July 30, 2010

விவேகானந்தரின் பொன்மொழி

July 22, 2010

சீரிப்பாயட்டும் தமிழ்ச் சிந்தனைச் சிறக்கட்டும்

எங்கும்தமிழ் என்று முழக்கமிடுவோம்
ஏற்றமீகுதாய் மொழி என்று உணர்த்துவோம்
வல்லமைமிக்கதமிழ் மொழி என்று முழங்கி- இவ்
வையகத்தில் ஓங்கி ஒலிக்கச்செய்வோம்

வீரமிகு தமிழர் குலம் என்றோ
வீணர்களுக்கு உணர்திடுவோம்
வேற்றுமைகளை களைந்து - இங்கு
வீருக்கொண்டத் தமிழினமாய் எழுவோம்.

சூரியன் எங்கும் மறைந்துவிடாது
சமுத்திரம் என்றும் மாய்ந்துவிடாது.
தாய்மை அன்பு தாழ்ந்துவிடாது -இங்கு
தமிழ்மொழி என்றும் சாய்ந்து விடாது

தன்மானத் தமிழனை சாவுக்கொள்ளாது
சாகத் தமிழ்யிங்கு நோயினில் வேகாது
சுகந்திர பறவைப்போன்று தமிழினம் - எங்கும்
சீரிப்பாயட்டும் தமிழிச்சிந்தனைச் சிறக்கட்டும்

July 15, 2010

உயிராய் நின்று! உற‌வாடுகின்றேன்.


மனதினில் பூத்த மல்லிகை நீ
மாலையில் ம‌ன‌க்கும் ம‌ல‌ர்மாலை நீ
இர‌வில் ம‌ய‌ங்கும் அல்லி நீ
இத‌ய‌த்தில் ஒளிரும் இன்ப வாழ்வு நீ
வாழும் காலம் முதல் வாழ்க்கை துணை நீ
வாழ்க்கை எல்லாம் உன்னோடுதான்
உயிரோடு க‌ல‌ந்த‌ உற‌வு நீ
உறவாடு! கனிந்த‌ இதயத்தோடு

மவுனத்தின் விழி துணை நீ
மாலை தென்றலின் வழித்துணை நீ
வாச‌லில் கோல‌மிடும் வைகரைக் காற்று நீ
வ‌ச‌னந்த‌க‌ளின் வாச‌ல் நீ
வாழும் கால‌ம் முத‌ல் வாழ்கை துணை நீ
வாழ்க்கை எல்லாம் உன்னோடுதான்
உன்னாலே உயிர் வாழ்கின்றேன்
உயிராய் நின்று! உற‌வாடுகின்றேன்.

வெற்றிக்கான பிரபசஞ்ச விதிகள்

July 8, 2010

கிரிஜா அழுதுக்கொண்டிருக்கின்றாள்வானம் இருண்டு கிடந்தது. விறு விறு என்று வீட்டை நோக்கி நடந்தான்.மழைக்காலம் ஆதலால் எங்கோ மழையில் நனைந்து விடுமோ என்ற பயம். போன மாதம் தான் மழையில் நனைந்து சீக்கில் படுத்து பட்ட அவதி இன்னும் மனதைவிட்டு அகழவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் எங்கே மழையில் நனைந்து விட வேண்டி வரலாம் என்பதால் அவசர அவசரமாக வீட்டை நோக்கி நடையை கட்டினான் கிழவன் சேதுபதி.

அவன் வீடு தெரு முனையில் இருந்து 6 வது சந்து தெருவில் இருந்தது.,வீடு என்னமோ சற்று ஒதுக்கு புறமாக தான் இருந்தது..அவன் வீடு ஒன்றும் மாடி வீடு இல்லை. புறம்போக்கு நிலத்தில் அமைத்துக்கொண்ட ஒரு சுமரான தரைவீடுதான். இவர்களை போன்று பல இந்திய குடுப்பங்கள் ஒரு சில மலாய் குடும்பங்களும் அங்கு வீடுக் கட்டிக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர்.

