம் பயக்கும் இது போன்ற பொன்நாளில் குடும்ப அமைதிக்கான உணர்வுகளை புரிந்துக் கொண்டு சிறப்பான சீரான வாழ்வுக்கு அடித்தளமிடுவோம்.

நண்பர்களே! மலேசிய தலைநகரில் இயங்கும் எங்களின் எளிய முறை குண்டலினி யோக மன்றம் (sky) மனவளத்தை போதிக்கும் ஒரு மன்றம். மக்களின் அறம் பொருள் இன்ப வாழ்வுக்கும் பாடுப்படும் ஒரு இயக்கம் தான். இந்த இயக்கம் பணபலமிக இயக்கம் அல்ல.எங்களால் இயன்ற அளவுக்கு பணத்தை திரட்டி பவுசாக வாழம் இயக்கமும் அல்ல. பணம் காசுக்காக நல்ல கொள்கைகளை விற்கும் கூட்டமும் அல்ல நாங்கள்.மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற ஒரே குறிக்கோள். அன்பையும் சமத்துவத்தையும் குடுப்ப நலத்தையும் அத்தோடு ஆன்மீக விஞ்ஞானத்தை போற்றி சோர்ந்துக் கிடக்கும் மக்கள் மத்தியில் மனவளத்தை பெருக்கி நன்மாந்தராய் வாழ வழிக்காட்டும் ஒரு மாபெரும் இயக்கம் தான் இந்த மனவளக் கலை மன்றம். குறிப்பாக தமிழரின் மதம் சார்ந்த மூடப்பழக்கங்களை, அறியாமைகளை களைந்து தன்மானமுள்ள நல்லொழக்கங்களை போதித்து மனிதன் தெய்வமாக வாழவிட்டாலும் மனிதன் மனிதனாக வாழ நல்வழிக் காட்டும் ஆன்மீகத் தளம் இது.

மதம் போதித்த களங்கங்களை அகற்றி மனித நேயத்தை வளர்த்து. எவர் ஒருவரின் காலிலும் விழாமல் அனைவரையும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகா ஆத்மாக்களாய் உயர்வு பெற போதனைகளை சொல்லி சாதனை செய்யும் நமது இயக்கம். பணம் இருக்கிறதோ இல்லையோ! நல்ல பண்பாளர்களை அன்பானவர்களையும் ஒழுக்கமிக்கவர்களையும் உன்னதமானவர்களையும் உருவாக்க முடியவில்லை என்றால் எப்படி இருக்கும் இந்த சமுதாயம்?

பணமும் வேண்டும் நல்ல பண்பும் அன்பும் வேண்டும்.பணம் மட்டும் வாழ்கையாகிவிடாது. பணம் மனிதனின் நாகரிக வாழ்வுக்கு தேவைப்படுகிறது பணத்தை பெருக்குவது போன்று அன்பையும் பெருக்கவேண்டும் ..அன்பும் பண்பு மனிதனை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும்.

நல்ல மனிதனாக வாழ்வதற்கு நல்ல மனம் வேண்டும். நல்ல மனம் இருந்தால் மட்டும் போதுமா, ஒரு மனிதன் உயர்வு பெருவற்கு? மன வளத்தை பெருக்கி உடல் நலத்தை காத்து ஆன்மநேயத்தை பெருக்கி ஒரு சிறந்த கர்ம யோகியாக, சீர்த்திருத்தவாதியாக சிந்தனைவாதியாக மனிதத்தை போற்றும் மகாமனிதனாக வாழவும் வளரவும் இந்த மன்றம் வழிக்காட்டும் என்பதை இந்த வேளையிலே உறுதிப்பட கூறுகின்றேன். ஆகையால் நண்பர்களே எதிர் வரும் 30.8.2010 த்தில் இரவு மணி 7.00 -லுக்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில் சிறப்பானதொரு நிகழ்வாக மனைவிநல வேட்பு நாள் கொண்டாப்பட உள்ளது. தம்பதிகளுக்கான சிறப்பான இந்த நிகழ்வுக்கு கணவன் மனைவி இருபாலரும் சிரமம் பாரமல் வருகை தருமாறு மன்றத்தின் சார்பாக வேண்டிக்கொள்கின்றேன். தம்பதிகள் இந்த நன்நாளிலே சிறப்பிக்கபடுவார்கள்.

