June 23, 2010

உயிரும் உறவும்....... கலைந்து செல்லும் மேகங்களின் கடந்து செல்லும் பாதைகள்
அந்த வலைந்து நெலிந்து செல்லும்"புருவாஸ்" சாலை. கும்மிருட்டில் சிற்சில மின்மினிப் பூச்சிகள் கண் சிமிட்டி கொண்டிருந்தன. சாலை இருமருங்கிலும் அடர்ந்த காட்டின் ஊடே அங்காங்கே சிற்சில செம்பணை தோட்டங்கள் கண்ணில் பட்டன.அங்கும் இங்கும் சில இடங்களில் மின்விளக்குகள் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிந்தன. அந்த காட்சிகளில் மனம் லாயிக்காமல் சோகமே உருவாக தன் வாகனத்தை செலுத்தி கொண்டிருந்தான் மகேஸ்.

வழிநெடுக சிற்றூர்களையும் சிறு பட்டிணங்களையும் கடந்து கொண்டிருந்தது அவனுடைய வாகனம். அது தமிழர்கள் நிறைந்து வாழும் இடம் என்றாலும் நடு ஜமமாகிவிட்டதால் ஆள் நடமாட்டம் இல்லாத வனந்திர பிரதேசத்தில் தான் மட்டும் தனியாக வாகனத்தை ஓட்டிக் கொண்டிருப்பது போன்ற ஒர் பிரம்மை அவனுள் தோன்றி மறைந்தது. பின் இருக்கையில் திரும்பி பார்த்தான், தன் அன்பு மனைவி மங்கையற்கரசி நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்.பக்கத்தில் தன்மகள் கணிகாம்பிகையும் கண்ணயற்திருந்தாள்.

நிலா உலா போகும் நேரம் அது, மேகக்கூட்டத்தின் ஊடே தன் வெண்நிற மோனியை மறைத்து மறைத்து இரவை பகலாக்கி மேகத் திரளில் தன்னை மறைந்து இரவாக்கும் அந்த வினோத விளையாட்டின் அழகை என்னவென்பது,தன்னொளியின் குளிர்ச்சியும் விண்ணில் தன் பொன்நிறத்தை மண்ணிற்கு வாரி வழங்கும் நட்சத்திர வள்ளல் கூட்டதின் நிசப்தமான அந்த இரவும் ஏதோ புது உலகை பிரமதேவன் திருஷ்டித்தானோ என்றுதான் என்னதோன்றியது மகோஸ்க்கு.

...........ம்ம்ம்ம்ம்ம் விந்தையான உலகம்............., என்று ஒரு பெரு மூச்சு விட்டவாரே தன்னுடைய வாகனத்தை அந்த இருண்ட பாதையின் ஊடே செலுத்தியவாறே தன் எண்ண குமிழ்களும் சேர்ந்தே சிறகடித்து பறந்தன.

நினைவுகள் உருன்டோடின ....... அவனின் இளமை காலம் கண்ணில் தெரிந்தன. மகிழ்சியாய் திரிந்த அந்த விடலைப்பருவம் என்பது எவ்வளவு இனிய நினைவுகளை சுமந்து நிற்கும் பருவம் என்பது மனிதனுக்கு வயதான போதுதான் இளமை காலத்தின் அருமை புரிகிறது, அதன் இனிமையும் தெரிகிறது போலும்,

உறவுகளோடு உறவாடிய காலம். தாய் தந்தை அண்ணன் தம்பி அண்ணி அக்காள் தங்கை சித்தி மாமா அத்தை என்று உறவுகளின் பிம்மங்களின் பாசமும் நேசமும் வைத்து மகிழ்ந்த காலம் உண்டு என்றால் அது சிறு வயதில்தான். கால மாற்றத்தில் உறவுகள் கூட விரிசல் அடைகின்றன. நாம் வளர வளர உறவுகள் வளராமல் பிரிவுகள் தான் வளர்கின்றன. அவசரகதியில் இயங்கும் மாயை உலகில் உறவுகளின் புனிதம் காக்கப்படாமல் மாயமாய் மறைந்து உறவுகள் எப்பொழுதும் அழுகின்றன.அதுவும் நமது மலேசிய இந்திய சமூகத்தில் உறவும் மதிக்கப்படுவதில்லை. நெருங்கிய சொந்தமாக இருக்கும், ஆனால் அவர்கள் யார் என்றுக்கூட தெரிவதில்லை. இது நாகரிகத்தின் வளர்ச்சியா இல்லை அநாகரிகத்தின் சின்னமா என்று தெரியவில்லை.