“கிரிஜா! கிரிஜா!” என்று அழைத்துக்கொண்டு மூடாமல் விட்டிருந்த வீட்டின் முன்புற இரும்பு கேட்டை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் கிழவன் சேதுபதி.பக்கதில் இருந்த குழாய் நீரை திறந்து கைக்கால் கழுவி முகத்தையும் அழும்பி வாயை நீரால் கொப்பளித்து துப்பினான். “ச்சீ என்ன மனுச ஜென்மங்களே .......அவனுங்க” என்று சொல்லிக்கொண்டு வானத்தை பார்த்தான் கிழவன் சேதுபதி. வானத்தை போன்று அவன் மனமும் இருண்டுகிடந்தது.

பெரியவங்ககிட்ட எப்படி பேசனும் கூடா அவனுங்களுக்கு தெரியலா..மரியாத கெட்ட பசங்க ஆளுக்கு மரியாதை இல்லனாலும் பருவயில்லை வயசுக்குகூடாவா மரியாத இல்லாமல் போச்சு என்று சலித்துக் கொண்டான். வரும் வழியில் நம்ப பசங்க செய்த சேட்டையை நினைத்து கொண்டு வர வர நம்ப பசங்களுக்கு ஒழுக்கமுனான என்னனு தெரியம போச்சு,காட்டு கத்து கத்திகிட்டு இருக்கானுங்க.. என்று வாய் விட்டு சொல்லி மறுபடியும்” கிரிஜா கிரிஜா” என்று சற்று குரலை உயர்த்தி கத்தினான்.

வீட்டிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை, தொலைக்காட்சி பெட்டியில் தமிழ் சீரியல் மட்டும் முனங்கிக் கொண்டிருந்தது,. முற்றத்தில் யாரும் இல்லை. என்ன இப்படி வீட்டை திறந்து போட்டுவிட்டு எங்கே போச்சு என்று சலித்துக்கொண்டான். சமையல் கூடத்தில் இருந்து எட்டிப் பார்த்தாள் கிரிஜா.

“ஏன் இப்படி கத்திகிட்டு வரிங்க”
என்று சொல்லி கிழவனிடம் ஒரு தேனீர் கோப்பையை நீட்டினாள்

“தண்ணி கலக்கிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு”

என்று அவனை பார்த்து ஒரு முறை முறைத்தாள்.

அழகு என்று சொல்ல முடியாதுதான். வடித்து எடுத்த வட்டமுகம். கோலி குண்டு போல் பெரிய கண்கள். ஒரு காசு அளவுக்கு நெற்றியில் அகண்ட பொட்டு. வாரி எடுத்த தலை.. நாட்டுக் கட்டை என்று சொல்லக்கூடிய உடல் வாகு. பார்ப்போர் மிக அழகு என்று சொல்ல மாட்டார்கள். ஆனாலும் அற்புதமும் அழகும் கலந்த கலவை என்று சொல்லலாம்.. அந்த ஊரிலே உள்ள ஆண்களின் பார்வை அவள் மேல் படியாமல் விட மாட்டார்கள். அப்படி ஒர் ஈர்ப்பு அவள் மேல். இளமை பூத்து குலுங்கும் 16 வயது பருவ மங்கை அவள்.

கிழவன் சேதுபதியின் பேத்திதான் இந்த கிரிஜா. அவளின் தாய் தந்தை அவள் சிறு வயதாக இருக்கும் போதே இறந்து விட கிழவன் சேதுபதியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள்.ஒரே பேத்தி என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம் அவளுக்கு.