வாழ்க வளமுடன்

August 8, 2010

மனக்கதவுகள் நனைகின்றன.
நிஜங்கள் அன்று வெளுத்து கொண்டிருந்தது வானத்தை போல, ஒளியின் சிதறல்கள் பூமி எங்கும் படர்ந்து கிடந்தது. இருளுக்கு பின் மறைந்து கிடக்கும் விழியைப்போல மனதின் ஓரத்தில் ஏதோ மின்னல் கீற்றாய் ஒளிப்பட்டு இதய பூமி எங்கும் குளிர்ந்த காற்றால் என் நாடி நரம்புகள் எங்கும் வியப்பித்து கிடந்தன.

அடைமழை விட்ட பிறகும் என் மனம் அமைதி கொள்ள மறுத்தது. மழைத் தூறலின் சாரலில் இருந்து விடுப்பட முடியாமல் அடம்பிடித்துக்கொண்டிருந்த மனக்கோலங்கள் மெளன ராகமாய் மழைத்துளியில் நனைந்துக் கொண்டிருந்தன.

அடர்ந்த காட்டில் கடந்து போகும் மேகக்கூட்டங்களைப் போல் இருண்ட மனத்திரையில் திரண்டு நிற்கும் சோக கீதங்களாய் மறைந்து நிற்கும் உள்ளக்கதவுகள் என் வீட்டின் வெளியே சுருங்கி நின்றன.

விழியின் ஓரத்தில் வீழ்ந்து கிடந்த கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டு வீதியின் ஓரமாய் பார்வை சென்றது. படர்ந்திருந்த மழை நீர் வெள்ளக்காடாய் தெருவெங்கும் நிறைந்திருந்தன. கடந்து செல்லும் வாகனங்களிலிருந்து எழுப்பி வரும் அலைகள் தடைகளை தாண்டி கடல் அலைகளை நினைவுறுத்தின.எங்கோ மெளனத்தின் விளிம்புகளை மீட்டுவிட்ட குன்றுகளாய் தரைத்தட்டி நின்றன.

சிறகடிக்கும் குருவிகளின் சத்தம் மழையில் நனையும் காக்கைகள். மழை நீரில் நீந்திக் கழித்திடும் வாத்துக் கூட்டங்கள் ,மழையில் நனைய முடியாத வெயில், மழையில் நனைய மறுத்து குடைப்பிடித்தோடும் ஓடும் மனிதர்கள் என்று மனம் சிறகடித்துக்கொண்டு இருந்தது, எனோ தெரியவில்லை .மழையில் நனையும் மனிதர்கள் மட்டும் என் மனதில் நச்சென்று ஒட்டிக் கொண்டார்கள்.

வானம் மழைத்துளியில் இருந்து விடுப்பட்டிருந்தாலும் பூமியெங்கும் பனி துளியால் மூடப்பட்டிருந்தது. மழை பெய்து ஓய்ந்தபின் பேரமைதியை கிழித்துக் கொண்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. மெளனத்தின் பார்வைகள் சலனமற்று சிறு பிள்ளைபோல் வீதியில் உறங்கிக் கொண்டிருந்தன.

சிறு வயதில் ஏற்பட்ட மழைக் கலக்கம் பெரியவனாகி விட்ட பிறகும் அது மனக்கலக்கமாய் மாறி நின்றது. மழைக்காலங்களில் ஓடும் நீரோட்டத்தில் காகிதக் கப்பல்களை விட்ட காட்சிகள் ஓடி வந்து ஒட்டிக் கொள்கின்றன.

“ டேய் மழையிலே நனையதடா காச்சல் வந்திட போதுடா” என்று அம்மா கத்தும் கத்தல் இன்னும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
மழைக் காலங்களில் மழையில் நனைந்து காச்சல் வந்தது போல் நடித்து மறுநாள் பள்ளிக்கு மட்டம் போட நினைத்து மழையோடு ஒட்டிக் கொண்டு அண்ணனிடம் அடி வாங்கிய நினைவுகள் எல்லாம் எள்ளி நகையாடுகின்றன.

“ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......... ஜுரமாவது மன்னாங்கட்டியாவது. போடா ஸ்கூலுக்கு” என்று துரத்தும் அண்ணனும். வந்து வந்து தலையை அனைத்துபடி முகத்தில் கையை வைத்து தொட்டுப் பார்த்து காச்சல் அடிக்குதா கண்ணு என்று தாலாட்டும் தாயின் பாசமும் மழைக்காலத்தில் நிழற்படமாய் விரிந்துக் கொண்டிருந்தன

எங்கோ ஒரு மூளையில் மழையின் சிதறகளிலும் அதன் கதறல்களிலும் விழி பிதிங்கி நிற்கும் பூனைக் குட்டிகளின் ஈனக் குரல்கள் மழையின் நடுக்கத்தை உணர்த்தின.அப்படிதான் அன்றும் என் நண்பன் “சீச்சாக் போய்”(cicak Boy) பூனைக் குட்டியை புலிக்குட்டியாய் நினைத்து கொட்டும் மழையில் ஒதுங்கி நின்ற பூனைக் குட்டியை பிடித்து வந்து மழையிலே நனைத்து அது குளிரில் நடுங்குவதை கண்டு ஆனந்தத்தோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது அவனின் தந்தை முதுகிலே “நச்சுனு” நாலு போட்டு இழுத்துக் கொண்டு போனதை பார்த்து வயிறு குழுங்க சிரித்ததை இன்றும் மறக்க முடியுமா?

அந்தியில் மறையும் சூரியனைப் போல கோலத்தைப் போட்டு புள்ளியாக கலைந்து போனது மழை.. மாலை நேரத்தில் மெல்லிய சாரலாய் சேர்ந்து பொழியும் மழை நீர், எங்கோ சொட்டு சொட்டாய் இலைகளில் ஒழிகிக் கொண்டு இருக்கும் மீதி துன்பங்கள் எல்லாம் மழைத்துளிகளில் இருந்து குளமாய் நிறைந்திருந்த மெளனங்களின் ததும்பல்களாய் வழிந்தோடிக் கொண்டிருந்தன. ஜன்னலில் வழி உள்ளே புகுந்தோடும் குளிர்ந்த காற்று ஏதோ மலை உச்சியில் அவன் வாசம் இருப்பது போல் அவன் உடல் முழுவது மகுடி ஊதிக்கொண்டிருந்தன. என் நண்பர்கள் கூக்குரல் இட்டு மழையில் நனைந்துக் விளையாடிக் கொண்டிருதனர். அடைமழையில் நண்பர்களுடன் உதைப்பந்து விளையாடுவது என்பது ஒரு அலாதியான செயல் என்று எத்தனை மனிதர்கள் உணர்ந்து இருக்கின்றனர்? மழையில் உதைக்கும் பந்து மழை நீரிலே தடைப்பட்டு போக மறுக்கும் போது எழும் சந்தோசம் இருக்கிறதே அப்பப்பா......கோடி பொன் கொடுத்தாலும் தகுமா என்ன?

மழையில் நனையும் ஒவ்வொறு துளியும் என் குறுதியில் கலந்து என் உடலோடு குழைந்து நிற்கும் நினைவுகள் சுமந்த சோகக் கூட்டமாய் மழைக்காற்று என் வாசக்கதவுகளை நேசக் கரங்கொண்டு வாரி அனைத்துக் கொண்டு என் மழழை கால பிம்பங்களின் நினைவுகளை வருடிச் சென்றன.

.“டேய் பார்த்துடா மச்சான் ஆத்து வெள்ளம் வேகமா வருதுடா என்று சொல்லிக் கொண்டு போகும் பொழுதே அடித்துக் கொண்டு போன “காட்டு முனியாண்டி” எங்கோ போனானோ..... நனைந்திருந்த நிமிடங்கள் பாரமாய் நெஞ்சினிலே விம்மி நின்றன. மறு நாள் எதோ ஆற்றோர புதரிலே சொரிகிக் கொண்டு இருந்ததை மீட்டு வந்து போட்டார்கள் பிணமாய்.

துயரத்தின் மெளன மொழியே கண்ணீர் துளிதான் என்பார்கள்.கண்ணீர் முத்துக்கள் மனிதனின் மனத்துளிகளிருந்து வெளி வரும் இதய துடிப்புத்தானே.அதை எப்படி சொல்வது?

