February 25, 2010

விரிந்து நிற்கும் வானத்தில் ஒளிர்ந்து நிற்கும் நிலா!


மாய நிலவொளியில்
மயங்கியதோர் நிலா- இவள்
பூவுலகில் புகழ்ச் சேர்க்கும்
புன்னகை புது உலா

அத்தை மகள் என்று
அல்லி மலராய் நின்று
விரசம் விளிந்தால் - இவள்
விழியில் மறைத்தால்

அழகு முகத் திரையில்
அற்புத விழா ஆடும்
ஆனாந்த உலா - இவள்
அகத்தின் ஒரு நிலா

முத்து விழி இரண்டும்
முல்லைப் பூஞ் சோலை
பட்டு மெத்தையோ -இவள்
பளிங்கு மேனி சிலையோ

அற்புதம் ஆகா ஆனாந்தம்
ஆசை கனவின் பேரானந்தம்-இவள்
பொற்பாதம் பூமியில் புலர்ந்திடும்
பூபால ராகம் அன்றோ
தமிழ்ச் சொற்பாதத்தின் - இவள்
முத்து சிதறல்கள் அன்றோ!

February 24, 2010

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-7


தமிழர்கள் மேற்கு உலகோடும் கிழக்கு உலகோடும் தொடர்பு வைத்திருந்தாலும் கடற்பயணங்கள் பிறர் உதவியின்றி தமிழ் மக்களாளே அவை செலுத்தப்பட்டன.பாய், பாய்மரம் முதலியன தமிழ்ப் பெயர்களே.நங்கூரம் என்பதும் தமிழ்ப் பெயரே. ஓடம்,ஓதி, தோணி,தெப்பம்,கலம், கப்பல் முதலிய சொற்கள் வெவ்வேறு வகையான மரக்கலங்களை சுட்டுகின்றன.”தமிழகத்தில் கரையை அடுத்து செல்லும் மரகலங்களும் உண்டு. மரங்களை சேர்த்துவைத்து கட்டி செய்யப்பட்ட கட்டுமரம் உண்டு”என்று பிளினி கூறியுள்ளார்.

முற்காலத்தில் அறியப்பட்ட மரக்கலங்கள் இன்னும் மலையாளக் கரையில் காணலாம். கட்டுமரம் அல்லது kattumara என்பது தமிழர் கடற் ஆதிக்கத்தின் ஆங்கில வெளிப்பாடுதான்.
பஞ்சாப்பிலும் சிந்துவெளியிலும் நடத்திய புதைப்பொருள் ஆராய்ச்சியில் பழம்பொருள்கள் பல கிடைத்துள்ளன.அவை சூசா,பாபிலோன் முதலிய இடங்களிற் கிடைத்த பழம்பொருள்களை ஒத்து இருகின்றன. அப் பழம்மொருள்களின் காலம் கி.மு 3000 வரையிலாகும். மண்பாண்டங்கள்,கண்ணாடி வளைகள்,எழுத்துக்கள் வெட்டப்பட்ட முத்திரைகள் என்பன அவைகளாகும். சில ஆண்டுகளின் முன் டாக்டர் ஆர்நெர் (Dr Hornell) சூசா, இலகாஷ் என்னும் இடங்களிற் கிடைத்த கிண்ணங்கள்,கைவளைகள் இந்திய பொருள்களே எனசுட்டிக்காட்டியுள்ளார்.

எகிப்தில் கண்டுபிடிக்பட்டுள்ள பக்குவம் செய்யப்பட்டுள்ள பிணங்கள்(mummies)இந்திய அவுரி நீலத்தால் சாயமூட்டப்பட்டன.எபிரேய மொழியில் காணப்படும் துகிம்,அகலிம் என்பன தோகை அகில் என்னும் தமிழ்ச் சொற்களே என நீண்ட நாட்களுக்குமுன்பே டாக்டர் கால்டுவெல் என்னும் ஆராச்சியாளார் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாலமன் நாட்டிற்கு கி.மு1000 கப்பல்களில் தமிழகத்து பொருள்கள் சென்றன எனவும், கி.மு 3000த்தில் தெக்கு மரத் துண்டங்கள் அரேபிய நாட்டிற்கு தமிழக்த்தில் இருந்து அனுப்பப்பட்டன என்பது தமிழகத்து கடற்வாணிகம் பழமையை உணர்த்தும் சான்றுகளாகும்

