April 10, 2010

வியபாரக் கருத்தரங்கம்


என் மனம் எப்பொழுது business minded என்பார்களே அது போன்றதுதான்.எப்பொழுது வியபாரச் சிந்தனைதான்.இதை செய்வோமா இல்லை அதை செய்வோமா என்று சிந்தித்து கொண்டிருபதுதான் என் இயல்பு. ஆனால் எதையும் சாதித்தோமா என்றால் அதுவும் இல்லை, நம்பி ஏமாந்த்து தான் அதிகம்.ஏமாளிகள் இருக்கும் வரை ஏய்க்கும் வர்க்கமும் இருந்துக் கொண்டுதானே இருக்கும். பல நூறு ஆயிரம் ஏய்தவர்களின் பங்குகளாக்கிவிட்ட்து. வியபார நூனுக்கம் திறமை இல்லை என்பதைவிட நல்ல மனம் அதிகம் என்பதுதான் பலருடைய விழ்ச்சிக்கு காரணமாகிறது.அந்த வகையில் என்னையும் சேர்த்துக்கொள்ளலாம்.
நண்பன் என்றமுறையில் என்னுடன் வியபார ஆலோசனை கேட்டு அளாவளாவிய நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இதை செய்தால் இப்படி முன்னேறலாம் .அதைச் செய்தால் இன்னும் தொழில் முணைப்பாக இருக்கும் எனறு அலோசனைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிலரில் நானும் ஒருவன்.ஆயிரத்தில் ஒருவன் அன்று.

என் உறவினர் ஒரு முறை ஒரு வார்த்தையை சொன்னார். idea எல்லாம் நல்லாதான் இருக்கு..ஆனால் நடைமுறைப்படுத்தனுமே என்றார் .அவர் அவர்களுக்கு காலம் வரும் போது வானிலே ஜொலிக்கும் நட்ச்த்திரமாய் மின்னதான் செய்வார்கள். நம்ப வடிவேலும் சொல்வது போன்று எல்லாம் ப்பிலன் பன்னி செய்யனும்..ஆம் நமது உழைப்புக்கு தடைப் போடும் மனிதர்கள் இருக்கும் வரை வெற்றிகள் தடைப்படுக்கொண்டுதானே இருக்கும்..
ஆனாலும் ஏய்த்து பிழைக்கும் ஒரு சிலர் மத்தியில் சில லச்சியத்தொடு லச்சங்களை தொடுவது என்பது பாலைவனத்தில் ஒரு சோலைவனத்தை தேடுவது போன்றது, உழைப்பு இருக்கும் இடத்தில் உயர்வு இருப்பதில்லை. பணம் குவிந்து கிடக்கும் இடத்தில் உண்மைகள் இருபதில்லை. நாம உணமையாக வாழ நினக்கும் போது பல தற்சோதனைகள் நம்மை வாட்டி எடுகின்றன.

வியபார சிந்தனை என்பது அறிவை மூலதனம் கொண்டு வெற்றியை ஈட்டுவது மற்றும் அன்று, கடின உடல் உழைப்பு. வற்றாத தன்னம்பிக்கை.,விடாப்பிடியான முயற்சி..சோர்ந்து போகாத மனம். இவை இருந்தால் போதும்.கல்லும் கனியாகும், மன்னும் பொன்னாகும். எங்கிருந்தோ வந்த பாகிஸ்தான்கார்கள் மரச்சாமன் தளவாடப்பொருட்களை விற்க்கும் கடைகலையும், கர்பேட்(carpet) என்று சொல்லப்படும் விரிப்பு துணிகளை விற்கும் மையங்களை மலேசியா எங்கும் திறக்கும் போது.இங்கே வளர்ந்து வாழ்ந்து மறையும் நம் தமிழர்களின் நிலையும் சற்று சீர்த்தூக்கி பார்க்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. பக்கத்து நாட்டு இந்தோனேசியர்கள் கட்டுமானத்துறையில் ஈடுப்பட்டு நல்ல வருமாணத்தை ஈட்டும் போது தமிழர்களாகிய நாம் குரட்டை விட்டு தூங்குவதா? அகதிகளாக வந்த மீன் காய்க்கறி மியன்மார்கரர்கள் சந்தையை ஆளுமைச் செய்யும் போது தமிழர்களாகிய நாம் வெட்டிக் கதைப்பேசி நமக்குள் வெட்டிக் கொண்டு சாவதா?

