March 31, 2010

எங்கள் தமிழன்

அன்று
காட்டை அழித்து
நாட்டை திருத்தியவன்
ஏழைத்தமிழன்

கோடுப்போட்டு
ரோடு போட்டவன்
எங்கள் தமிழன்

உழைப்புக்கு
உருவம் கொடுத்தவன்
நம் தமிழன்

இன்று
தமிழனைத் தமிழன்
போட்டுத் தள்ளுகிறான்
குண்டர்த் தமிழன்

என்றுமே
தமிழனை தமிழன்
தரம் பிரிப்பான்
தறுதலைத் தமிழன்

தமிழனை தமிழன்
காட்டிக்கொடுப்பான்
எட்டப்பத் தமிழன்

தமிழனை தமிழன்
மதிப்பதில்லை
தன்மானத்தமிழன்.

தாய் தமிழைக்கூட
தரம்குறைவா
பேசுவான்
தரங்கெட்டத்தமிழன்.

ஒன்றாய் இருந்ததில்லை தமிழன்
ஒராயிரம் கட்சி அரசியல்
ஒன்றுப் பட்ட தமிழன்
மாண்டுவிட்டான் ஆயிரமாண்டு முன்.

March 30, 2010

புன்னகைப் பூக்கும் மனம் இருந்தால்

வானத்தில் பறக்கும்
சக்தி வேண்டாம்
மண்ணிலே சீராக நடக்கும்
வேகம் வேண்டும்

அலையை கடக்கும்
ஆற்றல் வேண்டாம்
அமைதியோடு வாழும்
அறிவுவேண்டும்

இருளை மாய்க்கும்
துணைவேண்டாம்
ஒளிக்கொண்ட நெஞ்சத்
திறன் இருந்தால் போதும்.

போரிடப் படைவேண்டாம்
புன்னகைப் பூக்கும்
மனம் இருந்தால் போதும்
ஒரு கோடி வெற்றி
உன்னை வந்துச் சேரும்

தோல்வியைக்கண்டு கலங்கும்
குணம் வேண்டாம்
வெற்றியை மதிப்பிடும்
சுய அறிவு வேண்டும்

வாழ்க்கை என்னும்
கடலைக் கடக்க
கருணை வேண்டாம்
தன்னம்பிக்கை என்னும்
துடுப்பிருந்தால் போதும்.

எதிர்க்காலம்
எதுவாக இருந்தாலும்......
எதிர்ப்பார்ப்புக்கள்
எதுவாக இருந்தாலும்.......

வெற்றுக் கொடிகள்
கூட
வெற்றிப் படிகளாக
மாற்றும்
மனோ பலம்
இருத்தால் போதும்
மலையும் மடுவாகும்
கடலும் துருப்பாகும்
நதியும் வழியாகும்.

மனோவியம்
மனோகரன் கிருட்ணன்

March 26, 2010

தென்கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-12

சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வரும் வணிகர்களும் தங்கிச் செல்கிற இடமாக இருந்தது இன்றைய கம்போடியாவின் கடற்கரை. சீன யாத்ரிகர்கள் எழுதி வைத்த குறிப்புகளில் குறிக்கப்பட்டிருக்கிற நாடுதான் கம்போடியா.

உலகிலேயே மிகப் பிரமாண்டமான அளவில் 200 சதுர கி.மீ.,பரப்பில் அமைந்த அங்கோர்வாட் கோவில் வளாகம் உட்பட, பல அரிய அபூர்வ பொக்கிஷங்கள் புதையுண்ட நாடு இது

காம்போஜம் என்று இந்தியர்களால் அழைக்கப்பட்ட் கம்போடியா தென்கிழக்காசியாவிலேயே ஆக அதிக இந்து தாக்கமுள்ள நாடு. அங்கு வைணமும் சைவமும் கை கோர்த்து தழைத்தன.சிவபெருமானை வணங்கியது போலவே விஷ்ணுவையும் கம்போடிய மன்னர்கள் வழிபட்டனர்.முதல் முன்னேறிய கம்போடிய நாகரிகம் கிமு முதலாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியதாக அறியப்படுகிறது. கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை, இந்திய அரசுகளான புன்னன், சென்லா அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வரசுகளின் வழித்தோன்றல்களே பின்னர் கிமர் பேரரசை நிறுவினர் என்பது ஆய்வாளர் கருத்து. இவ்வரசுகள் சீனாவுடனும், தாய்லாந்துடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தனர். இவ்வரசுகளின் மறைவுக்கு பின் தோன்றிய கிமர் பேரரசு , ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் ஆட்சிசெய்தது.

கிமர் பேரரசின் செல்வச் செழிப்பின் உச்சத்தில், அதன் தலைநகரான அங்கூர் நகரம் உருவானது. அங்கூர் நகரின், அங்கூர் வாட் கோவில் வளாகம் இன்றும் பாதுகாக்கப்பட்டு, கிமர் பேரரசின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது

கம்போடியாவில் கி.பி.1122-ஆம் முதலாம் நூற்றாண்டில் அமைந்த சிவன் கோயில் அங்கோர் வாட்டில் (Angkor wat) இன்றும் இருக்கிறது. உலக நினைவுச் சின்னமாகப் போற்றப்படும் அங்கோர் வாட்டில் இரண்டாவது மன்னன் சூர்ய வர்மன் அந்தக் கோயிலைக் கட்டினான். வைணவத்துடன் இந்த வட்டாரத்தில் சைவ சமயம் கைகோர்த்து வளர்ந்தது என்பது வரலாற்று வல்லுநர்களின் கருத்து. இவ்வட்டாரத்தில் காணப்படும் சிதைந்த நகரங்களும், கோயில்களும் இதர சமயச் சின்னங்களுமே இதற்குச் சான்று. உலகப் பாரம்பரியச் சின்னங்களாக (World Hertiage Monuments) ஐக்கிய நாட்டுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது கம்போடியா என்று அழைக்கப்படும் காம்போஜ அரசு முன்னர் பூனானின் (Funan) (வியட்னாமிய மொழியில் Phù Nam) ஆட்சியில் இருந்தது. காம்போஜ அரசகுலத்தினை நிறுவியோர் கம்பு முனிவர் மரபினர் எனக்கூறுவர். காம்போஜ நாட்டில் சைவமும் வைணவமும் ஓங்கி வளர்ந்தன. பவவர்மன் என்ற அரசர் தன் தம்பி சித்திரசேனர் உதவியால் சுமார் கி.பி.590 இல் பூனான் (Funan) அரசனைப் போரில் முறியடித்தார். பவமன்னர், சித்திரசேனர் ஆகியோரது கல்வெட்டுக்களும், கி.பி ஏழாம் நூற்றாண்டிலுள்ள பல்லவ மன்னர்களது கல்வெட்டுக்களும் பலவகையிலும் ஒத்திருக்கின்றன. பவமன்னர் சிவபக்தர் என்ற காரணத்தினால் நாட்டில் நான்கு சிவாலயங்களைக் கட்டுவித்தது மட்டுமன்றி நாட்டிலுள்ள பல கோயில்களிலும் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்து மதப்பாடல்களைப் பாடும் படியும், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைப் பாராயணம் பண்ணும்படியுமான வழக்கத்தை ஏற்படுத்தினார். அவருக்குப் பின் வந்த அவர் தம்பி மகேந்திர வர்மன் அண்மையில் இருந்த இந்து நாடான சம்பாவோடு (now southern and central Vietnam) நட்புக் கொண்டிருந்தார்.

கி.பி 968 இல் ஐந்தாம் ஜெயவர்மனது ஆட்சிக்காலத்திலுள்ள கல்வெட்டு தஷிணாபதம் அல்லது தக்காணம் சைவசமயத்தின் நடுநிலையாக விளங்கியதைத் தெரிவிக்கின்றது.
கீழைத்தேய நாடுகளில் உள்ள மக்களிடையே தென்னிந்தியப் பழக்கவழக்கங்களும் , கொள்கைகளும் மிகுதியாகப் பரவியிருந்தன. காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களையும், தென்னாட்டில் தோன்றிய சங்கராச்சாரியாரையும் பற்றி அங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிட்டிருக்கின்றன.எனவே இந்த தென் கிழக்காசிய நாடுகளில் குடியேறிய ஆட்சியாளர்களும் சரி, மதத்தலைவர்களும் சரி நமது தாய் நாடு நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டுருந்தனர் என்பது இவற்றின் மூலம் புலனாகின்றது.

