March 5, 2010

நித்தியானந்தமும் நித்திய வாழ்வும்
சாமியார் நித்தியானந்ததின் அருட்சேட்டையை நீங்கள் கேள்விப்பட்டிருபீகள்.,படித்திருப்பீர்,படத்தையும் பார்த்திருப்பீர்கள். காமவேட்கையில் கட்டுண்டு நடிகையுடன் சால்லாபத்தில் இடுப்பட்டது அம்பலத்திற்கு வந்துள்ளது. மதம் என்னு பெயரில் கயமையும் காமத்தையும் வளர்க்கும் கயவர்களின் கூட்டத்தில் நித்தியானந்தமும் சேர்ந்து இருப்பதில் ஒன்று வியப்பில்லைதான். காமத்தின் வரலாறு நீண்டு நெடியது. ஆனால் காமம் மதத்தோடு இனையும்பொழுது அது இமலய தவறாகதான் தெரிகிறது நமக்கு.அதுவும் நன்னெறிகளை போதித்துக் கொண்டு காமச்சேட்டைகளை ஈடுப்படும் நபர்களை நாம் எப்படி மண்ணிக்க முடியுமா?

அப்பேர்ப்பட்ட விஸ்வமித்திரரே தடுக்கி விழுந்த இடம் காமத்தின் மடியில் தான்.பல முனிவர்களும் ஞானிகளும் பெண்னியத்தால் வீருக்கொண்டவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும் உண்டு. பெண்னும் பிரம்மச்சாரியமும் விடைக்காண விடையம்தான். பெண்ணால் பிரம்மசாரியம் விழ்ந்ததா இல்லை விழ்த்தப்பட்டதா? என்பதை யார் அறிவார்?

என்னைப் பொருத்தவரைக்கும் ஆண் பெண் உறவில் கூடிக்களித்தல் என்பது ஒரு இயற்கையான விடயம்தான்.ஆனால் கூடிக்களிப்பது யாருடன் என்பது தான் இங்கு கேள்வி. கணவன் மனைவி உறவு என்பது புனிதமான உறவு. அது பண்பாடானது.சட்டப்பூவர்மானது.நாகரிக சமுதாயம் ஏற்றுக் கொண்டது. ஒருவன் ஒருத்தி என்பது தமிழ்ப் பாண்பாடு. தன் மனைவியை தவிர்த்து எற்படும் உறவு கண்டிகத்தக்கது.காட்டுமிராண்டிதனமானது என்பது தமிழ்க்கூறும் நல்லுலகத்தின் கூற்று.

இந்த சமுதாயமும் ஒருவகையில் தவறுகளை செய்துக்கொண்டுதான் இருக்கிறது. மூடத்தனத்திற்கும் இறையுணர்வுக்கும் முடிச்சிப் போட்டு தவறுகள் நடக்கும் போது மதத்தை களங்கப்படுத்தும் ஆன்மீகத்தை அசிங்கப்படுத்துவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.இந்த சமுதாயம் திருத்தினால் ஒழிய இப்படிப்பட்ட கயவர்கள் செயல் ஒயாது. ஒரு ஆன்மீக தலைவர் பிரம்மச்சாரியாய் இருந்தால் போற்றப்படுகிறார். ஆனால் அவன் தவறுகள் செய்யும் போது மதம் துற்றப்படுகிறது.

இக்காரணத்தால் வேதாத்திரி மகாரிசி இல்வாழ்விலிருந்து ஆன்மீகத்தில் ஈடுப்படும் மாறு வேண்டுகிறார். இந்த வாழ்க்கையே திருத்தி செப்பனிட்டு தந்துள்ளார். ஒரு மனிதன் மதக் கொள்கைகளை பின் பற்றுவதனால் அவன் முற்றும் துறந்த முனிவராய் ஆகமாட்டான்.அவன் கருவிலே திரு கொள்ளவேண்டும். அவன் கருவிலே திருவாக வேண்டும் என்றால் அவன் தாய் தந்தை ஆசையை அடக்கவும் ஆன்மாவை நெறிப்படுதவும் இயன்றிக்கவேண்டும்.சுருங்க கூறின் அவர்களின் நாடி நரப்புகள் இறையுணர்வோடு இயங்கியிருக்கவேண்டு.

.இச்சை என்பதியற்கை எழுச்சியே இச்சிப்பதே ருசு இயங்கும் உடலுக்கு

என்கிறார் வேதாத்திரி மகாரிசி. உடலும் உயிரும் இருக்கிறது என்றால் இச்சையும் இருக்கும். ரத்த ஓட்டம் எங்கே ஒடுகிறதோ அங்கே இச்சை இருக்கும் எங்கே ரத்த ஓட்டம் நிற்கிறதோ அங்கு இச்சை இல்லை என்கிறார்.இச்சையையும் ஆசையும் அடக்குவதில் இல்லை வீவேகம் நெறிப்படுத்துவதில் இருக்கிறது.

ஏன்? சாமியார்கள் திருமண பந்தத்தில் ஈடுப்படக்கூடது என்ற சட்டம் எங்கேனும் உண்டா? வாழ்வியலில் சுகம் தேடும் இவ்வகையான சாமியார்களை இந்த சமுதாயம் தான் வளர்க்கிறது.அவர்கள் கெட்டுப்போவதற்கும் ஒருவகையில் உதவிபுரிந்துக்கொண்டுதான் இருக்கிறது. முற்றும் துறந்த முனிவர்களுக்கு பஞ்சனை பள்ளியறை எதற்கு? எல்லாம் சுகம் பெற்றப்பின் பெண் சுகத்தை தேடதோ இந்த மனித ஜடம்?

மனவளக் கலை மன்றத்தில் தவம் செய்யும் போது சுவாஸ்டான சக்கரத்தில் ஒரு நிமிடத்திற்கு மேல் தவம் செய்ய அனுமதிப்பதில்லை ஏன் என்று இப்பொழுது தான் எமக்கு விளங்குகிறது. ஐயா வேதாத்திரி இதை எல்லாம் உணந்துதான் நமக்கு பயற்சிகளை விதிமுறையாய் வகுத்துள்ளார்.

நித்தியானந்தம் பாவியா? இல்லை அப்பாவியா? யாம் அறியோம். ஆனால் பாவிகளையும் அப்பாவிகளையும் உருவாக்குவதே இந்த பகுத்தறிவு அற்ற சமுதாயப் பார்வைதான். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்றார் வள்ளாலார். ஆர்ப்பாட்டத்தையும் அலங்காரத்தையும் விருப்புக்கொள்ளும் இந்த சமுதாயம் உண்மையான போதனைகளையும் நன்மைகளையும் என்று உணர்கின்றதோ அன்றுதான் ஆன்மீக பாதை எழச்சிக்கொள்ளும். தன்மானமிக்க சமுதாயம் உருவாகும்.
Post a Comment