January 21, 2010

அந்ததரத்தில் தொங்கும் வாழ்க்கை


தவம் ஒரு யோகநிலை
சுகம் ஒரு மாயவலை
பாந்த பாசம் பாசவலை
பரந்தாமனுக்கு ஏது நிலை?

சொந்தம் ஒரு கானல் நீர்
சுமக்கும் வாழ்க்கை குமிழ் நீர்
நேசம் ஒரு விழி நீர்
இவ்வாசம் ஒடும் நீர்?

காலம் தரும் சோதனை
காத்திருந்தால் வேதனை
அனுபவம் தந்த போதணை
அமைதி தரும் சாதனை?

நிலையில்லா வாழ்க்கை இது
நிம்மதி நாடி ஓடுவது ஏது
நிலைத்தடுமாறும் மானிடம் இது
நித்திய ஞானத்தை நாடுவது ஏது?

வாழவும் தெரிவதில்லை
வாழ்க்கையும் புரிவதில்லை
அந்தமும் தெரிவதில்லை
ஆதியும் புலப்படுவதில்லை

அந்ததரத்தில் தொங்கும் வாழ்க்கை
ஆட்டுவிப்பவர் யாரோ, யார்ராறிவார்

இந்திர ஜாலங்களை காட்டி
இறை இயக்கங்களை செய்பவர் யாரோ?
மந்திர திறையால் மகிழவைத்து
மனதை மாயக்குபவர் யாரோ?

ஆழ்க்கடலில் முழ்கி முத்தெடுப்பொம்
வீழும் வாழ்க்கையை மீட்டேடுப்போம்
ஆண்டவனின் இதயத்தை தத்தெடுப்போம்
வீடு வரை வரும் விதியை மாற்றியமைபோம்

January 16, 2010

யாவர்க்கும் ஆம் பிறர்கும் இன்னுரைதானேபேதம் பார்க்காமல் பிறருக்கு உதவ சொன்னது திருமந்திரம்.இது போல் ஒரு தத்துவம் மற்ற பக்தி நூல்களில் பார்ப்பது அரிது.

இறைவன் பூசைக்கு ஒரு பச்சிலை,
பசுவுக்கு ஒரு கைப்பிடி உணவு,
இல்லை என்று வருவோருக்கு இந்தா என்று
ஒரு பிடி சோறு.
இவை எல்லாவற்றிகும் மேலாக எல்லோருடனும் இன்மொழி பேசுதல்.

“ யாவர்க்கும் ஆம் இறைவற்தொரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கொரு வாய்உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போதொரு கைபிடி
யாவர்க்கும் ஆம் பிறர்கும் இன்னுரைதானே”

எவ்வளவு பெரிய தத்துவ முத்துக்கள். மனித வாழ்வுக்கு தேவையான இன்முத்துக்கள். கொட்டிக்கிடக்கும் தமிழ்ப் புதையல்.

மாந்தர் பெருமையை விளக்கும் தமிழர்களின் வாழ்க்கை தத்துவத்தின் தங்க சுரங்கத்தை பாரீர். எளிமையான கருத்துக்கள். உயர்ந்த தமிழரின் நாகரீகப் பக்கங்கள். அறம் பொருள் இன்பம் என்று வாழ்க்கையை வகுத்த தமிழ்ச்சான்றேர்களின் தரணி புகழ்மிக்க சமுதாய பாதைகளின் அறப்பண்புகளைப் பாருங்கள். தமிழர்களாக வாழ நாம் பெருமை கொள்ளவேண்டும்.

சித்தர் திருமூலர் பாடல்களை தமிழர்கள் அனைவரும் பயின்று பயன் பெறவேண்டிய தீந்தமிழ் துளிகள்.

யாவர்க்கும் ஆம் பிறர்கும் இன்னுரைதானே

January 15, 2010

கன்னி தமிழ்ப் பாவை


மாடத்து நிலவொளியில்
மலர்ந்த பூ மொட்டு
கூடத்தில் முத்தமிடும்
குளிர் நிலவு சிட்டு
தடாகத்தில் தவழ்ந்த
தன்னொளி பட்டு
இவள் மோகத்தில்
சிலிர்த்தது என்னுடல் தொட்டு.

ஆடல் விழியில்
அம்பு எய்தால்
தமிழ்ப் பாடல் வழியில்
பைந்தமிழ் ஈந்தால்
காதல் மொழி பகர்ந்தால்
கன்னி தமிழ் பாவை
கனிந்த கண்ணிரண்டும்
தந்தது காதல் சுவை
எண்ணில் நிறைந்தால்
எம்பாவை ஏக்கத்தில்
ஏகாந்தத்தில் திளைத்தால்
என் எழில்ப்பாவை சொர்கத்தில்

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்.


வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

சோழ பாண்டிய நாடுகளின் வாணிகம் திரையர் வசம் இருந்தது. பாண்டிய நாட்டு மக்கள் வாரலாற்றுக் காலத்திற்குமுன் தொட்டே கடலோடிகளாக இருந்தனர். அவர்களின் தலைநகரம் இராமயணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களின் தலைநகரமாகிய கபாடபுரத்தின் வாயிற் கதவுகள் பொன்னாலும் இரத்தினக் கற்களலும் அலங்கரிக்ப்பட்டன என்று இரமாயணம் கூறுகிறது. குமரி, கொற்கை, காயல், பாம்பன் முதலியவை பாண்டியர்களின் துறைமுகப்பட்டினங்களாக இருந்தன. கடல் கடந்து கடாரம்,சாவகம்.கம்போஜம்,இந்திரபுரம்.சீனம் வரை வாணிகம் நடத்தினார்கள். உருத்திர கண்ணனார் என்னும் புலவர் இளம்திரையனைப் பற்றிப் பாடியுள்ளார். வேங்கடத்தை தலைநகராக உடைய திரையனைப் பற்றி அகநானுறு (85,340) கூறுகின்றது.இறையானரகப் பொருளுரை இளந்திரையம் என்னும் நூலையும் திரையன் மாறன் என்னும் அரசனையும் குறிக்கிறது.

சோழ மன்னர்கள் கெடாவையும், சயாமையும் ஆண்ட செய்தியும், முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட குறிப்பும், சோழன் கரிகாலன் இலங்கையை கைப்பற்றி ஆண்ட வரலாறும் நம் பழம்பெரும் இலக்கியங்களாலும், கல்வெட்டுக்களாலும் உணரமுடிகிறது. பர்மியர்களிடையே விஷ்ணு வழிபாடு பரவலாகக் காணப்படுகிறது. பல கல்வெட்டுகளில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. பர்மாவின் பழங்கால தலைநகரமான புரோம் வைணவ வழிபாட்டின் மையமாகத் திகழ்கிறது. புரோம் நகருக்கு "புகநாம்யோம்" என்ற பர்மியப் பெயரும் உண்டு. இதற்கு பொருள் "விஷ்ணுபுரம்" என்றாகும். மாறன் என்ற சொல் - இந்திய மண்னர்களில் குறிப்பாக தமிழ் நாட்டு பாண்டிய மன்னர்களில் புகழ் மிக்க ஒரு சொல்லாக தெரிகிறது.பாண்டியர்களின் ஆளுமைக்குட்பட்ட மாறன்மார் தேசம்தான் இன்றைய மயன்மார் நாடா என்பது ஆராயவேண்டிய விஷயம். மாறன் மகா வம்சம் என்பது பண்டைய கெடாவின் சரித்திர நூல். மாறன் மகா வம்சன் கடாரத்தின் முதல் மண்னன் ஆவான். ஆனால் அவர்களின் புனைவு கதைகளில் ரோம் ராஜியத்தின் இளவரசியை சீன இளவரசனுக்கு மணமுடிக்க அனுப்பி வைகப்படும் ஒரு கடற்படையின் தலைவானாகவும் இன்றைய இந்திய கோவாவில் இருந்து புறப்படும் படை சில கருட இனத்தவரின் தாக்குதலை முறியடித்து கெடாவில் இந்திய சாராஜ்ஜியத்தை நிறுவிய முதல் மன்னாக மாறன் மகாவம்சனின் கதை சொல்லப்பட்டிருகின்றது.