நாட்டின் பிற்கால அரசராகிய இரண்டாம் சூர்யவர்மனது ஆட்சியில் (கி.பி 1112- 53)அங்கோர் வாட் என்னும் சிறப்புமிக்க கோயிற்கட்டடப் பணி நடைபெற்றது. தென் இந்திய முறைப்படி கட்டப்பட்ட அவ்வாலயம் திருமால் கோயிலாகும். அதில் மகாபாரதம், இராமாயணம், ஹரிவம்சம் முதலான உருவச்சிலைகள் உள்ளன. அங்கோர் வாட் சிற்பப்பணிகள் போராபுதூர் சிற்பங்களை விட மேலானவை என்பது ஆய்வாளர் கூற்று.

கமீர் வம்சத்தினர், வான சாஸ்திரம் உட்பட சகல கலைகளையும் அறிந்தவர்கள்; அவர்கள் கலை , கலாசார பொக்கிஷங்களை உருவாக் கியதுடன், ஆறுகளை திருப்பிவிட்டது, நீர்த்தேக் கங்களை அமைத்தது, பெரிய பாலங்களை உருவாக்கியது போன்ற கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றியிருப்பதில் இருந்து அவர்களின் மகத்தான திறமை வெளிப்பட்டுள்ளது. இந்து, புத்த அரச பரம்பரையினராக இவர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். காஞ்சியில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.அவர் வம்சத்தை சேர்ந்தவர்கள் எல்லாரும் தங்கள் பெயருடன் வர்மன் என்ற பட்டத்தை வைத்துக்கொண் டுள்ளனர். 12 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இரண்டாவது சூரியவர்மன் தான் அங்கோர் வாட் கோவிலைக் கட்டினார். மொத்தம் 200 சதுர கிலோ மீட்டர் பரப்பில், 54 கோபுரங்களுடன் நடுவில் ஐந்து பெரிய தாமரை வடிவ கோபுரங்களுடன் பெரிய கோவில் வளாகம் அமைக் கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை கட்டி முடிக்க, 30 வருட காலம் ஆனதாக வரலாற்று சான்றுகள் உள்ளன.

வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
சரித்திரம் தொடரும்-12

Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.
Diambil daripada "http://ms.wikipedia.org/wiki/Tulisan_Pallava"
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
1. சோழர்கள் - K.A நீலகண்ட சாஸ்திரி - முதல் பாகம்.
2. ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726
3. ↑ சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727
தமிழர் யார்?...ந.சி கந்தையா ............................சென்னை12.4.46
உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு. ந.சி.க.............சென்னை1.12.48
-திருவாசகம்,கீர்த்தி திரு அகவல் வரி.27-28
தமிழக ஆட்சி ..........டாக்டர் மா.இராசமாணிக்கனார் . பாரி நிலையம்
http://www.tamilbooks.info/mediareview.aspx?rid=27&bid=VB0000207 Reference:

(1) R.C. MAJUMDAR- CHAMPA: HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI – REPRINT 1985.

(2) SANGAM LITERATURE – ETTUTHOKAI & PATHUPPATTU

(3) À¡ñÊÂ÷ ¦º§Àθû ÀòÐ – PUBLISHED BY THE TAMIL VARALATRU KAZHAGAM, MADRAS 1967.
http://en.wikipedia.org/wiki/Zen
¿ýÈ¢: Äñ¼ý ºò ºí¸õ ¦ºö¾¢ Á¼ø. http://www.nilacharal.com/tamil/vietnam_158.html
http://www.visvacomplex.com/main.html
http://kadaaramnet.blogspot.com/ அற்புதன்
http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
thamizayam@googlegroups.com
http://vallinam.com.my/jan09/essay.html நாட்டுக் கோட்டைச் செட்டியாரும் மலாக்கா செட்டி சமூகமும் ஏ.தேவராஜன்
தென்செய்திhttp://www.yarl.com/forum3/index.php?showtopic=40429
சீனாவின் தமிழ்க் கல்வெட்டு

அகத்தியர் கடாரத்தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி JayBee http://www.visvacomplex.com/main.html
அகத்தியர். ந.சி கந்தையாபிள்ளை. முதற்பதிப்பு மார்ச்1948 ஆசிரியர் நூற்ப்பதிப்புக்கழகம்.சென்னை
http://noolaham.net/project/48/4725/4725.pdf அலைக்கடலுக்கு அப்பால் தமிழர்கள் தமிழ்வேள் இ.சு.க. குரும்பசிட்டி & இரா கனகரத்தினம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
கடல்வழி வணிகம்: நரசய்யா: பழனியப்பா பிரதர்ஸ்: கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை 14 பக்கம் 382 விலை ரூ. 225.
சிந்தனையாளர் தொல்காப்பியர்-லோ.சுப்பிரமணியன். எம்.எ.
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_con... - 63k –
http://vivegamm.blogspot.com/2008_02_01_archive.html - 216k
நன்றி: தமிழ்க்குயிலார் ஆக்கம்:- கோவி.மதிவரன் இடுகை வகை மலேசியாவில் தமிழர்கள்
http://thamizhoviya.blogspot.com/2009/06/blog-post_1058.html
http://www.dinamalar.com/Supplementary/Diwali_detail.asp?news_id=21&dt=01-08-10

March 23, 2010

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-11

பல்லவ காஞ்சி மாநகரம் தென் கிழக்காசியவுக்கான ஒரு இந்து புத்த மத பிரச்சார மையமாகவும் அதே வேளை சமிஸ்கிருத மொழியை பயன்ற மாணவர்களை தென் கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பும் கடற்துறையாகவும் விளங்கியுள்ளது. இன்று தென் கிழக்காசியவின் கலைச் கலாச்சாரம் தென் இந்தியா தமிழ் கலைச்சாரத்தின் தாக்கத்தில் எழுந்தவைதான். அடிப்படையில் இந்திய தமிழ் கலைச்சாராம் நாளடைவில் இங்குள்ள சுதேசிகளின் கலாச்சாரமாய் மாறியதின் விளைவாக உண்மையான அந்த தமிழ் காலாச்சாராம் மறுவிய நிலையில் உள்ளது.

தமிழ் நாட்டின் பல்லவ சம்ராஜியத்தின் தாக்கம் தென் கிழக்காசியவிnன் பல்வேறுப் பகுதிகளில் எவ்வாறு பரவி இவர்களின் வாழ்க்கைய வடிவமைத்தது என்பதும் .தென் கிழக்கு ஆசியாவின் இந்து ராஜியங்கள் எவ்வாறு இந்து பவுத்த கலைச்சாரமும் இங்குள்ள மக்கள் முன்னொடுத்தார்கள் தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்காலம். ஆனால் பல்லவ காஞ்சி மாநகரமும் மாமல்லபுரமும் தென் கிழக்காசியவுக்கான ஒரு இந்து புத்த மத பிரச்சார மையமாகவும் அதே வேளை சமிஸ்கிருத மொழியை பயன்ற மாணவர்களை தென் கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பும் கடற்துறையாகவும் விளங்கியுள்ளது. இன்று தென் கிழக்காசியவின் கலைச் கலாச்சாரம் தென் இந்தியா தமிழ் கலைச்சாரத்தின் தாக்கத்தில் எழுந்தவைதான். அடிப்படையில் தமிழ் கலைச்சாராம் நாளடைவில் இங்குள்ள சுதேசிகளின் கலாச்சாரமாய் மாறிபோனதின் விளைவாக உண்மையான அந்த தமிழ் காலாச்சாராம் மறுவிய நிலையிலே இங்குள்ளவர்களின் காலாச்சாராமாய் மேலோங்கி நிற்கிறது.

ஆதி தமிழ் நாட்டில் எழுத்து வடிவங்களை எழுதுவதற்கு பயன் படுத்தப் பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சிதான் பல்வ வட்டேழுத்து என்றும் கூறுவார்கள். முன்பு இந்த வரிவடிவங்கள் சேர நாட்டில் தமிழ் எழுத்துக்கள் எழுதுவதற்கும் இன்றைய கேரள நாட்டில் பழைய மலையாலமும் இன்றைய நவின மலையாலமும் இந்த வரிவடிவங்களில் தான் இருந்துள்ளது.

