May 18, 2010

தென் கிழக்கு ஆசியாவில் தமிழர்களின் சுவடுகள்.-இறுதிப் பகுதி



ஐம்பெரும் தமிழ்ப் காப்பியங்களில் ஒன்றான மனிமேகலையில் சொல்லப்படும் மணிபல்லவம் பற்றியும் சாவகத்தையும் பற்றியும் குறிப்புக்கள் உண்டு. பாண்டிய கடற்கரையிலிருந்து சாவகம் செல்லும் கப்பல் மணிபல்லவத்தினூடாகவே சென்றது. இலங்கைக்கு கிழக்கேயுள்ள தீவுகளில் “ நக்கசாரணர்” அதாவது ‘ அம்ணமான நாடோடிகள்’ என்ற பெயருடன் மனிதரை தின்னும் மனித இனத்தவர் வாழ்ந்தனர். இந்த நிக்கோபார் இத்தீவுகளுக்கப்பால் சாவகம் என்ற பெருநிலம் கிடந்தது. அதன் தலைநகரம் நாகபுரம். இந்நாட்டின் அரசன் தன்னை இந்திரன் மரபினன் என்று குறித்துக் கொண்டான். இதில் வியப்புக்குரிய செய்தி என்னவென்றல், இச் சாவகத்தில் அன்று தமிழே பேசப்பட்டதாக தெரிகிறது. சாவகம் என்று இங்கு குறிக்கப்பெறுவது பெரும்பாலும் சுமத்ராத் தீவாகவோ, ஜாவாத் தீவாகவோதான் இருக்கவேண்டும்.

சாவகம் அல்லது சாவகத்தீவம் என்பது சுமாத்திரா தீவு ஆகும். சுமாத்திரா அரசன் சாவா தீவையும் அடுத்த சிறு தீவுகளையும் ஒரு சேரன் ஆண்டானென்று தோன்றுகிறது..சுமாத்தராவையும் சாவாவையும் குறிப்பிடும்போது டாலமி பெருஞ்சாவகம்,சிறுஞ்சாவகம் என்று கூறுகிறர்கள்.தற்போது சுமாத்த்ராவைப்பற்றி மிகுதியான செய்திகள் எதுவும் தெரியவரவில்லை.யாதலால், நாகபுரம் எதுவென்று என்னால் அடையாளமறிந்து கூற நடத்திய அதன் கிழ்கரையிலுள்ள மிக முக்கிய துறைமுகம் சீர் இந்திரபுரம் ஆகும். அது ஒர் அரசின் தலைநகரம். ஜே. அண்டர்சனின் அசீன், சுமத்ராக்கரை ( J. Anderson Acheen and coast of Sumatra) பக்கம் 395-396 பார்க்க, புத்த சமயமும் இந்து சமயமும் சமத்ராவுக்கும் சாவாவுக்கும் மிக முற்ப்பட்ட காலத்திலே சென்று பரந்தன என்பது இந்தீவுகளிலுள்ள பண்டைக் கோயில்கள் சிற்பங்களின் எச்சமிச்சங்களால் ஐயத்துக்கிடமில்லா நிலையில் தெளிவுப்படுகின்றன. மணிமேகளை xxiv.

ராட்சசர்கள் பிரதம தலைவர் இராவணன் இறந்தபின் இவருடைய சகோதரி சூரத்தங்கி,சூரத்தங்கி மகன் நீலமோகன் “லங்கையில்” உள்ள இராவணன் அரண்மனையிலிருந்து பூலோவ் லாடாவிற்கு வந்து சேர்ந்தார்கள். பூலாவ் லாடா லங்காவி தீவின் தலை நகரம். இதை இந்தியாவில் “ பொட்டக தீபம்” என்பார்கள்.ராஜாமூனோ 2950 அடி உயரமுள்ள குனோங் ராயாவில் வாழ்ந்தார். “பூலோவ் லாடா” என்ற இடத்தை ‘லங்காவி’. என அழைத்தார் இராவணன். அகத்தியரும் இராவணனும் உறவினர்கள். புலத்திய ரிஷியின் மகளை மணந்தவர் அகத்தியர் புலத்தியரின் மகன் வழிப்பிறந்தவன் இராவணன்.