கி.மு 9ஆம் நூற்றாண்டில் அசீரிய அரசனாகிய மூண்றம் சாலமன் சர் நாட்டிய தூணில் இந்திய குரங்குகளும் யானைகளும் வெட்டப்பட்டுள்ளன. இந்தியாவினிலிருந்தும் வெளி நாடுகளுக்கு அனுப்பபட்ட துணிகள் பலவகை சாயங்கள் ஊட்டப்பட்டிருந்தன என்று அரிஸ்தோபலுஸ்(Aristobulus) என்பவரின் கூற்றுகளால் விளங்குகின்றது. மகாவம்சம் என்னும் சிங்கள நூல் ஐந்து நிறங்கள் ஊட்டப்பட்ட உடைகளைப் பற்றியும், மஞ்சள் நிற ஆடைகளைப் பற்றியும் கூறுகிறது.

அரிசி என்னும் தமிழ் சொல் அராபி மொழியில் அல்ராஸ் என்றும் கிரேக்கில் அரிசா என்றும் வழங்கும். அரிசிக்கு வடமொழிப் பெயர் விரீகி, பாரசீகப் பெயர் விரிசினசி, இதனால் கிரேக்கரும் உரோமனியரும் அராபியர் மூலம்தான் அரிசியை பெற்றார்கள் எனத் தெரிகிறது. பாரசீகர் அரிசியை வட இந்தியாவில் இருந்து பெற்றனர்.கிரேக்கர்கள் அரிசியை வட இந்தியாவில் இருந்து பெற்று இருந்தார்கள் என்றால். அரிசியை குறிக்கும் சொல் அரிசா என்று இருக்காது.அது விரீகி என்று இருக்கும்.. அரிசி இந்திய பர்மா சீனா என்னும் நாடுகளுக்கு உரியது. கி.மு 2.800 இல் சீனாவில் அரிசி அறியப்பட்டிருந்தது. தென் கிழக்காசியவின் முக்கிய உணவு சோறு.


வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சரித்திரம் தொடரும்-7

Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.
Diambil daripada "http://ms.wikipedia.org/wiki/Tulisan_Pallava"
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
1. சோழர்கள் - K.A நீலகண்ட சாஸ்திரி - முதல் பாகம்.
2. ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726
3. ↑ சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727
தமிழர் யார்?...ந.சி கந்தையா ............................சென்னை12.4.46
உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு. ந.சி.க.............சென்னை1.12.48
-திருவாசகம்,கீர்த்தி திரு அகவல் வரி.27-28
தமிழக ஆட்சி ..........டாக்டர் மா.இராசமாணிக்கனார் . பாரி நிலையம்
http://www.tamilbooks.info/mediareview.aspx?rid=27&bid=VB0000207 Reference:

(1) R.C. MAJUMDAR- CHAMPA: HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI – REPRINT 1985.

(2) SANGAM LITERATURE – ETTUTHOKAI & PATHUPPATTU

3) பாண்டியர் செபேடுகள் பத்து – PUBLISHED BY THE TAMIL VARALATRU KAZHAGAM, MADRAS 1967.
நன்றி: லண்டன் சத் சங்கம் செய்தி மடல். http://www.nilacharal.com/tamil/vietnam_158.html
http://www.nilacharal.com/tamil/vietnam_158.html
http://www.visvacomplex.com/main.html
http://kadaaramnet.blogspot.com/ அற்புதன்
http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
thamizayam@googlegroups.com
http://vallinam.com.my/jan09/essay.html நாட்டுக் கோட்டைச் செட்டியாரும் மலாக்கா செட்டி சமூகமும் ஏ.தேவராஜன்
தென்செய்திhttp://www.yarl.com/forum3/index.php?showtopic=40429
சீனாவின் தமிழ்க் கல்வெட்டு
http://en.wikipedia.org/wiki/Zen
கடாரத்தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி JayBee http://www.visvacomplex.com/main.html

February 23, 2010

மடமையில்?