சரித்திர சான்றுகள் படி தமிழ் எழுத்து படிமங்கள் கி.மு 300-1800 முற்பட்டது எனவும் தமிழ் கிரந்த எழுத்துக்கள் சமஸ்கிருத மொழிகளை தமிழில் எழுதுவதற்கு உருவாக்கி இருகின்றார்கள்.
பல்லவ ராஜியத்தின் தாக்கம் தென் கிழக்காசியவில் பரவிய போது அதை இங்கு பல்வ வரிவடிவங்கள் என்றும் தென் கிழக்காசிய எழுத்து இலக்கியங்களுக்கு அடிப்படையானவை.
இங்கு உள்ள மக்கள் பல்லவ கிரந்த எழுத்துகளை பெரிய அளவில் உபயோகத்தில் இருந்தது என்பது சரித்திர சான்றுகள் நிறையவே உண்டு. மலாய் மொழி அல்லது தென் கிழக்கு ஆசியா வாட்டார மொழிகள் பல்லவ கிரந்த எழுத்து வடிவங்கள் அல்லது வட்டெழுத்துகளை இவர்கள் உள்வாங்கியிருகின்றார்கள்.

ஐந்தாம் நூற்றண்டுக்கும் ஏழாம் நூற்றண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த சமஸ்கிரதக் கல்வெட்டுக்கள் பல இலங்கையிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன.இவை தென் பிராமி எனப்படும் எழுதிலும் அதன் வழியாக உருவாகிய பல்லவ - கிரந்தம் என்ற எழுதிலும் உள்ளன.இந்த எழுத்து முறமைகள் பல்லவர் ஆண்ட பகுதிகளில் சமஸ்கிருததை எழுதுவதற்க்குப் பயன்பட்டவை.ஆகவே இந்த எழுத்து முறைகளைக் கையாண்டு கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டமை பல்லவ பிரதேசத்தில் இருந்து வந்த சிற்பிகளும் பிராமணர்களும் வணிகர்களும் வெளி நாடுகளுக்குச் சென்று முயற்ச்சிகளில் ஈடுபட்டதற்க்குச் சான்றாகும்.பெரும்பாலும் இக் கல்வெட்டுகளுடன் சைவ வைணவ சிலைகளும் மற்றும் கோவில்களில் இடிபாடுகளும் கிடைதுள்ளமை இக் கருத்துக்கு வலுவூட்டுகிறது.

சரித்திர சான்றுகள் படி தமிழ் எழுத்து படிமங்கள் கி.மு 300-1800 முற்பட்டது எனவும் தமிழ் கிரந்த எழுத்துக்கள் சமஸ்கிருத மொழிகளை தமிழில் எழுதுவதற்கு உருவாக்கி இருகின்றார்கள்.
முதன் முதலில் பல்லவ கிருந்த எழுத்துக்கள் தென்கிழக்காசியாவில் அறிமுகப்படுதப்பட்டது. ஜாவாவில் முதன் முதலில் ஊடுருவிய தமிழ் வட்டெழுத்துக்கள் சமஸ்கித மொழியை எழுதுவதற்கு பயன் பாட்டில் இருந்துள்ளது. இந்து மதக் கருத்துக்களை படிப்பதற்கும் பரப்புவதற்கும் மேல் தட்டு அரச மரபினர்ருக்கு பெரிதும் உதவியுள்ளது. மொழி சமஸ்கிருதமாயும் எழுத்து வரிவடிவம் தமிழ் பல்வ வட்டேழுத்தாய் அமைந்துள்ளது.
ஆதி மலாய் மொழியில் சமஸ்கிருதம் அதிகம் இருந்தாலும் பல்லவ எழுத்துக்களை அடித்தளமாய் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ராஜா மூலவர்மன் அவரின் பேரன் குடுங்கா ஆகியோரின் ஆட்சித்திறன்களை சொல்லும் எழுத்து படிமங்கள் கி.பி 400 ஆண்டுகள் முற்பட்ட (kota kabupaten kutai kartanegara) கபுபதென் குத்தை கார்த நகரத்தில் இருந்து சென்றால் காமன் (kaman)என்கின்ற ஆற்றுப்படுயிலும் மாஹாகம் (mahakam) மற்றும் கெடங் கெபல(kedang kepala) என்ற இடத்தில் இருந்து பல்லவ எழுத்து படிமங்கள் ஸ்துப என்கின்ற தூண்களில் காணப்படுகின்றது. இந்த ஏழு பல்லவ ஸ்துப தூண்கள் 1879 டச்சு அகழ்வராச்சிக்காரர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது.தற்பொழுது ஜாகர்த்த தேசிய பொருட்காட்சி சாலையில் உள்ளது.

வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
சரித்திரம் தொடரும்

Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.
Diambil daripada "http://ms.wikipedia.org/wiki/Tulisan_Pallava"
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
1. சோழர்கள் - K.A நீலகண்ட சாஸ்திரி - முதல் பாகம்.
2. ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726
3. ↑ சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727
தமிழர் யார்?...ந.சி கந்தையா ............................சென்னை12.4.46
உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு. ந.சி.க.............சென்னை1.12.48
-திருவாசகம்,கீர்த்தி திரு அகவல் வரி.27-28
தமிழக ஆட்சி ..........டாக்டர் மா.இராசமாணிக்கனார் . பாரி நிலையம்
http://www.tamilbooks.info/mediareview.aspx?rid=27&bid=VB0000207 Reference:

(1) R.C. MAJUMDAR- CHAMPA: HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI – REPRINT 1985.

(2) SANGAM LITERATURE – ETTUTHOKAI & PATHUPPATTU

(3) À¡ñÊÂ÷ ¦º§Àθû ÀòÐ – PUBLISHED BY THE TAMIL VARALATRU KAZHAGAM, MADRAS 1967.
http://en.wikipedia.org/wiki/Zen
¿ýÈ¢: Äñ¼ý ºò ºí¸õ ¦ºö¾¢ Á¼ø. http://www.nilacharal.com/tamil/vietnam_158.html
http://www.visvacomplex.com/main.html
http://kadaaramnet.blogspot.com/ அற்புதன்
http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
thamizayam@googlegroups.com
http://vallinam.com.my/jan09/essay.html நாட்டுக் கோட்டைச் செட்டியாரும் மலாக்கா செட்டி சமூகமும் ஏ.தேவராஜன்
தென்செய்திhttp://www.yarl.com/forum3/index.php?showtopic=40429
சீனாவின் தமிழ்க் கல்வெட்டு

அகத்தியர் கடாரத்தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி JayBee http://www.visvacomplex.com/main.html
அகத்தியர். ந.சி கந்தையாபிள்ளை. முதற்பதிப்பு மார்ச்1948 ஆசிரியர் நூற்ப்பதிப்புக்கழகம்.சென்னை
http://noolaham.net/project/48/4725/4725.pdf அலைக்கடலுக்கு அப்பால் தமிழர்கள் தமிழ்வேள் இ.சு.க. குரும்பசிட்டி & இரா கனகரத்தினம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
கடல்வழி வணிகம்: நரசய்யா: பழனியப்பா பிரதர்ஸ்: கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை 14 பக்கம் 382 விலை ரூ. 225.
சிந்தனையாளர் தொல்காப்பியர்-லோ.சுப்பிரமணியன். எம்.எ.
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_con... - 63k –
http://vivegamm.blogspot.com/2008_02_01_archive.html - 216k

March 17, 2010

வாழ்க்கைஅடைமழையில் மின்னல் கீற்றாய்
அற்புத நடமிடும் ஊழிக்காற்று
இடையிடையில் இடி முழக்கமிட்டு
இதுதான் வாழ்க்கை என்று
இடித்துரைக்கும் நாடகமன்றோ?

தெருவெங்கும் தொரணங்கட்டி
திசை எங்கும் பறக்கவிடும்
பட்டம் அன்றோ வாழ்க்கை
ஆடி முடித்து அறுப்பட்ட நூல்போல
ஓடிக்களைத்து ஒடிங்கிவிடும் வாழ்க்கையோ

தேடல் பல கோடி
தேவைகள் சில கோடிக்
தேடிக் களைத்தபின்
சித்தம் தெளிந்துவிடுமா?
சிவமும் புரிந்துவிடுமா?