எங்கோ ஒரு நிழலில் ஒதுங்கிய அவனின் உயிரற்ற ஜடம் எங்களின் மனங்களிருந்து பதிப்பிக்கப்பட்ட பிம்மங்களாய் வெளியேற மறுக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை மழைக்கால ஆற்று வெள்ளம் எங்களை விட்டு வடிய மறுக்கிறது.எதோ ஒரு சூனியமான பிரதேசத்தில் நின்று அவன் எங்களை ஒய்யாரமாய் அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
எதற்கு இப்போது காட்டு முனியாண்டியின் முகம் நினைவுக்கு வந்தது என்று தெரியவில்லை..ஆனால் நினைவுகளில் இருந்து விழுங்கிக் கொண்டு இருக்கும் வியர்வைகளால் என் முகம் பிசுபிசுத்துக் கொண்டு விகாரமாய் தெரிந்தது. காலக் கண்ணாடியின் முன் என் முகத்தை துடைப்பத்தற்கு கூட என் மனம் வரவில்லை.

கால வெள்ளத்தில் கண்களில் “காட்டு முனியாண்டி”யின் மிரட்சிப் பார்வை மட்டும் அகலாமல் என்னமாய் எங்களை பின் தொடர்கிறது. எதோ ஒரு ஒளி வட்டத்தில் மிதக்கும் ஆன்மாக்களாய் மழைக்காலம் முழுவதும் எங்களை ஆக்கிரமிப்பு செய்கிறது.
மழைக்கால பாம்புக்கு இரையாகும் சத்தமிடும் தவளையை போல மனிதர்கள் கால ஓட்டத்தின் அகோர பசிக்கு நமது எண்ணங்களும் மடிவதற்கு தயாராகி கொண்டிருக்கின்றன.

நம்மைப்போல.......விசித்திரம் நிறைந்த வாழ்க்கைப் பாதை இருள் காற்றிலே உடைந்து கிடக்கும் கதவுக்கு பின்னாலே நனைந்துக் கொண்டிருக்கும் மனத்தூறலிலே மனிதர்களின் எண்ணங்கள் மட்டும் பூமி யெங்கும் பூமாரி பொழிந்துக்கொண்டிருக்கிறது. இது மழைக்கால பதிவாகலாம் இல்லை கார்காலத்தில் தவழ்ந்து வந்த மழைக்காற்றாகக்கூட இருக்கலாம். இடி மின்னலில் கலந்து கறைந்து போன மரணங்களாகக்கூட இருக்கலாம்.

சிதைந்து போன மழைக்கால ஓலங்கள் மட்டும் நமது மனத்திரையில் விட்டு மறைந்து போவதில்லை. அவை மழைக் காலத்தில் மட்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து மறுபடியும் மரித்து போகின்றன.

பூச்சோங் இந்திய சமூக தகவல் கையேடு


நன்றி மலேசிய இந்து சங்கம்
பூசோங் வட்டாரப் பேரவை

August 2, 2010

சமுதாயத்தின் கனவுகள் கானல் நீரா?

உதைக்காம உடமாட்டேன்”, அடி, உதை கலாட்டா” சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மூன்று அரசு சார்பற்ற அமைப்புளுக்கு வழங்கிய மானியங்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்காக கூட்டப்பட்ட சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில்- Malaysiakini

குண்டர் கும்பலின் தலைவர்கள் தான் இன்றைய தமிழ் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள்.எங்கே நமது சமுதாயம் விளங்கப் போகிறது?

அரசியல் பலம் பண பலம் மற்றும் குண்டர் கும்பலின் பலம் என்று வீர நடைபோடும் தமது தமிழ்ப் பள்ளிச் சார்ந்த சமுதாய அமைப்பாளர்கள். நல்ல உள்ளங்கள் சேர்ந்து தமிழ் பள்ளிக்கு ஏதாவது செய்வோம் என்றால் நம் தமிழர்களின் அடாவடித்தணங்களால் எதும் நடப்பதில்லை. அரசியல் தலைவர்கள் குண்டர் கும்பலை வளர்த்து விட்ட நன்மைகளில் இதுவும் ஒன்று.