அது இப்பொழுது ஒரு குக்கிராமமும் சிறுபட்டிணமும் ஒருங்கே சோர்ந்த இடம் முன்பு வெள்ளைக்காரன் காலத்திலே தோட்டபுறமா இருந்த இடம். நாடு சுகந்திரம் அடைந்த பின்பு தோட்ட துண்டாடலின் எச்சம் தான் மகேஸ் வாழும் அந்த குக்கிராமம். இவை எல்லாம் மகேஸ்க்கு தெரிந்திருக்க நியாமில்லைதான்." மொர்டொகவுக்கு" பிறகு ஏழு வருடத்திற்கு பின் பிறந்தவன்தானே .அவன் பிறந்து வளர்ந்த அந்த அழகிய கிராமத்தை சுற்றி ஓங்கி வளர்ந்த ரப்பர் மரங்களும் அங்காங்ககே சில தென்னை மரங்களின் நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாக "லயன் " என்று சொல்லக்கூடிய எஸ்டேட் வீடுகள் இருந்தன அந்த கிராமத்தில்.

நாட்கள் உருன்டோடின, மாதங்கள் கழிந்தன ,வருடங்களும் மறைந்தன.படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் இணைந்து திருமணத்தையும் முடித்து விட்டான். மகேஸின் வாழ்க்கை ஒரு வழியாக ஒடிக்கொண்டிருத்தது.

அந்த சமயத்தில்தான் ஒரு துயர செய்தி அவன் காதினில் வந்து விழுந்தது. தன் அன்பு சகோதரி காலமான செய்திதான் அது தன்தலையில் இடி வந்து விழுந்தது போல் ஒரு கனம் ஒரு அப்படியே உறைந்து போனான். மகேஸின் கண் கலங்கியது, தன் இதயத்தை யாரோ சமட்டியில் ஓங்கி அடித்தது போன்று அவன் உள்ளம் தவித்தது அன்புச்சகோதரி அல்லவா. ஒர் தாயையின் வயிற்றில் பிறந்து வளர்ந்த பாசபிணைப்பில் வாழ்ந்த அந்த அன்பு நெஞ்ஞங்களின் மரணம் யாரைதான் கலங்க செய்யாது

இயற்கையின் விதியை யார்தான் வெல்லமுடியும்? நம்மை பின் தொடரும் நிழல்தானே மரணம். கூடவே வரும் உட்ற நண்பனும் அவன்தானே. மரணத்தை ஏய்த்து விட்டு நாம் மட்டு எங்கே செல்ல முடியும்? இன்று இருப்பார் நாளை இல்லை என்ற விதிளை மாற்றதான் முடியுமா? . விதி வலியது என்று கூறிய நம் சான்றோர்கள் வார்த்தைகள் எவ்வளவு நிதர்ச்சனமான உண்மை என்று இப்பொழுதுதான் புரிந்தது அவனுக்கு.

நாம் பிறக்கும் போது நமக்கு இன்னார்தான் தாய் தந்தையாராக வர வேண்டும் .இன்னார்தான் சகோதர சகோதரியாக வேண்டும்,இன்னார்தான் உற்றார் உறவினர் ஆகவேண்டும் என்று கேட்கதான் முடியுமா? எல்லாம் இறைவன் கொடுத்த வரம். அதை தடுக்க நம்மால் முடியுமா? இருந்தபோதும் உறவுகள் பிணைந்து பொழுது இவள் அன்னை, இவர் தந்தை, இவள் மனைவி இவர்கள் உறவுகள் என்ற அந்த பாசப்பினைப்பினை ஒரு நோடியில் தூக்கி எறியதான் முடியுமா?
நாம் கேட்காமல் கிடைத்த அந்த உறவு திடிர் என்று நம்மை விட்டு பிரியும் போது கலங்காமல் இருக்கமுடியுமா?

