January 9, 2010

எரியும் நெருப்பு


மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டுயிருகிறது மலேசியா..இப்பொழுது கிருஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் “அல்லஹா” என்ற வார்த்தையில் எற்பட்ட சிறிய தகராறு இன்று உணர்ச்சி மயமான ஒரு பூதகரமான ஒரு பிரச்சைனையாய் உருவெடுத்திருக்கிறது. நேற்றைய தினம் சில கிருஸ்துவ ஆலயங்களை எரிக்கும் அளவுக்கும் நிலமை தீவிரம் அடைந்திருக்கிறது.

ஏற்கனவே நீருப்பூத்த நெருப்பாய் கணந்துக்கொண்டிருக்கும் மலேசிய இன உறவுகள் இன்னும் எரியும் நெருப்பில் எண்ணையை உற்றுவதற்கு ஒப்பான செயலாக நீதி மன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. ஆனால் தூன் டாக்டர் மகாதீர் சொல்வது போன்று நீதி மன்றம் ஒரு பிரச்சனையை உணர்ச்சி மயப்பட்டதா என்று நோக்கும் நிலையில் இல்லை. அதற்கு தெரிந்தது எல்லாம் அறிவுக்கு உட்பட்டு ஆதாரபூர்வாமாக இருக்கவேண்டும். சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்ட எத்தனையோ சமுதாய பிரச்சனைகள் திக்கு தெரியாமல் முனங்கி கொண்டிருகின்றது. சட்டம் ஒரு இருட்டரை. வக்கிக்களின் வாதம் வெளிச்சம் போன்றது என்றார் அறிஞர் அண்ணா ஆனால் நீதி தேவைதையின் கண்களுக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றுதான்.

ஹெரல்ட் என்ற கிழக்கு மலேசிய கத்தோலிக்க மத பிரச்சார ஏடு. தன்னுடைய ஏட்டில் “அல்லஹா “என்ற வார்த்தையை ஏன் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று நீதி மன்றப்படிக்கட்டில் ஏறியதின் விளைவு இவ்வளவும்.

மேற்கு மலேசியாவின் முஸ்லிம் அல்லாதவர்களூக்கு “அல்லஹா “ சொற்பதம் அவர்களுக்கு எவ்வளவு மதிப்புமிக்க சொல் என்பது தெரியும்.. தவறாக உட்படுதுவதின் நிலை எவ்வளவு பாதமான விளைவுகளுக்கு முகம் கொடுக்கவேண்டி இருக்கும் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் கிழக்கு மலேசியாவின் பூமிபுத்திரா என்று சொல்லப்படும் பூர்வ குடி மக்களிடையே கிருஸ்துவர்கள் அதிகம். அவர்களின் தாய் மொழியும் மலாய் மொழியுடன் சம்மந்தப்பட்ட சில கிளை மொழிகளாக இருப்பதால் மலாய் மொழி பயன்பாடு மிகவும் அதிகம். மலேசிய அமைப்பு உறுபெரும் முன் இந்தோனேசிய மொழி வழி தங்களின் கிருஸ்துவ மதப்போதனையை பெற்றுக் கொண்டு இருகின்றார்கள். 400 வருடமாக தங்கள் சொல்லும் தூவன் அல்லஹா என்ற சொல் இப்பொழுது மட்டும் தடை ஏன் என்பது அவர்களின் வாதம்.? அதுவும் இப்பொழுது என்ன வந்தது இவர்களுக்கு கிழக்கு மலேசியா முஸ்லிம் மக்கள் 400 வருமாக எந்த குரைகூறலும் சொல்லாத போது மேற்கு மலேசியாவின் இஸ்லாமியர்கள் மட்டும் ஏன் இந்த சொல்லுக்கு தடை ஏற்படுத்துகின்றனர் என்று கேள்வி எழுப்புகின்றனர் .நியாமான கேள்விதான்.

நீதி மன்ற தீர்ப்பை சிலர் அரசியல் சித்து விளையாட்டிற்கு பயன்படுத்துவதாகவும் சரிந்து நிற்கும் மலாய்க்காரகளின் வாக்கு வேட்டையை பெறுதற்கும் இது வாய்பாக இருக்கும் என்றும் அதே சமயம் இது ஒரு அரசியல் பகடை , கிழக்கு மலேசியாவின் பெரும்பான்மை கிருஸ்துவர்களின் நம்பிக்கையை இழக்ககூடிய சாத்தியம் அதிகம் உண்டு. ஏன் என்றால் இன்றைய இந்த அரசாங்கத்தை துக்கிப்பிடித்திருப்பதே கிழக்கு மலேசியா மக்கள்தான்.
“அல்லாஹா” என்பது அரோபிய வார்தை. இஸ்லாமின் வரவுக்கு முன்பிருத்து இந்த வார்தை பதம் சிரிய லெபனோன் கிருஸ்துவர்கள் இறைவனை விளிந்து அழைக்கும் சொல் என்றும் இன்றும் கூட அப்படிதான் அழைப்பதகவும் கூறுகின்றனர்.

God என்றால் இறைவன் “அல்லஹா” என்றாலும் இறைவன் எங்கும் நிறைந்த இறைவனை ஒரு எல்லைக்குள் உட்பட்டு, மொழி சமய பேதங்களில் சிறைப்பிடிப்பதில் என்ன ஆனந்தமோ தெரியவில்லை.

சகிப்புத் தன்மையும் அன்பான மக்களையும் கொண்ட மலேசிய நாட்டில் மத,மொழி உணர்வுகள் எவ்வளவு தூரம் மக்களை பாதிக்ககூடிய விடயம் என்பதால் அனைவரும் ஒற்றினைந்து சுபிச்சமாக வாழக் கற்றுக்கொள்வோம்..ஒரே மலேசியனாக வாழ்வோம்.வேண்டாம் வன்முறை.
Post a Comment