வேதனை தீயில் விழ்ந்த போது
சோதனையாக காதல் வந்தது
காதல் தீயில் வெந்த போது
போதனைகள் பல வந்து
வாழ்க்கை போதிமரமாய் போனது.

வெந்து போகும் உடலுக்கு
நோந்து போகும் மனசுக்கும்
காதல் என்ன வேண்டிக்கிடக்கிறது
கட்டையிலே போறவனுக்கு?

மண் திண்ணும் உடலுக்கு
மகா காதல் எதற்கு?
பெண் என்னும் பேதமையில்
கண் இழந்துபோனிரோ மடமையில்?

February 21, 2010

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-6மாலத்தீவுக்கூட்டங்கள். கங்கை சமவெளிதீரம், அந்தமான், நீக்கோர்பர் தீவுகூட்டங்கள், தென் பர்மா,சுமத்திரா,ஜாவா, போர்னியயோவின் சில பகுதிகள்,இந்தோ- சீனா, மலேயா,முதலிய பகுதிகளிலும் வர்த்தகம், கலை மற்றும் விவசயம் பரப்பியும் குடியிருப்புக்களையும் அமைத்து பேரரசுகளை நிறுவி பெரும் வாழ்வுக்கண்டனர் தமிழர்கள். தமிழர்களின் வியபாரக் கப்பல்கள் அஸ்தேரலியா மற்றும் நியுஸ்லாந்து வரைக்கும் சென்று இருகின்றன.அது மட்டும் அன்று உலகெங்கும் தமிழர்களின் வியாபாரக்கப்பல் கொடிகள் பட்டொளி வீசி பறந்தன. எகிப்து.கிரேகம்,ரோம்.பாபிலோன், அரேபியம் மலேயா.இண்டோனேசியா, இண்டோ-சீனா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் வியபார நிமிர்த்தமாய் செண்ற தமிழர்கள் வெற்றிக்கொடி செலுத்தினர். திறைக்கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள்.டாலமி, பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர்.

தென் இந்தியாவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது.


‘மிலிந்த பன்ன’ என்ற கி.மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம், குஜராத், சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது.

(12) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது. தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.

தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன.

மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன. அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ் மணி என்று சொல்லப்டுகின்ற கப்பல் மணி ஒன்று 1836 நியுஸ்லாந்து நாட்டில் கண்டெடுக்கப்பபட்டுள்ளது. முகைதீன் கப்பல் மணி என்று தமிழிலே எழுதப்பட்ட அந்த 500 வருடத்திற்கு மேல் பழ‌மையான அந்த மணி எப்படி நியுஸ்லாந்து நாட்டில் கண்டேடுக்கப்பட்டன என்பது பெரிய ஒரு கேள்விக்குறியாக‌ உள்ளது.தமிழர்களின் கடற்பயணங்கள் வியபாரமும் வெகு காலத்திற்கு முன்பே கண்டங்களையும் தான்டி நடைப்பெற்றுள்ளன என்பதற்கு இதுவே நல்ல சாட்சி. தமிழர்கள் வீரர்கள் மட்டும் அல்ல கடற் தீரர்கள். அவர்கள் நல்ல வியாபாரிகளாகவும் இருந்துள்ளார்கள். சிறந்த கடற்கலங்களை கட்டும் விற்பனர்களாகவும் இருந்துள்ளனர்.தமிழ் மக்கள் பண்டைய காலத்தில் தாங்கள் வாழ்கிற பகுதியை ஐந்து திணைகளாகப் பிரித்திருந்தார்கள். அதில் கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் எனப்பட்டது. தமிழ் மக்கள் கடலோடிகள். கடல் காற்றையும், அலையையும், நீரோட்டத்தையும், பருவ காலங்களைப் பற்றியும் நட்சத்திர மண்டலங்களைப் பற்றியும் அறிந்திருந்தார்கள். பலதரப்பட்ட படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு மேற்கு நாடுகளுக்கும் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் சென்று விற்றார்கள். அங்கே கிடைத்த பொருட்களை வாங்கி வந்தார்கள் என்று கி.மு. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூற்களில் இருந்தும் - தமிழ்ச் சங்க இலக்கியத்தின் வாயிலாகவும் தெரிகிறது. அதுதான் தமிழர் கடல் வாணிகம்.


வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
சரித்திரம் தொடரும்-6

Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.
Diambil daripada "http://ms.wikipedia.org/wiki/Tulisan_Pallava"
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
1. சோழர்கள் - K.A நீலகண்ட சாஸ்திரி - முதல் பாகம்.
2. ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726
3. ↑ சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727
தமிழர் யார்?...ந.சி கந்தையா ............................சென்னை12.4.46
உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு. ந.சி.க.............சென்னை1.12.48
-திருவாசகம்,கீர்த்தி திரு அகவல் வரி.27-28
தமிழக ஆட்சி ..........டாக்டர் மா.இராசமாணிக்கனார் . பாரி நிலையம்
http://www.tamilbooks.info/mediareview.aspx?rid=27&bid=VB0000207 Reference:

(1) R.C. MAJUMDAR- CHAMPA: HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI – REPRINT 1985.

(2) SANGAM LITERATURE – ETTUTHOKAI & PATHUPPATTU

3) பாண்டியர் செபேடுகள் பத்து – PUBLISHED BY THE TAMIL VARALATRU KAZHAGAM, MADRAS 1967.
நன்றி: லண்டன் சத் சங்கம் செய்தி மடல். http://www.nilacharal.com/tamil/vietnam_158.html

February 16, 2010

தென் கிழக்கு ஆசியாவில் தமிழர்களின் சுவடுகள்.5
இராஜேந்திர சோழர் கெடா நாட்டின் ஞாபகார்த்தமாய் நாகப்பட்டினம் அருகிலுள்ள கங்கை கொண்ட சோழ புரத்தில் கோவில் ஒன்றை கட்டினார். இக்கோவிலில் கம்போடிய மன்னர் அனுப்பிய கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டுள்ளது.கி.பி 1068ல் சோழ மன்னர் ராஜ கரிகாலன் வீர ரஜேந்திர குலோத்துங்கன் 1 .கெடாவிற்கு விஜயம் செய்திருகின்றார். இவர்தான் போரிலே தோற்ற ஸ்ரீ விஜய மன்னர் சங்ராம விஜய துங்கவர்மனை விடுதலை செய்துயிருகின்றார் கி.பி. 1273 யிலும் சோழ மன்னர் கெடாவிற்கு விஜயம் செய்திருகின்றார்.


கி.பி. 1178-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர்படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார். "இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 6 அல்லது 7 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர். வெற்றி அடைந்தவுடன் யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர். சிலர் அவைகளுக்கு பொன்னாலான அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன. ஒவ்வொரு நாளும் அரசர் முன் யானைகள் கொண்டுவரப்படுகின்றன.

இராஜேந்திரனின் படை வீரரை ஏற்றிச் சென்ற "எண்ணிலடங்காக் கப்பல்கள்" கடல் கடந்து ஸ்ரீவிஜயத்தையும் அதைச் சார்ந்த தீவுகளையும் கைப்பற்றியது ஒரு திடீர் சாதனை அல்ல; சோழர்கள் கடைபிடித்த திட்டவட்டமான கடற்படைக் கொள்கையின் விளைவேயாகும். சங்க காலத்திலேயே சோழர்கள் கடல் வாணிகத்திற்கு அடிகோலினர். பிறகு பல்லவர் காலத்தில் கப்பல் போக்குவரத்துப் பெருகிய காரணத்தால் தென்னிந்தியாவிற்கும், மலேயா(மலேசியா, சிங்கப்பூர்) இந்தோசீனா போன்ற தீவுகளுக்குமிடையில் வாணிகக்கலைப் பண்பாட்டுறவு மேலும் வளர்ந்தது.