கிழவன் சேதுபதி வசதி படைத்த ஆசாமி இல்லை என்றாலும் ஒரளவுக்கு தனக்கு இருக்கும் ஒட்டுக்கடையில் இருந்து வரும் வருமானத்தில் எதோ அவர்களின் வாழ்க்கை ஒடிக்கொண்டிருகின்றது.“காலகாலத்துலே அவளுக்கு ஒரு கல்யாணம் காட்சி பார்த்துவிட்டு கண்னை மூடிவிடுவேன்”
என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டுயிருப்பான்.

படிப்பு ஒன்றும் அவளுக்கு பிரமாதம் இல்லை. படிக்க சொன்னால் முகத்தை தூக்கிவைத்துகொள்வாள். இந்த காலத்து பிள்ளைகளுக்கு எங்கே படிப்போட அருமை தெரிகிறது? அதுவும் கணக்குப்பாடம் என்றால் ஒரடி தள்ளிதான் நிற்கிறார்கள் கணக்கியல் மொழிப்பிரச்சனையா இல்லை சிந்தனை திறன் குறைவா நம்ப பிள்ளைகளுக்கு, ஒரு காலத்திலே கணக்கு பாடத்திலே நமக்கு நிகர் யார் இருந்த.? வாய்பாடு சரி மனப்பாடமும் சரி தமிழர்களின் அற்புத கோட்பாடு ஆனால் இன்று யாரு வாய்ப்பாடும் மனப்பாடமும் செய்யறா. இன்று எல்லாம் தலைக்கிழா மாறிப்போச்சு. கணக்குப் பாடம் மேல் உள்ள வெறுப்பு பள்ளிக்கூடத்திம் மேல் உள்ள வெறுப்பாய் படிந்து போனது. எனக்கு படிப்பே வேண்டாம் என்று சொல்லி வீட்டிலே உக்கார்ந்து விட்டாள் கிரிஜா. இருந்தாலும் என்ன பெருப்பாலும் நேரங்களில் வாழ்க்கை கல்வியை தமிழ் சீரியலிருந்து கற்றுக் கொள்கிறாள். இவள் மட்டுமா பெருப்பாலும் நம்ப இந்தியா குடுப்பங்களும் அப்படிதானே.

சோகமான நாடகம் என்றால் அன்று பூராவும் துளபாரத்தில் வரும் பழம் பெரும் நடிகை சாரதா போன்று ஒரே சோகமயமாய் காட்சி அளிப்பாள். சில சமயங்களில் விக்கரம் படத்தில் வந்த சொர்ண அக்கா மாதிரி துள்ளிகுதிப்பாள், அவ்வளவு சீரியல் பயித்தியம். ஏனோ தெரியவில்லை சீரியலோடு ஒன்றித்துவிடுவாள், சீரியலின் தாக்கமோ என்னவோ அதன் மேல் ஒரே ஈர்ப்பு. சீரியலை பார்க்கமுடியவில்லை என்றால் இனம் தெரியாத படப்டப்பு பரிதவிப்பும் வந்துவிடும். கோவம் கூட தலைக்கு மேல் எறிவிடும். தனிமையில் இருப்பதனால் என்னவே?

கருமேகங்கள் கூடியிருந்தன. மழைக் கொட்டோ கொட்டுனு கொட்டி தீர்பதற்கு தாயாரகிக் கொண்டிருந்தது. உழிக்காற்று போன்று சில சமயங்களில் பெரும் காற்று ஓவென சத்தமிட்டு நானும் “உள்ளேன் ஐயா” என்று வகுப்பு ஆசிரியரிடம் சொல்வது போன்று இந்த மனித கூட்டத்திடம் சொல்லி விட்டு சென்றுக் கொண்டிருந்தது.