March 16, 2010

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-10தமிழகத்தின் ஒரு காலத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்த ஊஞ்சல் திருவிழா தாய்லாந்தில் மிகவும் அண்மைக்காலம் வரைக்கும் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஈசுவென் (ஈசன்) தெய்வத்தை முன்னிட்டு கொண்டாடப் பட்டு வந்த இவ்விழாவில் பாவித்த ஊஞ்சல் கட்டிய பெரு மரங்கள் இன்றும் இங்குள்ள வட்ட சுதாத் ஆலய முன்றலில் காணப்படுகின்றன.தாய்லாந்து மன்னர் முடி சூட்டும் விழாக்களிலும் ‘ திரியம் பாவே’ - திரிபாவே’ திருவிழா { தேலோத்சவம்} விலும் மாணிக்க வாசக பெருமாளின் “ ஆதியும் அந்தமுமில்லா” எனத் தொடங்கும் திருவாசம், இராமேஸ்வரத்திலிருந்து சென்ற சைவ சந்ததியினரால் இன்றும் பாடப்பட்டு வருகிறது. இந்த நாட்டின் தென்கரையிலுள்ள தக்கூபா ( தக்கோலம்) என்ற துறைமுகப் பட்டினத்தில் கிடைத்த தமிழ்க் கல் வெட்டு கி.பி. 5 – ஆம் நூற்றாண்டில் பூம்புகாரிலிருந்து அங்கு சென்று குடியேறிய தமிழ் வணிகர் நகர் ஒன்றினை நிறுவி திருமால் கோவிலோன்றினையுங் கட்டி எழுப்பியதாகக் கூறுகிறது. திருமால் சிலை உட்பட ஏராளமான தெய்வச் சிலைகள் இங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-அலைக்கடலுக்கு அப்பால் தமிழர்கள் என்னும் நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தமிழ்வேள் இ.சு.க. குரும்பசிட்டி &இரா கனகரத்தினம்

இப்படியான தொல்லியல் ஆதாரங்களுக்கு மிக முற்பட்ட ஒன்றாக லாவோஸ் நாட்டில் சம்பஸ்ஸக் என்னும் இடத்தில் கிடைத்த சான்றினைக் குறிப்பிடலாம்.சம்பஸ்ஸக் என்னும் நகரத்தில் உயரிய தூண் ஒன்றில் ஐய்ந்தாம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தென் பிராமி எழுத்தில் ஒரு சமஸ்கிரதக் கல்வெட்டு உள்ளது.சிவன்,விஸ்ணு,பிரம்மா ஆகிய தெய்வக்களுக்கு அமைக்கப்பட்ட நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடைய கல்வெட்டாக அது இருந்தது.சம்பஸ்ஸக் நகரதுக்கு அருகாமையில் ஏழாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட வேறு இரு சமஸ்கிரதக் கல்வெட்டுக்கள் பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்டவையாக் கண்டு பிடிக்கப்படுள்ளன.லவோஸ் நாட்டுக்கு அருகில் உள்ள வியட் நாமில் பழைய பு-நான் அரசு இருந்த தென் பகுதியில் இரண்டாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் ஒரு முக்கிய துறையாக விளங்கிய ஒக் இயோ என்ற இடத்தில் இன்னொரு சமஸ்கிரதக் கல்வெட்டு கிடைதுள்ளது.தென் பிராமி எழுத்தில் உள்ள இக் கல்வெட்டு வர்த்தமானர் என்ற தெய்வத்துக்குக் கட்டப்பட்ட ஒரு கோவில் பற்றிக் குறிப்பிடுகின்றது.இவை போல மேலும் பல கல்வெட்டுக்கள் பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்டவையாக தாய்லாந்திலும் மலேசியாவிலும் கிடைத்துள்ளன.

வங்காள விரிகுடாவைச் சுற்றி உள்ள நாடுகளில் தென்னிந்திய வணிக குழுக்கள் பெருமளவு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்ட போது கூடவே பல்லவப் பேரரசின் பண்பாடும் பரவியதுஅரசியலில் காணப்பட்ட செல்வாக்கைப் வெளிப்படுத்தும் ஒரு கூறாக மன்னர் பெயர்கள் பல அரசுகளில் பல்லவ மன்னர் பெயர்கள் போன்று வர்மன் என்ற இறுதிச் சொல்லைக் கொண்டிருந்தன.தெங்கிழக்காசிய அரசுகளில் இந்திரவர்மன்,ஜயவர்மன் ஈசானவர்மன் யசோவர்மன் பூர்ணவர்மன் போன்ற பெயர்கள் அய்ந்தாம் நூற்றாண்டில் பரவலாக வழங்கின.சமயத்தை பொறுத்த மட்டில் சைவ வைணவ மதங்களுடன் பவுத்த மதமும் பெருமளவில் செல்வாக்கைப் பெற்றிருந்தன.இலங்கையில் மணிக்கிராமம் மற்றும் நால்கு நாடு போன்ற வணிக வணிக குழுக்கள் இச் செல்வாக்கைப் பரப்புவதில் முக்கிய பங்கு கொண்டிருந்தன எனலாம்.பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் வாணிகமும் குடியேற்றமும் கிழக்கே கடல் கடந்து இந்து சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் மிகவும் பரந்தது. பல்லவப் பேரரசர் பலர் தாமே கலைஞராக இருந்து ஓவியம், இசை, சிற்பம் போன்ற கலைகளை வளர்த்தார்கள். பல்லவர் ஆட்சிக்காலத்தில் கட்டிட சிற்பக்கலை புதிய பரிமாணம் பெற்று விளங்கியது. இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்து மாமல்லபுரத்து கடற்கரைச் சிற்பங்களும், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாச நாதர் ஆலயமும் பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பைச் சான்று பகிர்கின்றன.

இந்திய இந்து கலைச்சார அலையின் தாக்கம் கி.பி 550-750 நடைப் பெற்றது. கெடா பல்வர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்துள்ளது.பல்லவர்களின் ஆதிக்கம் கிழக்குகரை மலேசியா வரைக்கும் பரவி இருந்தது.4-9 சிவன் கோவில்கள் பூஜாங் பள்ளாத்தாக்கில் அமைந்த்திருந்த்தது. கி.பி 750-900 ஆண்டு வரைக்கும் தென் இந்திய பவுத்த மத பிரிவான மாஹாயன இவ் வாட்டாரத்தில் மேன்மையுற்று விளங்கியுள்ளது.
இன்றையா கிழக்கு கலிமந்தானிலும் மேற்கு ஜாவாவில்ம் கண்டு எடுக்கப்பட்ட சில கல்வெட்டுகள் தென் இந்திய மன்னர்களான மூலவர்மனும் மற்றும் பூர்ணவர்மன் ஆகியோரால் வெளியிடப்பட்டவை என கூறப்படுகிறது.

ஜாவானியர்களின் பரம்பரை செய்திகள் சொல்லும் விஷயம் என்னவேன்றால் மார்கண்டேயன் என்னும் முனிவர் பாலி தீவுக்குள் சென்று மத பிரச்சாரத்தை ஆராம்பித்தார் எனவும் அவரின் சீடர்கள் அங்கு விவசாயத்தை அறிமுகப்படுத்தினார்கள் எனவும் சொல்லப்படுகிறது. மார்கண்டேய முனிவர் பாலி தீவில் பஞ்ச லோக சிலைகளை நிருவியதாக நரேந்திர பண்டிட் சாஷ்த்திரி(1957) கூறுகிறார். மார்கண்டேய முனிவர் சைவ சமயத்தை போதித்த்தாகவும் சைவ சித்தாந்தம் இன்று வரை பாலி தீவில் நிலைப்பெற்று இருக்கிறது என்று கூறப்படுகிறது.ஆனால் இவர்கள் எந்த மார்க்கண்டேய முனிவரை சொல்கின்றார்கள் என்றுதான் தெரியவில்லை.

வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சரித்திரம் தொடரும்-10

Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.
Diambil daripada "http://ms.wikipedia.org/wiki/Tulisan_Pallava"
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
1. சோழர்கள் - K.A நீலகண்ட சாஸ்திரி - முதல் பாகம்.
2. ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726
3. ↑ சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727
தமிழர் யார்?...ந.சி கந்தையா ............................சென்னை12.4.46
உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு. ந.சி.க.............சென்னை1.12.48
-திருவாசகம்,கீர்த்தி திரு அகவல் வரி.27-28
தமிழக ஆட்சி ..........டாக்டர் மா.இராசமாணிக்கனார் . பாரி நிலையம்
http://www.tamilbooks.info/mediareview.aspx?rid=27&bid=VB0000207 Reference:

(1) R.C. MAJUMDAR- CHAMPA: HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI – REPRINT 1985.