9-ம் நூற்றாண்டில் "மணிக்கிராமம்" என்னும் தென்னிந்திய வர்த்தகக் குழு வங்கக்கடலைக் கடந்து எதிர்க் கடற்கரை ஓரத்தில் இயங்கத் தொடங்கிய செய்தியை அங்குள்ள தகுவாபா என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. பண்டைய வழக்கப்படியே சோழர்களும் தங்கள் கடல் ஆதிக்கத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு பல வெற்றிகளைக் கண்டனர். ஈழம், மாலத்தீவு(Sri Lanka and Maldives) ஆகியவற்றைக் கைப்பற்றியது. சீன வரலாற்றில் குறிக்கப்பெற்றது போல, சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியது. இவையெல்லாம் இம்முயற்சியால் சோழர் கண்ட வெற்றிகளாகும்.

வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
சரித்திரம் தொடரும்-5

Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.
Diambil daripada "http://ms.wikipedia.org/wiki/Tulisan_Pallava"
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
1. சோழர்கள் - K.A நீலகண்ட சாஸ்திரி - முதல் பாகம்.
2. ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726
3. ↑ சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727

February 15, 2010

நிழல்களை தேடிய உறவுகள்
இருளில் தெரிந்த
ஒளியை
கைகளில் ஏந்திக்கொண்டார்கள் சிலர்
விழிப்பார்வையில் தீப்பந்தமாய்
சுடர்விட்ட நினைவுகளுடன்
உணர்வுகளை உரசிக்கொண்டார்கள் சிலர்.

கலிகாலமாய் போன
உறவுகள்
ஒன்றின் பின் ஒன்றாக
தெரு ஒரமாய்
ஒதுங்கி நின்றன
கடற்கரை பிணமாய்

தொலைந்துபோன
உறவுகள்
சிறகுகள் அறுப்பட்டும்
பூமியில் ஒரத்தில்
விழ்ந்து போனது
கழுகுகள் மறுபடியும்
வானில் வலம் வருகின்றன
மனித பிணங்களை தேடி

அவசரமாய்
அள்ளித் தெளித்த உயிர்கள்
பூமி எங்கும்
தத்தளித்துக் கொண்டிருகின்றன
உறவுகளை நாடி
உணர்ச்சி வெள்ளத்தில்

மீண்டும்
இறைவனின் கைகளில்
ஒடிந்து போன உளி
மனிதனைப் போன்ற
இறைவன்
மறுப்படியும்
சிற்பியாகிப் போனான்

மனித
இதயங்களை பூரணமாய்
செதுக்குவதற்கு
அவனால் முடிவதில்லை
அவை நடைப் பிணமாய்
அலைகின்றன.................

உலகெங்கும்
அலைந்து திரியும்
ஒளிக் கூட்டங்கள்
மறுபடியும் மனித உடலில்
சல்லடையாய் துளைத்தெடுக்கிறன

உறவுவுகளை தொலைத்த
இந்த உலகம் நிழல்களை
மறு பிம்பம் எடுத்துக் கொண்டிருக்கிறது

February 11, 2010

காதல் சின்னம் அல்ல
இந்த
பளிங்கு கோட்டை
உனக்கும் மட்டுமா
கல்லறை?

இந்த
ஷாஜாஹானின்
முகாமுக்குள்
சிக்கிக் கொண்டது
நீ மட்டும் இல்லை

காதலுக்கு முகவுரை
எழுதினாய்
என்று நினைக்கின்றாய்
இல்லவே இல்லை
எத்தனை
உயிர்களுக்கு முடிவுரை
எழுதினாய் என்று
உனக்கு தெரியுமா?

உனக்குள்
பூத்த காதல் மலர்
எத்தனை
கல்லறைக்கு
மலர்வலையமாய்
மாறிப் போனது?

மும்தாஜ்.......
உனக்கே தெரியமால்
எத்தனை சிற்பிகளின்
உடல்கள் சிறைப்படுத்தப்பட்டன
உந்தன் கல்லறையில்?

ஆக்கரா நதி தீரத்தில்
பூத்துக் குலுங்குவது
வெள்ளை பூக்கள் அல்ல
எத்தனையோ உயிர்களின்
சிவப்பு ரோஜாக்கள்

இது
காதல் சின்னம் அல்ல
காலத்தை வென்ற
காலனின் சின்னம்........