துடிக்கும் அந்த உணர்வுகளும் உணர்ச்சிகளும் தான் தூய பந்த பாசம் என்பதா ? என்ற எண்ண சுமையில் இருகி தவிந்த மகேஸ் .ஒரு கனம் தன்னை சுதகாரித்துக் கொண்டு தனது அன்பு மனைவியிடம் "மங்கை மங்கை" என்று கூக்குரலிட்டான். சமயல் கட்டில் இருந்த அவன் மனைவி என்னவோ ஏதோ என்று பதறிய படி

" .....என்னங்க ...." என்று பதறி துடித்து அவன் அருகில் வந்தாள் மங்கை. அவளிடம் விசயத்தை எடுத்து சொல்லி, “துணிமணிகளை எடுத்து வை. இன்னும் சிறிது நேரத்தில் நாம் புறப்படலாம்” என்று உத்தரவிட்டு அவளின் மறுமொழியை கூட எதிர்பார்க்காமல் தன்மேல் அதிகாரியிடம் விசயத்தை சொல்லி விடுமுறைக்கு விண்ணப்பித்தான்.

இரவு மணி ஒன்பதை நெருங்கி கொண்டிருந்தது.ஏற்கனவே இரவு உணவை முடித்து கொண்டதால் அவனும் மனைவி மகள் மூவரும் காரில் ஏறி அமர்ந்து பினாங்கில் இருந்து புறப்பட்டார்கள் சிறிது துரம் பயணத்திற்கு பின் நிசப்த்ததை களைத்து " தெலுக் இன்தானை சேர எப்படியும் வெடியற் காலை இரண்டு மூணு ஆகும் போல இருக்கு " என்றான் மகேஸ். அதை அமோதிப்பது போல மங்கையும் உடனே " ஆமாங்க எதுக்கும் மெதுவ போங்க அவசாரம் வேண்டா...இரவு பயணம் கொஞ்சம் கவணமா போங்க " என்றாள். வாகனம் ஒரே சீராக ஒடிக்கொண்டிருந்தது.தன் சகோதரியை நினைத்தவுடன் துக்கம்மும் வேதனையும் அவனது மனதை பாரமாக்கியது. அந்த நிசப்தமான இரவும் அலுப்பும் ஒரு விதமான சேர்வை தந்தன.துக்கம் கண்னை மறைத்தது. எங்காவது ஒர் இடத்தில் வாகனத்தை நிறுத்தி தேனீர் அருந்த வேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொண்டான்.

மேலே அண்ணாந்து பார்தான், மோக கூட்டத்தில் தன்னை மறைத்து மறைத்து கண்னாமூச்சி விளையாடி கொண்டிருந்தான் சந்திரன். திடிர் என்று வானத்திலிருந்து ஒளிப்பிளம்பு அவன் கண்ணில் புகுந்து ஒரு வித மயக்கத்தை தந்தன. அனது மனம் உணர்ச்சி பிழம்பாய் ததும்பியது.ஏதோ வானுலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்வு. வாண்னோர்களும் தேவர்களும் அவனை வரவேற்க காத்துக் கொனடிருந்தார்கள்,தேவ கன்னிகள் மலர் துவி வரவேற்றுக்கொண்டிருந்தார்கள் தேவ கணங்கள் மோள தாளத்தொடு வரவேற்கும் நேரத்தில் எங்கிருந்தொ முரசு கொட்டும் சத்தமும் ஒலித்து

"அய்யாஅய்யா அங்கே போகதய்யா அவர்கள் வேடதாரிகள் .....அவர்கள் வேடதாரிகள்" என்று தன் தந்தை கூக்குரலிடுவது அவன் காதில் விழுந்தன..பலம் கொண்டு தன்னை யாரோ தட்டி விட்டது போன்று உணர்வு .திடுக்கிட்டு நிமிர்து எதிரே பார்தான்

"அட கடவுளே "

என்று அவன் வாயிலிருந்து வார்தைகள் உதிர்ந்தன . பெரிய பார உந்து ஒன்று பல முறை ஆரனை அடித்து ஒலி எழுப்பி ,வெளிச்சத்தை உமிழ்தவாறு அவன் எதிரே வந்துக்கொண்டிருந்தது.

