December 28, 2009

மரத்தடியில் பிறந்த மறத்தமிழர்.-பாவலர் சங்கு சண்முகம்


மரத்தடியில் பிறந்த மறத்தமிழனை நீங்கள் பார்த்ததுணடா? ஆனால் இவர் சோம்பல் முறித்து மரத்தடியில் உறங்கும் மரத்தடி தமிழன் அன்று. நாடி நரபுகளில் தமிழ் உணர்வுகள் மூறுக்கேறியத் தமிழ் தமிழர் என்ற சிந்தனையை தன் ஜீவ நாடியாய் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் நெஞ்சம். நீண்ட நெடிய காலமாய் எழுத்து துறையிலும் பத்திரிக்கை துறையிலும் அனுபவம் கொண்ட எழுபது வயதிலும் இளம் வயது இளைஞனை போல் துள்ளல் நடையும்மாய் சுற்றி திரியும் முதிர்ந்த ஒரு இளைஞர்தான் பாவலர் சங்கு சண்முகம்.

நண்பனில் தொடராக வெளிவந்த சமுக கட்டுரை. மரத்தடியில் பிறந்த மறத்தமிழர்.
“அரை நூற்றாண்டுக்கு மேல் எழுத்தையே சுவாசித்து, அந்த சுவாசிப்பில் உயிர் கொண்டுள்ள பாவலர் சங்கு சண்முகம் அவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் தம் வாழ்வியலை நன்கு தெரிந்தவர். சஞ்சிக் கூலிகளாக வந்த தமிழ்ச் சமுதாயத்தை மேய்ப்பானாக இருந்து சுகங்கண்ட பலரின் சுயரூபத்தை, நெடுங்கதையை வாசகர்கள் பாவலரின் எழுத்தில் தெரிந்து தெளியலாம்” என்று ஓலைச்சுவடியில் சதிஷ் குமார் முகவுரை எழுதியுள்ளார்.

ஏன் இந்த வீண் விளம்பர புராணம் என்று பார்க்கின்றீர்களா? இருக்கிறது. தமிழ் ஆசிரியர் வட்டம் என்பது எனக்கு ஒன்று புதியது அன்று. சிறு வயது ஆசிரியர் வட்டம் என்பது நமக்கு பள்ளிப் பாடங்களை போதித்த ஆசிரியர் குழுமம். தமிழ் என்ற அறிவு பொக்கிஷத்தை காட்டிய ஆரம்ப அறிவு வட்டங்கள்தான். ஆனால் நாம் இளைஞனாகிய பிறகு நமது நண்பர்களாக சிலர் ஆசிரியர்களாக இருப்பது நமக்கு பெருமைதான். இன்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் உறவுப் பாலம் அது.

திருமண பந்த உறவிலே வந்த என் மனைவி ஒரு தமிழ்ப் பள்ளி ஆசிரியயை. அதுவும் பட்டதாரி ஆசிரியயையாக உருவெடுத்திருப்பது என்பதும் ஒரு வகையில் பெருமைக் கொள்ள வேண்டிய விடயம் தான். அவரின் நண்பர்கள் நமக்கும் நண்பர்கள் தான். அந்த வகையில் ஆசிரியர் வட்டத்தின் அறிமுகம் பரந்த விரிந்த ஒரு உலகம். பல உண்மைகள், பல உணர்வுகள் உடனுக்குடன் பகிர்ந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் வசதியும் இந்த ஆசிரியர் வட்டம் நமக்கு எற்படுத்தி தருகிறது என்ற உண்மையை மறுக்க முடியாது.

என்னடா இவன் அறுக்கிறான் என்று எண்னி விடாதீர்கள். விஷயத்திற்கு வருகிறேன். என் ஆசிரிய நண்பர் முருகேசு சார் அவர்கள் ஒரு நண்பருடன் என்னை வந்து சந்தித்தார். நான் யாரோ எவரோ என்று நினைத்து விட்டேன். ஏன் என்றால் சாருடன் வந்த அந்த முதிர் இளைஞரை இதற்கு முன் பார்த்ததில்லை, என் நண்பர் இவர் உங்களிடம் சில விஷயங்கள் பேச வேண்டும். என்று சொல்கிறார் என்றார். சிறிது நேரம் உரையாடிய பிறகுதான் தெரிந்தது அவர் தான் பாவலர் சங்கு சண்முகம் என்று.

ஒரு இளைஞரின் எண்ண திடம் அந்த பாவலனிடம் கண்டேன். தனக்கு ஒரு வலைப்பதிவை உருவாக்கி தரவேண்டும். தானும் ஒரு வலைப்பதிவாளனாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை சொன்னார். இன்னோரு விஷயத்தையும் என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். தன்னுடைய கனவு மரத்தடித் மறத் தமிழரை ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற ஆவாவினையும் வெளிட்டார். 350-400 பக்கங்கள் கொண்ட அந்த கட்டுரையை வெளியிட வேண்டும் என்றால் ஒரு முப்பது ஆயிரம் வரை தேவைப்படும். தமிழர்களுக்கு தேவையான விடங்களை எழுதிருப்பதாகவும், தமிழர் சம்ந்தபட்ட பல விஷயங்களை தொட்டு சிலரை சாடியும் எழுதி இருப்பதாகவும் சொன்னார், ஒரு சிலரை சாடியதை திரும்ப எடுத்து விட்டால் ஒரு வேளை உதவ முன்வரலாம் ஆனால் ,இன்று வரைக்கும் தனது கொள்கைகளை விட்டு கொடுக்கவில்லை. ஒரு பாவலன் என்ற முறையில் எவரையும் தலைவணங்கா குணம். என்பதால் எவரிடம் சென்று என் புத்தகத்தை வெளியிடுவதற்கு உதவி கேட்க முடிவதில்லை.என்றார். உண்மைதான் ஐயா நம்மை போன்ற ஏழைத்தமிழனுக்கு யார் தான் உதவ போகிறார்கள்? உணர்வுள்ள தமிழர்கள் கூடி உதவினால் தான் உண்டு.

நமது வலைப்பதிவாளர்கள் ஒரு இயக்கமாக இயங்கினால் இவரைப் போன்று எத்தனையோ தமிழ் நெஞ்சங்களுக்கு உதவ முடியும். வலைப்பதிவு உலகை அறிவார்ந்த ஒரு இயக்கமாக மாற்றவும் முடியும். இன சமுக மொழிக்கு குரல் கொடுக்கவும் முடியும்.

ஆனாலும் அந்த முதிர் இளைஞனை பார்த்த பிறகு எனக்குள் ஒரு உற்சாகம். கால வெள்ளத்தை கடந்து நிற்கும் அவரின் எழுத்து துறை என்னைப் போன்ற எத்தனையோ இளைஞர்களுக்கு வழிக் காட்டிதான். மரத்தடியில் பிறந்த மறத்தமிழன் மட்டும் அல்ல இன்னும் எத்தனையோ தமிழர்கள் விழி பிதுங்கி வழித் தெரியாமல் கிடக்கின்றனர்.

வாருங்கள் ஐயா அடுத்த முறை வரும்போது உங்களுக்கென்று ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கிவிடுவோம் என்று கூறி கனிந்த இதயத்தோடு விடைப் பெற்றேன்..
Post a Comment