(2) SANGAM LITERATURE – ETTUTHOKAI & PATHUPPATTU

(3) À¡ñÊÂ÷ ¦º§Àθû ÀòÐ – PUBLISHED BY THE TAMIL VARALATRU KAZHAGAM, MADRAS 1967.
http://en.wikipedia.org/wiki/Zen
¿ýÈ¢: Äñ¼ý ºò ºí¸õ ¦ºö¾¢ Á¼ø. http://www.nilacharal.com/tamil/vietnam_158.html
http://www.visvacomplex.com/main.html
http://kadaaramnet.blogspot.com/ அற்புதன்
http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
thamizayam@googlegroups.com
http://vallinam.com.my/jan09/essay.html நாட்டுக் கோட்டைச் செட்டியாரும் மலாக்கா செட்டி சமூகமும் ஏ.தேவராஜன்
தென்செய்திhttp://www.yarl.com/forum3/index.php?showtopic=40429
சீனாவின் தமிழ்க் கல்வெட்டு

அகத்தியர் கடாரத்தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி JayBee http://www.visvacomplex.com/main.html
http://noolaham.net/project/48/4725/4725.pdf அலைக்கடலுக்கு அப்பால் தமிழர்கள் தமிழ்வேள் இ.சு.க. குரும்பசிட்டி & இரா கனகரத்தினம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
கடல்வழி வணிகம்: நரசய்யா: பழனியப்பா பிரதர்ஸ்: கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை 14 பக்கம் 382 விலை ரூ. 225.

March 11, 2010

நீ உயர்ந்தால் இமயம்.........

வலிகளை தாங்கு......
விழிகளை திற

வேதனையை
வாங்கிக்கொள்
வெற்றி உன்னை
நாடிவரும்

சோதனையை
ஏற்றுக் கொள்
சாதனை உன்னை
தேடிவரும்

தாக்குதலை தகர்த்தெரி
சாகசம் உன்னிடம்
சமரசம் செய்யும்

போதனைகளை
வாழ்கை
படிகளாக கொள்
வெற்றிப்படிகள்......
உன்னை உயர்ந்தும்.

வேதனையும்
சோதனையும்
போதனையும்
வெற்றிக்கனிகளை
தொட்டு பறிக்கவேண்டிய
படிக்கட்டுக்கள்

நீ உயர்ந்தால்
இமயம்.........
உடைந்தால்
மன்ச்சட்டி........

மனதை நேசி
தன்னம்பிக்கையை சுவாசி
வாழ்க்கையை வாசி

உனனால் முடியாதது யாது?
தமிழா!

முயற்சியின் வித்து நீ
முழுமையின் சித்து நீ
முயன்றால்
இமயம் துருப்பாகும்
இனிமை வரவாகும்

March 8, 2010

தமிழ்

வெண்மலர்
இரவிலே பூக்கும்
தமிழ்
ஒரு பெண் மலர்
இதயத்திலே
பூத்து
உயிரிலே
கோர்த்து
உள்ளத்திலே
மலரும்.........

இமயம் போல்
தமிழை
இதயத்தில் ஏற்று
இமயன் போல்
தமிழ்
எதிரியை விழ்த்து.

மொழி வீழ்த்தால்
தமிழன் விழ்வான்
தமிழ் உயர்ந்தால்
தமிழன் உயர்வான்

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-9தென்கிழக்காசிய அரசுகளில் ஆட்சியாளாராக இருந்தோர் மகயான பவுத்தையும் சைவ வைணவ மதங்களையும் ஆதரித்துப் பல்லவப் பேரரசிலிருந்து பரவிய செல்வாக்கு வளர்வதற்கு உதவினர்.

நாகபட்டினத்தில் 1867 வரை அங்குப் புத்தவிகாரை இருந்ததாகத் தெரிகிறது. இங்கு நரசிங்கப் போத்தரையர் காலத்தில் சீன அரசன் கட்டிய
சீனக் கோயிலை மார்க்கோபோலோ கண்டதாகக் கூறுகிறார். 1477ல் இதனைப் பர்மிய அரசர் தமது கல்வெட்டில் குறிக்கின்றார். திருமங்கை மன்னர் இங்கிருந்த புத்தரது பொற்சிலை ஒன்றை எடுத்துப் போனார் என்று 'குரு பரம்பரை பிரபாவம், என்னும் வைணவ நூல் கூறுகிறது. இராசராச சோழரும் அவர் மகனார் இராசேந்திர சோழரும் தங்கள் காலத்தில் சுமத்திரா தீவில் அரசாண்ட ஸ்ரீ விஜய அரசர்களில் ஒருவர்க்கு நாகபட்டினத்தில் பெளத்தப் பள்ளி கட்ட உரிமை தந்தமையை லேடன் பட்டயத்தின் வழியே அறிகின்றோம்.

விகாரையைப்பாதிரிமார் 1867−ல் இடித்துக் கிறிஸ்தவக் கோயில்
கட்டியபோது பல புத்தச் சிலைகள் அங்குக் கிடைத்தன. நாகபட்டினம் தமிழ்ப் புத்தப் பெருவணிக நிலையமாகவும் பிறநாட்டுத் தொடர்பின் விளக்கமாகவும் விளங்குகிறது.
பண்டைக் காலத்தில் காஞ்சிமாநகரத்தில் ஒரு சிறந்த தமிழ்ப் பல்கலைக் கழகம்
இருந்தது. பெளத்தப் பள்ளிகள் பல இருந்தன. காஞ்சியில் பிறந்து நாளந்தரப்
பல்கலைக் கழகத்தின் தலைவரான திங்நாகரும் தமிழரே. அவருக்கு மாணவராகி, அந்தப்
பல்கலைக் கழகத்தில் தலைவராக விளங்கிய தருமபாலரும் தமிழரே. இவர் காஞ்சியில்
மந்திரியாயிருந்த ஒருவரின் புதல்வர் இவர் கையாண்ட தருக்க முறை தமிழ் நாட்டில்
வளர்ந்ததென்றும் . இதனால் இவரே மணிமேகலையில் வரும்
தருமபாலர் என முடிவுசெய்வோரும் உளர். மணிமேகலையின் காலம் 2ஆம் நூற்றாண்டானால், 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் அவராவதற்கில்லை. எனினும், காஞ்சிமா நகர் பெளத்தப் பேரறிஞர்களது அறிவுக் களஞ்சியமாகப் பேர் பெற்றிருந்தது என்பதில்
ஐயமில்லை. நாளந்தாப் பல்கலைக்கழகம் ஒருபுறமிருக்க உலகம் போற்றும் சென்பெளத்தம்
அல்லது தியான பெளத்தம் ஜப்பானிலும் பேரும் புகழும் பெற்று விளங்குவதான இது
பெளத்தமதப் பெரும்பிரிவேயாம். அந்த நாடுகளில் இதை நிலைநாட்டியவர்

அங்குக் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் சென்ற காஞ்சியரசரின் பிள்ளைகளில் ஒருவரான போதி
தருமராவர். பல சான்றுக் குறிப்புக்கள் போதி தருமர்(Bodhidharma) சென்(zen) என்ற புத்தப்பள்ளியை சீனா தேசத்தில் நிறுவியதாக பகர்கிறது.சீனாவில் உள்ள சவோலின் கோயிலில், புத்தமதத் துறவியாக மாறிய தமிழ் நாட்டைச் சேர்ந்த பல்லவ இளவரசன் போதிதர்மர் என்பவரால் தொடங்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவர், சொற்களில் தங்கியிராத, மத நூல்களுக்கு அப்பாற்பட்ட அறிவு பற்றிக் கற்பிப்பதற்காக சீனாவுக்கு வந்ததாக அறியப்படுகின்றது. சென் புத்தமதம், ஒரு தனியான புத்தமதப் பிரிவாக உருவானது குறித்து முதன்முதலாக கிபி 7ம் நூற்றாண்டில் பதிவுகள் காணப்படுகின்றன. மகாயான புத்தமதத்தில் காணப்பட்ட பல்வேறு சிந்தனைப் போக்குகளின் கலப்பினாலேயே சென் புத்தமதம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. சீனாவிலிருந்து சென் புத்தமதம், தெற்கே வியட்நாமுக்கும், கிழக்கே கொரியாவுக்கும் ஜாப்பானுக்கும் பரவியது.6'ம் நூற்றாண்டில் தியானத்தைச் சீனாவுக்குக் கொண்டுபோன நம் காஞ்சிபுரத்தார் போதிதருமர் நிறுவிய வழி சான் என்று சீனத்திலும் பின்னர் ஜென் என்று சூரியன் உதிக்கும் நாட்டிலும் மருவியதும்.