நம் மலேசிய தமிழர்கள் உடல் உழைப்பை மட்டும் நம்பி தொழிற்ச்சாளைகளில் மட்டும் வேலைச் செய்கின்றனர். தொழிற்கூடங்கள் அல்லது அலுவல் கூடங்களில் வேலை எதிர்ப்பார்கின்றனர்.பிரச்சனை இல்லா வாழ்க்கை வேண்டும் ,எதோ வாழ்க்கையை ஒட்டினால் போதும் என்ற ஒரு சித்தாந்தம்.போராட்டம் என்றால் வேப்பாக கசக்கும் நம் தமிழர்களுக்கு. வயதான காலத்தில் தொழிற்கூட பாதுக்காவளர்களாக இருந்துவிட்டு உலகப்பேரேட்டில் செலவு வைத்து விட்டு செல்கின்றனர். எங்கிருந்து வந்த வேற்று இனமக்கள் இங்கு வந்து வியபாரத்தில் கால்பதிக்கும் போது நம்மால் முடியாத? அவர்களின் பண பலம் எங்கிருந்து வருகிறது, அரசாங்க பார்வை எப்படி இருக்கிறது என்பது வேறு விசயம். அவர்கள் உபயோகிக்கும் வாகனங்கள் நம்மை வியப்புகுள்ளாகின்றன.குறுகிய காலத்தில் அவர்களால் சாதிக்க முடியும் என்றால் நம்மால் முடியதா? இங்கு நாம் சீனர்களை பாராட்டியே ஆகவேண்டும்..பல கட்டுப்பாடான அரசாங்க கொள்கைகளையும் மீறி அவர்களின் வளர்ச்சி உள்ளது.ஒரே காலக்கட்டத்தில் மலேசியாவில் வந்து குடியேறி இரு இனங்கள் ஒன்று மடுவாகவும் மற்றோன்று மலையாகவும் வாழ்வது வியப்பாக இருக்கிறது.சொத்து விகிதசாரத்தில் நாம் ஒரு(1%) சதவிடமாகவும் அவர்கள் 60% சதவிமாக இருப்பது யார்க் குற்றம்? குடித்து கும்மாளம் போடுவது தான் காலம் காலமாக வழி வந்த நமது வளர்ச்சி.? அடிமைத்தனத்தில் சுகம் கண்ட தமிழனுக்கும் வியபாரத்தில் வீருக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனை எங்கிருத்து வரும்?

வளர்ச்சி அடைந்த்த மலேசிய நாட்டில் வாழ்க்கை தரத்தில் பின்தங்கியும் வளர்சியின் பாதையை சரியான முறையில் செப்பனிட முடியாமல் போன காரணம் தான் யாது? சரியான திட்டமிடல் இல்லை என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய காரணமாக இருக்கலாம். தனித்தனியாக இயங்கும் குண இயல்பாக்கூட இருக்கலாம். அல்லது சிறந்த தலைமைதுவ பண்புக்கூறுகளைக் கொண்ட அரசியல் கலப்பு அற்ற தலைவர்களின் கூட்டுறவு கழகங்கள் உருவாகமல் இருக்கலாம்.ஒன்றுப்படாத சமுதாய அமைப்பின் ஓட்டைகள் நமது வியபார சிந்தனைக்கு பெரிய இடிதான்.