அப்பொதுதான் புரிந்தது அவன் உறங்கி விட்டான் என்று .அவனுடைய வாகனம் நிலை தடுமாறி சாலையை விட்டு விலகி ஒடியது சிறு குழியில் விழ்ந்து எழுந்து குலுங்கி நின்றது.
"என்னங்க என்னங்க" என்று அலறினாள் அவன் மனைவி மங்கை.தன் பிள்ளையை கணிகாம்பிகையை வாரியனைத்து கொண்டு தன் கணவனை திகிலுடன் பார்த்தாள்

" தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் " என்று அவன் வாய் முனுமுனுத்தது “பெரிய விபத்திலிருந்து மாட்டி கொள்வதிலிருந்து தப்பிதோம், எல்லாம் கடவுள் செயல்” என்று நிம்மதி பெருமுச்சு விட்டான்.

எதோ ஒரு உருவில் தன் தந்தை தன்னை காப்பாற்றி விட்ட பெருமிதம் அவனுக்கு.
பின்யிருக்கையில் பார்த்தான் தன் மனைவி பேய் அறைந்தது போல் அவனை வெறிக்க பார்த்து " ஏங்க ! ஒய்வு எடுத்து செல்லலமே" என்றாள்.மகேஸ் தன் வாகனத்தை மீண்டும் இயக்கி சிறிது தொலைவில் இருந்த “பெட்ரோல்” நிலையத்தில் வண்டியை நிறுத்தி விட்டு,காரின் கண்ணாடியை சிறிது இறக்கி விட்டு உள்பக்கம் தாளிட்டு அப்படியே உறங்கிவிட்டான்.

செங்கதிரொன் தான் சிறகினை விரிந்தபடி மேல் எழும்பிகொண்டிருந்தான் சோம்பல் முறிந்து பறவைகள் கிச்சிடும் சத்தமும்,காக்கைகள் கரையும் சத்தமும் அவ்வப்போது அந்த இடத்தை கடந்து செல்லும் பார உந்துகளின் அதிர்வுகளில் திடுக்கிட்டு எழுந்த மகேஸ், நன்றாக உறங்கி கொண்டிருந்த தன் மனைவி மகளை எழுப்பி பக்கத்தில் இருக்கும் ஒய்வு எடுக்கும் இல்லத்தில் காலைகடன்களை முடித்து குளித்து விட்டு அனைவரும் வாகனத்தில் அமர்ந்து தெலுக் இன்தான் நகருக்கு பயணப்பட்டார்கள்.

அமைதியாய் வந்த தன் மனைவியிடம்
"யார் செய்த புண்ணியமோ" என்று புன்னைகைத்தான்.
அவளும் "ஆமாங்க கடவுள் செய்த புண்ணியங்க நம்ப உசுர காப்பாத்திட்டாரு. மலைப் போல வந்தது பனி போல போயிருச்சிங்க "என்று கூறி தலையாட்டினாள் " எதுக்கும் நீங்க கவனமா போங்க!" என்றாள் சற்று நேரத்தில் புருவாஸ் பட்டணம் மற்றும் “முசியம் புருவாஸ்” என்ற அறிவிப்பு பலகையை கடந்து கொண்டிருந்தது அவனின் வாகனம்.

புருவாஸ் தமிழர்களின் வீரத்தை விவோகத்தை உலகுக்கு பறைசாற்றும் நிலம் அல்லவா. மாவீரன் இராசேந்திர சோழனின் படை எடுப்பில் எதிரிகளின் செறுக்கு அழிந்த நாடுதான், “கங்கை நகரம்” என்று புகழ் பெற்ற அந்த நகரம் தமிழர்களின் தாக்குதலில் அழிந்ததாகவும் வரலாறு கூறுகிறது வீரமும் வீவேகமும் நிறைந்த தமிழர்கள் திறை கடல் மேல் கலங்களை செலுத்தி பரந்த தென்கிழக்காசியாவில் எப்படி தனது கடற்படையில் யானைப்படையை கொண்டு வந்து போர் புரிந்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இந்திய வரலாறினிலே தமிழர்களை தவிர வேறு யாரும் பெரும் படையுடன் கடல் கடந்து வென்ற வரலாறு இல்லை.
சாதித்தவன் தமிழன். தமிழர்கள் மனது வைத்தால் முடியாதது எதுவுமில்லை என்று நினைத்தவுடன் மன பாரம் சிறிது குறைந்து. நிமிர்ந்து உட்கார்ந்தான் மகேஸ்.