த்)யானம் > ஜான என்று இந்தியாவின் கிழக்கு பாஷைகளில் ஆகி,
அதுவே Zen. இந்த ஜானித்தல் சானித்தல் என்று தமிழ் எழுத்தில்
உள்ளது. துவைத சித்தாந்தம் - அத்வைதம் இரண்டுக்கும் ஒப்புமை
எழுதினோர் சிவ-அத்வைதம், சுத்த-அத்வைதம் என்று இரண்டையும்
பொருத்துவர்.சானம் என்பதும் தமிழ்ச்சொல்தான். 'ஒண்கருட *சானத்தில்* தீர்விடம் போற்றான்' என்று ஆன்மாவில் ஒளிந்த அண்டனைப் பாடுகிறார் மெய்கண்டதேவர்.

தென் கிழக்காசியவின் சரித்திர குறிப்பின் வழி போதி தருமர் தன்னுடைய கடல் பயணத்தில் தென் கிழக்காசியவில் சில நாடுகளில் குறிப்பாக இண்டோனேசியவில் உள்ள சுமத்திரா பலம்பாங்கிலும், மலேசியா தாய்லாந்து ,வியாட்னாமிலும் தன்னுடைய புதிய நுட்பங்களை தாங்கிய தற்காப்பு கலையை சீனாவிற்கு செல்லும் முன் அறிமுகப்டுத்தியுள்ளார்.
போதி தருமர் சீன ஹான் ராஜியத்தின் முதல் ஷோலின் கூம்ப் பூவின் தந்தை என்று போற்றப்படுகின்றார். மலாய்க்காரர்கள் தங்களுக்கு போதி தருமர் சிலாட் என்று சொல்ப்படுகின்ற மலாய் தற்காப்பு கலையில் சில நூட்பங்களை சொல்லித்தந்துள்ளார் என்று கூறுகின்றனர்.இங்கு நாம் ஒன்றை கவணிக்க வேண்டும் தமிழிலே சிலம்பம், அதுவே மலாய் மொழியில் சீலாட்.. தென் கிழக்காசியாவின் தற்காப்பு கலையின் மூலம் தமிழகம் தான்.

இந்த மதத்தினைச் சீனாவில் மேலும் வளர்த்தவர் நரசிங்க வன்மபல்லவன்
காலத்தவரான மற்றொரு தமிழர்; இவர் பெயர் வச்சிரபோதி (661/730) −வரும் காஞ்சியில் பெளத்தர்களின் தலைவராக விளங்கினார். இவர்களுக்கு முன்பே 5 ஆம் நூற்றாண்டில் புத்த தத்ததேரர் காஞ்சியில் பெளத்தமதத் தலைவராக வீற்றிருந்துள்ளார். இவர் காவிரிப்பூம்பட்டினத்தைத் தமது காலத்தில் வாழ்ந்த அச்சு தகளப்பிரனோடு சேர்த்துப் புனைத்து அபிதம்மாவதாரம் என்ற நூலில் இதை குறிப்பிட்டுள்ளார்.

பெளத்த மதம் தமிழ் நாட்டில் மறைந்தபோதிலும் அக்கொள்கை தமிழ் மணம் பரப்பும் கொள்கையாய் உலகெங்கும் பரவி இருக்கிறது. தமிழ்க் கூறும் நல்லூலகம் உலகிற்கு அளித்த கொடை இது.

வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சரித்திரம் தொடரும்-9

Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.
Diambil daripada "http://ms.wikipedia.org/wiki/Tulisan_Pallava"
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
1. சோழர்கள் - K.A நீலகண்ட சாஸ்திரி - முதல் பாகம்.
2. ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726
3. ↑ சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727
தமிழர் யார்?...ந.சி கந்தையா ............................சென்னை12.4.46
உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு. ந.சி.க.............சென்னை1.12.48
-திருவாசகம்,கீர்த்தி திரு அகவல் வரி.27-28
தமிழக ஆட்சி ..........டாக்டர் மா.இராசமாணிக்கனார் . பாரி நிலையம்
http://www.tamilbooks.info/mediareview.aspx?rid=27&bid=VB0000207 Reference:

(1) R.C. MAJUMDAR- CHAMPA: HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI – REPRINT 1985.

(2) SANGAM LITERATURE – ETTUTHOKAI & PATHUPPATTU

(3) À¡ñÊÂ÷ ¦º§Àθû ÀòÐ – PUBLISHED BY THE TAMIL VARALATRU KAZHAGAM, MADRAS 1967.
http://en.wikipedia.org/wiki/Zen
¿ýÈ¢: Äñ¼ý ºò ºí¸õ ¦ºö¾¢ Á¼ø. http://www.nilacharal.com/tamil/vietnam_158.html
http://www.visvacomplex.com/main.html
http://kadaaramnet.blogspot.com/ அற்புதன்
http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
thamizayam@googlegroups.com
http://vallinam.com.my/jan09/essay.html நாட்டுக் கோட்டைச் செட்டியாரும் மலாக்கா செட்டி சமூகமும் ஏ.தேவராஜன்
தென்செய்திhttp://www.yarl.com/forum3/index.php?showtopic=40429
சீனாவின் தமிழ்க் கல்வெட்டு
http://www.treasurehouseofagathiyar.net/19000/19081.htm
அகத்தியர் கடாரத்தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி JayBee http://www.visvacomplex.com/main.html
http://noolaham.net/project/48/4725/4725.pdf அலைக்கடலுக்கு அப்பால் தமிழர்கள் தமிழ்வேள் இ.சு.க. குரும்பசிட்டி & இரா கனகரத்தினம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
கடல்வழி வணிகம்: நரசய்யா: பழனியப்பா பிரதர்ஸ்: கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை 14 பக்கம் 382 விலை ரூ. 225

March 7, 2010

கட+உள்

கற்சிலையோ!
கல், உண்ணுமோ
கடவுள் நான்
என்று
சொல்லுமோ?

ஆஸ்திகமும்
நாஸ்த்திகமும்
பேசும்
நர மானிடம்
தன்னிலை
உணர்ந்தால்
கடவுள் யார்
என்று புரியும்?

March 5, 2010

நித்தியானந்தமும் நித்திய வாழ்வும்
சாமியார் நித்தியானந்ததின் அருட்சேட்டையை நீங்கள் கேள்விப்பட்டிருபீகள்.,படித்திருப்பீர்,படத்தையும் பார்த்திருப்பீர்கள். காமவேட்கையில் கட்டுண்டு நடிகையுடன் சால்லாபத்தில் இடுப்பட்டது அம்பலத்திற்கு வந்துள்ளது. மதம் என்னு பெயரில் கயமையும் காமத்தையும் வளர்க்கும் கயவர்களின் கூட்டத்தில் நித்தியானந்தமும் சேர்ந்து இருப்பதில் ஒன்று வியப்பில்லைதான். காமத்தின் வரலாறு நீண்டு நெடியது. ஆனால் காமம் மதத்தோடு இனையும்பொழுது அது இமலய தவறாகதான் தெரிகிறது நமக்கு.அதுவும் நன்னெறிகளை போதித்துக் கொண்டு காமச்சேட்டைகளை ஈடுப்படும் நபர்களை நாம் எப்படி மண்ணிக்க முடியுமா?

அப்பேர்ப்பட்ட விஸ்வமித்திரரே தடுக்கி விழுந்த இடம் காமத்தின் மடியில் தான்.பல முனிவர்களும் ஞானிகளும் பெண்னியத்தால் வீருக்கொண்டவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும் உண்டு. பெண்னும் பிரம்மச்சாரியமும் விடைக்காண விடையம்தான். பெண்ணால் பிரம்மசாரியம் விழ்ந்ததா இல்லை விழ்த்தப்பட்டதா? என்பதை யார் அறிவார்?