ராட்சசர்கள் உயர்ந்த மலைகளிலும் குன்றுகளிலும் வாழ்ந்தவர்கள்.இவர்கள் உயரமாய் தடித்த்வர்களாகவும் இருப்பர்கள் இவர்கள் மந்திரத்தில் நம்பிக்கை உள்ளாவர்கள்.
சிவ பூமியான ஆதி தமிழர்களின் தாயகம் இலங்கை அல்லது லங்கை என்று அழைக்கப்பட்டது.தமிழர் வழி வந்த இயகர்கள் அல்லது ராட்சசர்கள் என்று கூறப்படும் ரக்ஸ்ஸஸ்சரின் ஒரு நிலப்பகுதியாக லங்காவி தீவும் இருந்துள்ளது.அங்கு ‘லங்கா’ இங்கு ‘லங்காவி’.

இராவணன் இராமரின் மனைவி சிதையை டெக்கான் காட்டில் சிறைபிடித்து கருடனை காவலுக்கு வைத்தார். கருடனை இந்துக்கள் விஷ்னுவின் அவதாரம் என்று வணங்குகின்றார்கள். இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போதியா, கெடா, இந்தியா, இலங்கை முதலிய நாடுகளில் வணங்குகின்றனர். லங்காவி தீவுக் காடுகளில் அனோக யோகிகள் காவி உடையனிந்து குடிசைகளில் வாழ்ந்தார்கள். கி.மு. 4ம் நூற்றாண்டில் கெடாவை இந்துக்கள் வனவாசகம் கெடா வரலாறு பக்கம் 5 பார்க்க ( History of Kedah by R.Faqir Muhammad}1959.என அழைத்தார்கள் என இந்துக்களின் வேத புத்தகங்கள்: கூறுகின்றனர். இக்காலத்தில் வாழ்ந்த மக்கள் குகைகளிலும் காடுகளிலும் வாழ்ந்திருந்திருக்கின்றார்கள் என புத்த மத ஏடுகளும் கூறுகின்றனர்.
முற்றும்..

இத் தொடர் முடிந்தது......தமிழனின் வரலாற்று சாதனை தொடரட்டும்

இக்கட்டுரையை பற்றிய சிறு குறிப்புக்கள் உங்களுடன்.......

கட்டுரையின் நோக்கம்

சாதித்த தமிழனின் சாதனை வரலாற்றை எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக எண்ணம் கொண்டேன்..சில அரசியல் காரணங்களுக்காக வரலாற்றை மாற்றி எழுது போக்கு சாமீபக்காலமாய் அதிகரித்து வருகிறது..தமிழர்களின் அடிச்சுவட்டை மாற்றி எழுதவேண்டும் என்று சில வரலாற்றி ஆசிரியர்கள் நினைக்கின்றனர். தென்கிழக்காசியாவிலும் தென் ஆசியாவிலும் தமிழர்களின் சுவடுகளை துடைத்தொழித்து புதிய அத்தியாம் தொடங்க நினைகின்றனர். மலாத்தீவுக்கூட்டங்களின் தமிழர்களின் சரித்திர சுவடுகளை அழித்து ஒழித்து புதிய சரித்திரம் வரைந்திருக்கின்றனர். இலங்கை இந்திய அளும் வர்கத்தினர் தமிழர்களின் பெருமையை ஆரியம் சார்ந்து எழுத முற்படுகின்றனர். அதே போன்று மலேசிய நாட்டிலிலும் சரித்திர சான்றுகளை திருத்தவும் மறுக்கவும் மாற்றவும் முயல்கின்றனர். மலாக்க மன்னன் பரமேஸ்வரன் என்ற இந்து மன்னனின் பெயர் மறைந்து இஸ்காந்த்தர் ஷா என்னும் பெயர் நிலைநிறுத்தப்படுகிறது. இன்னும் சில காலத்தில் பரமேற்வரா யார் என்ற கேள்வி எழும்.ஆகையால் தமிழர் வரலாறு தமிழர்களால் ஆய்வு செய்யவும், தமிழர்கள் ஆளுமை திறன் வெளிக் கொணர வேண்டும் என்ற நோக்கிலே இக்கட்டுரை வடிக்கப்பட்டது.

அங்கங்கே சிதறிக் கிடந்த தமிழர் சமந்தப்பட்ட சிறு சிறுக்குறிப்புக்களை தேடி எடுத்து பெரிய மாற்றத்திற்கு உட்படுத்தாமல் தொகுத்து இருக்கின்றேன்..இதை இன்னும் மெருகூட்டவேண்டும் என்பது என் ஆவா.

மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் வரும் தமிழர்களின் சாதனை வரலாற்றை ஆவனப்படுத்தும் ஒரு சிறிய ஆனால் சீரீய முயற்சி இது.

தமிழனின் சாதனை குறிப்புக்கள்.

1 ஆண்ட பரம்பரை தமிழகம் தென்கோடியில் உள்ளது. ஆனால் வடகோடி இமயத்தை வென்று 10 க்கும் மேற்பட்ட முறை இமயத்தில் கொடியேற்றியவர் தமிழரே. நேபால், நிருபத் வழியே ஒரு பல்லவ அரசன் சீனா மீது படையெடுத்த செய்தி, மறைக்கப்பட்ட பலநூறு தமிழ்ச் சாதனைகளில் ஒன்றாகும். சோழர் கணவாய், சேரர் கணவாய் என்று இன்னும் நேபாளத்தில் உள்ளன.

2. பெரும் கடற்படைவைத்து பெரும் சாம்ராஜயங்களை சாய்த்திருகின்றனர் தமிழர்கள்.

3.கடல் சார்ந்த அறிவும், வான் வெளி அறிவு திறன் மிகுதியாக இருத்தல்

4.பாரத கலைச்சாரத்தை தென்கிழக்காசியா எங்கும் பரவ செய்துள்ளார்கள்

5.தமிழர் கட்டிட கலை தாக்கம் தென்கிழக்காசியவில் எங்கும் பரவி கிடக்கிறது.

6.மொழிச்சார்ந்த எழுத்துறு தமிழ் சார்ந்த ஆதிக்கம் மிகவும் அதிகம் உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.

7.பண்டைய காலத்தில் இருந்து தமிழர் வணிகம் மிகவும் சிறப்பக செயல் பட்டிடிருகின்றது. தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லை. தீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல். உலக நதிகள், மலைகள், கடல்கள், ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான். மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன

8. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது சங்கம் வைத்து தமிழை போதித்த்வனும் தமிழன்..வியபார மொழியாகவும் இருத்திருகின்றது தமிழ்.18 மொழிக் கற்ற தமிழ் வியபாரியும் இருந்திருக்கின்றான் தமிழக்த்தில்.

9.தமிழர்களின் மத அறிவு, குறிப்பாக புத்தமதம் ,சீனர்கள் யாத்திரீகர்களாக வந்து கற்றுக்கொண்டது அதிகம்.அத்துடன் நமது யோகம் வர்மம்.தத்துவம்.தற்க்காப்பு கலை கற்றுக்கொண்டு மிகவும் சிறப்பாக வர்த்தெடுதிருகின்றனர்.நம்மிடம் அறிவு இல்லை என்றால் அவர்கள் தமிழகத்தை தேடி வந்திருக்க மாட்டார்கள். சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான். புத்த சமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான். இன்று உலகெங்கும் இருப்பது தமிழன் பரப்பிய புத்த மகாயானமே (பெருவழி) சீனாவில், சப்பானில், கொரியாவில், இந்தோ சீனநாடுகளில், பர்மாவில், இருப்பன மகாயானமே. புத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்) சிறுத்துவிட்டான. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்

10 சில வேற்று நில மன்னர்கள் தமிழ் மண்ணர்களுக்கு கப்பம் கட்டியும் இருகின்றனர்.

11 அக்கால தமிழ் வியபாரிகள் மன்றம் அமைத்து கூட்டுறவு முறையில் செயல் பட்டிருகின்றார்கள்: உலகிற்கு கூட்டுறுவு கழகங்களை அறிமுகப்படுத்தியவன் தமிழன்

12.பழந்தமிழர் குடியேறாத நாடில்லை. தீவில்லை. இட்சிங் என்ற சீனத்துறவி கி.பி. 2 ஆம் நூற்றாண்டினர். இவரது கூற்றுப்படி, சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளா) இருந்தன..

13. உலகெங்கும் புகழ்க்கொடி பரப்பிக்கொண்டிருக்கும் சீன ஜாப்பானியர்கலின் தற்காப்புக்கலை தமிழர்களின் மூலம் என்பது வெகு சிலரே அறிந்துள்ளனர்.

14. சேன்(zen) என்னும் மத சித்தாந்தம். தமிழர்களின் சொத்து என்பது பெருமைப்படுக்கூடிய விடயம்.