மதுரையை ஆண்ட பாண்டியன் ஒருவன் சாவகம் என்னும் சாலித் தீவை கைப்பற்றி, அதன் கடற் கரையில் அலைநீர் அலசுமாறு ஒரு பாறையில் தன் அடிச்சுவட்டைப் பொறித்து வைத்தக் காரணமாக வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டார். இவருடைய காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு. சாலி என்பது சாவகத்தின் பழையப்பெயர். சாவகம் ஒரு காலத்தில் தமிழாட்சிக்குட்பட்டிருந்தமைக்கு சான்றாக இன்றும் சில பட்டிணங்கள் பாண்டியன்,மதியன்,புகார்,பாண்டிவாசம், மலையன்கோ,கந்தழி செம் பூட்செய்,மீனன் காப்பு என்று தமிழ்ப்பெயர்களில் வழங்கி வருகிறது. சாவகத்தின் அருகில் மதுரா (மதுரை) என்ற தீவும் உண்டு. கி.பி. 114ல் ஜாவாவை ஆபுத்திரன் என்ற அரசன் ஆண்டதாய் சிலப்பதிகாரம் கூறுகிறது. ஜாவாவை “ஆபுத்திரநாடு” என அழைக்கப்பட்டது. மனிமேகலை ஜாவா நாட்டிற்கு சென்ற சமயம் அங்கு தமிழ் மொழிப்பேசப்பட்டது என கூறப்படுகிறது.

வால்மீகி முனிவர் இராமயனாத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஸ்வர்ண தீபத்தைற்கு ராஜ சுக்கிரவன் தூதுவர்களை அனுப்பி சீதையை தேடும்படி அனுப்பியிருகின்றார். கி.மு. 200ல் சுமத்திராவை ‘’ இந்திரகிரி” என்றும் கி.பி. 6ம் நூற்றாண்டில் “ புலாவு பேர்ச்சா”, “ஸ்வர்ண தீபம்” என்று அழைத்தார்கள். சுமத்திராவில் “மலையு” என்ற ஊர் உண்டு. இது மலையூர் மறுவி மலையுவுக மாற்றம் பெற்று இருக்கலாம். இங்கிருந்து மலாய் மொழி பரவியதாகவும் சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. ஸ்ரீவிஜயா என்ற ராஜியம் இப்பொழுது சுமத்திரா என்ற தீவில்தான் அமைந்திருந்தது. இதி ஸிங் என்ற சீன தூதர் கெடாவிலிருந்து நாகப்பட்டிணம் நாவாய் மூலம் முப்பது நாட்களில் சேரலாம் என்று எழுதியுள்ளார்.

கடாரம் என்பது அக்காலத்தில் ராஜேந்திர சோழனால் அமைக்கப் பட்ட வியாபார மையமாகவும், ஆட்சிப் பீடமாகவும் இருந்தது, இதற்கன சான்றுகள் ‘பட்டிணபாலை’ என்ற தமிழ் கவிதையில் இருந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அது மட்டுமிற்றி அப்பொழுது வியாபாரத்திற்கு வந்து சென்ற அரபு மற்றும் சீன நூல்களிலும் பூஜாங் பள்ளத்தாக்கை பற்றி நிறைய தகவல்கள் இருபதாக Braddly மற்றும் Wheatly-யின் ஆராய்சியில் கூறியிருக்கிறார்கள்

கண்டெடுக்கப்பட்ட ஐம்பதுக்கு மேற்ப்பட்ட கோவில்கள் அல்லது புத்த வழிப்பாட்டு தளங்கள் மலேசியா நாட்டின் வடப்பகுதியான கடாரம் மலேசியாவின் நாகரிக தொட்டில்லாகவும் இருந்துள்ளது அதே சமயம் இந்து சமயமும் காலச்சாரமும் இந்த நாட்டில் ஆதி பண்பாட்டுக் கூறுகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.


வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
சரித்திரம் தொடரும்.......2

Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
மின்தமிழ்
கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959
1. Agesthialingom, S. & S.V. Shanmugam (1970). The Language of Tamil Inscriptions, Annamalainagar, India: Annamalai University.
2. வாழ்க்கை பயணம் விக்கி.

January 14, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்தமிழ் பெருநாளாம் பொங்கல் திருநாள்
வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றேன் அனைவருக்கும்
அன்புடன் மனோவியம் மனோகரன்

January 12, 2010

உயிர்க் காதல்.....நான்
உயிரை யாசித்தவன் இல்லை
நான்
உடலை நேசித்தவனும் இல்லை

நான்
சுவாசிப்பதே
அவளை நேசிப்பதற்குதான்

நான்
யோசிப்பததே
அவளிடம் யாசிப்பதற்குதான்

நான்
பூஜிப்பதே
அவளின் நேசத்தைதான்

நான்
ரசிப்பதும்
புசிப்பதும்
அவளின் சுவாசத்தைதான்

நான்
காகிதத்தில்
எழுதுபவன் அல்ல
பரந்து விரிந்த
காற்றிலே
காதலை தூவி விடுபவன்.

