May 26, 2010

காதலும் காமமும்-வாழ்க்கை நிலை ஒரு பார்வை
காதலுக்கு நான்கு கண் கள்வனுக்கு இரண்டு கண்கள் கண்ணுமில்ல காதுமில்ல காமுகனுக்கு என்று ஒரு கவிஞன் பாடினான்.

வாழ்வியலின் காதலையும் காமத்தையும் எப்படி ஒரு மனிதனின் பார்வையில் வேறுப்பட்டுக் கிடக்கிறது என்னும் ஒரு கருத்தை இனிய தமிழில் அழகுற எடுத்து இயப்பும் பாங்கு மிகவும் அற்புதம். மனித நாகரிகத்தில் அன்பு பாசம் நேசம் காதல் காமம் எவ்வாறு பின்னிப்பினைக்கப்பட்டு இருக்கிறது என்பதை இக் கவிஞனின் வரி நமக்கு உணர்த்துகின்றன.
மனிதப் பண்புக்கூறுகளில் காதலும் காமமும் இல்லா உணர்வுகள் அற்ற மனிதனை நாம் பார்த்தல் அரிது. ஆனால் காதல் உயர்வாகவும் காமம் தாழ்வு நிலையிலிருந்து பார்க்கும் பார்வை மனித குணநலங்களில் ஒரு குறைப்பாடாக நமக்கு படுகின்றது.

அறத்துபால் பொருட்பால் காமத்துபால் என்று வள்ளுவன் வகுத்த குறல் சொல்லும் காதலும் காமமும் எப்படிப்பட்டன? அன்று காமம் தமிழர் வாழ்வியலில் உயர் நிலை பண்பாடு காமயிலில் காதலும் ஒரு அங்கம்.. கோவில் சிற்பங்கள் காமச் சொருபங்களாய் இருந்தன. ஆனால் பார்வை மாறுப்பட்டிருந்தன. அன்று தெய்வீகமான ஒன்று சமுக வாழ்வியலில் கடைநிலை பண்பாடக இன்று மாறியிருகின்றன. இன்றைய காமம் மறுவி பண்பாடு அற்ற ஒரு காரணப்பொருளாய் விளங்கிக்கொள்ளப்படுகிறது. கற்பழிப்புச் செய்யும் ஒரு கயவனை நாம் காமுகன் என்று சொல்கின்றோம். பார்வையால் சில பெண்களை கற்பழிக்கும் கயவர்களும் உண்டு. உள்ளத்தாலும் உடலாலும் பெண்களின் காயப்படுத்து நபர்களை காமுகன் என்று விளிந்து அழைப்பதில் ஒன்றும் தவறில்லை.

காம குணம் கொண்ட மனித பிறவிகள் கண்கள் இருந்தும் மிருகப் பிறவிகள்தான் அவனுக்கு கண்கள் இருந்தும் மூடானாகவும் காது இருந்து செவிடனாகவும் வாழும் மனித உருவில் நாடமாடும் மிருகங்கள் இப்படிப்பட்ட சமுக கொடுமை செய்யும் காமுகன் மனித இனத்தின் இழிவுக்கூறுகள்.இதை கவிதையின் வாயிலாக அற்புத கருத்தை சொல்லும் கவிதை நயம் மிகவும் பிரமாதம்

உணர்சியின் உந்துதலில் பெண்ணை உற்றுப்பார்பது ஒன்றும் தப்பில்லை ஏன் என்றால் ஒர் ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது இரசயான மாற்றத்திற்கு இயல்பாகவே உட்படுத்தப்படுவான் என்பது இயற்கையின் நியதி. எல்லா பெண்களை காமம் வயப்படும் பார்வை கட்டாயம் உணர்சியின் குறைப்பாட.கதான் இருக்கும். பண்பாடு அற்ற செயலாகதான் இருக்கும். ஏன் என்றால் கனிந்த பார்வை அன்பின் வெளிப்பாடாகவும் அதே சமயம் ஒரு மனிதனின் மதிப்புமிக்க பார்வையாகவும் இருக்கலாம்.

வாழ்க்கை என்பது ஒரு கட்டாயம் வாழ்ந்துதான் ஆகவேண்டும் உணர்ச்சி என்பது அவரவர் விருப்பம். வாழுதல் கட்டாயம் என்பதால் மனம் போன போக்கில் வாழ்வது மாலுமி இல்லா கப்பல் போன்றது, உணர்ச்சி என்பது மனித மனதை வழிநடத்தும் திசைக்கருவிப் போன்றது, அதன் போக்கில் விட்டுவிட்டால் கடற்பாறையில் மோதி சிதறுண்டு போகும் கப்பல் போன்றது. காதலும் காமமும் உணர்ச்சின் ஒர் அங்கம் நல் உணர்வுகளை உள்வாங்கவிட்டால் கயமைதனமான காமம் மனித பண்பாடுகளை இருட்டறையாகிவிடும்.