15.அக்காலத்தமிழர்கள் வீரத்துடன் தீரத்துடன் கடற்பயனங்களை செய்துயிருகின்றனர். கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே. 1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர்

16.மதி நுட்பத்துடன் வியபார பரிவர்தனைகளை நடத்திருக்கின்றனர்.

17.பன் மொழிக் கற்ற சிறந்த வியபாரிகளாகவும் உருவெடுத்தனர்.18 மொழிக் கற்ற தமிழர்கள் இருந்திருக்கின்றனர்.

18. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி - ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.

19.தமிழன் கண்ட காலச்சித்திரம் கல்வெட்டு..உலகெங்கும் கானப்படும் கல்வெட்டுக்களில் 50 சதவிதற்திற்கு மேற்ப்பட்ட கல்வெட்டு தமிழ்ச் சார்ந்த கல்வெட்டுதான். கல்வெட்டுக்களில் சொல்வெட்டுக்களை பதித்து வரலாற்று நிகழ்வுகளை பதித்தவன் தமிழன். காலப் பதிவேட்டை ஜாலம் இருக்கும் பறைச்சாற்றும் தமிழனின் அற்புத கண்டுபிடிப்பு.

20. .பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.


21 ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப் பொருளுக்கும் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதை. அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன். வாளெடுக்காமலும், வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன். இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமே.

பண்டைய தமிழனின் போர்,அறம், கொடை, மானம், வீரம், பற்றிய குறிப்புக்கள் புறநானுற்றிலே பதிவாகியுள்ளது. தமிழன் ஒரு அற்பமானிடன் அல்ல. அடி முட்டாளும் அல்ல. வீரத்தால் உலகை விலைப்பேசியவன். வீவேகத்தால் உலகை வென்றவன். நமது அறிவையும் திறமையை இந்த உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.சோதனைகளை கடந்து சாதனைப் படைத்தவன் இந்த தமிழன்.

நாம் யார் என்பதை சரித்திரம் சொல்லும். நமக்கும் இந்த நாடு சொந்தம் என்பதை சரித்திர ஆவணங்கள் புலப்படுத்தும். நாம் கொள்ளைக்காரர்கள் அல்ல, வந்தேறிகளும் அல்ல,பிச்சைக்காரர்களும் அல்ல. வீரப்பரப்பரைகள், அரசாண்ட ஆளும்பரப்பரை.கலம் செலுத்தி கரைக்கண்டவர்கள்.உலகெங்கும் வணிகத்தில் வலம் வந்தவர்கள்,தமிழன் உலக வரலாற்றில் பொன் எழுத்தால் பொறிக்கப்படவேண்டியவன்.

சாதித்த தமிழனின் சாதனை வரலாற்றை நீங்கள் படித்து உணருங்கள் .நண்பர்களே இந்த சரித்திர குறிப்புக்களை உங்கள் பிள்ளைகளுக்கு படித்துக் காட்டுங்கள். தமிழ் பேசுவத்தையும் தமிழினம் தலைச்சிறந்த ஒரு இனம் என்பதை அவர்களுக்கு சொல்லி தாருங்கள்..யுதர்களையும் சீனர்களையும் பாருங்கள் தன் பிள்ளைகளுக்கு தன் இனம் உயந்த இனம் என்பதை சிறு வயது முதல் போதிப்பதை பாருங்கள். நம் குழந்தைகளையும் இனமான உள்ள தன்னமிக்கை தன்மானத்தமிழர்களாகவும் சாதனைத் தமிழனகவும் வாழ விடுங்கள். இந்த சரித்திர சுவடுகள் அவர்களைக்கு வழிக்காட்டும்.. நாம் சோர்த்துவிட்ட ஒரு இனம் அன்று, எரிமலையாய் கனந்துக்கொண்டிருக்கும் ஒரு இனம். ஒரு நாள் இந்த உலகம் நம் காலடியில்.