என்னைப் பொருத்தவரைக்கும் ஆண் பெண் உறவில் கூடிக்களித்தல் என்பது ஒரு இயற்கையான விடயம்தான்.ஆனால் கூடிக்களிப்பது யாருடன் என்பது தான் இங்கு கேள்வி. கணவன் மனைவி உறவு என்பது புனிதமான உறவு. அது பண்பாடானது.சட்டப்பூவர்மானது.நாகரிக சமுதாயம் ஏற்றுக் கொண்டது. ஒருவன் ஒருத்தி என்பது தமிழ்ப் பாண்பாடு. தன் மனைவியை தவிர்த்து எற்படும் உறவு கண்டிகத்தக்கது.காட்டுமிராண்டிதனமானது என்பது தமிழ்க்கூறும் நல்லுலகத்தின் கூற்று.

இந்த சமுதாயமும் ஒருவகையில் தவறுகளை செய்துக்கொண்டுதான் இருக்கிறது. மூடத்தனத்திற்கும் இறையுணர்வுக்கும் முடிச்சிப் போட்டு தவறுகள் நடக்கும் போது மதத்தை களங்கப்படுத்தும் ஆன்மீகத்தை அசிங்கப்படுத்துவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.இந்த சமுதாயம் திருத்தினால் ஒழிய இப்படிப்பட்ட கயவர்கள் செயல் ஒயாது. ஒரு ஆன்மீக தலைவர் பிரம்மச்சாரியாய் இருந்தால் போற்றப்படுகிறார். ஆனால் அவன் தவறுகள் செய்யும் போது மதம் துற்றப்படுகிறது.

இக்காரணத்தால் வேதாத்திரி மகாரிசி இல்வாழ்விலிருந்து ஆன்மீகத்தில் ஈடுப்படும் மாறு வேண்டுகிறார். இந்த வாழ்க்கையே திருத்தி செப்பனிட்டு தந்துள்ளார். ஒரு மனிதன் மதக் கொள்கைகளை பின் பற்றுவதனால் அவன் முற்றும் துறந்த முனிவராய் ஆகமாட்டான்.அவன் கருவிலே திரு கொள்ளவேண்டும். அவன் கருவிலே திருவாக வேண்டும் என்றால் அவன் தாய் தந்தை ஆசையை அடக்கவும் ஆன்மாவை நெறிப்படுதவும் இயன்றிக்கவேண்டும்.சுருங்க கூறின் அவர்களின் நாடி நரப்புகள் இறையுணர்வோடு இயங்கியிருக்கவேண்டு.

.இச்சை என்பதியற்கை எழுச்சியே இச்சிப்பதே ருசு இயங்கும் உடலுக்கு

என்கிறார் வேதாத்திரி மகாரிசி. உடலும் உயிரும் இருக்கிறது என்றால் இச்சையும் இருக்கும். ரத்த ஓட்டம் எங்கே ஒடுகிறதோ அங்கே இச்சை இருக்கும் எங்கே ரத்த ஓட்டம் நிற்கிறதோ அங்கு இச்சை இல்லை என்கிறார்.இச்சையையும் ஆசையும் அடக்குவதில் இல்லை வீவேகம் நெறிப்படுத்துவதில் இருக்கிறது.

ஏன்? சாமியார்கள் திருமண பந்தத்தில் ஈடுப்படக்கூடது என்ற சட்டம் எங்கேனும் உண்டா? வாழ்வியலில் சுகம் தேடும் இவ்வகையான சாமியார்களை இந்த சமுதாயம் தான் வளர்க்கிறது.அவர்கள் கெட்டுப்போவதற்கும் ஒருவகையில் உதவிபுரிந்துக்கொண்டுதான் இருக்கிறது. முற்றும் துறந்த முனிவர்களுக்கு பஞ்சனை பள்ளியறை எதற்கு? எல்லாம் சுகம் பெற்றப்பின் பெண் சுகத்தை தேடதோ இந்த மனித ஜடம்?

மனவளக் கலை மன்றத்தில் தவம் செய்யும் போது சுவாஸ்டான சக்கரத்தில் ஒரு நிமிடத்திற்கு மேல் தவம் செய்ய அனுமதிப்பதில்லை ஏன் என்று இப்பொழுது தான் எமக்கு விளங்குகிறது. ஐயா வேதாத்திரி இதை எல்லாம் உணந்துதான் நமக்கு பயற்சிகளை விதிமுறையாய் வகுத்துள்ளார்.

நித்தியானந்தம் பாவியா? இல்லை அப்பாவியா? யாம் அறியோம். ஆனால் பாவிகளையும் அப்பாவிகளையும் உருவாக்குவதே இந்த பகுத்தறிவு அற்ற சமுதாயப் பார்வைதான். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்றார் வள்ளாலார். ஆர்ப்பாட்டத்தையும் அலங்காரத்தையும் விருப்புக்கொள்ளும் இந்த சமுதாயம் உண்மையான போதனைகளையும் நன்மைகளையும் என்று உணர்கின்றதோ அன்றுதான் ஆன்மீக பாதை எழச்சிக்கொள்ளும். தன்மானமிக்க சமுதாயம் உருவாகும்.

March 3, 2010

தமிழிங்கிலிஸ்

முக்கிமுனறி
தப்பி தவறி
வரும்
தமிழிங்கிலிஸ்
வார்த்தைக்கு
அகராதியில்
அர்த்தம் தேடினேன்
அழகுத் தமிழில்

இனிய தமிழ்
இங்கு
இடுபொடிந்து கிடந்தது

எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
எல்லாமே super தமிழ்
டிலா no டிலா
Super சிங்கர்
Hollywood நேரம்
Sun முயுசிக்

எங்கள்
தமிழர்
கக்கிய வார்தைகள்
எல்லாம்
கொக்கிப்போட்டு
நின்றன.?

வார்த்தையில்
வாந்தி எடுக்கும்
இவர்களின்
வார்த்தைக்கு
அறிஞர்கள்
எழுதிய
அகராதியில்
இடம் இல்லை

(கொலை)ஞர்கள்
படைக்கும்
(தொல்)லைக் காட்சியில்
அல்லவா
புரட்டவேண்டியிருக்கிறது.

இவன்
புட்டிப்பால் குடித்தானே
இல்லை
குட்டிப்பால் குடித்தானோ

தமிழ்ப் பாலை
தவறவிட்ட
இவன்
குடித்தது
தமிழச்சிப் பாலா?

March 1, 2010

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-8

வரலாற்றுக் காலம் தொட்டு தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மேற்குத் தேசங்களோடும் கிழக்கு தேசங்களோடும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள். வாணிக சங்கம் வைத்தும் மற்ற தேசங்களுடன் உறவுகளை பேணியுள்ளனர்.

பல்லவர்களுடைய ஆதிக்கப் வளர்சியின் ஒரு முக்கிய விளைவு கடல் வணிகம் முன்னேற்றம் அடைந்து வணிகக் குழுக்கள் நடமாட்டம் வங்காள விரிகுடாவில் தெனிந்தியாவுக்கும் தென் கிழக்காசியாவுக்கும் இடையில் பெருகியமையாகும். இதன் ஒரு கூறாக இலங்கையுடன் நடைபெற்ற வணிகம் அமைந்தது.இலங்கையில் தமிழ் இனக் குழு மேலும் வலுப் பெறுவதற்க்கு உதவிய காரணங்களில் ஒன்று

ஐந்தாம் நூற்றாண்டின் பின்னர் பல்லவப் பேரரசு எழுச்சி பெறத் தொடங்கியதும் தமிழ்னாட்டின் கடல் கடந்த வர்த்தகம் செழுப்புற்றது.ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளாகத் தென்கிழக்காசிய வர்த்தகத்தில் தமிழ்னாட்டு வர்த்தகர் முக்கிய பங்கெடுத்தனர்.அவர்கள் செயல்களால் வர்த்தகம் வளர்ச்சியுற்றது மட்டுமன்றித் தென் கிழக்காசியாவிலும் இலங்கைலும் பல்லவர் பண்பாட்டுக் கூறுகளும் பவுத்த சைவ சமயங்களின் செல்வாக்கும் பரவின.