அரசாங்கம் தரும் மானியங்கள் பெரும் புள்ளிகளிடம் இருந்து வரும் நன்கொடைகளை கபளிகரம் செய்யும் தலைமையாசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்களும். இருக்கும் வரை தமிழ்ப் பள்ளி உருப்படாது. இன்றைய பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனையே யாரை யார் கவுக்கலாம் என்பது தான். இதனால் தான் சில தலைமையாசிரியர் களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. முதல் பிரச்சனையே சிற்றுண்டி சாலையில் இருந்து ஆரம்பிக்கும். தேண்டார் போடமாலே சில தலைமையாசிரியர் 10 ஆயிரம் 20 ஆயிரம் என்று வாங்கிக்கொண்டு சிற்றுண்டி சாலையை ஒப்படைப்பதும் சில பெற்றோர் சங்கத் தலைவர்கள் அவர்களை வெளியேற்ற முயற்சிப்பதும், அடேங்கப்பா தமிழ்ப் பள்ளியிலுமா பண அரசியல் என்று எண்ணத்தோன்றும்.

சில தலைமையாசிரியர் தனக்கு வேண்டப் பட்டவர் என்றால் பெற்றோர் சங்கத்தை மதிக்காமல் வாரியத்த தலைவர் பதவிக்கு தலைமையாசிரியர் பிரதிநிதி என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு தெரியாமல் அனுப்பவதும் அப்பபா இவர்களின் சேட்டைகளை சொல்லி மாளாது. இவை எல்லாம் எதற்கு பணம் பதவிக்கு மட்டும் தான். சமுதாயம் என்பது இவர்களுக்கு கிள்ளுக்கீரை .மானங்கெட்டர்வர்களூம் ஒழுக்கம் கெட்டவர்களும் நிறைந்து வாழும் ஒரு இனத்தில் வேறு எதைதான் எதிர்பார்க்க முடியும்?

ஒழுக்கம் மானம் பண்பாடு என்பது இவர்களுக்கு கொஞ்சம் கூட இருப்பதில்லை. தமிழர் நலனின் அக்கறையை விட இவர்களின் சண்டித்தனங்களுக்குதான் முதல் மரியாதை .சமுதாயம் என்னக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று இருப்பார்கள். படித்தவர் பண்பானவர்கள் திறமைச்சாளிகள் இதனால் தான் நமக்கு ஏன் இந்த வம்பு என்று ஒதுங்கிக் கொள்கின்றார்கள். பின்பு யார் தான் சமுதாயத்தை வழி நடத்துவது?

சில தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ப் பள்ளியில் சேவை செய்யவே லாக்கியற்றவர்கள்.இதிலே சமுதாய சேவை என்பது வெரும் நடிப்புதான். சக ஆசிரியர்களிடமே தன் அதிகரத்தை செலுத்தி திமிராக நடந்துக் கொள்ளும் தலைமையாசிரியர், எங்கே பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் நட்புறவுக் கொண்டு தமிழ்ப் பள்ளியில் சேவைசெய்வது.? திமிரும் ஆணாவமும் சக நண்பர்களையும் மதிக்காமல் பேய் ஆட்டம் போடும் சில தலைமையாசிரியர்களை என்னவென்பது?

அந்தோ பரிதாபம் ! சிலர் புகழுக்காவும் பட்டம் பதவிக்காவும்
சில குள்ள நரிகள் இருக்கும் வரை சமுதாயத்தின் கனவுகள் கானல் நீரா? ஒரு நல்ல விசயம் என்னவென்றால் தமிழ்ப் பற்றோடும் சமுதாயப் பற்றோடும் இன்னும் நல்ல சமுதாய மனம் கொண்ட சிறந்த ஆசிரியர் பெரும்தகைகள் இன்னும் நம் சமுதாயத்தில் இருப்பதால் நாம் ஒரு வகையில் பெருமூச்சு விடலாம். அந்த நல்லவர்களுக்கும் தலைமைப்பொறுப்பும் சமுதாய கடமையும் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

மணிதுளி


மணிதுளி

என்
கண்ணீர்த்துளி கரைந்து போகலாம்...... காலமென்னும் நினைவினிலே
மறைந்துப்போகலாம் ஆனால்
என்
காதல் என்னும் மணிதுளி மறைவதில்லை-

அது விழி போல காத்து
நிற்கும் என் இமை தமிழ் மொழிப்போல
விரிந்து நிற்கும் உயிர்மை
உனக்காக என்றும்
என் கண்கள் கண்ணீர் சிந்துவதில்லை ....ஏன்?

என் கண்கள் கலங்கினால்
எங்கே உன் உருவத்தை சிதைத்து விடுமோ என்ற பயம் தான்