நன்றி நவிதல்
இந்த வேளையில் பல வலைப்பதிவாளர்களின் தமிழர்ச் சார்ந்த சரித்திர குறிப்புக்களை இந்த பதிவுகளில் இனைத்துள்ளேன்.சிறந்த தமிழ் அறிஞர்களின் கருத்துக்களையும் இடம்பெறச் செய்த்துள்ளேன்.குறிப்பாக கடாரத்தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி, கெடா வரலாறு எழுதி வரலாற்று ஆசிரியர் பகீர் முகமாட்,1959. தமிழ்க்குயிலார் அவர்களின் கருத்துக்கள் தமிழர் வரலாற்று அறிஞர் . ந.சி கந்தையாபிள்ளை, திரு கா அப்பாத்துரை எம் ஏ., எல்டி, திரு வி.கனகசபை ,டாக்டர் மா.இராசமாணிக்கனார், தமிழ்வேள் இ.சு.க. குரும்பசிட்டி & இரா கனகரத்தினம், சாத்தூர் சேகரன், கில்பர்ட் சிலெட்டர் இன்னும் பல அறிஞர்களின் கருத்துக்களை முன்V வைத்துள்ளேன்.நான் பேசியதை விட அவர்களை இங்கு பேச விட்டிருக்கின்றேன் என்று சொல்வதுதான் இங்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இவ்வேளையில் குற்றம் குறை இருப்பின் மன்னிப்பை வேண்டி அவர்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்கி விடைப்பெறுகின்றேன்.


தன்முனைப்பை தந்து ஊக்கமுட்டிய அன்பர்களும் நண்பர்களூம்

Tamilvanan said...
பல புதிய தகவல்களை உள்ளடக்கிய பதிவாக இருக்கின்றது. நன்றே தொடருட்டும் இந்தப் பதிவு.
January 16, 2010 2:45 PM
சுப.நற்குணன் said...
நல்ல - பயன்மிக்க தகவல்களைத் தேடித் தொகுத்து அளித்திருக்கிறீர்கள். மிக நல்ல பணி நண்பரே. மனமார்ந்த பாராட்டுகள்.
January 30, 2010 1:31 PM
ஒற்றன் said...
பயனுள்ள வரலாற்றுத் தொடர்! புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து இத்தொடரை சுவாரசியமாகக் கொண்டுச் செல்வதற்கு எனது வாழ்த்துகள்.
February 17, 2010 10:40 AM

சுப.நற்குணன் said...
நல்ல தொடர்.

இன்று நமது வரலாற்றை அன்னியர்கள் கேவலப்படுத்துவதற்கு வரலாறு தெரியாமையும் ஒரு காரணம்.

வருத்தம் என்னவெனில், நமது முன்னோர் வரலாறு நம் மக்களுக்கே குறிப்பாக இளையோருக்கு தெரிவதே இல்லை; தெரிந்துகொள்ள விரும்புவதும் இல்லை.

வரலாறு தெரியாத இனம் பின்தங்கிப் போகும் என்பதற்குத் தமிழர்களைத் தாராளமாக எடுத்துக் காட்டலாம்.

உங்கள் தொடர் நமது வரலாற்றை அறிய பெரிதும் உதவும். தொடர்க!!
February 6, 2010 10:19 AM


தமிழரண் said...
வணக்கம் ஐயா. நல்ல தொடர். நம் தமிழர்களின் வரலாற்றை அறியச் செய்யும் தொடர். வரலாற்றை அறிந்து கொள்வது இற்றைத் தமிழர்க்குத் தன்னம்பிக்கை ஊட்டுவனவாக அமையும். பாராட்டு. நன்றி
February 9, 2010 9:01 AM


. Anonymous said...
வணக்கம் ஐயா.

மிக அருமையான பதிவு ஐயா. இவ்வரலாற்று உண்மைகளைத் தமிழர்கள் கண்டிப்பாக அறிய வேண்டும் என்பது என் உறுதியான எண்ணம். நம் வரலாறுகளை மறந்தால் பின் நாளில் மற்ற இனத்தார் நம்மை எளிமையாக மட்டம் தட்டிவிடுவர். வரலாறுகளை அறிந்துகொள்வது தமிழர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

தொடர்ந்து இது போன்ற செய்திகளையும் எழுதுங்கள்.

நன்றி.

தமிழரண்.

ஒற்றன் said...
பல புதிய தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள்.. நல்லதொரு தொடர்.. தொடருங்கள்..
January 13, 2010 1:29 AM


பாலாஜி said...
காத்திருக்கிறேன் படிப்பதற்கு தொடர்ந்து எழுதவும்
வாழ்த்துக்கள்

இனியன் பாலாஜி
Anonymous said...
Ayya,

Nalla muyarchi thodarungal.....

Anbudan
May 4, 2010 10:40 AM
தேவன் said...
ஐயா தங்களின் பணி அருமை, வணங்கி மகிழ்கிறேன்.