ஆறாம் நூற்றாண்டிலிருந்து கவனிக்கக் கூடிய ஒரு விடயமாக வணிகக் குழுக்களின் வளர்ச்சி அமைகின்றது.பல்லவ அரசின் எழுச்சி கடல் கடந்த வர்த்தகதுக்குத் துணையாக இருந்த சூழ் நிலையில் வணிகக் பெருமக்கள் தமிழ் நாட்டுத் துறைகளில் இருந்தும் இலங்கைக்கும் தென்கிழக்காசியாவிற்க்கும் கூடுதலாகச் செல்லும் அளவுக்கு வலுப் பெற்றன.இதனை வெளிப்படுத்தும் தொல்லியல் சன்றுகள் தமிழ் நாடு,இலங்கை,மற்றும் தென்கிழக்காசிய நாடுகளாகிய தாய்லாந்து,வியட் நாம் அகிய இடங்களில் கிடைதுள்ளன.இவ்விடங்களில் தென்னிந்திய வணிகக் குழுக்கள் மேற் கொண்ட நடவடிக்கைகளில் பவுத்த சங்கத்தார்,பிராமணர்கள்,மற்றும் சிற்பிகள் ஆகியோரும் பங்கு கொண்டனர்.கிழக்கு கரைத் துறைகள் குறிப்பாக நாகபட்டினம்,மாமல்லபுரமும் வங்காள விரிகுடாவுக்கு அப்பால் கிழக்கு இலங்கயின் துறைகளாகிய பல்லவ வங்கம்,திருகோணமலை ஆகிய துறைகளுடன் தென் கிழக்காசியாவில் தாய்வான் தங்குவா பா, வியட் நாமின் ஒகியோ ஆகிய துறைகளுடனும் வர்த்தக மார்க்கங்களால் தொடுக்கப்படிருந்தன.

பல்வ ஆதிக்கத்தின் ஒரு கூறாக மன்னர் பெயர்கள் பல அரசுகளில் பல்லவ மன்னர் பெயர்கள் போன்று வர்மன் என்ற இறுதிச் சொல்லைக் கொண்டிருந்தன.தென்கிழக்காசிய அரசுகளில் இந்திரவர்மன்,ஜயவர்மன் ஈசானவர்மன் யசோவர்மன் பூர்ணவர்மன் போன்ற பெயர்கள் அய்ந்தாம் நூற்றாண்டில் பரவலாக வழங்கின.

ஒன்பதாம் நூற்றாண்டில் மணிக்கிராமத்தவர் தாய்லாந்தின் தக்குவாபா என்னும் துறையில் பல வகைப்பட்ட முயற்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு அவ்விடத்தில் கிடைத்த தமிழ் கல்வெட்டு ஒன்று சான்று பகருகின்றது.இதே நூற்றாண்டில் இவ் வணிகக்குழுக்கள் கேரளக் கரையோரத்திலும் பல முயற்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

சோழராட்ச்சியின் போது ஐஞ்ஞாற்றுவர் என்னும் வணிகக் குழுவினர் முக்கியமானவர்கள்.இவர்கள் தொடர்ந்தும் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை செல்வாக்குப் பெற்றிருந்தனர்.பல இடங்களில் எறிவீர பட்டணம் என்ற நிறுவனங்களையும் வர்த்தக மையங்களையும் நிறுவினர்

இந்த வணிக குழுக்கள் பற்றி ஆவணங்கள் ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக தெனிந்தியா,இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.பத்தாம் நூற்றாண்டில் இலங்கையில் உள்ளூர்ப் பகுதியாகிய மகியங்கனைக்கு அருகாமையில் ஹோபிடிகம என்ற இடத்தில் மணிக்கிராமத்தவர் வர்த்தகம் நடத்தினர் என்பதற்க்குக் கல்வெட்டுச் சான்றுண்டு.இப்படியான உள்ளூர் வர்த்தக மையம் ஒன்றில் தம் முயற்சிகளில் ஈடுபட்ட மணிக்கிராமத்தவர் முதலில் கரையோர மையங்களாகிய திருகோணமலை, மாதோட்டம் போன்ற இடங்களில் தங்கள் நிலையங்களை நிறுவியிருப்பர்.
லஞ்சியர்,நானா தேசிகன்,நகரம்,வைசிய வாணிய நகரத்தார்,வைசியர்,செட்டியார்,மணிகிராமம் நானா தேசிய திரையாயிரத்து ஐந்நூற்றுனர். முதலிய பெயர்களில் வணிக சங்கள் பணியாற்றின. இவைகளை போலவே குதிரை செட்டிகள் சங்கம், சாலியர் சங்கம் என சில சங்களும் இருந்தன.குதிரைச் செட்டிகள் மலைநாட்டில் இருந்து வந்தவர்களாம். கி.பி 13-ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மார்க்கொபோலொ என்ற மேலை நாட்டார், ஒருவகை வணிகரைப்பற்றி பின்வருமாறு வியந்து கூறுகின்றார். “இவ் வணிகர்கள் பொய்யுரையாதவர்; களவு செய்யாதவர்; அடுத்தவரை கெடுக்காதவர்;குடியும் இறைச்சியும் உட்கொள்ளாதவர்; தூய வாழ்க்கை நடத்துபவர்; பூணூல் அணிபவர்; உருவ வழிப்பாடு செய்பவர்; சகுணம் பார்ப்பவர்” என்று. திருமாணிக்க வாசகருக்காக வந்த குதிரைகள் மலைநாட்டில் (சேர நாடு) இருந்து வந்தது என வாரலாறு கூறிகிறது.

தமிழர்களின் சரித்திர குறிப்புக்க‌ளை குறித்து வைக்காமை ஒரு மாபெரும் குறையாகவே உள்ளது. வைத்த குறிப்புக்களை பாதுக்காக்காமை இன்னோரு குறையாகவே தெரிகிறது. தமிழர்களின் சாதனை சரித்திரம் மறைக்கப்ப‌டுவதற்கும் மறுக்கப்படுவதற்கும் இதுவும் ஒரு காரணம்.

வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சரித்திரம் தொடரும்-8

Reference:
Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.
Diambil daripada "http://ms.wikipedia.org/wiki/Tulisan_Pallava"
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
1. சோழர்கள் - K.A நீலகண்ட சாஸ்திரி - முதல் பாகம்.
2. ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726
3. ↑ சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727
தமிழர் யார்?...ந.சி கந்தையா ............................சென்னை12.4.46
உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு. ந.சி.க.............சென்னை1.12.48
-திருவாசகம்,கீர்த்தி திரு அகவல் வரி.27-28
தமிழக ஆட்சி ..........டாக்டர் மா.இராசமாணிக்கனார் . பாரி நிலையம்
http://www.tamilbooks.info/mediareview.aspx?rid=27&bid=VB0000207
(1) R.C. MAJUMDAR- CHAMPA: HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI – REPRINT 1985.
(2) SANGAM LITERATURE – ETTUTHOKAI & PATHUPPATTU
(3) பாண்டியர் செபேடுகள் பத்து – PUBLISHED BY THE TAMIL VARALATRU KAZHAGAM, MADRAS 1967.
http://en.wikipedia.org/wiki/Zen
நன்றி: லண்டன் சத் சங்கம் செய்தி மடல். http://www.nilacharal.com/tamil/vietnam_158.html
http://www.visvacomplex.com/main.html
http://kadaaramnet.blogspot.com/ அற்புதன்
http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
thamizayam@googlegroups.com
http://vallinam.com.my/jan09/essay.html நாட்டுக் கோட்டைச் செட்டியாரும் மலாக்கா செட்டி சமூகமும் ஏ.தேவராஜன்
தென்செய்திhttp://www.yarl.com/forum3/index.php?showtopic=40429
சீனாவின் தமிழ்க் கல்வெட்டு
அகத்தியர் கடாரத்தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி JayBee http://www.visvacomplex.com/main.html
http://noolaham.net/project/48/4725/4725.pdf அலைக்கடலுக்கு அப்பால் தமிழர்கள் தமிழ்வேள் இ.சு.க. குரும்பசிட்டி & இரா கனகரத்தினம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
கடல்வழி வணிகம்: நரசய்யா: பழனியப்பா பிரதர்ஸ்: கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை 14 பக்கம் 382 விலை ரூ. 225.
swaminathan_venkat@rediffmail.com