அலைந்து திரியும்
அலைகளிலும்
விரிந்து திரியும்
கடலிலும்
இந்த
காதலை வைத்தேன்
எப்பொழுதும்
ஓயாத முழக்கம்தான்
என்
உயிர்க் காதல்.....

January 9, 2010

எரியும் நெருப்பு


மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டுயிருகிறது மலேசியா..இப்பொழுது கிருஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் “அல்லஹா” என்ற வார்த்தையில் எற்பட்ட சிறிய தகராறு இன்று உணர்ச்சி மயமான ஒரு பூதகரமான ஒரு பிரச்சைனையாய் உருவெடுத்திருக்கிறது. நேற்றைய தினம் சில கிருஸ்துவ ஆலயங்களை எரிக்கும் அளவுக்கும் நிலமை தீவிரம் அடைந்திருக்கிறது.

ஏற்கனவே நீருப்பூத்த நெருப்பாய் கணந்துக்கொண்டிருக்கும் மலேசிய இன உறவுகள் இன்னும் எரியும் நெருப்பில் எண்ணையை உற்றுவதற்கு ஒப்பான செயலாக நீதி மன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. ஆனால் தூன் டாக்டர் மகாதீர் சொல்வது போன்று நீதி மன்றம் ஒரு பிரச்சனையை உணர்ச்சி மயப்பட்டதா என்று நோக்கும் நிலையில் இல்லை. அதற்கு தெரிந்தது எல்லாம் அறிவுக்கு உட்பட்டு ஆதாரபூர்வாமாக இருக்கவேண்டும். சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்ட எத்தனையோ சமுதாய பிரச்சனைகள் திக்கு தெரியாமல் முனங்கி கொண்டிருகின்றது. சட்டம் ஒரு இருட்டரை. வக்கிக்களின் வாதம் வெளிச்சம் போன்றது என்றார் அறிஞர் அண்ணா ஆனால் நீதி தேவைதையின் கண்களுக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றுதான்.

ஹெரல்ட் என்ற கிழக்கு மலேசிய கத்தோலிக்க மத பிரச்சார ஏடு. தன்னுடைய ஏட்டில் “அல்லஹா “என்ற வார்த்தையை ஏன் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று நீதி மன்றப்படிக்கட்டில் ஏறியதின் விளைவு இவ்வளவும்.

மேற்கு மலேசியாவின் முஸ்லிம் அல்லாதவர்களூக்கு “அல்லஹா “ சொற்பதம் அவர்களுக்கு எவ்வளவு மதிப்புமிக்க சொல் என்பது தெரியும்.. தவறாக உட்படுதுவதின் நிலை எவ்வளவு பாதமான விளைவுகளுக்கு முகம் கொடுக்கவேண்டி இருக்கும் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் கிழக்கு மலேசியாவின் பூமிபுத்திரா என்று சொல்லப்படும் பூர்வ குடி மக்களிடையே கிருஸ்துவர்கள் அதிகம். அவர்களின் தாய் மொழியும் மலாய் மொழியுடன் சம்மந்தப்பட்ட சில கிளை மொழிகளாக இருப்பதால் மலாய் மொழி பயன்பாடு மிகவும் அதிகம். மலேசிய அமைப்பு உறுபெரும் முன் இந்தோனேசிய மொழி வழி தங்களின் கிருஸ்துவ மதப்போதனையை பெற்றுக் கொண்டு இருகின்றார்கள். 400 வருடமாக தங்கள் சொல்லும் தூவன் அல்லஹா என்ற சொல் இப்பொழுது மட்டும் தடை ஏன் என்பது அவர்களின் வாதம்.? அதுவும் இப்பொழுது என்ன வந்தது இவர்களுக்கு கிழக்கு மலேசியா முஸ்லிம் மக்கள் 400 வருமாக எந்த குரைகூறலும் சொல்லாத போது மேற்கு மலேசியாவின் இஸ்லாமியர்கள் மட்டும் ஏன் இந்த சொல்லுக்கு தடை ஏற்படுத்துகின்றனர் என்று கேள்வி எழுப்புகின்றனர் .நியாமான கேள்விதான்.