February 10, 2010

தென் கிழக்கு ஆசியாவில் தமிழர்களின் சுவடுகள்.4தென் கிழக்காசியாவில் தமிழர்களின் வர்த்தகம் சீறும் சிறப்புமாய் இருந்த 11ம் நூற்றாண்டில் இங்குள்ள மக்களால் சில தொல்லைகள் எற்படலாயின. இக் கஷ்டங்கள் இராஜ ராஜன் பார்வைக்கு வந்தவுடன் இராஜ சோழன் பலம் வாய்ந்த கடற்படையை அனுப்பினார். கி.பி 1017ல் சோழ மன்னர் ஸ்ரீ விஜியா மீது போர்த்தொடுக்க எண்ணினார். இதற்கு நாகப்பட்டினத்தில் இருந்து அனுப்புவதைக்காட்டிலும் கலிங்க துறைமுகத்தில் இருந்து அனுப்புவது இலகுவாக தெரிந்த்தது.அப்பொழுது கலிங்க நாடும் ஸ்ரீ விஜியாவும் நட்பு நாடுகளாய் இருந்தன. அதனால் கலிங்க மன்னன் தடுத்தான். கலிங்க மன்னனோடு போர் தொடுத்த வெற்றிக்கொண்ட இராஜேந்திர சோழன் பிறகு வங்க தேசத்தின் மீதும் போர்த்தொடுத்து மகிபால அரசரையும் தோற்கடித்தார்.ஜாவா, சுமத்திரா ஜெயித்தார். கி.பி 1025ல் ஸ்ரீ விஜியா செய்வேந்திர மன்னரை தோற்கடித்தார். கி.பி 1030 நிக்கோபர், கெடா “மேலயுர்” கோட்டையும் வெற்றிக்கொண்டார். இந்த விவரம் தஞ்சாவூரில் கண்டெடுக்கப்பட்ட கி.பி 1030ம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது.

இராஜேந்திர சோழனின் போர் யானை ஐரவதியை பார்மாவின் ஒரு நதிக்கரையில் குளிப்பாட்டியதனால் அந்த நதி தீரம் ஐரவதி என்று அழைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. அக்காலத்தில் இராஜேந்திர சோழன் எப்படி ஒரு பெரும் படையை அலைக்கடலுக்கு அப்பால் நகர்தினார்கள் என்று பெரும் வியப்பாக இருக்கிறது.அதுவும் பெரும் யானை படையை எப்படிப் பட்ட கப்பல் மூலம் லொஜிஸ்திக் ( logistics ) என்று சொல்லப்படுகின்ற சிந்தனை எப்படி அக்காலத்தில் செயல் வடிவம் பெற்றது என்பது ஒரு வியப்புக்குரிய செய்திதான்.
இத் தமிழ் மன்னர் இலங்கா சுக ,தலைபு கொளம், பெரிய தாம்பர லிங்கம், மெய்ரித் திங்கம், மாம்பலம் மேவலிம் பங்கம்,பாஹாங் என்னும் இந்த நாடுகளையும் வென்றார். இம் மன்னன் பேரா மாநிலத்தில் டிண்டிங்க்ஸ் புருவாஸில் கங்கை நகரம் என்னும் நாட்டையும் வெற்றிக் கொண்டார் என்று சரித்திரம் பகர்கிறது.

துமாசிக் என்று கூறப்படும் இன்றைய சிங்கையும் இராஜேத்திர சோழனால் வெற்றிக்கொள்ளப்பட்டுயிருகிறது. ஸ்ரீவிஜிய மன்னன் சைலேந்த்திரன் சீன சக்கரவர்த்திக்கு அனுப்பிய ஓலையில் தென் இந்திய மன்னர்கள் தங்கள் நாடுகளை கைப்பற்றிக் கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கெடாவை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன் தான் கைப்பற்றிய கெடாவை பழைய மன்னனுக்கே திரும்ப கொடுத்தார்.இந்த விவரம் கி.பி 1068ல் கிடைத்த கல்வெட்டில் தெரிய வருகிறது. “ அலைக்கடலுக்கு அப்பால் வெகுதூரத்திலிருந்த நாடுகளை வென்றேன் .அதில் ஒரு மன்னரை பார்க்க பரிதாதபமாக இருந்தது.ஆகவே அவர் ஆண்ட கெடாவை அவருக்கே கொடுத்துவிட்டேன்” என்று கூறுகின்றார். கி.பி 1012-1120 வரைக்கும் ஸ்ரீ விஜிய பேரரசு, இந்த காலக் கட்டத்தில் மிகவும் பரந்துவிரிந்த சோழப் பேரராசின் ஆட்சிக்குட்பட்டப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்திய அரசர்களுள் கடல் கடந்து கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களின் தமிழ்ப் படை மட்டும் தான்..

வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
சரித்திரம் தொடரும்-4
Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.
Diambil daripada "http://ms.wikipedia.org/wiki/Tulisan_Pallava"
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D

February 9, 2010

கவிதை மழையோ......காணல் நீரோ


கவிதை மழையோ......காணல் நீரோ

கரு மேகங்களை வார்த்தைகளாக்கி
கவிதைமழையை பொழிய முடியாதா?
இரு விழியிலிருந்து விழும்
கண்ணிர்த்துளிகளை கவிதையாக்கி
கருத்து மழையில் படைக்க முடியாதா

கருங்கற்களை செதுக்கினால்
கற்சிலை உருவாகதா?
கண்ணில் தெரியும் காட்சிகலெல்லாம்
கவிதை மாட்சியாய் சுவைக்க முடியாதா

இந்த கவிஞனின்
கருத்தும் கோலேச்சும் ஒரு நாள்
கருவிலே நான்
கவிஞனாகவிட்டாலும்
கனவிலாவது கவிஞனாவேன்

February 4, 2010

தென் கிழக்கு ஆசியாவில் தமிழர்களின் சுவடுகள்.3


கி.பி 1014 சோழ மன்னர் இராஜ ராஜன் சீன சக்ரவத்திக்கு வர்த்தக தூதுவர்களை அனுப்பினார். கி.பி 1077ல் சோழ மன்னர் குலோத்துங்கன் 70 வர்த்தக தூதுவர்களை கெடா வழியாக சீனாவிற்கு அனுப்பினார். பழங்காலத்திலிருந்து தமிழக வர்த்தகர்கள் கெடாவுடன் வர்த்தக தொடர்பு கொண்டிருத்தார்கள்.. மாறன் மாஹா வங்ச ஆட்சியில் போது அநோகர் கெடாவில் வந்து இறங்கி பூலோ செராயில் பாய்மரக்கலங்களுக்கு தண்ணீர், விறகு கட்டைகள் வாங்கியிருகிறார்கள்.

சீன வரலாறு கூறுகிறது கெடா மன்னர் ஸ்ரீ விஜய கி.பி 1003,1008ல் தூதுவர்களை சீனாவுக்கு அனுப்பியுள்ளார். கி.பி 1886ல் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவன் ஜமாலிதின் தலைமையில் வர்த்தக குழுவை கெடா வழியாக சீனாவுக்கு அனுப்பியுள்ளார். கி.பி1008ல் உள்ள தமிழ் வடமொழி நூல்கள் கூறுகிறது புத்த கோவில்கள் கட்டுவதற்கு சில கிராமங்களை கொடுத்தாகவும்,இரண்டு புத்த ஆலயங்கள் பலம்பாங்கிலும் கெடாவிலும் கட்டியதாய் காணப்படுகிறது. கி.பி 1006ல் இராஜ சோழர் ஸ்ரீ விஜியாவிற்கு நாகப்பட்டினத்தில் புத்த கோவில்கள் கட்டுவதற்கு நிலமும் கோவில் செலவுக்கு இரண்டு கிராமங்களீன் நில வரியை கொடுத்திருகின்றார்.

ஸ்ரீ விஜய பல்லவ ராஜா மார விஜயத்தோமவர்மன் கெடா ராஜா சோதமணிவர்மன், கெடா ராஜா மகன் சங்கிரிமா விஜயங்க வர்மன் இவர்களும் கோவில் கட்டினார்கள். சோதமணி வர்மன் கோயிலில் உள்ள புத்தர் சிலைக்கு அதிக தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டது, இதற்கு அதிக மானியம் குலோத்துங்க மன்னன் கொடுத்தான்.