சிறிது தூர பயணத்திற்கு பிறகு தெலுக் இன்தான் நகருக்கு வந்து சேர்ந்தார்கள் இன்னும் சிறிது மைல்கல் தூரத்தில்தான் தனது சகோதரியின் இல்லம் இருக்கிறது அது நன்கு பழக்க பட்ட நகரம்தான் ஆனாலும் எவ்வளவு பெரிய மாற்றங்கள் எவ்வளவு முன்னோற்றங்கள் "மாறாது மாற்றங்கள் தான் " என்பது எவ்வளவு உண்மை .வளர்ச்சியில் வலையில் சிக்குன்டு கான்கிரட் காடுகளை போல நகரங்களில் கோட்டைகளை உருவாக்கி கோட்டைகுள் சிறைகளை அமைத்து சொகுசாக வாழக் கற்றுக்கொண்டிருக்கின்றோம் நாம் மட்டும் வாழாமல் மிருகங்களையும் அதற்குள் அடைத்து வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாகரிகம் என்ற மாயையில் நாமே சிக்குண்டு மனித நேயத்தை மறந்தே போனோம்.

"ச்சோ என்ன வாழ்கையடா " சலித்து கொண்டது அவன் மனம்.
ஒருவகையாக தன் சகோதரியின் இறுதி பயணம் தொடங்கும்முன் அவளின் இல்லம் அடைந்தார்கள்.

மரணவீடு அது. கும்பல் கும்பலாக அங்கும் இங்கும் சிலர் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். சில பேர் உணர்ச்சியற்ற ஜடங்கலாய் எங்கே பார்த்து கொண்டிருந்தார்கள். சோகம் எங்கும் குடிக்கொண்டிருந்தது.உள்ளே போன மகேஸ் தன் சகோதரியின் உயிரற்ற உடல் தரையில் கிடக்கப்பட்டிருந்ததை கண்டான் .அவன் கண்கள் கலங்கின, தீபச்சுடர் ஒன்று இருள் காற்றிலே அணைந்து போனது போல் அவன் உள்ளம் கணத்தது.அமைதியான அந்த விநாடியில் தன் சகோதரியின் பிள்ளைகள் "ஓவென " ஒப்பாரி வைக்கும் அழுகுரல் அவன் காதில் ரீங்காரமிட்டது. அவனுக்கு அழுகை தாளமுடிய வில்லை வெளியே வந்தான்.சில தேவார அன்பர்கள் திருவாசகம் ஓதிக்கொண்டிருந்தார்கள் . சற்று தூரத்தில் உள்ள தாமரை குளத்திற்கு சென்று, அங்கு கீழே கிடந்த சிறிய கல்லை எடுத்து விட்டேரிந்தான் குளத்தில். நீர்த்துளிகள் மேல் எழும்பியது அங்கு முகிழ்ந்த நீர் குழிழ்களும் சூரிய ஒளி பட்டு வர்ண ஜாலங்களில் மின்னி மறைந்தது. அக்கனம் யாரே கவிஞன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

" வாழ்கை ஒர் நீர் குமிழ்.”

பல படிமங்களை வடிவங்களையும் எடுத்து மறைந்து போகும் இந்த நீர்க்குமிழ் . " நமது வாழ்க்கையும் அப்படிதான், ஏதோ ஒரு உறவுகளில் முழ்கி உணர்வுகளின் திளைத்து கடைச்சியில் வந்த சுவடுகள் தெரியாமல் மாயமாய் மறைந்து போகும் இந்த உறவும் உயிரும். மகேஸின் வாழ்க்கையிலும் ஒர் உறவு கரைந்துக் கொண்டிருந்தது. அவன் மனமோ கணத்துக்கொண்டிருந்தது சோகத்தில்.
Post a Comment