தொடருங்கள்...
ஒற்றன் said...
பல சுவாரசியங்களை இணைத்து நீங்கள் வடிக்கும் கட்டுரையை மேலும் படிப்பதற்கு ஆவல் மேலிடுகிறது. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.. நாளடைவில் இதுவே ஒரு நூல் வடிவம் பெறுவதற்கு எனது வாழ்த்துகள்..
April 19, 2010 5:57 PM
சுப.நற்குணன் said...
தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த இடுகை காலத்தால் வரலாற்று ஆவணமாக விளங்கும்.

பயனான தகவலுக்குப் பாராட்டுகள்.
April 14, 2010 8:36 PM
தங்கவேல் said...
தகவல்கள் ஆச்சிரியமளிக்கின்றன. தொடருங்கள்.
April 7, 2010 11:12 AM
அண்ணாமலை..!! said...
அருமையான கட்டுரை ..
தொடர்க..
March 20, 2010 6:26 PM

வாழ்க வளமுடன்.
அன்புடன்
மனோகரன் கிருட்ணன்

Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.
Diambil daripada "http://ms.wikipedia.org/wiki/Tulisan_Pallava"
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
1. சோழர்கள் - K.A நீலகண்ட சாஸ்திரி - முதல் பாகம்.
2. ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726
3. ↑ சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727
தமிழர் யார்?...ந.சி கந்தையா ............................சென்னை12.4.46
உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு. ந.சி.க.............சென்னை1.12.48
-திருவாசகம்,கீர்த்தி திரு அகவல் வரி.27-28
தமிழக ஆட்சி ..........டாக்டர் மா.இராசமாணிக்கனார் . பாரி நிலையம்
http://www.tamilbooks.info/mediareview.aspx?rid=27&bid=VB0000207 Reference:

(1) R.C. MAJUMDAR- CHAMPA: HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI – REPRINT 1985.

(2) SANGAM LITERATURE – ETTUTHOKAI & PATHUPPATTU

(3) À¡ñÊÂ÷ ¦º§Àθû ÀòÐ – PUBLISHED BY THE TAMIL VARALATRU KAZHAGAM, MADRAS 1967.
http://en.wikipedia.org/wiki/Zen
¿ýÈ¢: Äñ¼ý ºò ºí¸õ ¦ºö¾¢ Á¼ø. http://www.nilacharal.com/tamil/vietnam_158.html
http://www.visvacomplex.com/main.html
http://kadaaramnet.blogspot.com/ அற்புதன்
http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
thamizayam@googlegroups.com
http://vallinam.com.my/jan09/essay.html நாட்டுக் கோட்டைச் செட்டியாரும் மலாக்கா செட்டி சமூகமும் ஏ.தேவராஜன்
தென்செய்திhttp://www.yarl.com/forum3/index.php?showtopic=40429
சீனாவின் தமிழ்க் கல்வெட்டு

அகத்தியர் கடாரத்தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி JayBee http://www.visvacomplex.com/main.html
அகத்தியர். ந.சி கந்தையாபிள்ளை. முதற்பதிப்பு மார்ச்1948 ஆசிரியர் நூற்ப்பதிப்புக்கழகம்.சென்னை
http://noolaham.net/project/48/4725/4725.pdf அலைக்கடலுக்கு அப்பால் தமிழர்கள் தமிழ்வேள் இ.சு.க. குரும்பசிட்டி & இரா கனகரத்தினம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
கடல்வழி வணிகம்: நரசய்யா: பழனியப்பா பிரதர்ஸ்: கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை 14 பக்கம் 382 விலை ரூ. 225.
சிந்தனையாளர் தொல்காப்பியர்-லோ.சுப்பிரமணியன். எம்.எ.
http://valavu.blogspot.com/2007/09/2.html
http://www.naalorunool.com/ithazh/sisae/sis/sis061.htm
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_con... - 63k –
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=189&Itemid=267
http://vivegamm.blogspot.com/2008_02_01_archive.html - 216k
நன்றி: தமிழ்க்குயிலார் ஆக்கம்:- கோவி.மதிவரன் இடுகை வகை மலேசியாவில் தமிழர்கள்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்டு முற்பட்ட தமிழகம் ஆங்கிலமுல நூலாசிரியர் திரு வி.கனகசபை .பி ஏ,பி எல் தமிழாக்கம் திரு கா அப்பாத்துரை எம் ஏ., எல்டி 1962
Post a Comment