கடல் வழி வாணிகம் பரவியிருந்தவிடமெல்லாம் இக்குழுக்கள் இயங்கி வந்துள்ளனர். கடல் கடந்த நாடுகளிலும் தான். ஸ¤மத்ரா தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்று கி.பி. 1010-ல் பொறிக்கப்பட்டது. அதில் ஆயிரத்து ஐந்நூற்றுவர் கொடுத்த கொடை பற்றி சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது இதன் பொருள், சுமத்ரா தீவில் தமிழர் வணிகர் குழு ஒரு முக்கிய இடத்தைத் தம் இடமாகக் கொண்டு அங்கு இறங்கும் கப்பல் தலைவனும், மரக்காயர் எனும் முஸ்லீம் வணிகர்களும் எவ்வளவு தங்கம், கஸ்தூரி செலுத்திய பிறகே தரை இறங்கவேண்டும் என்ற வரி வசூலைப்பற்றிய கொடை இது. இது வணிக மேலாண்மையையும், அவர்கள் செயல்படும் விதிமுறைகளையும் சொல்கிறது. சீன நாட்டிலும் 1281-ல் சம்பந்தப் பெருமாள் என்னும் தமிழ் வணிகன் அந்நாட்டு அரசன் செக்கா சைக்கான் (குப்ளே கான்) அனுமதியுடன் சிவ பெருமானின் உருவத்தை பிரதிஷ்டை செய்கிறான், அரசனின் நன்மையை முன்னிட்டு. இக்கோவிலின் பெயர் திருக்கானேஸ்வரம். இதற்கு முன்னோடிகளுண்டு. கி.மு. 140-86-ல் ஹ¥வாங் சு (காஞ்சீபுரம்) வோடு வணிக தொடர்புகள் இருந்தன. கியோ தங்க் சு என்ற சீன நூல், சீன வணிகர்களுக்காக, பல்லவர்கள் கோவில் கட்டித் தந்ததாகச் சொல்கிறது. இம்மாதிரியான பரிமாறல்கள் மனித உறவுகளுக்கும், நாடுகளிடையே உறவுக்கும், கடைசியாக வணிக வளர்ச்சிக்கும் உதவுகின்றன மேலும் இவ்வணிகர் குழுக்கள் (அக்காலத்திய Chambers of Commerce) தம் விதிமுறைகளையும் வரிகளையும் தாமே நிர்ணயித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான குழுக்கள் கி.பி. ஓன்றாம் நூற்றாண்டிலிருந்து 9ம் - நூற்றாண்டு வரை தொடர்ந்து பின் படிப்படியாக குறைந்துள்ளதாகத் தெரிகிறது இவையெல்லாம் பழங்கால இடைக்கால கடல்வழி வாணிகம், தமிழ் வணிகக் குழுக்களும் வணிகப் பெருமக்களின் இமலய சாதனையை இன்றைய தமிழ் மக்கள் சாதிக்கமுடியுமா என்ற ஒரு கேள்வி எழுகின்றது.

தாய்லந்தில் கிராபி மாநிலத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டு கி.பி.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதில் 'பெரும்பட்டன் கல்' என்று பொறிக்கப் பட்டுள்ளது. இக் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்ட இடம் மணிக்குன்று. இன்னொன்று டாகுவா பா என்ற இடம். இதை தாலமி தக்கோலா என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒன்பதாவது நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டு. இங்கு ஒரு ஏரி கட்டப்பட்டதெனவும் அதை சேனாமுகத்தார், மணிகிராமத்தார் என்னும் தமிழ் வணிகக் குழுக்கள் காத்து வந்தனர் என்பதும் தெரிகிறது. இப்படி நிறைய செய்திகள் சுவாரஸ்யமானவை. தமிழ் நாட்டு நகரத்தார் தம் வணிக வரலாற்றுப் பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தால், அது மிக பழமையானதும் பிரும்மாண்டமானதுமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
சரித்திரம் தொடரும்.3
Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.
Diambil daripada "http://ms.wikipedia.org/wiki/Tulisan_Pallava"
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60605262&format=print