February 10, 2010

தென் கிழக்கு ஆசியாவில் தமிழர்களின் சுவடுகள்.4தென் கிழக்காசியாவில் தமிழர்களின் வர்த்தகம் சீறும் சிறப்புமாய் இருந்த 11ம் நூற்றாண்டில் இங்குள்ள மக்களால் சில தொல்லைகள் எற்படலாயின. இக் கஷ்டங்கள் இராஜ ராஜன் பார்வைக்கு வந்தவுடன் இராஜ சோழன் பலம் வாய்ந்த கடற்படையை அனுப்பினார். கி.பி 1017ல் சோழ மன்னர் ஸ்ரீ விஜியா மீது போர்த்தொடுக்க எண்ணினார். இதற்கு நாகப்பட்டினத்தில் இருந்து அனுப்புவதைக்காட்டிலும் கலிங்க துறைமுகத்தில் இருந்து அனுப்புவது இலகுவாக தெரிந்த்தது.அப்பொழுது கலிங்க நாடும் ஸ்ரீ விஜியாவும் நட்பு நாடுகளாய் இருந்தன. அதனால் கலிங்க மன்னன் தடுத்தான். கலிங்க மன்னனோடு போர் தொடுத்த வெற்றிக்கொண்ட இராஜேந்திர சோழன் பிறகு வங்க தேசத்தின் மீதும் போர்த்தொடுத்து மகிபால அரசரையும் தோற்கடித்தார்.ஜாவா, சுமத்திரா ஜெயித்தார். கி.பி 1025ல் ஸ்ரீ விஜியா செய்வேந்திர மன்னரை தோற்கடித்தார். கி.பி 1030 நிக்கோபர், கெடா “மேலயுர்” கோட்டையும் வெற்றிக்கொண்டார். இந்த விவரம் தஞ்சாவூரில் கண்டெடுக்கப்பட்ட கி.பி 1030ம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது.

இராஜேந்திர சோழனின் போர் யானை ஐரவதியை பார்மாவின் ஒரு நதிக்கரையில் குளிப்பாட்டியதனால் அந்த நதி தீரம் ஐரவதி என்று அழைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. அக்காலத்தில் இராஜேந்திர சோழன் எப்படி ஒரு பெரும் படையை அலைக்கடலுக்கு அப்பால் நகர்தினார்கள் என்று பெரும் வியப்பாக இருக்கிறது.அதுவும் பெரும் யானை படையை எப்படிப் பட்ட கப்பல் மூலம் லொஜிஸ்திக் ( logistics ) என்று சொல்லப்படுகின்ற சிந்தனை எப்படி அக்காலத்தில் செயல் வடிவம் பெற்றது என்பது ஒரு வியப்புக்குரிய செய்திதான்.
இத் தமிழ் மன்னர் இலங்கா சுக ,தலைபு கொளம், பெரிய தாம்பர லிங்கம், மெய்ரித் திங்கம், மாம்பலம் மேவலிம் பங்கம்,பாஹாங் என்னும் இந்த நாடுகளையும் வென்றார். இம் மன்னன் பேரா மாநிலத்தில் டிண்டிங்க்ஸ் புருவாஸில் கங்கை நகரம் என்னும் நாட்டையும் வெற்றிக் கொண்டார் என்று சரித்திரம் பகர்கிறது.

துமாசிக் என்று கூறப்படும் இன்றைய சிங்கையும் இராஜேத்திர சோழனால் வெற்றிக்கொள்ளப்பட்டுயிருகிறது. ஸ்ரீவிஜிய மன்னன் சைலேந்த்திரன் சீன சக்கரவர்த்திக்கு அனுப்பிய ஓலையில் தென் இந்திய மன்னர்கள் தங்கள் நாடுகளை கைப்பற்றிக் கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கெடாவை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன் தான் கைப்பற்றிய கெடாவை பழைய மன்னனுக்கே திரும்ப கொடுத்தார்.இந்த விவரம் கி.பி 1068ல் கிடைத்த கல்வெட்டில் தெரிய வருகிறது. “ அலைக்கடலுக்கு அப்பால் வெகுதூரத்திலிருந்த நாடுகளை வென்றேன் .அதில் ஒரு மன்னரை பார்க்க பரிதாதபமாக இருந்தது.ஆகவே அவர் ஆண்ட கெடாவை அவருக்கே கொடுத்துவிட்டேன்” என்று கூறுகின்றார். கி.பி 1012-1120 வரைக்கும் ஸ்ரீ விஜிய பேரரசு, இந்த காலக் கட்டத்தில் மிகவும் பரந்துவிரிந்த சோழப் பேரராசின் ஆட்சிக்குட்பட்டப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்திய அரசர்களுள் கடல் கடந்து கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களின் தமிழ்ப் படை மட்டும் தான்..

வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
சரித்திரம் தொடரும்-4
Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.
Diambil daripada "http://ms.wikipedia.org/wiki/Tulisan_Pallava"
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
Post a Comment