இங்குதான் ஆசை சீரமைத்தல் என்னும் அற்புத கோட்ப்பாட்டை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் வேதாத்திரி மகரிசி. தன்னிடம் உள்ள குறைகளை போக்கிக் கொண்டு, பிறருக்கும் நன்மையே செய்யும் அறவழி வாழ தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட பயிற்சி முறைகளே ஆசை சீரமைத்தல்.

நம்மிடம் உள்ள தீய வினைப் பதிவுகள் காரணமாக ஒவ்வொரு மனிதனிடமும் ஆறு வேண்டாத குணங்கள் உள்ளன. அவை பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் அதாவது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகும்.

பேராசையை – நிறைமனமாகவும்
சினத்தை – சகிப்புத்தன்மையாகவும்
கடும் பற்றினை – ஈகையாகவும்
உயர்வு தாழ்வு மனப்பான்மையை – சமநோக்காகவும்
வஞ்சத்தை – மன்னிப்பு ஆகவும்
முறையற்ற பால் கவர்ச்சியை – கற்பாகவும் மாற்றும் வழிமுறைகளை நமக்கு சொல்லி தருகின்றார் தவறான எண்ண மாற்றங்களை சீர்திருத்துவதற்கு மாந்த ஒழுக்கப்பண்பாடுகளை உயர்வினை நோக்கிய பார்வையாக அவரது சிந்தனை அமைந்துள்ளன.

அவர் கூறும் கருத்துக்களையும் இங்கு கூர்ந்து நோக்கதக்கது.
“இந்த உண்மைகளையறியாத சில மயக்கவாதிகள் கற்பொழுக்கம் என்பது கேலிக்கூத்து எனப்பேசி, பாலுணர்ச்சியைத் தூண்டி பொதுமக்கள் உள்ளங்களை குறிப்பாக இளைஞர் உள்ளங்களைக் கெடுத்து, கற்பு ஒழுக்கத்தில் தவறி நடக்க வேகமூட்டும் வகையில் கதைகள் பல எழுதுகின்றார்கள். சினிமாப் பாடல்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்கள்.

கலைஞர், அறிஞர், கவிஞர், நாவலர், பண்டிதர், படாதிபதி, பேச்சாளர், எழுத்தாளர் என்ற புனிதமான பெயர்களில் இந்தத் தவறான சமுதாய நல விரோத செயல்களைச் செய்து வருகின்றார்கள். அதன் மூலம் பணம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என்றவைகளைப் பெற்றும் மகிழ்கின்றார்கள். ஆராயும் திறமையும் கல்வியறிவும் இல்லா மக்களிடையே இச்செயல்கள் மறுமலர்ச்சி என்றும் சீர்திருத்தம் என்றும் கூட துணிந்து கூறுகின்றார்கள்.”

கற்பொழுக்கத்தை சிறப்பித்து கூறும் தமிழர் வாழ்வியல் காதல் காமம் களவியல் என்பது எவ்வளவு சீரிய உயரிய தரமிக்க பாண்பாட்டு கூறுகளை கொண்டது என்பதும் தூய வாழ்க்கை நெறிகளில் உய்ந்துணந்தவர்கள் அறிவார்கள். அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டும் என்று ஒரு கவிஞன் முழங்கினான் ஆனால் வள்ளுவர் சொல்லும் வாழ்கை நெறியில் அச்சமும் நாணமும் மனித பண்பு கூறுகளின் வடிவமைப்பதில் எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகின்றன. தவறான காரியங்கள் செய்யும் பொழுது அச்சமும் நாணமும் நம்மை தடுத்து ஒழுக்க நெறிகளிருந்து வழுவாமல் பண்பாடு மிக்க மனிதனாக நம்மை மிளிரச் செய்யும் என்பதே தமிழரின் நாகரிகம்.ஆசை சீரமைத்தல் என்பது இந்த மாந்தர் வாழ்வியலை மேலும் மேலும் சிறப்புறச் செய்யும் வழிமுறையை காட்டுவது குண்டலினியின் மனவள கலை மன்றம்.

காமத்தை கற்பாக மாற்றும் மகா உயர்நிலைப்பண்பு. நல் வாழ்க்கை மதிப்புக்கூறுகளை போதிக்கும் அறநிலை மன்றம் தான் இந்த மனவலைக் கலைமன்றம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Post a Comment