நீதி மன்ற தீர்ப்பை சிலர் அரசியல் சித்து விளையாட்டிற்கு பயன்படுத்துவதாகவும் சரிந்து நிற்கும் மலாய்க்காரகளின் வாக்கு வேட்டையை பெறுதற்கும் இது வாய்பாக இருக்கும் என்றும் அதே சமயம் இது ஒரு அரசியல் பகடை , கிழக்கு மலேசியாவின் பெரும்பான்மை கிருஸ்துவர்களின் நம்பிக்கையை இழக்ககூடிய சாத்தியம் அதிகம் உண்டு. ஏன் என்றால் இன்றைய இந்த அரசாங்கத்தை துக்கிப்பிடித்திருப்பதே கிழக்கு மலேசியா மக்கள்தான்.
“அல்லாஹா” என்பது அரோபிய வார்தை. இஸ்லாமின் வரவுக்கு முன்பிருத்து இந்த வார்தை பதம் சிரிய லெபனோன் கிருஸ்துவர்கள் இறைவனை விளிந்து அழைக்கும் சொல் என்றும் இன்றும் கூட அப்படிதான் அழைப்பதகவும் கூறுகின்றனர்.

God என்றால் இறைவன் “அல்லஹா” என்றாலும் இறைவன் எங்கும் நிறைந்த இறைவனை ஒரு எல்லைக்குள் உட்பட்டு, மொழி சமய பேதங்களில் சிறைப்பிடிப்பதில் என்ன ஆனந்தமோ தெரியவில்லை.

சகிப்புத் தன்மையும் அன்பான மக்களையும் கொண்ட மலேசிய நாட்டில் மத,மொழி உணர்வுகள் எவ்வளவு தூரம் மக்களை பாதிக்ககூடிய விடயம் என்பதால் அனைவரும் ஒற்றினைந்து சுபிச்சமாக வாழக் கற்றுக்கொள்வோம்..ஒரே மலேசியனாக வாழ்வோம்.வேண்டாம் வன்முறை.

January 4, 2010

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்


வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு.அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

தமிழர்கள் மலைநாடு என்று அன்போடு அழைக்கப்படும் மலேசியா நாட்டின் தொடர்பு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது என்றும். அறியபட்ட சரித்திர குறிப்புக்களின் வழி இந்தியர்களின் தொடர்பு 5000 ஆண்டுகள் முற்பட்டது எனவும், இராமாயாண மகாபாரதம் நடைப்பெற்ற காலத்தில் தென் கிழக்கு ஆசியா,ஜாவா, மலாயா ஆகியவை இந்தியாவோடு இனைந்த பகுதி என்று அறிகிறோம்.

தமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது. நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது.உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது

பாரதம் நடைப்பெற்றக் காலத்தில் மலேசியாவுக்கு “பார்த்தன் திக்கு” விஜயம் செய்துள்ளார். பாண்டவர்களின் சிறந்த பார்த்தன் திக்கு யெளவன தீபத்தையும் (ஜாவா) ஸ்வர்ண தீபத்தையும் (மலேசியா) கண்டு வெற்றிக் கொடி நாட்டியதாய் பாரதம் கூறுகிறது.
பாண்டவர் தலைவர் தருமபுத்திரர் இராஜ சூய யாகமொன்றை இந்திரப்பிரஸ்தத்தில் ( இந்தியா) நடத்தினார். இந்த வைபவத்திற்கு பல நாட்டின் மன்னருக்கு அழைப்புக்கள் கிடைத்தன. அன்றைய மலேசியா மன்னர்களும் கலந்து கொண்டனர். சகாதேவன் அன்றைய மலேசியாவின் பகுதிகளுக்கு கண்காணிப்பாளனாக இருந்து அடிக்கடி வங்க வாயிலாக வந்து சென்றுள்ளார். பாண்டவர்கள் ஜாவாத்தீவில் ஒரு காலத்தில் நாட்டாண்மைக் கொண்டார்கள் என வியாச முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

கி.மு 274-232 அசோக சக்கரவத்தி பவுத்த சமயப் போதகர்களை பொன்னாடு என்று போற்றப்பட்ட ஸ்வர்ண பூமிக்கு அனுப்பி வைத்தார்.ஸ்வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். அந்த காலத்தில் மலேசியாவில் தங்கம் அதிகம் கிடைத்த காரணத்தால் பொன்னாடு என்று அழைக்கப்பட்டன. கி.மு 200ல் மலேசியாவை “இந்திர பாரத பூரா” என்று அழைக்கப்பட்டது. இந்திர என்றால் தங்கம் ,பாரத் என்றால் நாடாகும்