மலேசிய சீனர்களின் இன்றைய இமலய வளர்ச்சி அவர்களின் கூடுறவால் வந்தது என்றால் சிலருக்கு வியப்பாக இருக்கும்.சுறுசுறுப்புக்கும் கடின உழைப்புக்கும் பேர்போன சீனர்களின் கூட்டுறவு கழகங்களின் கட்டிடங்களை மலேசியா எங்கும் காணலாம்.அவர்களின் கூட்டுறவு கட்டிடங்களை நாம் கல்யான விருந்துக்கும்,.அரசியல் சொற்பொழிவுக்கும் தான் அனுகுவோம்.ஆனால் அவர்களின் கூட்டுறவு செயற்திறன் நமது கண்ணுக்கு தெரிவதில்லை.200 பேர் சேர்ந்து ஆரம்பித்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனி உலகையே ஆண்டது என்றால் எவ்வளவு பேருக்கு தெரியும்?

தமிழர்களாகிய நாம் பெரிய அளவில் இயங்கவிடினும் 10 பேர்க்கொண்ட சிறுசிறுக்குழுக்களாக இயங்கினால் போதும் வியபாரத்தில் பீடுடைப்போடலாம். முதலிலே சேவைத்துறையிலே கால் பத்தித்கலாம். மோட்டார் வாகன பழுது பார்த்தல், ஏர்கோன் சேவை, உணவுகளை தயாரிக்கும் தொழி என்று தொடங்களாம். பிறகு நமது வியபாரத்தை விரிவு படுத்தலாம்.ஒருவராக இயங்குவதை விட பொருப்புக்களை பகிர்ந்துக்கொண்டு சீரான வணிக தளத்தை உருவாக்கலாம். உலகெங்கும் உள்ள தமிழர்கள் வியபார நிலைகளில் இணையலாம்.நம்மிடம் அறிவு இருக்கிறது.ஆனால்ம் உணர்ச்சி வயப்பட்டு செயல் நிறனை இழந்துவிடுகின்றோம். தமிழர்களிடம் முடிவுகள் எடுப்பது சிரம்மம் எடுத்த முடிவுகளை நடைமுறப்படுத்துவது அதைவிட சிரம்மம்.
நேற்று ஒரு நண்பரைச் சந்தித்தேன் கூடிய சீக்கிரம் தனிமனித வியபார திறன் மேம்பாட்டு கருத்தரங்கை நடத்தப்போவதாகவும் ,தமிழர்களின் மத்தியில் வியபார சிந்தனைகளை விதைக்கப் போவதவும் சொன்னார். வணிகத்தை உருவாக்குவதும் உருவாக்கிய வணிகத்தை எப்படி நிலை நிருத்துவது எப்படி வியபாரத்தை வழி நடத்துவது என்பதை பயற்சியாக தருவதற்கு முயற்ச்சிப்பதாகவும் என்னிடம் கூறினார். உண்மையில் ஒரு அழகான சமுதாய சிந்தனை என்றுதான் கூறவேண்டும்.


என்னைப் பொருத்த வரைக்கும் பதின்ம வயதில் இருந்து வியபாரத்தில் இடுப்படவேண்டும் என்ற ஒரு சிந்தனை எனக்குள் இயல்பாக எழுந்துயிருக்கிறது.பலருடைய தன்ணம்பிக்கை உரைகளை கேட்டுயிருக்கின்றேன்..டாக்டர் காதர் இப்ராகிம், தன்ணம்பிக்கை பாலசுப்பிரமனியம். என்று தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. பலதரப்பட்ட வியபாரத்திலும் ஈடுப்பட்ட அனுபவங்கள் இருக்கிறது. சாதிக்கவேண்டும் என்ற வெறி இன்னும் அடங்கவில்லை ஆனால் வெற்றிக் கனிகள் தான் இன்னும் கைகளுக்கு சிக்கவில்லை. சிக்கவில்லை என்பதைவிட தெரியவில்லை என்பதே பொருத்தமாக இருக்கும்.என்னைப்போன்ற எத்தனையோ தமிழர்களுக்கு வியபார கருத்தரங்கம் ஒரு முக்கியமான ஒன்று.
Post a Comment