கிழவன் சேதுபதி வெளிமுற்றத்திற்கு வந்து வானத்தை அன்னாந்து பார்த்தான். வானம் மழைநீரை உமிழ்வதற்கு வாய்க்காலை தேடிக்கொண்டிருந்தது..அங்கங்கே சற்று தள்ளி இருந்த பக்கத்து வீடுகள் எல்லாம் விளக்கை எரிய விட்டுக்கொண்டிருந்தது. இரவு மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ அதிவேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கள் அவர்களின் வீட்டின் முன் வந்து நிற்பதற்கும் மழை பெய்வதற்கு சாரியாக இருந்தது.
கிழவன் சேதுபதி அவர்களை பார்த்து கேட்டான் “யார் நீங்கள்”? என்று. வந்தவர்களின் ஒருவன் பார்பதற்கு படித்தவன் போன்று தென்பட்டவன் சொன்னான்;

“நீங்கள் தானே சேதுபதி ,
நாங்கள் கல்யான பத்திரிக்கை கொடுப்பதற்கு வந்திருக்கின்றோம்”
என்றவுடன்
“வாங்க! வாங்க! உள்ள வாங்க!

அகமும் முகமும் மலர வரவேற்றான்." வாங்க! வாங்க! மழை வேற பெய்ய ஆரம்பிரிச்சு வந்து ஒரு கப் தேரீர் குடிச்சிட்டு போகாலமே" என்று உள்ளே அழைந்து சென்று உக்கார வைத்தான் கிழவன் சேதுபதி.

வந்தர்களுக்கு சுடச் சுட தேனீர் பரிமாறினாள் தன் அன்பு ததும்பும் விழிகளில் எதோ தன்னை பெண் பார்க்கும் படலம் போல நானிகோனி நின்றால் கிரிஜா..பெண்களுக்கே உரிய சிறப்பல்லவா.

அண்னலும் நோக்கினால் அவளும் நோக்கினால் என்று கம்பன் சொன்னது போல் யானோக்குங் காலை நில நோக்காக்காற் நானோக்கி மெல்ல நகும் என்று வள்ளுவன் சொல்லி இருகின்றானே, பெண்மை என்பது எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் அவர்களின் பெண்மையின் மென்மை அவர்களை விட்டு போகுமா என்ன? ஆணுக்கும் பெண்ணுக்கும் பால் கவர்ச்சி என்னும் ஈர்ப்பு சக்தி ஒருவரை ஒருவர் பார்பது மயக்கம் தரும் ஒரு இயல்பு நிலைதானே. கிரிஜாவும் அவனை பார்த்தாள்.

வந்தவர்களின் ஒருவன் சட்டென்று கதவை தாளிட்டு முதுகில் இருந்து ஒரு வெட்டு அருவாளை கையில் எடுத்தான். மிண்ணல் ஒளியில் பளிச்சேன மின்னியது வெட்டு அருவா. மழை இடி மின்னலுடன் படு பயங்கரமாக பெய்ய தொடங்கியது.

மறு நாள் காலை அந்த கிராமமே அல்லோலப்பட்டு கிடந்தது. கிழவன் சேதுபதி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தான். கிரிஜா கண்ணீர் மல்கி அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். வீடு எங்கும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. சாமிக்கு போட்டிருத மாலை கசங்கி துர எறியப்பட்டு மூலையில் முடங்கிக்கிடந்தது.

“திருட்டு பசங்க கிழவன் வீட்டுலே புகுந்து கொள்ளை அடிச்சது மட்டும்மில்லா பாவம்,கிழவனையும் கொண்ணுட்டானுங்க படுபாவிங்க ” என்று ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள். கிரிஜாவுக்கு மட்டும் தான் தெரியும், கொள்ளை போனது தன் கற்பும் கூடதான். அவள் கற்பை சூரையாடிவிட்டது கொடுரங்கள் நிறைந்த மனிதன் என்ற போர்வையில் நடமாடும் மிருகங்கள்.

நேற்று பெய்த மழையில் கிரிஜாவின் கண்ணீரும் கற்பும் கரைந்து போயிருந்தது. அவள் கண்கள் மட்டும் ஒளித்தெரியாத இருளில் மறைந்துக்கொண்டிருந்தது.