தமிழ் இலக்கியங்களில் கடாரம் என்று கூறப்படும் பழமைமிக்க ஒரு நாடு மலேசியாவில் இன்று கெடா என்று அழைக்கப்படும் மாநிலம் ஆகும்.கடா அல்லது கயிடா என்பது யானைகளை கன்னி வைத்து பிடிக்கும் இடம் என்று கூறப்படுகிறது. ஆனால் கெடா என்ற வார்த்தை அந்த அர்த்தத்தில் உருவான ஒரு பொருளாக இருக்காது என்பது சிலரின் வாதம். பழந்தமிழ் கல்வெட்டுக்கள் கெடாவை கடாரம் அல்லது கழகம் என்று கூறுகின்றது. கடாரம் என்பதின் பொருள் என்னவென்றால் அகன்ற பாணை அல்லது கருமை நிறம் என்று சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. அரபியரும் பார்சிகாரர்களும் வட மலேசிய தீபகற்பத்தை கிலா,கலா அல்லது குவலா என்று அழைத்ததுண்டு.

3000 ஆண்டுக்குமுன், இந்திய வேந்தர்கள் கடல் கடந்து கடாரம் வந்த பொழுது அங்கே தவளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனவாம் அதனால் தான் கடாரத்தை “காத்தா” என்று அழைத்தனர். காத்தா என்றால் மலாய் மொழியில் தவளை என்று பொருள்.மலாய்க் காரர்களின் வாய் மொழி கதைகளில் சொல்லப்படும் சில காதல் புனைவு கதைகளிலும் வரலாற்று தகவல்ளிலும் லங்காசுக என்ற ஒரு பண்டைய அரசாங்கம் கெடாவில் இருந்ததகவும் அதன் பண்டைய எச்சங்கள் இன்னும் இருபதாகவும் கூறுகின்றனார். பண்டைய இந்திய நாட்டு வியபாரிகள் கெடாவை காத்தாரை என்று அழைத்தாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடாரம் அல்லது கெடா அன்றைய இந்திய வியபாரிகளுக்கு மலை நாட்டின் அடையாள மார்க்கமாகவும் இளைப்பாறி தனது கடற்பயணத்தை கிழக்கு ஆசியாவுக்கு தொடரும் தளமாகவும் விளங்கி உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் லங்காசுக என்ற அரசாங்கதின் மைய இடமாகவும் லெம்ப பூஜாங் என்று சொல்லபடுகின்ற பழைய வரலாற்று சின்னம் இந்தியர்களின் கலச்சார படை எடுப்புக்கும் நாகரிக அடையாள சின்னமாக திகழ்கிறது.

தமிழர்கள் கி.பி முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தலைச்சிறந்த மாலுமிகளாகவும் படைவீரர்களாகவும் வர்த்தகர்களாகவும் திகழ்ந்தார்கள்.வர்த்தக சம்மந்தமாக இந்திய தமிழ் மாலுமிகள் கடல் கடந்து மலேசியாவுக்கு வந்தவர்கள்,நாளாடைவில் இங்கு குடியிருபுக்களையும் அரச அமைப்பையும் எற்படுத்தி சமயம் கலைக் விவசாயம் பண்பாட்டுக் கூறுகளையும் எழுப்பி இருக்கின்றார்கள். காடுகளிலும் குகைகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு விவசாயத்தையும் நாகரீகத்தையும் கற்றுக்கொடுத்திருக்கின்றார்கள் நம் தமிழர்கள்.

சரித்திரம் தொடரும்.......1

வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

1.Sumber: Perpustakaan Negara Malaysia (PNM)
2.மின்தமிழ்
3.கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959

January 3, 2010

புலரட்டும் புத்தாண்டு


நல் இரவு கடந்த போது
புது வருடம் மலர்ந்தது
இனிமை என்னும் சாரலில்
இதயம் கொஞ்சம் கனிந்தது

கடந்து போன காலம்
காற்றாய் கரைந்தது
வரும் காலம்
வாழ்க்கை நிறைந்தது

பூக்கள் மணந்த போது
புண்ணகை தவழ்ந்தது
காலம் கடந்த போதும்
கனிந்த உள்ளம் தொடர்ந்தது.

நிமிடங்களை சுமந்த இவ்வருடம்
நினைவுகளையும் சுமக்கட்டும்
கனவுகளை சுமந்த புதுவருடமாய்
காணட்டும் நல்வாழ்கை


உள்ளங்கள் ஒன்றுப் படுவோம்
உறவுகளை ஓங்க செய்வோம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புலரட்டும் வாழ்க்கை பல்லாண்டு

January 1, 2010

நல் வாழ்த்துக்கள்இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்
.....மனோவியம்.......
மனோகரன் கிருட்ணன்.