December 24, 2009

திருமணமா இல்லை கலைக் கச்சேரியா?மிருகங்களிடம் நிகழும் இனப்பெருக்கத் தேவைக்கான பாலுறவு என்னும் உயிரியற் செயற்பாடு தொடர்பான பாலுணர்வைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காகச் மனிதன் கண்டுபிடித்த சமுக கடப்பாடே திருமணம் என்னும் உறவு பந்தமாகும்.

'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.

சமுதாய அமைப்பு உருவான பின் நாகரீகம் வளரத் தொடங்கியது. ஆதிகாலத்தில் இருந்த மக்கள், உறவு முறைகளை அறியத் தொடங்கினார்கள்
பாலுறவு அல்லது செக்ஸ் என்பது மனிதன் உணர்ச்சியால் தூண்டப்பட்டு, அன்றாட அல்லது அவ்வப்போது தேவைப்படும் உணர்வுகளில் ஒன்று

ஒருவனுக்கு ஒருத்தி என்ற மனோநிலை மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கியது. குடும்பத்தை விரிவாக்கத் தொடங்கிய மனிதர்கள், தங்களுக்கு தாங்களே விதிகளை வகுத்துக் கொண்டு திருமண பந்தத்தை கடைபிடிக்கத் தொடங்கினார்கள்.
பாலுறவுப் புணர்ச்சியை முறையாகக் கையாள்வதற்காகவே நாகரீக சமுதாயம் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்தபட்ச வயது வரம்பையும் நிர்ணயித்து தற்போது அது நடைமுறையில் இருந்து வருகிறது.

திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.

டியூட்டன் எனும் இன மக்கள் திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரு மாதம் வரை ஒரே கிண்ணத்தில் தேன் அருந்த வேண்டும் என்பது ஒரு சடங்கு. ஆங்கிலேயர்கள் அந்த நிகழ்ச்சியை "ஹனி மன்த்" என்று அழைத்தனர். இது பின்னால் ஹனிமூன் ஆகிவிட்டது.

மாக்வீஸல் தீவில் வசிக்கும் ஒரு பிரிவினரிடையே திருமணத்திற்கு வந்திருக்கும் ஆண் விருந்தினர்களை வரிசையாகப் படுக்க வைத்து அவர்களின் முதுகின் மீது அடியெடுத்து வைத்து நடந்து மணமகன் மணமேடைக்குச் செல்வான். பின்னர் இதர சடங்குகள் துவங்குமாம்.

தமிழர்களின் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள்

மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே ஆனால் இன்றைய நவநாரீக உலகில் அதுவும் மலேசிய தமிழர்களிடம் திருமணத்தன்று கலை நிகழ்ச்சி என்று ஒரு கோமளித்தனத்தை அரங்கேற்றுகின்றனர். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஒரு புனிதமான அந்த திருமண நேர நிகழ்வில் கலை என்ற போர்வையில் ஒரே காட்டுக் கத்தல். இரைச்சல் இசையை அமைதியாகவும் அதே சமயம் பண்பான முறையில் நடக்க வேண்டிய திருமண வைபவத்தில் அரங்கேற்றுகின்றனர். யார் பேசுவதும் விளங்குவது இல்லை. ஐயர் ஒதுகின்றாரா இல்லை சினிமாவில் டப்பிங் குரலுக்கு வாய் அசைக்கின்றாரா என்று தெரியவில்லை சில சமயங்களில் என்ன மொழியில் பாடுகின்றனர் இந்த பாடகர்கள் என்பது கூட தெரியவில்லை இன்றைய தமிழ் சினிமா பாடல்களில் தெய்விகமான நல்ல வார்த்தைகள இருக்கின்றன?. என்ன கருமாந்திரமோ ? இந்த நிகழ்வுக்கு ஏன் தான் வந்தோம் என்றாகி விடுகிறது. திருமண நிகழ்வினை தவிர்த்து மற்ற விருந்து வைபவங்களில் கலை நிகழ்ச்சியை வைத்துகொண்டால் சிறப்பாக இருக்கும் .

இருமணம் இணையும் திருமண பந்தம் இனிய நிகழ்வாக இருக்கவேண்டும். தமிழர்களின் பண்பாட்டுக்கு தலைகுனிவை எற்படுத்தாத உயர் தனி விழாவாக இருக்கவேண்டும். வாழ்க்கையை தொடங்கும் போது எதற்கு இந்த காட்டுக் கத்தல்? திருமண சடங்கில் தேவையா இந்த சினிமா இசை?
Post a Comment