May 6, 2010

உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர.......


நம்புங்கள் நம்புங்கள்
நம்மால் முடியும் - தன்னமிக்கை தொடர்

திட்டமிடல் என்பது வெற்றியின் திறவுக்கோல்

தோல்வி என்பது வெற்றியின் மறுமுனை. தோல்வியை கண்டவன் வெற்றியை காண முடியாது என்பது முயலாமையின் வெறும்பேச்சு. வெற்றிக்கண்டர்வர்களுக்கு ஒவ்வோரு தோல்வியும் பகுத்தறிவு பாடங்கள் வாழ்க்கைப்படிப்பினை. தோல்விகளை உற்று ஆராய்ந்த்தால் தோல்வியின் மறுப்பக்கம் வெற்றி என்பது உங்களுக்கு தெரிந்துவிடும். தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் தோல்விக்கான காரணங்களை எடைப்போட்டால் வெற்றிக்கான ரகசியங்களை நீங்கள் உணர்ந்தவராவீர்.

வாழ்க்கையில் வெற்றிகண்ட மேதைகளின் கண்களுக்கு அற்ப விஷ்யங்கள் கண்ணுக்கு படுவதில்லை.அவற்றை கடந்து தொலைவில் உள்ள மகத்தான விஷயங்கள் மட்டும் அவர்கள் கண்டார்கள். மனம் தெளிவாகவும் திடமாகவும் ஒரு பாதையை அவர்கள் தேர்ந்தேடுத்த காரணத்தால்.வெற்றி என்னும் கனியை அவர்களால் பறிக்க முடிந்தது.
திட்டமிட்ட வாழ்க்கைமுறை வெற்றியை துரிதப்படுத்தும். திட்டமிடாத நபர்களின் வாழ்க்கை கடினமான உழைப்பு இருந்தும் வெற்றி தாமதப்படும்.தாமதப்படும் ஒவ்வொறு வெற்றியும் தோல்வியின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கும்.

சாமர்த்தியமாகவும் சிந்தனை திறத்தாலும் ஒருவன் தன் வாழ்வை ஒழுங்குமுறையோடு அமைத்துக் கொள்பவன் இனிமையின் எல்லையை தொடுவான்.
எனோ தானோ என்று பெரும் வாரியான தமிழர்கள் வாழும் முறை அவர்களின் வாழ்க்கை முறையை தரம் தாழ்த்திவிட்டது.தமிழர்களின் ஒரு சில பிரிவினர்களின் திறைமையான திட்டமிடல் இன்று உலகிலே தலைசிறந்த நிர்வாகிகளாகவும் சிறந்த வணிகர்களாக இருப்பதற்கு காரணம்.எதையும் திட்டமிடப் பழகுங்கள்.

வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்த நிலையை அடைய முயற்சி செய்யும் எவர் ஒருவரும் தனக்கென ஒரு தகுதியை திறமையை வளர்த்துக் கொள்பவர் யாரும் வாழ்க்கையில் திட்டமிட்ட ஒர் உயர்வு நிலையினை பெற முடியும் என்பதுதான் திட்டவட்டமான உண்மை.
வாழ்க்கை வெற்றிப்பெருவதற்கு இனமோ மொழி நிறமோ வர்க பேதமோ காரணம் அன்று உழைப்பு உழைப்பு உழைப்பு ,உழைப்போடு திடச்சிந்தனை, முயற்சி, திட்டமிடல் இவைதான் காரணம்.

சரித்திரத்தை பாருங்கள் உங்களை வாழ்க்கையை பின்னோக்க செய்வது நீங்கள் திட்டமிடாமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களை பின்னோக்கி இழுக்கும் வலிய தூக்கு கயிறுதான் என்பதை மறவாதீர்கள்.

திட்டமிடல் என்பது அற்ப விஷயம் இல்லை.அனைத்திற்கும் முலாதாரமே அதுதான்.எதற்கும் திட்டமிடல் தேவை.தனியார் துறையிலிருந்து அரசாங்கம் வரைக்கும் திட்டமிடல் என்று தனியான ஒரு துறையாக வளர்ந்திருக்கும் இன்றைய பொழுது நாம் திட்டமிடாமல் காரியங்களை நகர்த்தமுடியுமா? நிகழ்ச்சி நிரல் என்று ஒவ்வொரு நிகழ்வும் திட்டமிட்டு செயல்ப்பட்டால் ஆகாதது ஒன்றுமில்லை.

திட்டமிட்டு வாழ்க்கையை துவங்குங்கள் ஐயா.சுகமான வாழ்க்கை துலங்கும்

உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர.......

இது ஒரு தன்னம்பிக்கை தொடர்.வெகு நாட்களாக எழத வேண்டும் என்று நினைத்துகொண்டிருத்த ஒரு விடயம். காலமும் நேரமும் நமக்காக காத்திருப்பதில்லை.ஆதலால் நுனிந்து எழுத துவங்கியுள்ளேன்.கட்டுரையாய் எழுதுவதைவிட சிறு சிறு குறிப்புக்களாக கொடுத்து தொடரை வரையவுள்ளேன்.நான் படித்த பார்த்த கேட்டு ஆராய்ந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள உள்ளேன். குறையிருப்பின் மன்னித்து அருளவேண்டும் இச்சிறியோனை.

ஒருவருக்கேனும் எனது கருத்துக்கள் உத்வேகத்தை கொடுத்தால் அகம்மகிழ்வேன். வாழ்க வளமுடன் எனது குருவான வேதாத்திரியை நினைவில் வைத்து இத்தொடரை வரைகின்றேன்


அன்புடன்
மனோகரன் கிருட்ணன்
வாழ்க வளமுடன்
Post a Comment